lifestyles

கோடையில் நம் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் பழங்கள்!

கோடை வெப்பத் தாக்கத்தின் காரணமாக வியர்வை அதிகரித்து உடலின் நீர்ச்சத்து குறைகிறது. அந்த நீர்ச்சத்தை ஈடு செய்ய பழங்கள் பெருமளவு உதவுகிறது. பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை ஈடு செய்வதுடன், உடல் வெப்பத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

தர்பூசணியில் 90 சதவிகித தண்ணீரே இருப்பதால் உடலின் தண்ணீர் அளவை சமன்படுத்துவதில் சிறந்ததாக உள்ளது. இதில் இருக்கும் லைகோபின் என்ற வேதிப் பொருள் நமது சருமம் வெயிலில் பாதிக்கப்படுவதை தடுக்கும். உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கிறது. வயிற்றையும், கண்களையும் குளிர்விக்கிறது.

20 Best Summer Fruits & Their Health Benefits | Bodywise

வெயிலால் ஏற்படும் தசைப்பிடிப்பை தடுக்க ஆரஞ்சு சாப்பிட வேண்டும். வியர்வை மூலம் உடலிலிருந்து வெளியேறும் சத்துக்களை ‌இது ஈடு செய்கிறது. வைட்டமின் சி, தயாமின், ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. சூரிய கதிரில் இருக்கும் புற ஊதாக் கதிர்களின் மோசமான விளைவுகளை தடுக்க வல்லது. செரிமானத்தை இயல்பாக்கி, சரும பளபளப்பு, ஈரத்தன்மையை பாதுகாக்கிறது.




உடல் வெப்ப நிலையை சீராக பராமரிப்பதில் வாழைப்பழத்திற்கு பெரும் பங்குண்டு. இரும்புச் சத்தும், பொட்டாசியமும் இதில் நிறைந்துள்ளதால் உடல் சோர்வை தடுத்து, மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

5 Best Summer Season Fruits For You! - PharmEasy Blog

அத்திப்பழத்தை வெயிற்கால வயிற்று வலி நீங்க சாப்பிடலாம்.

மாம்பழத்தில் இரும்புச் சத்தும், செலினியமும் உள்ளன. இதை அளவாக சாப்பிட கண் பார்வை கூர்மையாகவும், நரம்பு தளர்ச்சியை நீக்கி உடலை வலுவாகவும் ஆக்கும்.

எலுமிச்சம் பழம் பல சத்துக்கள் நிரம்பியது. தனித்து இதற்குத்தான் இது உபயோகமாகும் என்றில்லாமல், அனைத்து உடல் உபாதைகளை தீர்த்து, தாகத்தை தீர்த்து, உடலை புத்துணர்வாக்கும்.

தலைவலி, தலைபாரம், உடல் சோர்வு என வெயிலால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு அன்னாசி பழம் தீர்வாகிறது. சரும சுருக்கத்தை போக்கி மேனியை பொலிவுடன் வைக்க அன்னாசி உதவுகிறது. கொய்யாப்பழம், சளி இருமல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை தீர்த்து கோடைக் காலத்தில் ஏற்படும் பாதிப்பை குறைக்கிறது.

பப்பாளி எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எந்த வடிவத்தில் இதை எடுத்துக் கொண்டாலும் அதன் பயன்கள் முழுமையாக உடலுக்குக் கிடைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பலாப்பழம் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களை கொண்டிருப்பதால் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு போன்ற பழங்களை ஃப்ரூட் சாலட்டாக சாப்பிட கோடையில் உடல் குளிர்ச்சி பெறும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!