Cinema Entertainment

ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? அப்போ சிறு பட்ஜெட் படங்களின் நிலைமை ?

கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமின்றி, சிறிய பட்ஜெட் படங்களும் நல்ல வசூலைப் பெற்று சாதனைப் படைக்கின்றன. இந்நிலையில், தற்போது சினிமா உலகில் ரீ-ரிலீஸ் என்ற புதிய நடைமுறை உருவெடுத்துள்ளது‌. அதாவது, ஏற்கனவே ரிலீஸான திரைப்படங்கள் தற்போது மீண்டும் திரையிடப்பட்டு வசூலைக் குவிப்பது தான் ரீ-ரிலீஸ் நடைமுறை. ரசிகர்களும் இதற்கு நல்ல வரவேற்பை அளித்து வருவதால், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், ரீ-ரிலீஸ் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.




ரீ-ரிலீஸ் திரைப்படங்களால் யாருக்கெல்லாம் லாபம் கிடைக்கும் என்பது இங்கு யாருக்கும் சரியாகத் தெரியாது. அதே நேரத்தில், இந்த நடைமுறையால் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும் யாரும் கவலைப்பட போவதில்லை. ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் லாபத்தைக் கொடுப்பது மகிழ்ச்சி தான் என்றாலும், இதன் விளைவாக சிறு பட்ஜெட் படங்களைத் திரையிட தியேட்டர்கள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஏற்கனவே வெற்றியடைந்த ஒரு படத்தின் மறுவெற்றிக்காக, புதிய சிறு பட்ஜெட் படங்கள் நசுக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வி, தயாரிப்பாளர்கள் இடையே எழுகிறது‌.

பெரிய ஸ்டார் படங்கள் திரைக்கு வந்தால் சிறு பட்ஜெட் படங்கள் காணாமல் போகும் நிலையில், ரீ-ரிலீஸ் படங்களால் மேலும் ஒரு புதிய பாதிப்பையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? அனைத்து திரைப்படங்களுக்கும் சம அளவில் தியேட்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையேல் சிறு பட்ஜெட் படங்கள் தொடர்ந்து நசக்கப்படுவது உறுதி.

யாருக்கு லாபம்?

ரீ-ரிலீஸ் திரைப்படங்களால் அப்படங்களைத் தயாரித்தவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அதிக லாபம் என்பது கிடைக்காதாம். அப்படத்தைத் திரையிடும் தியேட்டர் உரிமையாளர்களுக்கே அதிக லாபம் கிடைக்கும். ரீ-ரிலீஸ் திரைப்படத்தின் முதல் வார லாபத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 70%, விநியோகஸ்தர்களுக்கு 30% லாபம் கிடைக்கும். இரண்டாவது வார லாபத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 80%, விநியோகஸ்தர்களுக்கு 20% லாபம் கிடைக்கும். இம்முறையில் தான் ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறதாம்.




மேலும், யுடியூப் சேனல் உரிமையாளர்களும் நல்ல வருவாயைப் பார்க்கிறார்கள். சமீபத்தில் ரீ-ரிலீஸான ‘கில்லி’ படத்திற்காக இயக்குநர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் கோபிநாத் என பலரது நேர்காணல்கள் யுடியூப் சேனல்களால் எடுக்கப்பட்டு, டிரென்ட் ஆனதால், இதன் மூலம் இவர்களுக்கும் ஒரு வருமானம் கிடைத்தது.

சில வருடங்களுக்கு முன்பு சிவாஜி நடித்த கர்ணன், வசந்த மாளிகை மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படங்களும், எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு லாபத்தைக் கொடுத்தன. பின்னர் ரஜினி நடித்த பாபா மற்றும் பாட்ஷா திரைப்படங்களும், கமல் நடித்த ஆளவந்தான் மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.

இந்த நடைமுறை இப்படியே தொடர்ந்து “வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, வேலையில்லா பட்டதாரி, 3, பையா, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன மற்றும் கில்லி” உள்ளிட்ட திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. அடுத்ததாக அஜித் நடித்துள்ள ‘பில்லா’ திரைப்படமும்  மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!