gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/வீரப்ப அய்யனார்

‘அய்யனார்’ தமிழர்களின் ‘மூத்தவர்’. மூத்தவர் என்பதால் இவருக்குப் பெற்றோர் கிடையாது. எனவே இவர், ‘தான்தோன்றி’. இவர் வந்த பிறகு தான் இரும்பின் பயன்பாடு உலகில் தோன்றியது. இதை விளக்கும் விதமாக, அய்யனார் கம்பீரமான தோற்றத்துடன் கையில் அரிவாள் வைத்திருப்பார். இவருடைய வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பதால், தமிழ் மக்கள் இவரை ‘அய்யனார்’ என மரியாதையுடன் வழிபடத் தொடங்கியத்தில் வியப்பில்லை.

மணிராஜ்: அழகுக்குதிரையில் அய்யனார்




இதன்விளைவே இன்று தமிழகமெங்கும் உள்ள அய்யனார் கோயில்கள். குதிரைகளை வாகனமாக்கிக் கொண்டவர் இவர் என்பதைக் குறிக்கும் விதமாக, பெரிய பெரிய குதிரை சிலைகள் அய்யனார் கோவில்களில் இருக்கும். பொதுவாக வெட்டவெளியில், காட்டுக்குள் அய்யனார் கோவில் அமைந்திருக்கும். சிலர், இவருடைய துணைவிதான் சிலப்பதிகாரத்தில் வரும் ஐயை என்னும் தெய்வம் எனவும் கூறுவர்.

அக்கினி, இந்திரன், வருணன், வாயு, எமன் போன்றவர்கள், இவரை வழிபட்டவாறு, இவர் காட்சியளிப்பார்.

இவருடைய வரலாறு நூல்கள் குமரிக்கண்டத்தைக் கடல் கொண்ட போது அழிந்துவிட்டதால், இப்போது வாய்மொழி வரலாறு தான் நிலவுகிறது. இது உண்மை என்பதை நீங்கள் எந்த அய்யனார் கோயில் முதியவரையும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.




தேனியில் இருந்து 5 கி.மீ., தூரம் மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சித்திரை முதல் தேதியில் இங்கு திருவிழா கோலாகலமாக நடக்கும். சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமி கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இலகுவாக போட முடியாததைக் கொண்டு சுயம்பு வளர்ச்சியை அறியலாம். கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதற்கு பரிகாரமாக கோயிலுக்குத் தேவைப்படும் பொருட்களை பக்தர்கள் தந்து மகிழ்கின்றனர். பலருடைய வாழ்வில் ஏற்பட்ட போராட்டங்கள், சிக்கல்கள் நீங்கியுள்ளதால் வாழ்க்கை குறை நீக்கும் தலமாக இப்பகுதியினரால் வணங்கப்படுகிறது.

வீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை. பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். ஆடு உள்ளிட்ட பலிகள் இங்கு ஏற்றுக் கொள்வதில்லை. அருகில் உள்ள கருப்பசாமி கோயிலிலே இது போன்ற நடைமுறைகள் உள்ளன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!