lifestyles

மாதவிடாய் வருவது போன்ற அறிகுறி… ஆனால் பீரியட்ஸ் வரவில்லை.. இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

சில பெண்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறியாக கருதப்படும் க்ராம்ப்ஸ் (Cramps) எனப்படும் பிடிப்புகளால் அவதிப்படுவர். அடிவயிறு பிடித்து இழுப்பது போல இருந்தாலும் கூட சில நேரங்களில் இந்த பிடிப்புகள் நீடிக்குமே, மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் இருக்கும் ஆனால் சீக்கிரம் மாதவிடாய் ஏற்படாது.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு எளிய தீர்வு !!




இதனால் பலரும் தங்களுக்கு இன்னும் மாதவிடாய் வரவில்லையே என கவலை கொள்வார்கள். ஆனால் இப்படி நிகழ்வது பொதுவானது. ஏனென்றால் தொற்றுகள், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பலவித உடல்நல பிரச்சனைகள் மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம். நிபுணர் Chailee Moss பேசுகையில், Uterus மற்றும் Ovaries-இல் ஏற்படும் சில உடல் ரீதியான அசாதாரண மாற்றங்கள் காரணமாக Cramps எனப்படும் தசைப்பிடிப்பு அடிவயிற்றில் ஏற்படலாம். இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறி என நினைக்க வைக்கலாம்.

அடிக்கடி இது போன்று பிடிப்புகளை சந்திக்க நேர்ந்து ஆனால் மாதவிடாய் தாமதமானால், மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய அவசியம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்கிறார். நிபுணர்களின் கூற்றுப்படி, Cramps-ஐ தூண்டக்கூடிய சாத்தியமான சில காரணங்கள் இங்கே…

பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து ஒரு முட்டை (கருமுட்டை) வெளியேறுகிறது. இது ஓவலேஷன் என குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிலரின் உடல் ஒவ்வொரு முறையும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் அறிகுறிகளான Pre-menstrual syndrome தொடர்புடைய அனைத்து ஹார்மோன் மாற்றங்களை சந்தித்தாலும், அந்த மாதத்தில் கருமுட்டை வெளிப்படுவதில்லை. மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியேறாத போது நடக்கும் இந்நிகழ்வு Anovulation என குறிப்பிடப்படுகிறது. மேலும் இது Anovulatory Cycle ஆகும். மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு பெண் முட்டையை வெளியிடவில்லை என்றால் உண்மையில் அவருக்கு மாதவிடாய் வராது ஆனால் வயிற்று பிடிப்புகளை சந்திக்க நேரிடலாம். அதே போல நாள்பட்ட Anovulation சிக்கலானது கருவுறாமைக்கு ஒரு பொதுவான காரணமாகவும் இருக்கிறது.

கர்ப்பம்:முந்தைய மாதத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது கருத்தடை மாத்திரையை எடுத்து கொள்வதில் கவனமில்லாமல் இருந்திருந்தாலோ ஒருமுறை கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. ஏனென்றால் கர்ப்பம் தரித்திருந்தால் கூட பிடிப்புகள் ஏற்பட்டு மாதவிடாய் வராமல் இருக்கலாம். மார்பகங்கள் மென்மையாவது, மூட் ஸ்விங்ஸ், சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு உட்பட பல அறிகுறிகள் ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகளாக இருக்கலாம்.




மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உதிரப்போக்கு - ஆபத்தின் அறிகுறியா? - BBC News தமிழ்

தைராய்டு பாதிப்புகள்: கழுத்தில் இருக்கும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியான தைராய்டு, வளர்சிதை மாற்றம் மற்றும் மாதவிடாய் சுழற்சி உட்பட பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கூடியது. ஒருவேளை தைராய்டு பாதிப்பு இருந்தால் கூட சீராக இருக்கும் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படலாம். ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் இருந்தால், தைராய்டு பிரச்சினைகள் மாதவிடாய் சுழற்சி தாமதமாவது மற்றும் மாதவிடாய் ஏற்படாமலேயே நீண்ட நாள் பிடிப்புகள் நீடிக்க காரணமாக இருக்கலாம். அதே போல தைராய்டு மூளை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதால், PMS-ன் ஒரு பகுதியாக இருக்க கூடும் என நினைக்கும் மூ ஸ்விங்ஸ் உண்மையில் நரம்பியல் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் மோஸ்.

மன அழுத்தம்: மாதவிடாய் தவறி போவதற்கு ஸ்ட்ரஸ் எனப்படும் மன அழுத்தம் சில நேரங்களில் காரணமாகிறது. நீடித்த மன அழுத்தமானது ஸ்ட்ரஸ் ஹார்மோன் எனப்படும் கார்டிசோல் லெவலை அதிகரிக்கிறது, இதனால் ovaries மற்றும் Uterine lining ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் உட்பட பல ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது. தேர்வுகள், நெருக்கமானவர்களின் இழப்பு, பிரேக்கப் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தம் அவர்களின் மாதவிடாய் சுழற்சியை மோசமாக்கும். மனஅழுத்தம் காரணமாக அடிவயிற்றில் பிடிப்புகள் ஏற்பட்டாலும் மாதவிடாய் ஏற்படுவதில் தாமதம் நிகழலாம்.




கருச்சிதைவு: கருச்சிதைவு என்பது நீங்கள் நினைப்பதை விட மிகவும் பொதுவானது. ஏனென்றால் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கருச்சிதைவு ஏற்பட 25% வாய்ப்பு உள்ளது என்கிறார் டாக்டர் ரோஸ். கருச்சிதைவுக்கான அறிகுறிகளில், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடுமையான தசைப்பிடிப்பு போன்றதும் அடங்கும். ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் மற்றும் கடும் தசைப்பிடிப்பை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!