gowri panchangam Sprituality

ஆஞ்சநேயரிடம் வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமர்… என்ன பதில் சொன்னார் அனுமன் தெரியுமா?

ராமகாவியத்தின் தனிப்பெரும் தலைவன். மானுடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வகுத்து தந்த தெய்வம் ஸ்ரீராமபிரான். இந்த ராம நவமி உற்சவம் ஒரு விரத நாள். குழந்தைப் பேறு கிடைக்கவும், ராமபிரானை மனதார பிரார்த்தனை செய்பவர்களும் உபவாசம் இருக்கலாம்.

ஆஞ்சநேயரைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருபவர் ஸ்ரீராமபிரான். ஆஞ்சநேயர் தான் நமக்கு ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை உணர்த்தினார்.

 நம் வீட்டில் இருக்கும் ராமரின் திருவுருவ படம் அல்லது ராமரின் பட்டாபிஷேக படம் அல்லது ஆஞ்சநேயர், ராமர், லெட்சுமணர், சீதை இருப்பது போல படம் இருந்தாலும் அதை வைத்து பூஜை செய்யலாம். அல்லது ஆஞ்சநேயர் படம் வைக்கலாம்.




Ramanavami

குழந்தைக்காகக் காத்திருப்பவர்கள் ராமரின் திருவுருவப்படத்தை துளசி மாலையால் அலங்கரித்து விட வேண்டும். ராமருக்குப் பிடித்த பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல், பானகம், வடை என ஏதாவது நைவேத்தியமாக செய்து வைக்கலாம். அல்லது வடை மாலை, துளசி மாலையைப் பட்டாபிஷேகப் படத்திற்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

அன்று பாலகாண்டமும், சுந்தர காண்டமும் படிப்பது விசேஷம். இன்று உபவாசம் இருக்கலாம். மாலை 6 மணிக்கு மேல நெய்விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். ராமநாமம் படிக்கலாம். ஆஞ்சநேயருக்காக மனைப்பலகை போட்டு ராமாயணத்தில் பாலகாண்டம், சுந்தரகாண்டம் படிக்கலாம்.

வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, 1 ரூபாய் நாணயம் வைத்து ஆஞ்சநேயருக்காக வழிபடலாம். பிரிந்த கணவன், மனைவியை ஒன்று சேர்க்கும் இந்த வழிபாடு. இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யமான வாழ்க்கைக் கிடைக்கும். விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் குழந்தைப் பேறு கண்டிப்பாகக் கிடைக்கும்.




ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எல்லாம் முடிந்து போனதும் ஆஞ்சநேயரிடம் உனக்கு கைமாறு செய்ய நினைக்கிறேன். என்ன வேண்டும் கேள் என்கிறார். நான் எப்போதும் உனக்கு சேவை செய்ய வேண்டும். அந்தப் பாக்கியத்தைத் தா என்கிறார். அதன்பிறகு எல்லோரும் கிளம்பி விட்டனர். ஆஞ்சநேயர் நித்யசிரஞ்சீவி. அப்போதும் ராமர் கேட்கிறார். உன்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை. நீ என் கூட வைகுண்டத்திற்கு வருகிறாயா என ராமபிரான் ஆஞ்சநேயரிடம் கேட்கிறார்.

SriRamar

அதற்கு ஆஞ்சநேயர் வைகுண்டம் வருகிறேன். ஆனால் அங்கு அன்றாடம் எனக்கு இந்த ராமர் தரிசனம் கிடைக்குமா என்று கேட்கிறார். அங்கு அது கிடைக்காது. நாராயண தரிசனம் தான். நானும் அவரும் ஒன்று தானே என்கிறார். இந்தப் பூலோகத்தில் மட்டும் தான் ராமர் தரிசனம் கிடைக்கும் என்கிறார். அதனால் நான் தினமும் ராமதரிசனம் கிடைக்கவே விரும்புகிறேன்.




பக்தர்கள் உங்கள் நாமத்தைச் சொல்லி, நினைத்து உருகும்போது உங்கள் உருவத்தையும் நான் பக்தர்களிடமே பார்ப்பேன் என்கிறார். அதனால் தான் இன்றைக்கும் நாம் ஆஞ்சநேயரை வழிபடும்போது ராமபிரானையும் நினைத்துக் கொள்கிறோம். எல்லா உயிர்களின் மீதும் ராமபிரான் காட்டிய கருணையால் தியாகப்பிரம்மமும் ராமபிரானை உயர்வாகப் பாடியுள்ளார். ராமநாமம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை இதில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீராமஜெயம் என்று 108 முறை ஜெபம் செய்யலாம். அல்லது எழுதி கோவிலில் ஆஞ்சநேயருக்கு மாலையாகப் போடலாம். இது நமக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். அருகில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். குடும்பமே குதூகலமாகும். அடுத்தடுத்து வாழ்வில் வெற்றிகள் வந்து குவியும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!