karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-25

25

” நூற்றியெட்டு   குடங்களில் திருச்சி போய் காவிரியில் நீர் சேகரித்து வருவோம் . கும்ப அபிசேகத்திற்கு
யாகபூஜையில் வைத்து நீரை புனிதப்படுத்துவோம் ….” பொன்னுரங்கம் கும்பாபிசேக ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தார் .

” நூற்றியெட்டு பித்தளை குடங்கள் வாங்க வேண்டும் .தஞ்சாவூரில் ஏதாவது பெரிய பாத்திர கடையில் ஸ்பெசலாகசெய்ய  ஆர்டர் கொடுத்து விடு கதிர்வேலா .குடம் மாடல் பார்க்க பொன்னியை கூட்டிக் கொண்டு போ ….”

” இல்லைங்கய்யா எனக்கு இங்கே வேலையிருக்கு .குருவை போகச் சொல்லுங்க ….” கதிர்வேலன் மனைவியுடனான பயணத்தை அவசரமாக மறுத்தான் .

பூந்தளிர் பொன்னியை பார்க்க அவள் ஒரு யோகினி பாவனையை முகத்தில் சுமந்திருந்தாள் . இவள் பாவம்…இன்னும் எத்தனை நாட்கள் இந்த துறவற வாழ்வை வாழ்வாள் …பூந்தளிரின் மனம் வேதனைபட்டது .குருபரனை பார்க்க அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் . அவளிடம் கோபமாக இருக்கிறானாம் ….பேச மாட்டானாம் ….பார்க்க கூட மாட்டானாம் ….சரிதான் போடா என அவனுக்கு இதழ் சுளித்து காட்டிவிட்டு மீண்டும் மாமனாரை கவனித்தாள் .

” வேத குருக்களுக்கு சொல்லிவிட்டேன் .இருநூறு பேர் …ஐம்பதோரு யாக குண்டங்கள் …பத்து நாட்கள் ஹோம்ம் வளர்த்து யாகம் செய்ய போகிறார்கள் . அதற்காக தனியாக பந்தல் போட ஏறபாடு செய்ய வேண்டும் .குரு நீ பந்தல் வேலையை கவனித்து கொள் . முருகேசா …ஐம்பத்தி நான்கு யானைகள் வேண்டும் . அதை நீ ஏற்பாடு செய்ய வேண்டும் .ஒரு யானை  இரண டு குடங்கள் சுமந்து  நூற்றியுட்டு குட காவிரி நீரும் நம் ஊர் முழுவதும் வலம் வந்து பிறகு கோவிலில் யாகத்திற்கு இறக்க்பட வேண்டும் ….”

பொன்னுரங்கம் வேலைகளை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார் .ஊர் முழுவதுமே கும்பாபிசேக களை கட்டத் துவங்கிவிட்டது .

” குரு …இந்த குடம் வாங்கும் வேலையையும் நீயே பார்த்து விடு .பூந்தளிரை கூட கூட்டிட்டு போய் கொள்  நான்நம் பசுவிற்கு உடம்பு சரியில்லையென்று அம்மா சொன்னார்கள் ்அதற்கு டாக்டரை கூப்பிட்டு வர போகிறேன் ….”  கதிர்வேலன் தன் வேலையையும் தம்பியிடம் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டான் .




குருபரன் கொஞ்ச நேரம் ஹாலில் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தான் .ஏதோ தீவிர யோசனை போல ….அவன் அண்ணன் மதினியை பற்றித்தான் இருக்கும் .பொன்னியின் நினைவு வந்த்தும் தன் வீம்பு மறைய அவனருகில் போனாள் பூந்தளிர் .

” உங்கள் அண்ணனை பற்றித்தானே யோசிக்கிறீர்கள் …? நா …நான் ஏதாவது உதவ வேண்டுமா …? ” தயங்கத்தோடு கேட்டாள் .
” நீ உன் வாயை மூடிட்டு ஓரமா இருந்தாலே போதும் …” சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போக பூந்தளிரின் முகம் கோபத்தில் சிவந்தது .

” போயேன் ….உனக்கோ …உன் அண்ணனுக்கோ பேசி எனக்கென்ன கிடைக்க போகிறது …? நீயாச்சு …உன் குடும்பமாச்சு .உங்களுக்காக நான் ஏன் என்னை மனதை வருத்திக் கொள்ளவேண்டும் ….” சோபாவில் தனியாக அமர்ந்து கொஞ்சநேரம் கணவனை தாளித்து எடுத்தாள் .நிறைய வசவுகளையும் , சாபங்களையும் கணவனுக்கு கொடுத்த பின்பு அவள் மனது கொஞ்சம் சாந்தியுற …பொன்னியை பார்க்கலாமென அடுப்படிக்கு போனாள் .

” நீ உன் எல்லையை தாண்டி பேசுகிறாய் குரு .எப்போதுமே எங்களுக்கிடையே நீ வர முடியாது .அதை நினைவில் வைத்துக்கொள் ….” பொன்னி குருதரனிடம் கண்டிப்பாக பேசிக் கொண்டிருந்தாள் .

அவ்வளவு நேரம் கணவனை மனம் போன போக்கில் வைது கொண்டிருந்தவள்தான் …ஆனால் இப்போது வேறொருத்தி இது போல் அதிகாரமாக தன் கணவனிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டதும் பூந்தளிருக்கு கோபம் வந்த்து . என்னதான் பெரியவர்களென்றாலும் இதென்ன இப்படி அதிகாரமான பேச்சு …? பொன்னியை நினைத்து முகம் சுளித்தாள் .

” நான் உங்களை அம்மாவிற்கு அடுத்தபடியாக வைத்திருக்கிறேன் மதினி . என் அம்மாவை அப்பா அவமானப்படுத்தினால் , அப்பாவை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் .அது போலத்தான் உங்களையும் .நான் கவனித்த அளவில் அண்ணன் கொஞ்ச நாட்களாக உங்களை ரொம்ப தவிர்க்கிறார் …தள்ளி வைக்கிறார் .பிறர் அறியாமல் அவமானப்படுத்துகிறார் …”

” ஏய் போதும்டா …புருசன் பொண்டாட்டி விசயம் உனக்கென்ன தெரியும் …? “

” அப்பா , அம்மா விசயம் பிள்ளைகளுக்கு தெரியாமல் இருக்காது மதினி .நான் உங்களை என் அண்ணனை விட உயர்வாக நினைக்கறேன் .அண்ணன் உங்களை பலவிதங்களில் படுத்துவதை என்னால் தாங்க முடியவில்லை .இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு நீங்கள் எதற்காக இங்கே இருக்கவேண்டும் .இந்த துயர வாழ்க்கை உங்களுக்கு வேண்டாம் மதினி .நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் ….”

பூந்தளிருக்கு பேசுவது தன் கணவன்தானா …என்ற சந்தேகம் வந்த்து .இவனென்ன இப்படி பேசுகிறான் …? இரண்டு பேரையும் சேர்த்து வைக்க சொன்னால் பிரிந்து வாழ வழி சொல்கிறானே .்குழம்பினாள் .

” போதும் குரு .வாயை மூடு ்உன் வேலையை பார்த்துக் கொண்டு போ …”




” இப்போது இதுதான் என் வேலை மதினி .நம் ஊர் கோவில் கும்பாபிசேகம் முடியட்டும் .அதன் பிறகு நீங்கள் உங்கள் அம்மா வீட்டிற்கு போய்விடுங்கள் …”

” உளறாதே குரு .எங்கள் விசயத்தில் நீ தலையிடாதே ….”

” இங்கே விட உங்கள் அம்மா வீடு அதிக வசதியென்று தெரியும் மதினி . நீங்கள் எப்போது போனாலும் உங்களை வரவேற்று அணைத்துக் கொள்ள உங்கள் அங்கே இரண்டு அண்ணன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ….”

” என்னது …? என்னடா சொல்கிறாய் …? “

” ஆமாம் மதினி நான் இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் அண்ணன்களை சந்தித்து இங்கு நீங்கள் சந்தோசமாக இல்லையென்று சொல்லிவிட்டேன் .அவர்கள் உடனே இங்கே கிளம்பி வந்து அண்ணனை ஒரு வழி செய்கிறேனென்று சொன்னார்கள் .நான்தான் அவர்களை சமாதானப்படுத்தி நானே ஐயாவிடம் , அண்ணனிடம் பேசி உங்களை பத்திரமாக அங்கே அனுப்பி வைக்கிறேனென அவர்களுக்கு உறுதி கொடுத்து விட்டு வந்தேன் ….,”

பூந்தளிர் தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டாள் ்அவள் கேட்பது சரிதானா …? இப்படி ஒரு முட்டாள்தன வேலையை அவள் கணவன்தான் செய்து கொண்டிருக்கிறானா …அவள் யோசிப்பை ” பளார் ” என்ற சத்தம் குறுக்கிட்டது .

பொன்னிதான் ….குருபரனை அறைந்து விட்டிருந்தாள் .” யாரை கேட்டுடா என் பிறந்த வீட்டிற்கு போனாய் …? நான் உன்னிடம் சொன்னேனா இங்கே கொடுமைபட்டுக் கொண்டிருக்கிறேனென சொன்னேனாடா ….? இந்த அளவு என் மேல் உனக்கு எப்போது உரிமை கொடுத்தேன் …? என் மீது , என் நினைவுகள் , செயல்கள் எல்லாவற்றின. மீதும் என் புருசன் ஒருவருக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது .நீயெல்லாம் என் கால் தூசிக்கு சம்ம்டா …உன்னை ஒரு மனுசன்னு நான் எங்கள் பிரச்சனையை சொல்வேனென்று நினைத்தாயா …? எங்கள் இருவருக்குமிடையே இருக்கும் அன்பை பற்றி உனக்கு என்னடா தெரியும் …? காலம் முழுவதும் ஒருவரையொருவர் கண்ணால் பார்த்துக் கொண்டு மட்டுமே நாங்கள் பல ஜென்மங்கள் வாழ்ந்து விடுவோம் தெரியுமா …? இது என் புருசன் வீடு .என் வீடு …என்னை வெளியே போகச் சொல்ல நீயார் …? ” ஒரு அடி அல்ல பேச்சுக்கு ஒரு முறையென நான்கைந்து அடிகளாவது குருபரன் பொன்னியிடம் வாங்கியிருப்பான் .

” இனி என் முகத்தில் விழிக்காதேடா …இங்கிருக்காதே …வெளியே போடா …” பொன்னி ஆங்கார காளி போல் குருபரனின் சட்டையை உலுக்கிக் கொண்டிருந்தாள் .

அவளது இந்த ஆக்ரோசத்தில் திகைத்து அவளையே பார்த்தபடி இருந்த பூந்தளிர் ,இப்போது சுயநினைவிற்கு வந்து இதென்ன இப்படி பண்ணுகிறாள் …கோபத்துடன் அடுப்படியினுள் போக முயன்றபோது ….

” அவனை விடு பொன்னி …” என்றபடி பின்வாசல் வழியாக வந்தான் கதிர்வேலன்.

” இவனை கொன்று விடனும் போல் எனக்கு ஆத்திரம் வருகிறது .நான் உங்களை விட்டு பிரிந்து என் அம்மா வீட்டிற்கு போய்விட வேண்டுமாம் .எனக்கு அறிவுரை சொல்கிறான் …இவனை …” திரும்ப சட்டையை உலுக்கியவளை தடுத்து கைகளை பிடித்து இருவரையும் பிரித்தான் .

” அவன் சின்ன பையன் .ஏதாவது சொல்வான் .அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு …”

” இவனை நான் என் மூத்த பிள்ளையாக  நினைத்தேன் ்இன்று எப்படி பேசுகிறான் பாருங்கள் …? ” பொன்னி அழத்துவங்கினாள் .

கதிர்வேலன் குருபரனை பிடித்து வெளியே தள்ளினான் .” நீ போடா …”




தலை குனிந்தபடி வெளியே வந்த குருபரன் அவர்கள் கண்ணிலிருந்து விலகியதும் பரபரப்புடன் ஓரம் ஒதுங்கி உள்ளே கவனிக்க ,கதவு பின்னால் ஒழிய மெத்தென எதன் மேலோ மோதிக்கொண்டான் .யாரென திரும்பி பார்க்க முன்பே அந்தக் கதவின் பின்னால் பூந்தளிர் நின்றிருந்தாள் .

” நீயா …? இங்கே என்ன பண்ணுகிறாய் …? “கோபமாக ஆரம்பித்தவன்    சட்டென குரலை குறைத்து பூந்தளிரையும் சேர்த்து கதவிற்கு பின்னால் இழுத்து   மறைத்தபடி உள்ளே நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான் .

உள்ளே பொன்னி தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் . கதிர்வேலன் அவள் முன் நின்று அவளை பார்த்தபடி இருந்தான் .

குருபரன் அண்ணனையும் , மதினியையும் கவனித்துக் கொண்டிருக்க , பூந்தளிர் தன்னருகில் உரசியபடி நின்ற கணவனை கவனித்தாள் .அவனது கன்னத்தில் ஆழமாக பதிந்திருந்த்து பொன்னியின் விரல்கள் .சிவப்பாக வரி வரியாக தெரிந்த்து .மெல்ல ஒரு விரலை நீட்டி அந்த தடங்களை வருடினாள் .

” கொஞ்ச நேரம் சும்மாயிரு ….” அவள் விரல்களை அழுத்தி தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டான் .உள்ளே …

” அழாதே பொன்னி …” கதிர்வேலன் தன் கைகளை பின்னால் இறுக்கி கட்டியபடி நின்று பொன்னியை பார்த்துக் கொண்டிருந்தான்.

” எனக்கு வேறு எதுவும் வேண்டாங்க. நான் உங்களை பார்த்துக் கொண்டே இந்த வீட்டின் ஒரு ஒரத்தில் இருந்து விட்டு போய்விடுகிறேன் ்என்னை வெளியே போய்விட சொல்லாதீர்கள் …”

” சரி …சரி .எழுந்து கண்ணை துடை .முகத்தை கழுவு .நான் இப்போது கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் …” அவன் அடுப்படி வாசலை கடக்கும் போது …

” மதியம் உங்களுக்கு சாப்பிட என்ன அனுப்ப …?எங்கே அனுப்ப …? ” பொன்னி அவசரமாக எழுந்து நின்று கேட்க , கதிர்வேலன் நெகிழ்ந்து நின்று ஒரு நிமிடம் விழி மூடினான் . பின் …

” நீ என்ன செய்கிறாயோ …அதை .தென்னந்தோப்பில் இருப்பேன் .அங்கே அனுப்பு …” என நடந்தான் .அவன் பார்வையில் படாமலிருக்க பூந்தளிரை இறுக்கி இழுத்தபடி அந்த பெரிய கதவின் பின்னால் இன்னமும் பதுங்கினான் குருபரன் .

” ம் …அப்புறம் …? ” என்றாள் பூந்தளிர் .அவள் கண்கள் இன்னமும் அவன் கன்னத்து தடங்களிலேயே இருந்தன.

” அடுத்து …கீர்த்தனா …” என்றபடி திரும்பியவன் தன் முகத்தை மொய்த்த மனைவியின் பார்வைக்கு புருவத்தை உயர்த்தினான் .
” ரொம்ப வலிக்குதா …? ” பூந்தளிரின் கை  அவன் கன்னத்தை வருடியது .

” ரொம்ப அக்கறைதான் ….” அலட்சியமாக அவள் கையை எடுத்து விட்டவன் , தான்  வளைத்திருந்த அவள் தோள்களையும் தள்ளினான் .

” உன்னை நம்ப முடியாது . எப்போது எரிவாய் …எப்போது சுடுவாய் என்று கணிக்க முடியாது .நான் எதற்கும் உன்னை விட்டு கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன! ….” என்றுவிட்டு போனான் .பூந்தளிர் கலங்கி நின்றாள் .

———————

மறுநாள் காலை வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அண்ணனின் பைக்கின் முன்னால் , கீர்த்தனாவை ஏற்றி உட்கார வைத்தான் . ” எனக்கு நிறைய வேலைகள் அண்ணா. இன்று ஒரு நாள் இவளை ஸ்கூலில் விட்டு விடுங்கள் ….” சொல்லிவிட்டு வீட்டிற்குள் விருட்டென போய்விட்டான் .

” டேய் …எனக்கும் வேலையிருக்குடா …” கத்திய கதிர்வேலனின் சட்டையை பிடித்து இழுத்தாள் கீர்த்தனா .” ஸ்கூலுக்கு நேரமாச்சுப்பா …போலாம்பா …ப்ளீஸ் …” தலை சாய்த்து கெஞ்சுதலாக கொஞ்சிய மகளின் தேவதைத்தனத்தில் கதிர்வேலனின் மனம் சுருண்டது .அவன் மௌனமாக பைக்கை ஸ்டார்ட் செய்தான் .

வழி நெடுக வாய் மூடாமல் கதை பேசியபடி வந்த மகளுக்கு உம் கொட்டியபடி வந்தான் கதிர்வேலன் .மகளின் தலையில் இருந்த சிறு துண்டு மல்லிகையிலிருந்து வந்த மணத்தை நுகர்ந்தபடி இப்படி அவளிக்கு உம் கொட்ட அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது .

———————–

கோவிலுக்கு பின்னால் பந்தல் போடப்பட்டுக் கொண்டிருக்க அதை மேற்பார்வையிட்டபடி நின்ற குருபரனை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் பூந்தளிர் .இவன் ஏன் இப்படி ஆளுமைத்தனமாக …ஆண்மைத்தனமாக …இருந்து தொலைக்கிறான் …? எந்நேரமும் என்னை ஏதோ ஒரு வகையில்  தொல்லை செய்து கொண்டே இருக்கிறானே …கணவனை கண்களால் பருகியபடி நின்று கொண்டிருந்தாள் .




” பூவு …” அவள் பின்னால் கேட்ட குரலுக்கு திரும்பாமலேயே ” ம் …” என்றாள் .அவள் பார்வை இன்னமும் அவள் கணவனையே தின்று கொண்டிருந்த்து .

” பூந்தளிர் ….” அந்த குரல் சத்தமாக கூப்பிட திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் .

” குமரன் அத்தான் …நீங்களா …கூப்பிட்டீங்களா …? “

” நாலு தடவை கூப்பிட்டேன் .நீ இந்த உலகத்தில் இருப்பது போன்றே இல்லை ….”

” நான் கவனிக்கலை அத்தான் .அவரை பார்த்துக் கொண்டிருந்தேன் …” பூந்தளிரின் பார்வை திரும்ப குருபரனிடம் போயிருந்த்து .

” ம் …நான் உன்னிடம் கொஞ்சம் பேசலாமென ….பூந்தளிர் ….” குமரன் திரும்ப அவளை சத்தமாக அழைத்து தன்பக்கம் திருப்ப வேண்டியதிருந்த்து .

” இப்போது என்ன அவசரம் அத்தான் …? நாளை பேசலாமா …?இல்லை கோவில் கும்பாபிசேகம் முடியட்டுமே …அப்புறம் பேசலாமே …. “

” அப்போது நான் இங்கே இருக்கமாட்டேன் ….” இறுக்கமான முகத்துடன் சொன்னான் குமரன் .

” ஏன் …எங்கேயும் ஊருக்கு போகப் போகிறீர்களா ..? “

” ஆமாம் .எனக்கு சென்னையில் வேலை கிடைத்திருக்கிறது .நான் ஒரு வாரத்தில் கிளம்ப போகிறேன் …”

” அப்படியா வாழ்த்துக்கள் .எங்கள் கோவில் கும்பாபிசேகத்தை முடித்து விட்டு போங்களேன் ….”

” உங்கள் கோவிலா …? “

பூந்தளிர் நாக்கை கடித்தாள் .இது ஊர் பொது கோவில் .இதனை எங்கள் கோவிலென்று உரிமை கொண்டாடியது தவறுதானே .இது போல் உயர்ஜாதிக்கார்ர்கள் தங்களுக்கென உடமையாக்கி கொள்வார்களென்றுதானே , அவள் ஜாதி ஆட்கள் இந்த கும்பாபிசேகத்தை கூட நிறுத்த நினைத்தார்கள் .

” நீ நிறைய மாறிவிட்டாய் பூந்தளிர் ….”

” இல்லை அத்தான் .எங்கள் வீட்டில் எந்நேரமும் இந்த கோவில் கும்பாபிசேகம் சம்பந்தமான பேச்சுக்கள் , வேலைகள் என பேசி வருவதால் …வாய் தவறி இப்படி வந்துவிட்டது …”

” ம்கும் …எங்கள்  ஜாதி பெண்ணை மணமுடித்து இரண்டு ஜாதியையும் சேர்ப்பார்களென நினைத்தால் ,அவர்கள் எங்கள் பெண்ணை அவர்கள் பெண்ணாக மாற்றி வைத்திருக்கிறார்கள் .ஆனால் நான் உன்னிடம் இப்படி எதிர்பார்க்கவில்லை …”

அந்நேரம் பூந்தளிர் தன்னை குற்றவாளியாக உணர்ந்தாள் .




What’s your Reaction?
+1
30
+1
19
+1
0
+1
1
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!