Entertainment lifestyles News

கழுதை பால் விற்று மாத 3 லட்சம் வரை வருமானம் ஈட்டி வரும் இளைஞர்!

ஒரு சொந்த தொழிலை தொடங்கி பெரிய முன்னேற்றத்தை அடைந்த பல நபர்களின் புல்லரிக்க வைக்கும் கதைகளை நாம் சோசியல் மீடியாக்களில் பார்த்திருப்போம். அந்த வகையில் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் தற்போது சொந்த தொழில் தொடங்கி மாதம் ரூ. 3 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். அவர் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு இந்த சிந்தனை எப்போது வந்தது? என்பது போன்ற விவரங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.

குஜராத்தில் வசிக்கும் தீரன் சோலங்கி என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு, கழுதை வளர்க்கும் தொழிலைத் தொடங்கினார். தற்போது இதன் மூலம் இவர் ஆன்லைனில், ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.5,000 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார்.

குடும்பத்தை நடத்த நல்ல வேலை கிடைக்காததால், தீரன் சோலங்கி இந்தத் தொழிலைத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது. அவர் குடும்ப சூழ்நிலைகளைச் சமாளிக்க சென்ற அனைத்து தனியார் நிறுவன வேலைகளும், அவருக்குக் கைக் கொடுக்கவில்லை. போதிய வருமானம் இல்லாதால் தீரன் இந்த கழுதை வளர்க்கும் தொழிலைத் தொடங்கியுள்ளார்.




தென்னிந்தியாவில் கழுதை வளர்ப்பது பொதுவாக சிலர் செய்யும் பிற தோழில்களைப் போலதான் என தெரிந்து கொண்டபின், அதனை முயற்சி செய்ய முடிவு செய்துள்ளார் தீரன். ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தனது சொந்த கிராமமான படானில் ஆரம்ப முதலீடாக ரூ. 22 லட்சத்தில், 20 கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில், அதாவது சுமார் ஐந்து மாதங்களுக்கு, தீரனின் இந்த கழுதை வளர்ப்பு தொழிலில், எந்த வருமானத்தையும் அவர் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. குஜராத்தில் கழுதைப்பாலுக்கு கிராக்கி இல்லை என்பதால் தொடர்ந்து சில மாதங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இருந்துள்ளார்.

அதன்பிறகு, தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளாவில், கழுதைப்பாலின் தேவை அதிகமாக இருக்கும். அதுவும் அழகுசாதன உற்பத்தியில் கழுதைப் பாலுக்கு அதிக தேவை இருக்கும். இதனை நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளார் தீரன். கழுதைப் பாலுக்கான விலை ஒரு லிட்டருக்கு ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை என்று நிர்ணயித்துள்ளார்.

மேலும், பசும்பால் லிட்டருக்கு ரூ. 65க்கு விற்பனை செய்யப்படுவதை விட கழுதைப் பாலின் விலை பன்மடங்கு அதிகமாகும். இதனைக் கருத்தில் கொண்டு தீரன் தன் தயாரிப்புகளை அதிகரித்துள்ளார். குறிப்பாக கழுதை பால் பால் பவுடர் 1 கிலோவின் விலை ரூ. 1 லட்சம் வரை ஆன்லைன் மூலமாக விற்று வருகிறார். தற்போது அவரிடம், 42 கழுதைகள் உள்ள நிலையில், அவர் இதுவரை சுமார் ரூ. 38 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது . பிற செய்தித் தரவுகளின் படி, தீரன் சோலங்கி இப்போது இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு கழுதை பால் வழங்குவதன் மூலம் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை மாத வருமானம் ஈட்டி வருகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!