Cinema Entertainment

விஜய் நடிக்க மறுத்த திரைப்படம்..அது என்ன படம்?

தமிழ் சினிமாவில் எப்போதுமே தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இப்போது விஜயின் அடுத்த கட்ட நகர்வு அரசியலை நோக்கி திரும்பி இருக்கிறது. அதற்காக முதற்கட்டமாக என்னென்ன ஆயத்த பணிகளை செய்ய வேண்டுமோ அதை தன் இயக்க நண்பர்கள் மூலமாக செய்து கொண்டு வருகிறார்.

அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார். இவருடைய இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  திரையரங்க உரிமையாளர்களும் விஜய் சினிமாவை விட்டு விலகக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.




அந்த அளவுக்கு தியேட்டர் உரிமையாளர்களை வாழ வைக்கும் தெய்வமாக விஜய் மாறி இருக்கிறார். கோலிவுட்டில் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் மன்னனாக கலக்கி வருபவர் விஜய். அதனாலயே இவரால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே உரிமையாளர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சமீபத்தில் இவருடைய கில்லி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து அதிலும் பெரும் கோடியை தியேட்டர் உரிமையாளர்கள் லாபமாக பார்த்திருக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கில்லி திரைப்படத்தை இப்போது ரீ ரிலீஸ் செய்தும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. அதற்கு காரணம் கதையையும் தாண்டி விஜய் என்று சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு போகக்கூடாது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கில்லி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறி இருக்கிறார். எஸ் எ சந்திரசேகர் இயக்கிய  ‘சுக்ரன்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்தின் மகனான ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருப்பார்.




அவரை நடிக்க வைக்க எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் விஜயும் நடிக்கிறார். அதனால் உங்கள் மகனை நடிக்க வையுங்கள் என்று சொல்லி கேட்டிருக்கிறார். ஏ எம் ரத்தினமும் ரவி கிருஷ்ணாவிடம் ‘ இதில் விஜய் நடிக்கிறார்’ என்று சொல்லி தன் மகனை சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் இந்த படத்தில் என் மகன் நடிக்கவில்லை என கூறியிருக்கிறார். இதை கேட்டதும் ஏ எம் ரத்தினத்திற்கு பெரும் ஷாக்.

sukran

இருந்தாலும் ஏ எம் ரத்தினம் நேராக விஜய் இடம் ஏன் நடிக்கவில்லை என கேட்க அதற்கு விஜய்  ‘இது உங்கள் மகனின் எதிர்காலம். அவர் ஒரு வளர்ந்து வரும் இளைஞர். இதில் நான் நடித்து அது பாதிக்கக் கூடாது’ என கூறியிருக்கிறார். இருந்தாலும் ஏ எம் ரத்தினம் விடவில்லையாம். அதன் பிறகு விஜய்  ‘சரி நான் நடித்து அதில் உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் நான் இதில் நடிக்கிறேன்’ என கூறினாராம். ஏனெனில் சுக்கிரன் திரைப்படத்தின் போதே விஜய் ஒரு டாப் ஹீரோவாக உயர்ந்திருந்தார். இதில் விஜய் நடித்த அது விஜய் படமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த படத்தில் நடிக்க மறுத்தாராம் விஜய்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!