Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-9

9


அதிகாலை குளிரில் பூக்களெல்லாம் புன்னகை தூவிட, வசந்தா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மலரைச் சந்திக்க வந்திருந்தாள் ஆசிரமத்திலிருந்து, என்னம்மா நான் அப்பவே டிபன் சாப்பிட கூப்பிட்டேன் நீ வரவே இல்லையே?

நான் வசந்தா அக்காவைப் பார்க்கப் பாகலாமின்னு இருக்கேம்மா அங்கேயே சாப்பிட்Lடுக்கிறேன்.
என்ன விஷயம்? என் பேரு அடிபடுது. என்ற கேள்வியோடு வீட்டுக்குள் நுழைந்தாள் வசந்தா.
வாங்கக்கா இப்பத்தான் உங்களைப் பார்க்க வரலாமின்னு அம்மாகிட்டே சொல்லிட்டு இருந்தேன்.

அதற்குள் நீங்களே வந்திட்டீங்க?வாம்மா நல்லாயிருக்கியா?

ம்… நீங்க எல்லாரும் இருக்கும் போது எனக்கு என்ன குறை அக்காவைப் பாண அப்படியென்ன அவசரம் மலர்.
சும்மாதான், அம்மா நீங்க போய் அக்காவுக்கும், எனக்கும் காபி தாங்களேன் மலர் தாயை தனியே விரட்டினாள்.
என்ன விஷயம் மலர் ?

அக்கா…

அம்மாவை நீ அனுப்பும் போது எங்கிட்ட நீ ஏதோ சொல்லப்போறேன்னு தெரியும் சொல்லும்மா? என்னப் பிரச்சனை?
மலர் தன் அலுவலக விஷயங்கள் அத்தனையும் சகோதரியிடம் பகிர்ந்து கொண்டாள். இனிமேலும், அந்த இடத்திலே வேலை செய்ய முடியுமின்னு எனக்குத் தோணலை, அதனால…?!

வேற வேலைக்கு ஏற்பாடு செய்யணும் அப்படித்தானே?

மலர் தலையசைத்தாள், நானும் ஒரு வேலை சம்பந்தமா பேசத்தான் வந்தேன். ஆனா அதுக்கு சித்தியும், சித்தப்பாவும் சம்மதிப்பாங்களான்னு தெரியலை,

என்னது வசந்தி ? காபியை வந்த மகேஸ்வரி கேட்க,
சொல்றேன் சித்தி, அப்பாவுக்கு உடல்நிலை இப்போ எப்பிடியிருக்கு?

ஒண்ணும் முன்னேற்றம் இல்லைம்மா! இந்தக் குடும்பத்திற்கே ஆலமரமா இருந்தவர், இப்போ இப்படிக் கிடக்கிறார்.
கவலைப்படாதீங்க சித்தி, இது எல்லாருக்கும் ஆறுதலா இருக்கவேண்டிய நீங்களே இப்படிக் கலங்கினா? சின்னப் பிள்ளைங்களுக்கு யார் ஆறுதல் சொல்றது?

எல்லாம் எங்க நேரமின்னு தான் சொல்லணும்! யாரை நொந்துக்கிறது?
வசந்தி தன் சிற்றன்னையை சமாதானப்படுதுதி சித்தப்பாா படுத்திருந்த அறையை நோக்கி நடந்தாள். தூய்மையாய் விரிக்கப்பட்ட படுக்கையில் குமார் ஏதோ ஒரு பொட்டலமென ஒரு ஓரமாய் கிடந்தார். பார்ப்பதற்கே மனதை ஏதோ பிசைந்தது.

அப்பா சிரமப்பட்டு கண்களைத் திறந்தவர் வாம்மா? என்றார்.

இப்போ எப்படியிருக்குப்பா?

ஏதோ எல்லாருக்கும் பாரமா இருக்கேம்மா?




என்னப்பா இது? இப்படியெல்லாம் பேசறீங்க ?

நீங்க பார்த்து வளர்த்த பிள்ளைங்க உங்களைப் போய் பாரமா நினைப்பாங்களா?

இல்லேம்மா? மலரை இன்ஜினியரிங் படிக்க வைக்கணுமின்னு நான் எவ்வளவு கனவு கண்டேன்.

உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரலாமின்னு இருந்தேன். எல்லாம் நிராசையா போயிடுச்சு. பட்டாம்பூச்சி மாதிரி திரிய வேண்டிய பொண்ணு குடும்ப பாரம் மொத்தமும் சுமக்குறா? மனசு தாஙக முடியலைம்மா?

இந்த வலியும், வேதனையும் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் சீக்கிரமே நம்ம கஷ்டமெல்லாம் தீரப்போகுது.
எப்போதிலிருந்து ஜோஸியம் பார்க்க ஆரம்பிச்சீங்க அக்கா,கேட்டபடியே தந்தைக்குப் பால் புகட்ட ஆரம்பித்தாள் மலர்.

ஜோஸியம் இல்லைடா, இருள் படர்ந்த நம்ம வாழ்க்கைக்கு சின்னதா ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி கிடைச்சிருக்கு!
என்னம்மா சொல்றே?

ஆமாம். சித்தி, நம்ம ஆசிரம பாதர் மூலமா ஒரு சின்ன உதவி வந்திருக்கு. எங்க ஆசிரமத்துக்கு அதிகமா டொனேஷன் தர்றவங்களில் ராஜன் என்பவரும் ஒருவர்.

அவங்க குடும்பம் மொத்தமும் அந்தமானில் இருக்கிறதாம். அங்கே குடும்பத்தை நிர்வகிக்கவும், புதுசா ஆரம்பிக்கப் போகிற பேக்டரிக்கு இன்சார்ஜ் ஆக ஒரு ஆள் தேவைப்டுமின்னு பாதர்கிட்டே கேட்டாராம் மிஸ்டர் ராஜன்.

ரொம்ப வருஷமாகவே பாதருக்கு அவங்க குடும்பத்தோட பழக்கமாம். அதனால என்னைப் போக முடியுமுமான்னு கேட்டார். நம்பிக்கையான இடம் நல்ல மனுஷங்க ! ராஜன்கிட்டே பேசிப் பார்த்தேன்.

அதெல்லாம் சரிதாம்மா, நீ சின்னப் பொண்ணு, உன்னை எப்படிம்மா அவ்வளவு தூரம் தனியா அனுப்பி வைக்க முடியும்.

நான் எனக்கு மட்டும் அங்கே வேலை கேட்கலை, மலருக்கும்தான். என்று வசந்தா சொல்லியதும் அங்கே சற்று நேரம் பெருத்த மெளனம் நிலவியது. மகேஸ்வரிதான் முதலில் பேசினார்.

வசந்தா இரண்டு வயசுப் பெண்களை கடல் கடந்து அனுப்பிட்டு நாங்க வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணுமா?

சித்தி நீங்க எந்த காலத்திலே இருக்கீங்க? இப்பொவெல்லாம் பெண்கள் எல்லாத்துறைகிளலும் இருக்காங்க? வெளியூர் போய் வேலைப் பாக்குறது எல்லாம் இப்போ சர்வ சாதாரணமா ஆயிடுச்சு.

உங்களுக்கு என் மேல நம்பிக்கையிருந்தால் மலரை அனுப்புங்க.
நம்பிக்கை வேற உலக நடப்பு வேற வசந்தி




புரியுது சித்தி அப்பா நீங்க சொல்லுங்க, சித்திக்கு உலக நடப்பு ஏதும் தெரியலை,
பெண்களுக்குத் தனித்துவம் முக்கியம்தான். ஆனா இங்கேயிருந்தே ஏதும் செய்ய முடியாதா?

சித்தி இதிலே இன்னுமொரு வசதியும் அடங்கியருக்கு சித்தப்பாவோட ஆபரேஷன் செலவை அந்தக் கம்பெனியே ஏத்துக்கிறதாச் சொல்லியிருக்காங்க.

அந்தத் தொகையை எங்க சம்பளத்திலே ஒரு பகுதியாய் கழிக்கச் சொல்லியும் பாதர் ரெக்மண்ட் செய்து இருக்கிறார். இரண்டு வருஷக் காண்ட்ராக்ட் தானே இரண்டு நிமிஷமா பறந்து போயிடுமே.

பாதர் சொன்ன கண்டிஷனுக்கு அந்தக் கம்பெனி ஒத்துக்கிட்டாங்களா
அக்ரிமெண்ட் ரெடி பண்ணித் தரக்கூடத் தயாரா இருக்காங்க.

சித்தப்பாவோட உடம்பு குணமாகிறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்குமே? தானே நமக்கு ஒரு வழி கிடைக்கம் போது அதையேன் எட்டி உதைக்கணும்?

மகேஸ்வரி அம்மாளின் முகம் மலர்ந்தது. இளையவளின் கையைப் பற்றிக் கொண்டார். இது நடக்குமா வசந்தா ? அவர் மட்டும் எழுந்து உட்கார்ந்திட்டார்னா நான் உன்னை என் தெய்வமா பூப்போட்டு கும்பிடுவேன்.

என்ன சித்தி! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு இது என் குடும்பம் இல்லையா? உறவு முறையிலே, சித்தி, சித்தப்பாவா இருந்தாலும் சொந்தத் தாய் தகப்பனாத்தான் நான் நினைக்கிறேன் நீங்க நல்லா இருந்தாத்தானே உங்க நிழல்ல நான் வாழ முடியும்.

வசந்தா

என்ன சித்தப்பா?

மலருக்கு முதலில் இது சம்மதமான்னு கேளும்மா

என்ன மலர் உனக்கு இதில் விருப்பமா என்னோட அந்தமானுக்கு நீயும் வரீயா?

அக்கா இவங்க எல்லாரையும் விட்டுட்டு வரணுமேன்னு நினைக்கும் போதுதான் கஷ்டமா இருக்கு. ஆனா இந்த வாய்ப்பால அப்பா பழையபடி ஆகப் போகிறார்ன்னா நான் நிச்சயம் எந்தக் கஷ்டமும் படத் தயாரா இருக்கேன். வசந்தா கடவுள் எனக்கு எத்தனையோ கஷ்டங்களைக் கொடுத்திருக்கார். ஆனா அதையெல்லாம் மறக்கடிக்கிற மாதிரி நல்லப் பிள்ளைகளை தந்திருக்கார். மலர் இங்கே வாடா….?!




என்னை மன்னிச்சிடும்மா? மகளின் கையைப் பற்றியபடி,

இந்த அப்பாவால உன்னோட கனவுகளை நிறைவேற்ற முடியலை,மாறாக மேலும் மேலும உனக்கு கஷ்டத்தைத்தான் தர்றேன்.எனக்கு உங்களைத்தவிர உலகத்திலே வேறெதுவும முக்கியம் இல்லைப்பா.

நீங்க கூடிய சீக்கிரமே எழுந்து நடப்பீங்கப்பா அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. மகளின் கண்ணீரைத் துடைத்தார் தந்தை.

சரி மலர் நாளைக்கே நாம அப்பாவை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போய் பார்க்கலாமா?

எப்போ ஆபரேஷனை வச்சிக்கலான்னு கேட்போம்,

நாளைக்கு செக்கப் இருக்கு நீங்களும் வாங்கப்பா போகலாம்.
நல்ல விஷயம் சொல்லியிருக்க வசந்தா! வந்து ஒருவாய் சாப்பிட்டுப் போம்மா.

ஒருவழியாய் சாப்பாடு முடிந்து வசந்தா கிளம்பவும், மலர் போய் பழையபடி அறைக்குள் முடக்கிக் கொண்டாள்.
கண்ணெதிரே இருந்து கொண்டு கண்ணாமூச்சு ஆடுவது தான் காதல்,

அந்த விளையாட்டில் மலரும் இணையப் போகிறாள் என்பதை எண்ணி நிலவு அவளைப் பார்த்து சிரித்தது. எதை வெறுத்து ஓட முயல்கிறோமோ அதை வேகமாய் நெருங்குகிறோம் என்பது காதலின் தத்துவம்…!




What’s your Reaction?
+1
21
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!