kadak katru Serial Stories

Kadal Kaatru – 40

( 40)

சிறு முகச்சுளிப்புடன் காரை ஓட்டியபடி இருந்த யோகேஷ்வரனின் தோற்றம் சிறிது பயம் தருவதாய் இருந்த்து .இவன் எதற்காக இப்போது என்னை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான் .அவனிடம் கேட்க நினைத்தாலும் நாக்கு புரள மறுத்தது .இப்படி கல் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு இறுகிப் போய் இருந்தானென்றால் எப்படி பேசுவது .

இரண்டு மூன்று முறை பேசவேண டுமென்று அவனை திரும்பி பார்த்துவிட்டு எச்சில் கூட்டி விழுங்கி விட்டு ஒரு அவஸ்தையுடன் சீட்டில் அசைந்தாள் .காரினை ஒரு ப்ரேக்கில் நிறுத்தினான் .

” சமுத்ரா ..உனக்கு உடம்பு எதுவும் ..ரொம்ப அசதியாக இருக்கிறதா ..? நீ வேண்டுமானால் பின் சீட்டில் படுத்துக் கொள்கிறாயா ..? “

” இல்லையில்லை அதொன்றுமில்லை .நான் உட்கார்ந்தே வருகிறேன் .இப்போது என்ன காரணத்திற்காக திடீரென்று ..?” அவனது கரிசனத்தை சாதகமாக்கி தனது கேள்விக்கு பதில் தெரிய முயன்றாள் .

” அது …எல்லாம் அங்கே போய் பார்க்கலாம் .நீ கொஞ்ச நேரம் தூங்கு ” என்றவன் .அவள் அமர்ந்திருந்த சீட்டை அட்ஜஸ் செய்து படுக்கையாக்கி, அவள் தோள்களை அழுத்தி படுக்க வைத்தான் .சீட் பெல்ட்டையும் மாட்டி விட்டவன் மெல்ல தலையை வருடி ” தூங்குடா ” என்றுவிட்டு காரை எடுத்தான் .

இந்த கரிசனம் மனதிற்கு மிக இதமாக இருக்க நிம்மதியாக தூங்கவே தொடங்கினாள் சமுத்ரா .தூக்கத்தில் அவள் கைகள் பாதுகாப்பாய் அவள் வயிற்றை சுற்றி படர்ந்து இறுக்கிக் கொண்டது .

மீண்டும் அவள் கன்னம் வருடிய மென் ஸ்பரிசத்தில் விழித்தவளின் மனம் , தன்னை உரசியபடி பெல்ட்டை விடுவித்து விட்டு , படுக்கையை சீட்டாக மாற்றிக் கொண்டிருந்த யோகனின் பரந்த தோள்களில் முகம் புதைத்து கொள்ள விரும்பியது .

” ஹாஸ்பிடல் வந்துவிட்டது வா ” கீழே இற்ங்கினான் யோகேஷ்வரன் .சற்றே குறைந்திருந்த மனபாரம் மீண்டும் மனதில் ஏறியது சமுத்ராவிற்கு .சிறு பயத்துடன் இறங்கி நடந்தாள் .

ரிசப்சனில் செல்லி என பெயர் சொல்லி யோகன் விசாரிக்கவும் திடுக்கிட்டாள் சமுத்ரா .மூன்றாவது மாடியென்ற பதிலை வாங்கிக் கொண்டு நடந்தான் யோகன் .

” செல்லி ..அவளுக்கு என்ன ஆச்சு ..? ” லிப்ட டில் நுழைந்தபடி கேட்டாள் .

” உஷ் ..” என லிப்ட்டிலிருந்த மற்றவர்களுக்காக வாயில் விரல் வைத்து எச்சரித்தவன் , அவர்கள் ஒவ்வொருவராக இறங்கும் வரை பேசாமலிருந்தான் .அனைவரும் இறங்கியதும் லிப்ட்டை கீழ்தளம் நோக்கி இறங்க விட்டுவிட்டு ,சமுத்ராவை நெருங்கி தோள்களை அணைத்துக் கொண்டான் .

” செல்லி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கிறாள் சமுத்ரா .விசம் சாப்பிட்டிருக்கிறாள் “




” என்ன ..? ” பதறியவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் ” பதறாதடா ..இந்த நேரத்தில் நீ இவ்வளவு டென்சன் ஆக கூடாது .அதுதான் அங்கேயே சொல்லவில்லை .செல்லி உயிருக்கு ஆபத்தில்லை .காப்பாற்றியாச்சு ” என்றவன் லிப்ட்டை இப்போது மீண்டும் மேல்தளத்திற்கு ஏற்றும் பட்டனை அழுத்தினான் .

” இப்போது நீ செல்லியிடம் அவள் மனம் போல் பேசி அவளது தற்கொலைக்கான காரணத்தை அறிய வேண்டும் .அப்போதுதான் நாம் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும் “

துயரத்துடன் தலையாட்டினாள் சமுத்ரா .அவளது இரு கன்னங்களை மென்மையாக பற்றியவன் ” என்ன பிரச்சினையென்றாலும் , நீ அதற்காக உன் மனதை உளப்பிக் கொள்ளக் கூடாது ..ம் ” என்றான் .அவள் தலையசைக்கவும் லிப்ட்டை தாங்கள் இறங்க வேண்டிய மூன்றாவது மாடியில் நிறுத்தினான் .

” முதலில் நீ மட்டும் போ சமுத்ரா .நான் வந்தால் செல்லி ப்ரீயாக பேச யோசிக்கலாம் ” என்று அறையைக் காட்டினான் .

பிய்த்தெறிந்த கொடியாய் கட்டிலில் கிடந்த செல்லி சமுத்ராவை பார்த்ததும் ” அக்கா …” என கலங்கினாள் .அவளருகில் அமர்ந்து  அவளது அழுகை குறையும் வரை அவளை அணைத்தபடி இருந்தாள் சமுத்ரா .பின் கண்களை துடைத்து விட்டவள் ” என்னம்மா ஏன் இந்த முட்டாள்தனமான செயல் ..? ” கண்டிப்புடன் கேட்டாள் .

” அக்கா …அவர் என் அப்பா என்னை பார்க்க அடிக்கடி காலேஜ் , ஹாஸ்டல் என்று வந்தாரக்கா .எனக்கும் அவருடன் பேசுவது பிடித்திருந்த்தால் அவருடன் அடிக்கடி வெளியே போனேன் . யாரென்று கேட்டவர்களிடம் என் அப்பா என்று சொல்ல முடியாததால் , சொந்தக்கார்ர் என்று சொன்னேன் .என் அப்பாவைத்தான் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமே .அதனால் அப்படி சொன்னேன் .”

” ஆனால் என் ஹாஸ்டல் பிள்ளைகள் அதனை நம்பவில்லை போல , ஒருநாள் இவள் வாரா வாரம் அந்த ஆளோடு வெளியே போய் விடுகிறாளே ..இருவருக்குள்ளும் என்ன உறவிருக்க கூடும்னு …அசிங்கமாக பேசிக் கொண்டிருந்தனர் .அதனை நான் கேட்டுவிட்டேன் .ரெம்பவும் மனதுக்கு கஷ்டமாக இருந்த்து .மறுவாரம் இனிமேல் என்னை பார்க்க வராதீர்கள் அப்பா என்று கூறினால் , என் அப்பா அழுகிறார் .இப்போது என்னுடைய ஒரே ஆறுதல் நீதான் மகளே .என்னை வர வேண்டாமென்று சொல்லாதே என்று கெஞ்சுகிறார் .எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ….” நிறுத்தினாள் .

” அட முட்டாள் பெண்ணே இதற்காகவா தற்கொலைக்கு முயற்சித்தாய் .? நீயெல்லாம் படித்து என்ன செய்ய போகிறாய் .? இதில் பெரிய நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர் ஆக வேண்டும்னு உனக்கு ஆசை வேறு .அது போல் ஒரு உயர்ந்த லட்சியம் கொண்டவள் செய்யும் செயலா இது ..? ” அதட்டினாள் .

” இல்லக்கா ..அன்னைக்கு …அவுங்க ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க .அத்தோடு அப்போது என் அப்பா வேறு …”

” உள்ளே வரலாமா ..? ” என்ற யோகனின் குரலில் இவர்கள் பேச்சு நின்றது .

” வாங்கய்யா …”மரியாதையாக எழுந்து அமர்ந்தாள் செல்லி .

” என்னம்மா …உங்க ஹாஸ்டல்ல கொடுக்கிற சாப்பாடு பிடிக்கலைன்னு மனம் போன படி என்னென்னவோ சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்க போல ..? ” கேலி போல் கோபத்தை காட்டியபடி உள்ளே வந்தான் யோகன் .

” உங்களை மாதிரி பின்னால் வருவதை யோசிக்காமல் அப்போதைக்கு சரியென்று படுவதை செய்பவர்களிருந்தால் இப்படித்தான் நடக்கும் ” அவனை சாடினாள் சமுத்ரா .

அவளுக்கு யோகன் சாயாவிற்கு இரண்டாவது திருமணமாக முதல் கணவனின் தம்பியையே மணமுடித்து வைத்தது பெரிய அநியாயமாக தோன்றியது .இரண்டாவது திருமணம் முடித்து அவனுக்கு ஒரு பிள்ளையையும் பெற்று விட்டாள் சாயா .இப்போது முதல் கணவன் வந்து நிற்கிறான் .என்ன செய்வாள் அந்த பெண் ..? மனநிலை குலைந்து தடுமாறிக் கொண்டிருக்கிறாள் .முதல் குழந்தையோ தனது அப்பாவை பற்றிய குழப்பத்தில் உயிரையே விடத் துணிந்து விட்டாள் .

” அப்போதைய நிலைமை பற்றி உனக்கு என்ன தெரியும் ..? ” கோபமாய் கேட்டான் யோகன் .

” ஒரு பெண்ணிற்கு இரண்டாவது திருமணமென்பது மிகவும் சூட்சும மான ஒரு விசயம் .அதனை உங்கள் வசதிக்காக பார்த்து இப்படி செய்து விட்டீர்களே ..? இப்போது இந்த குழந்தை கிடந்து தவிக்கிறதே …” சமுத்ராவின் குரலில் மிகுந்த ஆதங்கம் .

” இதில் என்னுடைய வசதி எங்கிருந்து வந்த்து …? ” யோகனின் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் நன்கு தெரிந்த்து.




” ஏன் ..சாயாவின் முதல் கணவனை விட அவருடைய தம்பி உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார் .அதனால் அவரை …” தொடராமல் நிறுத்தினாள் .

” நானே கொன்று விட்டேன் .அவன் எப்படியோ தப்பி வரவும் ,இப்போது திரும்ப அவனை விரட்ட முயல்கிறேன் என்கிறாய் சரிதானே …? ” யோகன் இறுகிய முகத்துடன் அவளை வெறித்தபடி கேட்டான் .

” அக்கா என்ன இது ..நீங்கள் ஏன் இப்படி ஐயாவை பற்றி தப்பு தப்பாக நினைக்கிறீர்கள் ..? ” செல்லி பதறினாள் .

மிகுந்த வெறுப்புடன் சமுத்ராவை பார்த்தான் யோகன் .நீ இவ்வளவு உயர்வான அபிப்ராயம் என் மீது வைத்திருப்பாயென நினைக்கவில்லை சமுத்ரா ..? “

அப்போது கதவு தட்டப்பட்டது .கொஞ்சம் ரகசியமாக , மென்மையாக .தொடர்ந்து ” செல்லி …” என்றொரு ரகசிய குரல் .

” அப்பா …” என்றாள் செல்லி மெல்ல .உடனே ஒரு முடிவுக்கு வந்த யோகன் ” செல்லி நாங்கள் இருவரும் இங்கே இருப்பது மாடசாமிக்கு தெரியக் கூடாது .நீங்க  எப்போதும் போல் உங்க அப்பாவிடம் பேசுங்க ” என்றவன் சமுத்ராவின் கையை பற்றி இழுத்தபடி உள்ளேயிருந்த குளியலறையினுள் நுழைந்து பூட்டிக் கொண்டான் .

உள்ளே கதவை மிக லேசாக திறந்து வைத்தபடி வெளியே நடப்பதை கவனிக்க துவங்கினான் .சை என்ன மனிதன் இவன் ..? ஒரு தகப்பனும் , மகளும் பேசுவதை இப்படி ரகசியமாக கேட்பதில் என்ன கிடைத்து விடும் இவனுக்கு ..? வெறுப்புடன் அவனை பார்த்தபடி நின்றாள் சமுத்ரா .வெளியே இந்த மாதிரி ஏன் செய்தாளென மாடசாமி மகளிடம் கண்ணீர் விட்டபடியிருந்தான் .அவனது ஓவ்வொரு உருக்கமான சொல்லுக்கும் யோகனின் முகத்தில் கோபம் கூடியபடியிருந்த்து .

” சாதாரணமாக எந்த தகப்பனுக்கும் மகளை இந்த நிலையில் பார்த்தால் துக்கம் வருவது இயல்புதான் .இதில் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது ..? “

” உஷ் …” வாயில் விரல் வைத்து எச்சரித்தவன் அருகில் வந்து பேசுமாறு சைகை செய்தான் .அருகில் சென்றவளிடம் ” இந்த மடப்பயலிடம் இப்போதுதான் உன் மகளுக்கு ஒன்றும் இல்லை ்நீ வந்து அவளை குழப்பாதே .இனிமேல் அவளை பார்க்க வராதே என்று கூறி அனுப்பி விட்டு வந்தேன் .தலையை ஆட்டி ஆட்டி கேட்டுவிட்டு இப்போது உள்ளே வந்து நிற்கிறான் பார் .இவனையெல்லாம் …” அருகில் இருந்ததால் பற்கள் நெரிபடும் ஓசை சமுத்ராவிற்கு நன்கு கேட்டது .

” மகள் செத்து பிழைத்திருக்கும் போது அவர் எப்படி உங்கள் பேச்சை கேட்டுட்டு போவார் ..? ” ஆட்சேபனைக் குரலில் கேட்டாள் .

அவள் தோள்களை சுற்றி கைகளை போட்டு தன்னருகில் இழுத்துக் கொண்டவன் அவள் இதழ்களின் மேல் விரல் வைத்து சத்தமிடாமல் இருக்குமாறு சைகை காட்டிவிட்டு ரூமினுள் பார்க்க தொடங்கினான் .

காதுகளை சாய்த்து கதவின் இடைவெளி வழியே கேட்ட மெல்லிய குரலில் அவன் கவனமாக இருக்க , அவனது நெருங்கிய அணைப்பில் சட்டை பட்டனை தாண்டி ,கண்ணில் பட்ட அவன் மார்பின் முடிச்சுருள்களில் பதிந்து விட்ட கண்களை மீட்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் சமுத்ரா .சன்னமாய் அவனிடமிருந்து எழுந்த ஆண்வாசம் வேறு ..அவளை சோதித்துக் கொண டிருந்த்து .

மெல்ல அவன் மார்பில் தலை சாய்க்கும் முடிவில் சமுத்ரா இருந்த போது , சட்டென அவளை விட்டு விட்டு வெளியேறினான் யோகன் .

” அடிக்கடி வந்து இப்படி பேசி பேசித்தான் அந்த சிறுகுழந்தை மனதை கலைத்து கொண்டிருக்கிறாயா …?” கோபமாய் வந்து நின்ற தன் முதலாளியைக் கண டதும் மாடசாமிக்கு கைகள் நடுங்க துவங்கியது .

சற்று முன் மாடசாமி பேசிய பேச்சுக்கள் எதுவும் சரியில்லையே என்ற எண்ணத்துடன் சமுத்ராவும் வெளியே வந்து நின்றாள் .

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!