Beauty Tips

தலை ரொம்ப அரிக்குதா? அதனை சரி செய்ய இதோ சில டிப்ஸ்

பொதுவாக கோடையில் தான் தலையில் அரிப்பு முதல் முடி உதிர்வு வரை அதிகமாக ஏற்படக்கூடும்.

ஏனெனில் இந்த காலங்களில் வெயில் நேரடியாக தலைக்கு படுவதனால் தலை அதிகமாக வியர்க்க தொடங்கும் இதன் போது அரிப்பு ஏற்படும்.

அதுமட்டுமின்றி பொடுகு தொல்லை, ஸ்கால்ப் பூஞ்சை மற்று பாக்டீரியா தொற்று ஏற்படுதல், தலை பேன், போதுமான ஈரப்பதம் இல்லையென்றால், கெமிக்கல் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்கள், மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் போன்றவை கூட தலையில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அந்தவகையில் தலை அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்களை உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.




  • எலுமிச்சைச் சாற்றை ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, சில நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிடவும். அது அரிப்பை நீக்கி, கூந்தலை வலுவாக்கும்.

  • கற்றாழையின் ஜெல்லை எடுத்து ஸ்கால்ப் பகுதியில் நன்கு தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு, வெறும் தண்ணீரில் கழுவிடவும். அதனால், அரிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

  • லாவெண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சீமைச்சாமந்தி எண்ணெய்களை ஒன்றாக கலந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்தால் அரிப்பு நீங்கும்.

  • ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயின் கலவையானது பொடுகுக்கான சிறந்த இயற்கை மருந்தாகும்.

  • தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு 5 முதல் 6 முறை தலையை சீப்பு கொண்டு சீவி விட்டு தூங்கவும். இதனால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, அனைத்து வித ஸ்கால்ப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

  • தலையில் அரிப்பு தொல்லை அதிகமாக இருந்தால், நீங்கள் உண்ணும் உணவில் கீரைகள், சாலட்கள், பயறு வகைகள் மற்றும் பலவண்ண காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

    முக்கிய குறிப்பு

  • கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கண்டிஷ்னர் அல்லது க்ளென்சரை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.

  • தலையணை உறை, சீப்பு, துண்டு போன்றவை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!