Beauty Tips

கழுத்துப் பகுதிகளில் கருமையா இருக்கா??

கழுத்துப் பகுதிகளில் கருமை நிறம் தோன்ற  சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், சூரிய கதிர்களால் ஏற்படும் தோல் அழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல் போன்றவை காரணமாகும்.

கழுத்து மற்றும் கை, கால் முட்டிகளில் இருக்கும் கருமை நீங்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!

கழுத்துப் பகுதியில் கருமையான தோலினை பழைய நிலைக்கு கொண்டு வரலாம். இதோ…! உங்களுக்காக, ஓர் அழகு குறிப்பு

தேவையான பொருட்கள்
மஞ்சள் செடியின் இலை
சோள மாவு = 1 சிட்டிகை
கஸ்தூரி மஞ்சள் தூள் = 1 மேசைக்கரண்டி
தேசிக்காய் = 1/2
பன்னீர் = 2 மேசைக்கரண்டி




செய்முறை விளக்கம்:
1.முதலில் நம் கழுத்தை குளிர்ந்த நீரினால் துடைக்கவேண்டும்.

2.பிறகு மஞ்சள் செடியின் இலையினை நீளமாக வெட்டி 10 நிமிடங்களுக்கு கழுத்தில் வைக்க வேண்டும்.

பத்து நிமிடங்களின் பின் அந்த இலையை அகற்றி விட்டு கீழ் கூறப்படும் செய்முறைகளை தொடர்ந்து செய்யவும்.

3. சோள மாவுடன் தேசிக்காய் சாற்றினை கலந்து, ரோஸ் வாட்டர் 1 மேசைக் கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு மேசைக் கரண்டி சேர்த்து குலவையாக தயார் செய்துக் கொள்ளவும்.

4.தயார் செய்த பின் அந்தக் குலவையை கழுத்தில் கருமை நிறமுள்ள இடங்களில் பூசிக் கொள்ளவும்.

5.முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளவும்.

(கீழுள்ள செய்முறையை கட்டாயமாக செய்ய வேண்டும்.)

கற்றாழை சிறு துண்டொன்றை எடுத்து அதை குளிர்சாதனப்பெட்டியின் மேற் பகுதியில் வைக்கவும். கற்றாழை கல் போன்று உறைந்தவுடன், அதன் தோலை அகற்றி மெதுவாக கழுத்துப் பகுதியில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்வது போல் தேய்க்கவும்.

கற்றாழை கருமை நிறத்தை போக்க கூடியது.

இறுதியாக மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
(குளிர்ந்த நீர் நமக்கு இறந்த செல்களை
அகற்றி புது செல்களை மீட்டெடுத்து தரும்)




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!