Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 16

16

 

 

 

” எங்களுக்கு திடீரென்றுதான் அந்த சந்தேகம் வந்தது .இப்போது வேறு வழியும் எங்களுக்கு இருக்கவில்லை .வகுப்பறையில் எல்லோருடைய பேக்கையும் செக் செய்தாயிற்று .மீதமிருப்பது அந்த பாவனாவுடையது மட்டும்தான் .உன் பேக்கையும் குடுடி பார்க்கலாம் என்று நான் கேட்க என்




பேக்கிலேயே வைத்துக்கொண்டு தேடுவேனாஎன்று கத்தினாள் .பரவாயில்லை எதற்கும் பார்க்கலாம் என்று வாங்கி பார்த்தால் உள்ளே தான் அவள் தேடிய நோட் இருந்தது. இது எப்படி என்று கேட்டால் திருதிரு என்று முழித்தாள் .போன வாரம் என்னுடைய மேத்ஸ் நோட்டிற்கு ரெட் ஸ்டிக்கரை மாற்றி ப்ளூ ஸ்டிக்கர் ஒட்டினேன் . அதை மறந்துவிட்டு  ரெட் ஸ்டிக்கர் நோட்டு என்றே தேடிக் கொண்டிருந்தேன்…  என்று தலையைச் சொறிகிறாள். அரைமணி நேரமாக எங்களையும் வகுப்பறையே தலைகீழாக புரட்ட வைத்ததற்காக  எல்லோருமாகச் சேர்ந்து அவளை மொத்தி எடுத்தோம் ” சொல்லி முடித்துவிட்டு கலகலவென சிரித்தாள் மாலினி.

 

” நல்ல பிள்ளை  போ ” ராஜாத்தியும் இளைய மகளின் சிரிப்பில் இணைந்து கொண்டாள். தாயும் மகளும் சிரித்தபடி வாசுகியை பார்க்க அவளோ இவர்களது கலகலப்பில் கலந்து கொள்ளாமல் டிவியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் .அவளது கை அனிச்சையாக ரிமோட் பட்டனை அழுத்தி அழுத்தி சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தது.

 

ராஜாத்திக்கும் மாலினிக்கும் முகத்தில் வேதனை வந்தது .மாலினி எழுந்து வந்து வாசுகியின் அருகே அமர்ந்து அவள் கை ரிமோட்டை பிடுங்கினாள் .” ஏய் என்னடி எப்போது பார்த்தாலும் நீயே ரிமோட்டை வைத்துக் கொள்கிறாய் .எனக்கும் ஏதாவது பார்க்கவேண்டும் போல் இருக்காதாஎன்னிடம் கொடு ” 

 

மாலினியின் அதிகாரத்திற்கு எந்த எதிரொலியும் இல்லாமல் மௌனமாக ரிமோட்டை அவளிடம் கொடுத்தாள் வாசுகி .மாலினியின் கண்கள் கலங்கியது.

 

அக்கா ஏன் இப்படி இருக்கிறாய்பழைய மாதிரி பேசு .என்னுடன் சண்டை போடு .நாம் இருவரும் அடித்து பேசி விளையாண்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டன தெரியுமா ? “கேள்வியின் முடிவில் அழுகை வந்துவிட மாலினி வாசுகியின் தோளில் சாய்ந்து அவளை கட்டிக் கொண்டாள் .வாசுகியும் கண்ணீர் வடியும் கன்னத்துடன் தங்கையை அணைத்துக் கொண்டாள்.

 

” அம்மா நம்ம மாலுவா இது ?எப்போதும் என்னுடன் சண்டை தானே போட்டுக் கொண்டிருப்பாள்இப்போது என்னவென்றால் சின்ன பிள்ளை போல் ஊளு ஊளுவென்று கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறாளே. ஏய் போடி என் மேல் சாய்ந்து உன் ஊளை முக்கை வடித்து என் டிரஸ் எல்லாம் பாழாக்கி விடாதே ” 

 




” என்னது ஊளை மூக்காயாருக்கு எனக்காஅம்மா உங்கள் பெரிய மகளை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் .இல்லை என்றால் என் கையில் அடி காத்திருக்கிறது அவளுக்கு ” 

 

” சரிதான் போடி இவள் அடிப்பாளாம் நான் குனிந்து முதுகை காட்டிக் கொண்டு இருப்பேனாம்…” 

 

” நீ ஏன்டி குனிய வேண்டும் .நானே உன்னை குனியவைத்து மொத்துகிறேன் ” சொன்னதோடு மாலினி வாசுகியின் தலையை கீழே் அழுத்திக் கொண்டு முதுகில் விளையாட்டாக அடிகள் கொடுக்க தங்கைக்காக குனிந்த வாசுகி ஒரு கட்டத்தில் அப்படியே தளர்ந்து தங்கையின் மடியில் படுத்து விட்டாள்.

 

” மாலு கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக் கொள்கிறேன்டி ” அக்காவின் தழுதழுத்த குரலில் மாலினிக்கு மீண்டும் அழுகை வர தமக்கையின் தலையை தன் மடி யோடு அணைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் . கலங்கி கொண்டிருந்த தன் பிள்ளைச் செல்வங்களை பார்த்த   ராஜாத்தி  தன் அழுகையை மறைத்து கொண்டு இரு மகள்களையும் இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள்.

 

” என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இங்கேகொஞ்சம் அந்தப் பக்கம் போய் விட்டாலும் இப்படி மொத்தமாக உட்கார்ந்து சோக கீதம் வாசித்துக் கொண்டே இருப்பீர்களா ? ” அதட்டியபடி உள்ளே வந்தார் ஜெயக்குமார். பெண்கள் மூவரும் தெளிந்து எழுந்து விலகி அமர்ந்து கொண்டனர்.

 

அழுகையில் கரையத் துடிக்கும் மூவரையும் அவ்வப்போது அதட்டி நிமிர்த்தி கொண்டிருப்பவர் ஜெயக்குமார் தான்.

 

” மாலு உனக்கு பைனல் எக்ஸாம்ல போ .போய் படி .இங்கே உட்கார்ந்துக் கொண்டு என்ன அரட்டை  ?” அக்காவின் தனிமையில் அதிகம் பாதிக்கப்பட்ட சின்ன மகளை முதலில் அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தினார் ஜெயக்குமார்.

 

” ராஜாத்தி போய் எனக்கும் பாப்பாவிற்கும் அரை டம்ளர் காபி கலந்து எடுத்துக் கொண்டு வா ” மனைவியை அதட்டி அடுப்படிக்கு அனுப்பினார்.

 

” பாப்பா என்ன இதுமுதலில் கண்ணை துடை .நீ எதுவும் தவறு செய்து இருக்கிறாயா? தவறு செய்தவர்கள் தான் அழுது கொண்டுதான் இருக்கவேண்டும் .நியாயம் கொண்டவர்கள் நெஞ்சை நிமிர்த்தி வலம் வரவேண்டும் .நீ யார் என்று நீயே முடிவு செய்து கொண்டு அதற்குத்தக நட ”  அதட்டிய தந்தையை பாசத்துடன் பார்த்தாள் வாசுகி.

 

அன்று திடுமென்று வந்து நின்ற தந்தையைப் பார்த்ததும் தனக்கான சிறு ஆதரவிற்காக ஏங்கிக்கொண்டிருந்த வாசுகி ” அப்பா ” என்ற கதறலுடன் இரு கைகளையும் நீட்டிக்  கொண்டு ஓடிப்போய் தந்தையின் மார்பில் சரணடைந்தாள் .மகளை அரவணைத்தபடி நம்பமுடியாத பார்வை ஒன்றினை தேவராஜனுக்குக் கொடுத்தார் ஜெயக்குமார்.

 

” மாமா அவள் அம்மாவை தங்கையை எங்கள் குடும்பத்தையே தவறாக பேசுகிறாள் . அத்தோடு வேறு ஒரு பெண்ணோடு என்னை சம்பந்தப்படுத்தி….” 

 

தேவராஜன் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போக ஜெயக்குமார் கையை உயர்த்தி தடுத்தார் ” போதும் எனது மகளைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் குற்றச்சாட்டுகளை நான் கேட்பதாக இல்லை ” 

 




” லூசு பெண்ணை என் மகனுக்கு ஏமாற்றி மணமுடித்து வைத்து விட்டு இந்த பேச்சு பேசுகிறீர்களே  ? “மங்கை அநியாயத்திற்கு ஆச்சரியப்பட்டாள்.

 

லூசாஎன் மகளா ? ” ஜெயக்குமார் திரும்பி தேவராஜனை பார்க்க அவன் உதடு கடித்து அமைதியாக நின்றிருந்தான் .கொஞ்ச நேரம் முன்பாக அவனே தன்னை அப்படித்தான் அழைத்தான் என்ற நினைவு வர வாசுகியின் உடல் அழுகையில் குலுங்கியது.

 

நான் பைத்தியம் இல்லைப்பாகேவலோடு பேசிய மகளை  அரவணைத்துக் கொண்டவர் ” உன்னை நம்பினேனேய்யாஎன் மகள் தேவதை .அவளை புரிந்துகொள்ள முடியாதவர்கள் உருப்படவே மாட்டார்கள் ”  கையை அசைத்து சாபம் போல் கொடுத்த தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டாள் வாசுகி.

 

” வேண்டாம் அப்பா. இப்படி பேச வேண்டாம்

 

ஜெயக்குமார் பார்த்தாயா என் மகளை என்பதுபோல் தேவராஜனை பார்க்க அவன் முகம் கற்பாறையாக இருந்தது.

 

” உங்கள் மகளை இங்கிருந்து கூட்டிப் போய் விடுங்கள்”  கருங்கற்களாக உதிர்ந்தன அவனது வார்த்தைகள் .வாசுகி விருட்டென திரும்பி அவனை நம்ப முடியாமல் பார்க்க அவன் அவளது கண்களை சந்திக்கவே இல்லை.

 

இவ்வளவுக்குப் பிறகும் என் மகளை இங்கேயே விட்டுவிட்டுப் போவேன் என்று நினைத்தீர்களா   ?  உங்களுக்கு என் மகள் தேவை என்றால் இனி நீங்கள்தான் என் வீடு தேடி வர வேண்டும்அவளாக  இங்கே வர மாட்டாள்சத்தியம்  போல் கூறி விட்டு மகளை அணைத்த படி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

 

கடந்த ஒரு வாரமாக எத்தனையோ முறை மனதிற்குள் ஓட்டிப் பார்த்து விட்ட நினைவுகள் தான் .ஆனாலும் மீண்டும் மீண்டும் அதுவே மனதிற்குள் வாசுகிக்கு வலம் வந்து கொண்டிருந்தது. அதனை தாண்டி மீண்டுவர அவளால் முடியவில்லை .ஜெயக்குமார் ஒருவர் மட்டுமே அந்த வீட்டில் தைரியமாக இருந்தது .பெண்கள் மூவரும் கலங்கி தவித்துக் கொண்டிருந்தனர் .ஜெயக்குமார் அவர்களை அவ்வப்போது அதட்டி சரி செய்து கொண்டிருந்தார்.

 

” அப்பா ”  தவிப்புடன் அழைத்த மகளின் குரலுக்கு ஜெயக்குமாரின் மனம் வலித்தது .

 

” சொல்லுடா ” பரிவுடன் மகளின் அருகே அமர்ந்து அவள் கையைப் பற்றிக் கொண்டார் .அவரது ஆதரவான அழைப்பு வாசுகிக்கு  தேவராஜனை நினைவுபடுத்தியது .இதுபோல் பரிவு காட்ட வேண்டிய நேரங்களில் அவனும் இப்படித்தானே அழைப்பான் என நினைவு வர அவள் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது.

 

” பாப்பா என்னடா இது கண்ணைத் துடை  ” அதட்டினார் ஜெயக்குமார்.

 

” அவர் இப்படி மாறுவார் என்று நான் நினைக்கவில்லை அப்பா” 

 

” அவன் பேச்சை விடு .சரியான முட்டாள் பயல் ”  வெறுத்துப் பேசிய தந்தையை கண்டனமாக பார்த்தாள். ” என்னப்பா இது ? ” 

 

” அவர் பேச்சை விடுசரியான முட்டார்….பயர்இப்போது சரியா பாப்பா ? ” தந்தையின் பேச்சில் மெல்லிய புன்னகை மகளின் முகத்தில் வந்தது .அதில் தந்தையின் கண்களில் ஜீவன் வந்தது.

 

” அவரிடமிருந்து எதுவும் தகவல் வந்ததா அப்பா ? ”  எதிர்பார்ப்புடன் கேட்ட மகள் ஜெயக்குமாருக்கு மிகுந்த வேதனையை கொடுத்தாள்.

 

” அப்படி எந்த தகவலை நீ எதிர்பார்க்கிறாய் பாப்பா ? ” தந்தையின் கேள்வி வாசுகிக்குள் ஒரு குலுக்கலை கொடுத்தது.

 




” உன்னை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவன் அவன்அவன் பின்னால் போக வேண்டுமா கேளாமல் கேட்ட தந்தையின் கேள்விக்கு வாசுகியிடம் பதில் இல்லை .ஆனால் சதா அரித்துக்கொண்டே இருக்கும் உள்மன உறுத்தலை சரியாக்க வேறு வழியும் அவளுக்கு தெரியவில்லைஅவள் கணவனை சந்திப்பதை தவிர.

 

” நான் கொஞ்ச நேரம் படுக்கட்டுமா அப்பா  ? தற்சமயமாக அந்த சூழலில் இருந்து விடுதலை பெற எண்ணி எழுந்து உள்ளே போனாள் வாசுகி.

 

பாப்பா படுத்து விட்டாளா  ? ” கையில் காபி டம்ளரோடு படுக்கை அறைக்குள் போக போன ராஜாத்தியை தடுத்தார் ஜெயக்குமார் . ” வேண்டாம் அவளை விடு கொஞ்சநேரம் தூங்கட்டும் ” மகள் தூங்க மாட்டாள்  என்று தெரிந்திருந்தும் சொன்னார்.

 

” வேறு எதுவும் தகவல் வரவில்லையா ? ” சற்றுமுன் மகள் கேட்ட அதே கேள்வி இப்போது மனைவியிடம். ஜெயக்குமார் மனைவியை உறுத்தார்.

 

” நீ எதிர்பார்க்கும் தகவல் வரவேண்டாம் என்றே நினைக்கிறேன் .நம் மகள் இங்கேயே நிம்மதியாய் இருந்து விட்டு போகட்டும் ” 

 

” அவள் நிம்மதியாக இருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா ? ” மனைவியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை .மகளின் நிலையை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார் செய்வதேதுமறியாத பெருமூச்சு அவரிடம்.

 

” எனக்கென்னவோ மாப்பிள்ளை நம் பாப்பாவை தேடி வருவார் என்றே தோன்றுகிறது  ” 

 

” எதை வைத்து அப்படி சொல்கிறாய் ? “

 

” அதுஇன்னதென்று குறிப்பிட்டு சொல்ல தெரியவில்லை .ஆனால் மாப்பிள்ளைக்கு நம் வாசுகி மீது மிகுந்த பிரியம் உண்டு .அதனை நான் பல முறை அவருடைய பார்வையிலேயே உணர்ந்திருக்கிறேன்.” 

 

மனைவியின் கணித்தலுக்கு ஜெயக்குமார் விரக்தியான சிரிப்பொன்றை சிந்தினார் .” உன்னைப் போன்றே அவருடைய பார்வையை பார்த்து ஏமாந்தவன்தான் நானும் .திருமணத்திற்கு முன்பே நம் வாசுகியின் மீது அவருடைய அன்பும் அக்கறையும் கண்டு நம் மகள் அங்கே மகாராணியாக வாழ போகிறாள் என்று மனக்கோட்டை கட்டி விட்டேன் ” 

 

” நீங்கள் எப்போதும் ஒருவரை தவறாக கணித்தது இல்லைங்க. உங்களுடைய இந்த கணிப்பும் சரியாகத்தான் இருக்கும் .மாப்பிள்ளை நிச்சயமாக இங்கே வருவார்

ராஜாத்தியின்  என் பேச்சிற்கு ஒத்துப்போவது போல் அழைப்பு மணி சத்தமிட்டது. எழுந்து போய் கதவைத் திறந்த ஜெயக்குமார் அதிர்ந்து நின்றார்.

 

வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தது தேவராஜனேதான்.

 

 

 


 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
27
+1
18
+1
1
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
1 month ago

Mam innaiku post epo varum mam. I’m waiting

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!