Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 39

39

” வி…விஸ்வா …” பாரிஜாதம் நின்ற நிலையை பார்த்தால் ஓடிப் போய் விஸ்வேஸ்வரனின் காலில் விழுந்து விடுவாள் போலொரு எண்ணம் கமலினிக்கு வர , அவளது கையை தன் கைக்குள் கோர்த்து பிடித்துக் கொண்டாள் .

” என்ன … ரொம்பவே அலட்டுகிறீர்கள் ? இங்கே உங்கள் இடத்தில் 

தானே எங்கள் சந்திப்பை உங்களால் தடுக்க முடிந்திருக்கும் ? ஆனால் எங்கள் முதல் சந்திப்பு எங்கே தெரியுமா ? அந்த ஆண்டவன் சந்நிதானத்தில் .இது கடவுளாக நடத்தி வைத்த சந்திப்பு .உங்களை போல் அற்ப மானிடர்களாலெல்லாம் அதனை தடுக்க முடியாது ” 

இடிக்கு தோதாக மின்னலாக மின்னியவளை பாரிஜாதம் எவ்வளவு தைரியமென ஆச்சரியமாய் பார்க்க , விஸ்வேஸ்வரன் தலைக்கு ஏறிய கோபத்துடன் அவளை நெருங்கி தோள் பற்றி இழுத்து , அவளை பாரிஜாத்த்திடமிருந்து பிரித்து உலுக்கினான் .

” யாரைடி அற்பன் என்கிறாய் ?  ” 

” கண் முன்னால் கருகிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை சரி செய்யாமல் சாத்திரம் பேசிக் கொண்டிருக்கும்  ஆண் பிள்ளையை வேறு எப்படி சொல்வதாம் ? ” அவனது உலுக்கலில் நடுங்கிய இதழ்களுடன் நடுங்காத தைரியத்துடன் பேசினாள் .

” ஒரே அறையில் பற்களெல்லாம் உதிர்ந்து விடும் …பார்க்கிறாயா ? ” 

” அதைத் தவிர உனக்கு வேறு என்ன தெரியும் ? பெண் பிள்ளைகளை கை நீட்டுபவனெல்லாம் …” கமலினியின் வார்த்தைகள் முடியும் முன் …




” ஏய் …” என ஆக்ரோசத்துடன் அவன் கையை ஓங்க …

” நிறுத்துங்க விஸ்வா …” கத்தலாக ஒலித்தது …

கமலினி தன் கண்களை தேய்த்து விட்டுக் கொண்டாள் .சந்தேகமில்லை .விஸ்வாவிற்கு எதிராக இவ்வளவு ஆவேசமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவள் பாரிஜாதமேதான் …

” எந்த உரிமையில் கமலினி மேல் கை ஓங்குகிறீர்கள் ? எந்த உரிமையில் என் வாழ்க்கையில் தலையிடுகிறீர்கள் ? இப்போது சொல்கிறேன் ..கேட்டுக் கொள்ளுங்கள் .நான் சந்தானபாரதியை மனதார விரும்புகிறேன் .அவரை திருமணம் செய்து கொண்டு சௌமியோடு சேர்ந்து சந்தோசமாக வாழ ஆசைப்படுகிறேன் .இதனை தடுக்க உங்களால் முடியாது . உங்கள் பணம் , அந்தஸ்து , கௌரவம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாங்கள் வீட்டை விட்டு வெளியேறத்தான் போகிறோம் . உங்களால் முடிந்த்தை பார்த்துக் கொள்ளுங்கள் ” 

பாரிஜாதம் பேசி முடித்ததும் அங்கே அமைதி நிலவியது . முகத்தில் அறை வாங்கிய பாவனையுடன் விஸ்வேஸ்வரன் நின்றிருக்க , கமலினி பாரிஜாதம் பக்கம் திறந்த வாயுடன் பார்த்திருந்தாள் .

” பெண்கள் இருவர் இருக்கும் அறைக்குள் அனுமதியில்லாமல் எப்படி நுழையலாம் ? முதலில் வெளியே போங்க ” பாரிஜாத்த்தின் ஆட்காட்டி அறைக் கதவை காட்டியது .தளர்ந்த தோள்களுடன் வெளியேறியவனை சிறு பரிதாபத்துடன் பார்த்தபடியிருந்தாள் கமலினி .கதவு மூடிக் கொள்ளவும் பாரிஜாதம் பாய்ந்து வந்து கமலினி கை பற்றிக் குலுக்கினாள் .

” எப்படி கமலினி …? உன் அளவு கொஞ்சமாவது வந்தேனா ? ” 

” அக்கா …எப்படி …இவ்வளவு தைரியம் …? ” 

” என்னவோ போ  உன் காத்து கொஞ்சம் என் பக்கமும் அடித்தது போல . நமக்காக வாதாடிக் கொண்டிருப்பவளை இப்படி உலுக்குகிறாரே என்று நினைத்தேனா …திடீரென தைரியம் வந்துவிட்டது ” 

” கலக்கிட்டீங்க்க்கா .இனி உங்களுக்கு நல்ல நேரம்தான் பாருங்க ” ஒளிர ஆரம்பித்து விட்ட பாரிஜாத்த்தின் முகத்தை திருப்தியுடன் பார்த்து விட்டு கடைக்குள் வந்து தனது வேலையை பார்க்க ஆரம்பித்தாள் .

அரை மணி நேரத்தில் கடை ஊழியர்களுக்கான டீ டைமில் அவர்களுக்கு பேப்பர் க்ளாசில் டீ வரத் துவங்க , டீ குடிக்கும் பழக்கமில்லாத கமலினி கொஞ்சம் முகம் கழுவிக் கொள்ளலாமா என தன் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள் .அவள் மனதினுள் பாரிஜாதம் விஸ்வேஸ்வரனை கத்திய கத்தல் இன்னமும் எதிரொலித்தது .பாவம் ரொம்பவும் அதிர்ச்சிதான் அவருக்கு …எண்ணங்கள் ஓடிய போதே அவ்வெண்ணங்களுக்கானவனிடமிருந்தே அழைப்பு .

மந்தகாசமோ ..மனோகரமோ ஏதோ ஒரு வகை முக பாவத்துடன் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் எரிச்சல் வர ” நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டு  பெரிய சாம்ராஜ்யத்தை பிடித்தவன் மாதிரி இப்போது இவனுக்கு எதற்கிந்த போஸ் ? ” முணுமணுத்தபடி உள்ளே நுழைந்தாள் .

” என்ன விசயம் ? ” 

” முதலில் உட்கார் .இதை குடி .பிறகு பேசலாம் ” அவன் காட்டிய டேபிள் மேலிருந்த பேப்பர் கப்பை பார்த்து முகம் சுழித்தாள்

” நான் டீ சாப்பிட மாட்டேனே …? எனக்கு வேண்டாம் .நீங்களே குடிங்க .பிறகு வருகிறேன் ” திரும்ப போனவளை தடுத்தது அவன் குரல் .

” இது டீ இல்லை ” 

” இதைத்தானே கடை முழுவதும் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள் ….” முணுமுணுத்தபடி எட்டிப் பார்த்தவள் விழி விரித்தாள் .

” உன் அபிமான சமையல் ஆள் அன்பரசு செய்த்து .சொல்லி அரை மணியில் தயார் செய்துவிட்டான் .ம் …கொஞ்சம் திறமையானவன்தான்” தன் கப்பை எடுத்துக் கொண்டான் .

கமலினி தன் கப்பை எடுத்துக் கொண்டு ஆவலுடன் பார்த்தாள் .முந்திரிப்பருப்பு மிதக்கும் கெட்டியான , வாசமான பால் பாயசம் .

” அன்பரசு திறமையானவர்தான் .அவரை நீங்கள் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் . ஸ்டாப்ஸ் எல்லோருக்கும் பாயாசம்தான்  கொடுத்தீர்களா ? ” 

” ம் …பார்க்கலாம் இப்போது நீயும் இதைக் குடி .குறைந்தபட்சமாக என் தோல்வியை கொண்டாடுவதற்கேனும் …” 

கமலினி மௌனமாக ….




” என்ன அண்ணி என்னை பேசியதும் உனக்கு ஜில்லென்று ஐஸ்க்ரீம் மழை பொழிந்த்து போலிருந்திருக்குமே ” 

இதற்கு கமலினி என்ன பதில் சொல்லுவாள் ? உண்மையில் அவள் மகிழ்ந்திருக்க வேண்டிய நிகழ்வு அது .ஆனால் …எதற்கு இப்படி கத்துகிறார்கள் ? அதுதான் நான் பேசிக் கொண்டிருக்கறேனே …என்பது போன்ற ஆட்சேபங்கள்தான் அவளுள் அந்நேரம் எழுந்த்து .காரணம் தெரியாமலேயே பாரிஜாத்த்தின் அந்த பேச்சு அவளுக்கு ஒத்துக் கொள்ள கூடியதாக இல்லை .

” இதற்காகவா இனிப்பு கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் ? ” கமலினி புரியாமல் கேட்டாள் 

” அண்ணி பேசிய விசயம் எனக்கு பிடிக்காவிட்டாலும் பேசியது பிடித்திருந்த்து . ஒரு இக்கட்டு நேரம் இப்படி நிமிர்ந்து நில்லுங்கள் என்று அவர்களிடம் பல முறை அறுவுறுத்தியிருக்கறேன் .ஆனால் எனக்கு தோல்விதான் .இன்றோ …உண்மையிலேயே நீ சாதித்திருக்கிறாய் கமலினி் . உனது சாதனைக்கு  அண்ணியின் மாற்றத்திற்கு இந்த இனிப்பு ” பாயாசத்தை எடுத்து அருந்த தொடங்கினான் .

உனக்கு வசவு வாங்கிக் கொடுத்து எனக்கு என்னடா பெரிய சாதனை …? ..மனதிற்குள் நினைத்தபடி வெளியே தலையாட்டி வைத்தாள் .” உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை ” உண்மையை சொன்னாள் . இவன் மனம் விரும்பாததை செய்யும் பெண்களின் வெற்றியை இவனால் எப்படி கொண்டாட முடியும். ? 

” இங்கே …என்னை …என் கண்ணை பார்த்து பேசு .என் மனது புரியும் ” 

 ம்க்கும் …எனக்கு தேவை பார் … அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க அவள் விரும்பவில்லை .   குழைந்து ஒலித்த குரலுக்கு கட்டுப்படாமல் டேபிள் வெயிட் மேல் பார்வை பதித்தாள் . முன்பு தான் இது போல் குழைந்து நின்ற ஒரு தருணத்தில் அவன் தன்னை உதறியதை மனதிற்குள் கொணர்ந்து மிதக்க விட்டாள் .

 ” ஒரே வாரம்தான் கெடு கொடுத்திருக்கிறேன் ” அவனுக்கு போல் தனக்குமே நினைவு படுத்திக் கொண்டாள் .

” உஷ் …ரொம்ப படுத்துறடி ” 

” அதென்ன அடிக்கடி ” டி ” ? ஒழுங்காக பேசுங்கள் ” எரிந்து விழுந்தாள் .

” கொஞ்ச நேரம் நம்மை பற்றி மட்டும் பேச மாட்டாயா ? ” ஏக்கம் தெறித்த அவனது குரல் அவளுள் ஊடுறுவ , கமலினி வேகமாக எழுந்தாள் .

” ஹலோ …யார் சார் நீங்க ? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? நம்மை மட்டும்  பேச என்ன இருக்கிறது ? நீங்களாக  எதையும் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.  உங்கள் மனம் போன கண்ட கற்பனைகளுக்கெல்லாம் என்னை ஆளாக்காதீர்கள் .பாரிஜாதம் அக்காவின் நல் வாழ்விற்காக மட்டுமே நான் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் .அந்த விசயம் மட்டும் பேசுவதானால் பேசுங்கள் .இல்லையென்றால் நான் போய் கொண்டே இருக்கிறேன் ”  

சொன்னதையே செயலாக்க கமலினி விடு விடுவென எழுந்து அறைக் கதவை நோக்கி நடக்க  தொடங்கினாள் .

” அந்த சந்தானபாரதியை நான் சந்திக்க வேண்டும் …” மெல்லிய குரல்தான் . ஆனால் கமலினியினுள் ஆயிரம் வோல்ட்டுகளை பாய்ச்சியது .பரபரப்பாக மீண்டும் திரும்பி வந்தாள் 

” நிஜமாகவா விஸ்வா ? ” 

” வி…ஸ்…வா ..? என்ன உரிமையம்மா இதற்கு ? ” 

” உன் தலை …போடா மண்டையா … ” பம்மென்று அடர்ந்து கருகருவென தலை நிறைந்து இருந்த அவனது கேசத்தை பார்த்தபடி முணுமுணுத்தவள் …

” உங்களுக்கு அவர்கள் திருமணத்தில் சம்மதம்தானே ? ” ஆவலாக கேட்டாள்

” அவனை பார்க்க வேண்டும் என்றுதானே சொன்னேன் .கல்யாணம் பேசப் போகிறேனென சொன்னேனா ? ” வள்ளென்றான் .

” எங்க வீட்டு நீமோ தேவலை இதற்கு …” 

” நீமோ ….? மீன்…? ” 

” ம் …அந்த நீமோ மூவி பார்த்துக் கொண்டிருந்த போது , எங்கள் தெருவில் ஒரு நாய் குட்டிகள்  போட்டிருப்பது தெரிந்து ஓடிப்போய் ஆசையோடு ஒரு குட்டியை வீட்டிற்கு தூக்கி வந்து அந்த மீனின் நினைவில் அதற்கு நீமோ என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறேன் .அது அடிக்கடி இப்படித்தான் …” அவள் முடிக்கும் முன் … 

” அடியேய் …” கத்தியபடி டேபிளில் தேடி உருண்டையான , கனமான அந்த பேப்பர் வெயிட்டை முதலில் எடுத்து பிறகு மனம் மாறி அதை வைத்து விட்டு வேறு தேடி , கம்ப்யூட்டர் மவுஸ் பேடை எடுத்து அவள் மேல் எறிய்ய்ய்யய்ய…கமலினி டேபிளுக்கு கீழே குனிந்து தப்பித்தாள்.

” ஐயோ கொலை …கொலை ” போலியாக கத்தியவளை எழுந்து வந்து பற்றித் தூக்கியவன் , 

” உன்னையெல்லாம் சும்மா விடக் கூடாதுடி .என்ன வாய் உனக்கு …” 

நச்சென தலையில் கொட்டுவதோ , சிவக்கும்படி கன்னத்தை நமுட்டுவதோ , வலிக்கும்படி காதை திருகுவதோதான் அவனது நோக்கமாக இருந்த்து …அவளை தொட்டு தூக்கும் வரை .ஆனால் அவளது வாய் பற்றிய பேச்சோடு அவளது இதழில் பதிந்த பார்வை அவனது நோக்கத்தை மாற்றியது.திடுமென திரும்பும் 

கொண்டை ஊசி பாதை போலொரு மாற்றம் .

” வாய்க்கு வந்தபடி என்னவெல்லாம் பேசுறடி ? சம்பந்தமே இல்லாத ஆளிடம் இப்படித்தான் பேசுமா  உன் வாய் ? ” மோகம் கொப்பளித்த அவன் பேச்சையும் , சிருங்காரம் மின்னும் அவன் விழிகளையும் சந்திக்க முடியாமல் தவித்தாள் கமலினி . அவள் இதழ் மொய்த்த அவனது வண்டு பார்வை …

” இங்கே …இதே அறையில் …அன்று …நாம் இருவரும் …முதன் முறையாக …” முடிக்காமல் இதழ் குவித்து ஓசை  எழுப்பினான் .உள்ளே உள்ளே இழுத்துப் போகும் ஒரு புதைகுழியை தன் பாதங்களின் கீழ் உணர்ந்தாள் கமலினி . 

விஸ்வேஸ்வரனின் இதழ்கள் அவளை மிக நெருங்குவதை பிரமித்த விழிகளால் பார்த்தபடி இருந்தவள் , கடைசி நொடியில் ஸ்மரனை பெற்று இதழ்களுக்கிடையே கை வைத்து தடுத்தாள் .அப்பட்டமான ஏமாற்றம் விஸ்வேஸ்வரன் முகத்தில்.




” சந்தானபாரதியை சந்திக்க நாளை ஏற்பாடு செய்கிறேன் .தயாராக இருங்கள் ” சொன்னதோடு அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.

” சந்தானபாரதியை சந்தித்து பேசினால் எனக்கு என்ன தருவாய் ? ” கதவை திறந்து வெளியேறிக் கொண்டிருந்தவளை கேட்டான் .திரும்பி முறைத்தாள் .

” இது என்ன பேரம் ? கேவலமாக இல்லையா ? ” 

” இல்லையே .எனக்கு முற்றிலும் பிடிக்காத உனக்காக மட்டுமே செய்யப் போகும் செயல் இது .இதற்கான பிரதிபலிப்பு உன்னிடம் வேண்டாமா ? ” 

” சரியான வில்லன்டா நீ ” இரு கை உயர்த்தி அவனை சாபம் போல் வைதாள் .

” இருந்துவிட்டு போகிறேன் . ஹீரோவாக இருந்து பெற முடியாததெல்லாம் வில்லனானால் கிடைக்குமென்றால் அப்படியே இருந்துவிட்டு போகிறேன் ” அசரவில்லை அவன் .

வேறு வழியின்றி அவனுக்கு தலையசைக்கும் நிலைக்கு இறங்கியவள் கமலினிதான். 




 

What’s your Reaction?
+1
24
+1
14
+1
1
+1
1
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!