Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 11

11

 

 

 

” இப்போ இடப் பக்கம்  மூணு சுத்து சுத்தணும் .பார்த்துபார்த்து சூடம் அணையாமல் பார்த்துக் கொள் ” மங்கை தன் மகள் திலகாவிற்கு ஆரத்தி எடுப்பதற்கான டிப்ஸ்களை அருகில் நின்று சொல்லிக்கொடுக்க  திலகா புதுமண தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்தாள் .

 




” வலது காலை வைத்து உள்ளே வாருங்கள் ” மங்கை வரவேற்றுவிட்டு உள்ளே போனாள்.

 

” இங்கே உட்காருங்கள் அண்ணி ” சோபா விரிப்பை சுருக்கம் நீக்கி சரி செய்து அவர்கள் இருவரும் அமர வசதி செய்தான் கௌதம் .தேவராஜனின் தம்பி

 

” வீட்டை தன் கண்களால் அளந்தபடி சோபாவில் அமர்ந்தாள் வாசுகி. மிகப் பெரிய வீடு என்று சொல்லிவிடமுடியாது .சாதாரண நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் இதுவும் ஒன்று .சுவரில் பெரிதாக தேவராஜனின் அப்பாவின் புகைப்படம் மாட்டப்பட்டு மாலை இடப்பட்டிருந்தது .அதன் முன்பு அப்போதுதான் கொளுத்தி  வைத்திருந்த ஊதுபத்தி வீடு முழுவதும்  மணம் பரப்பியது.

 

உள் வராண்டா , வெளி வராண்டாஹால்கிச்சன்ஸ்டோர் ரூம் , பூஜை ரூம் தவிர்த்து இரண்டு ரூம்கள் இருந்தன .அந்த அறைகளில் ஒன்றில் கௌதம் நுழைந்து கொள்ள , மற்றொன்றிற்குள்  திலகா சென்றாள் . அந்த அறை மாமியாரும் நாத்தனாரும் உபயோகிக்கும் அறை  என புரிந்து கொண்டாள் வாசுகி .அப்போது இந்த வீட்டில் தங்களுக்கென அறை எதுவும் இல்லையோபடபடத்தது அவளது மனம்.

 

” நம் ரூம் மாடியில் ” அவளிடம் கிசுகிசுத்தான் தேவராஜன் .மிக சிறிய நிம்மதி மூச்சு ஒன்று வாசுகியிடம் .இதோ இப்படி வரிசையாக அமைந்திருக்கும் அறைகளில் மனதிற்கு ஒவ்வாத இவர்களுடன் தங்குவது அவளுக்கு கடினமான ஒன்று .மாடியில் என்றால் மூச்சு விட சிறிது தனிமை கிடைக்கும் .இப்போது கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாற் போல் உணர்ந்தாள்

 

” நீ பயப்படுவது போல் இங்கே எதுவும் நடக்காது வசு ” தேவராஜன் மெல்லிய குரலில் சொல்லியபடி அவள்  கையை பற்றினான். வாசுகி தலையசைத்துக் கொண்டாள்.

 




” வாசுகி வாம்மா வந்து விளக்கேற்று ” மங்கை பூஜை அறையில் இருந்து அழைக்க எழுந்த வாசுகியுடன் தோள் உரசியபடி தானும் எழுந்து கொண்டான் தேவராஜன்.

 

” அண்ணா விளக்கேற்றுவது பெண்களின் வேலை .அண்ணி தான் விளக்கேற்ற வேண்டும் ” கிண்டல் செய்தாள் திலகா.

 

” அதனால் என்ன நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணுகிறேன் ”  வாசுகியுடன் பூஜை அறைக்குள் நுழைந்த தேவராஜன் எண்ணெய்  தீப்பெட்டி போன்ற விளக்கேற்றும் பொருட்களை இருக்கும் இடத்தை அவளுக்கு காட்டியபடி விளக்கேற்றி முடிக்கும்வரை அருகிலேயே இருந்தான்.

 

” கீழே விழுந்து கும்பிட்டு கொள்ளலாம் ” என்று தானும் சுவாமி படங்களின் முன் விழுந்து வணங்கினான் . இடுக்கான அந்த இடத்தில் அவனுடன் உரசியபடி விழுந்து வணங்க தயங்கிய அவளையும்  மயிற்பீலி அதட்டலில் வணங்க வைத்தான் .சுவாமி முன் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்து விட்டவன் ” உன் வாழ்வுக்கு நான் பொறுப்பு ”  என ஓர்  உறுதி மொழியையும் அவளுக்கு கொடுத்தான்.

 

வாசுகி தலை நிமிர்ந்து அவன் கண்களுடன் கலந்தாள். இதோ இவன் எப்படியோ அவள் மனதில் இடம் பிடித்து விட்டவன் .இப்போது அவளது வாழ்க்கைக்குள்ளும் வந்துவிட்டவன் .இனி அவளது வாழ்வு அவனுடன் தான் என்று உறுதியாகி விட்ட பின்பு கல்மிசமற்று பொங்கிக் கொண்டிருக்கும் அவனது பிரியத்தை ஏற்றுக் கொள்ளாமல்  தவிர்ப்பது நியாயம் இல்லை தானேவாசகியின் மனது அவளுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்ல வெறுமை போய் அவள் விழிகளில் உணர்வுகள் துளிர்த்தன.

 

உடனே அதனை உணர்ந்து கொண்ட தேவராஜனின் முகம் பிரகாசமானது .” என்னை நம்புகிறாய் தானே வசு

என்னுடனேயே இருப்பாய் தானே ? ” 

கேட்டபடி மெல்ல அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருடினான்.

 

சீதை ராமனை விட்டு எங்கேயடா போவாள்உன்னை விட்டு நான் எங்கே போகப் போகிறேன்மனதிற்குள் பேசியபடி மெல்ல இதழ் விரித்து புன்னகைத்தாள் .மனம் கொண்டவளின்  இணக்கப் புன்னகையில் தேவராஜனின் முகத்தில் சூரியோதயம்.

 

” வசு ” மென்குரலில் அழுத்தி அழைக்கப்பட்ட அவனது வார்த்தையில் இப்போது காதல் வந்திருந்தது .கன்னம் தொட்டுக்கொண்டிருந்த ஒற்றை விரல் இப்போது அவள் இதழ்களுக்கு வந்திருந்தது.

 

” கடைசி வரை ஏமாற்றிவிட்டாயேடி ” 

 

” என்னவாம் ? ” அவனது கேள்வி புரிந்தும் புரியாதவள் போல் இமைகளை படபடத்தாள் வாசுகி.

 

” பால்பழம் சாப்பிடணும் .வாங்க ” மங்கை குரல் கொடுத்த இருவரும் தன்னிலை அடைந்து எழுந்தனர்.

 

மீண்டும் ஹால்  சோபாவில் அமர்ந்தவர்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டதுதேவராஜனுக்கு போன் வரவே பேசுவதற்காக வீட்டின் பின்புறம் சென்றான்.வீடு முழுவதும் உறவினர்கள் நிறைந்திருந்தாலும் தேவராஜன் அங்கிருந்து எழுந்து சென்ற அடுத்த வினாடியே தான் மட்டுமே தனித்து இருப்பதாய் வெறுமையை உணர்ந்தாள் வாசுகி.

 

கொஞ்சம் படபடப்புடன் விழி சுழற்றி அவனை தேட ”  ஒரு நிமிடம் கூட அண்ணனை விட்டு இருக்க முடியாது போல ” கிண்டல் போல் கேட்ட திலகாவின் குரலில் விஷமத்தை உணர்ந்தாள் .நிமிர்ந்து அவளைப் பார்க்க அவள் முகம் சாதாரண கேலி போன்ற பாவனையை கொண்டிருந்தது .உறவினர்கள் மெல்ல மெல்ல கலைய தொடங்கினர் . .

 

” ஒரு முக்கிய வேலை வசுநம் கடை வரை போய் விட்டு வந்து விடுகிறேன் ” போன் பேசிவிட்டு வந்த தேவராஜன் சொல்ல வாசகியினுள்  சிறு கலவரம் .பதட்டத்துடன் தன்னை நிமிர்ந்து பார்த்த மனைவியை வாஞ்சையுடன் பார்த்தான் தேவராஜன் .

 




” வேண்டாம் ப்ளீஸ். ” மெல்லிய அவளது வேண்டலின் பிறகு வெளியே போகும் எண்ணம் அவனுக்கு வரவில்லை. அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான் .பாதுகாப்பு அரணாக தன் கையை அவள்  தோள்களில் போட்டுக்கொண்டான்.

 

” என்னடாஎன்ன பயம் ? ” 

 

” வந்து  இங்கே உங்கள் தங்கை ஒரு மாதிரியாக பேசுவதுபோல் …” வாசகி திக்கித் திணறிக் கொண்டிருக்க கரண்ட் கட் ஆனது.

 

தங்கை பற்றிய மனைவியின் குற்றச்சாட்டில் தேவராஜனின் முகம் கடினமானது .மறுப்பாய் வெளிப்பட்ட அவனது முறைப்பில் வாசுகியின் முகம் முத்து முத்தாய் வியர்க்கத் தொடங்கியது .இன்வெர்ட்டரில் சோம்பலாய் சுழன்றுகொண்டிருந்த பேனின் காற்று அவளுக்கு பற்றவில்லை போலும்.

 

ஐயோ எதற்கு அண்ணி இப்படி வேர்க்கிறது உங்களுக்கு ? ” சொன்னபடி வந்த திலகா பனைஓலை விசிறி ஒன்றை எடுத்து வந்து அவளுக்கு விசிறத் துவங்க ” இந்த ஜன்னலில் காற்று கொஞ்சம் வரும் ” என்றபடி அவள் அருகில் இருந்த ஜன்னலை திறந்துவிட்டான்  கௌதம்.

 

” உனக்கு நைட் சாப்பிட சப்பாத்தியா  ? இட்லியா வாசுகிஎன்ன செய்யட்டும்கேட்டபடி வந்தாள மங்கை.” 

தேவராஜன் புருவங்களை உயர்த்திய படி வாசுகியை பார்க்க அவள் தலை குனிந்து கொண்டாள்.

 

இல்லை இங்கே ஏதோ இருக்கிறது அவள் மனம் மீண்டும் மீண்டும் அவளுக்கு சொல்லியபடியே இருந்தது .இன்று இரவு அவரிடம் தெளிவாக பேசி விட வேண்டும் .இது முன்பே அவள் அவனிடம் பேசி இருக்க வேண்டியது தான். ஆனால் அப்படிப் பேச தேவராஜன் அவளை  அனுமதிக்கவில்லை .அவளது குற்றச்சாட்டுகளை அவன் கேட்க தயாராகவே இல்லை. ஆனால் இரவு பூட்டிய அறைக்குள் அவன் தப்ப முடியாது தானே…?

 

இரவு கணவனிடம் பேசும் வார்த்தைகளை மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த வாசுகி திடுமென இளம் சூடு நிரம்பிய தனது கன்னத்தில் திடுக்கிட்டாள்கொஞ்சம் யோசிக்கலாம் என வீட்டின் பின்புற வாசலில் வந்து அமர்ந்து இருந்தவளின் அருகே ஒட்டியபடி அமர்ந்திருந்தான் தேவராஜன். அங்கே இருந்த அரைகுறை இருட்டை சாதகமாக்கி அவள் கன்னத்தில் தன் இதழ்களால் நிரப்பி இருந்தான்.

 

” கடைசிவரை கொடுக்காமலேயே ஏமாற்றிவிட்டு என்ன என்றா கேட்கிறாய்  ? ” அவள் இதழ் வருடியபடி இருந்தது அவனுடைய விரல்.

 

” விடுங்க யாராவது வந்துடப் போறாங்க ” வாசுகி அவனை தள்ள ” எப்போது பார்த்தாலும் எல்லாவற்றையும் மறுத்துக் கொண்டே இருக்கிறாய் .இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன செய்கிறாய் என்று பார்க்கிறேன் ” வீட்டின் பின்புறம் மாடி ஏறுவதற்காக இருந்த மாடிப்படியை கண்களால் காண்பித்து அவன் சொல்ல வாசுகியின் மனம் ஜிவ்வன்று உயரே பறக்கும் பறவையின் மன நிலையை அடைந்தது.

 

தலை உயர்த்தி அவள் மாடியில் இருந்த தங்கள் அறையை சிறு சிலிர்ப்புடன்

பார்க்க  அழுத்தமாக அவள் இதழ்களின் மேல் தன் உதடுகளை ஒத்தி எடுத்தான் தேவராஜன் . ” டேய் தேவா உனக்குக் கிடைத்தது இவ்வளவுதான் ” தனக்குத் தானே பேசிக் கொண்டவன் ”  மேலே வாடி நீ பேசின பேச்சுக்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து உனக்கு இருக்கு ” என்றான்.

 

அது களத்தில் இடப்படும் அறைகூவல் போலிருந்தது .போர்க்களத்தில் அல்லகாதல் களத்தில். கணவனின் அழைப்பில் வாசுகியின் மனப் பாடங்கள் மங்கிப் போக தொடங்கின.

 


What’s your Reaction?
+1
27
+1
15
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!