Serial Stories முள்ளில் ரோஜா வானவில் தேவதை

முள்ளில் ரோஜா- 19

19

பார்க்க வேண்டுமே என்ற பரிதவிப்பில்தான்
நிகழ்கின்றன ..
உன் ஒவ்வொரு முகம் திருப்பல்களும் ,
சுழித்துப் பேசி நீ சுமந்து சென்ற
வெற்றியின் ஜாடைகளை
பத்திரப்படுத்துகிறேன் …
முந்தானை ஓரத்தில் முடிச்சாக்கி ,
காலக் கடிகார முட்களை உறுத்தபடி
இரவை பருகிக் கொண்டிருக்கிறேன்
உள்ளங்கை குவியலில் ,
ஒளிப்புள்ளியின் ஓர விடியலில்
சிவந்து கொண்டே செல்கிறது
என் வானம் .




” ஒரு வருடமாகவே நம்மிடம் டைல்ஸ் வாங்குபவர்கள் குறைந்து கொண்டே வந்திருக்கிறார்கள் .அதனால் நாம் இப்போது நம்மை தேடி வரும் கஸ்டமருக்கு சாம்பிள் பீஸ் என காட்ட ஒரு நல்ல வீடோ , கடையோ …ஏதோ ஒரு பில்டிங் கூட இல்லை …இப்போது நாமாகவே அது போல் ஒன்றை ….”

” முழுவதுமாக ஒரு வீட்டை கட்டிக் காட்டித்தான் நாம் கஸ்டம்ர்ஸை கவர் பண்ண வேண்டுமா என்ன …?  இட்  இஸ் இம்பாசிபிள் ஷ்ரத் .உன் ப்ரெண்டை நடக்கும் விசயம் எதையாவது பேச சொல்லு  ….” ரிஷிதரன் தோள்களை குலுக்கியபடி சொல்ல , சஹானா வந்துவிட்ட சிரிப்பை அடக்கும் எண்ணமின்றி கைகளால் வாயை பொத்தி சிரித்து காட்டினாள் .

” ஒரு வீடு கட்ட எவ்வளவு செலவாகுமென்று தெரியுமா ஷ்ரத் ….? ” கிண்டலாக கேட்டாள் .

” முதலீடு போடாமல் லாபம் பார்க்க முடியாது சஹானா மேடம் .அதுவும் இப்போது இந்த க்ஷோரூம் இருக்கும் லட்சணத்திற்கு கூடுதலான லட்சங்களையே போட வேண்டியதிருக்கும் …”

” அது சரி ..அடுத்தவர் பணம்தானே .தாராளமாக போடலாம் .அந்த பத்து லட்சம் பேங்க் லோனை உங்களால் வாங்கவே முடியவில்லை போல சாம்பவி மேடம் ….” சஹானா மீண்டும் சாம்பவியின் எளிமையை குத்தினாள்.

” சஹி ..திஸ் இஸ் பேட் மேனர்ஸ் .வொய் ஆர் யு இன்டர்பியர் ஹெர் பிரைவஸி …? ” ஷ்ராவத் சஹானாவை கண்டித்தான் .

” ஆமாம் என்னை திட்ட வேண்டுமென்றால் முதல் ஆளாக வந்து விடுவாயே …? ” சஹானா முணுமுணுக்க , கண்டிப்பு மறைந்து அவளை காதலுடன் பார்க்க ஆரம்பித்த ஷ்ராவத்தை புன்னகையோடு பார்த்தாள் சாம்பவி .அவளுக்கு இப்போது சஹானாவின் குத்தல் பேச்சு மறந்து போனது .

கடவுளே முருகா ..இது மட்டும் நடந்துவிட்டால் உனக்கு கால்நடையாக வந்து காவடி எடுக்கிறேன் .பழநி மலை முருகனிடம் வேண்டிக் கொண்டாள் .




ஷ்ராவத்தை பார்த்தபடி மனதினுள் வேண்டுதலுடன் இருந்த சாம்பவியின் முகத்தின் முன்னால் விரல்களால் சொடுக்கினான் ரிஷிதரன் .

” கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வருகிறீர்களா மேடம் .ஒரு வீட்டையே கட்டுவதற்கு வீடு போன்ற மாடல்களை நாம் ரெடி பண்ணி ஷோவில் வைக்கலாமே …”

” ம் அது போன்ற ஐடியாவும் இருக்கிறது .பாத்ரூம்  , டிராயிங் ரூம் , கிச்சன் , பூஜா ரூம் …ஏன் கார் பார்க்கிங் போல் கூட நமது டைல்ஸ்களை ஒட்டி சிறு மாடல்களை நமது ஷோரூமிலேயே வைக்கலாம் . இது சிறிய அளவு வாங்கும் கஸ்டமர்களை கவரும் .ஆனால் பைவ் ஸ்டார் ஹோட்டல் , மால் போன்ற பெரிய அளவு கஸ்டமர்களுக்கு ஒரு சிறிய வீட்டை கட்டி  அலங்கரித்து  காட்டினால்தான் திருப்தியாகும் ….”

” இது போன்ற மாடல்களை வைப்பதானால் நமக்கு இன்னமும் நிறைய  இடம் வேண்டுமே சாம்பவி …”

” நிச்சயமாக வேண்டும் ஷ்ராவத் .நமது ஷோரூம் இடத்தை சுற்றியிருக்கும் காலி இடங்களில் கொஞ்சம் நீங்கள் வாங்கத்தான் வேண்டும் …ஷோரூமை பெரிதாக்க வேண்டும் ….”

” என்ன மேடம் மொத்தமாக உங்கள் பட்ஜெட் தான் எவ்வளவு …? கொஞ்சம் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் ….” சஹானாவிடம் மீண்டும் நக்கல் .

” அது பிரச்சினையில்லை வாங்கி விடலாம் .இது நான் முன்பே நினைத்திருந்த்துதான் .ஆனால் இந்த புது வீடு கட்டுவதுதான் …எந்த அளவு சரியாக வருமென்று தெரியவில்லையே சாம்பவி  ….,” தீவிர தொழில் பேச்சுக்களில் தனது நிலையை மறந்து அவனது மேடத்தை விட்டிருந்தான் ரிஷிதரன் .

” நிச்சயம் சரியாக வருங்க .இன்னமும் ஒன்று சொல்கிறேன் .புதிதாக இடம் வாங்கி கட்டுவதை விட , பழைய வீடு ஒன்றை வாங்கி , நமது டைல்ஸுகளினால் புதுப்பித்துக் காட்டினால் ,இன்னமும் நமக்கு வெயிட் …”

” இட்ஸ் அன்பிலிவபிள் …புது வீடென்றால் கூட நான்கு அறைகளை போட்டு சீக்கிரம் கட்டிவிடலாம் .ஆனால் இந்த பழைய வீடுகளை தொட்டோமானால் …நமக்கு தலைவலிதான் .ஒன்றை தொட்டால் ஒன்று போகும் …பட்ஜெட்டும் எகிறும் …பார்வையும் போய்விடும் .எப்படித்தான் இது போன்ற ஐடியாக்களெல்லாம் உனக்கு வருகின்றதோ …? ” வேகத்தில் சஹானாவும் தனது மரியாதையை விட்டிருந்தாள் .




” நோ …சஹி …ஐ திங்க் சீ ஹேட் சம் பாயின்ட்ஸ் .வாட் அபவுட் யூ ஷ்ரத் …? “

” ஐ ம் ஆல்ஸோ …உங்களிடம் அது போன்ற ப்ராஜெக்ட் எதுவும் இருக்கிறதா சாம்பவி ….”

” எஸ் ….ஹியர் ஐ சா ஒன் ஓல்டு ஹவுஸ ப்ரம் மை சைல்டு குட் …தேட் ஹவுஸ் இஸ் மேட்சிங் பார் அவர் ப்ளான் …”

” எது உன்னோட அந்த பேவரைட் மலேசியாக்காரங்க வீடா …? அதெல்லாம் சரி வராது ….” சஹானா .

” என்ன விசயம் சாம்பவி …? ” தன் பக்கம் பார்க்க கூட செய்யாது சாம்பவியிடம் கேட்ட ஷ்ராவத்தை முறைத்தாள் சஹி.

” அது ..ஒரு சிறிய வீடுதான் .நூறு  வருடங்கள்  பழமையானது .அந்தக் காலத்து மாடல் கட்டிடம் .அப்போது அந்த வீட்டின் பையன் மலேசியாவில் வேலையில் இருந்ததால் அங்கே சம்பாதித்து பணம் அனுப்ப , அவருடைய அப்பா இங்கே இந்த வீட்டை கட்டினார. .அவருடைய குடும்பத்திற்கே அப்போது மலேசியாக்கார்ர்கள் குடும்பம் என்றுதான் பெயராம் .நான்கு தலைமுறை வரை அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் .இந்த தலைமுறை தான் அமெரிக்கா , கனடா என செட்டிலாகி விட இப்போது அந்த வீடு கவனிக்க ஆளின்றி சும்மா கிடக்கிறது .நான் சிறுமியாக இருக்கும் போது கூட அந்த வீட்டில் தாத்தா பாட்டி இருந்தார்கள் .நான் அங்கே போய் விளையாண்டிருக்கிறேன் ….”

” ரிஷி நான் அந்த வீட்டை பார்த்திருக்கிறேன் .அது ரொம்ப பழைய பில்டிங் .ஆல்டர் பண்ணவென்று அதனை எங்கே தொட்டாலும் உதிரும் .அதனால் இந்த வேலை வேண்டாமென்று ….” பேசிக்கொண்டே போனவளை கையை உயர்த்தி தடுத்தான் ரிஷிதரன் .

” நாம் முதலில் அந்த வீட்டை பார்க்கலாம் .பிறகு முடிவு செய்யலாம் …”

” இப்போதே போகலாமே …” ஷ்ரத் உடனே எழுந்துவிட்டான் .

” நான் வரவில்லை .திஸ் இஸ் தி லன்ஞ் டைம் .எனக்கு பசிக்கிறது …” கைகளை கட்டிக்கொண்டு பின்னால் சாய்ந்து கொண்டாள் சஹானா .

” தென் யு டேக் யுவர் லனஞ் அன்ட் ஹேவ் ரெஸ்ட் சஹி .நாங்கள் போய்விட்டு வருகிறோம் …,” ஷ்ரத் சொல்ல கோபமாக நிமிரந்து எழுந்து நின்ற மூவரையும் பார்த்தாள் .

அட …பாப்பாவே …என சீராட்டும் பார்வை மூவர் முகத்திலும் தெரிய , சஹியின் கோபம் கூடியது .

” வந்து தொலைகிறேன் …” வேகமாக அறைக்கதவை தள்ளியபடி முதல் ஆளாக வெளியேறினாள் .

” வாவ் …வாட் எ டிரடிசனல் ….அழகான வீடு …நீங்கள் சொன்னது ஹன்ட்ரட் பர்சென்ட் சரிதான் சாம்பவி .எனக்கு இப்போதே கைகள் துருதுருவென்
கிறது…என்ன ரிஷி ….” என திரும்ப …அவன் தனது போனை தட்டிக்கொண்டிருந்தான் .




” ஏய் ரிஷி …வீட்டை பார்க்காமல் என்ன செய்கிறாய் …? “

” ரஃப் பாக ஒரு சின்ன ப்ளானே போட்டு விட்டேன் .சரியாக வருமா என பார் .நான் பின்னால் போய் பார்த்துவிட்டு வருகிறேன் ….” போனை கொடுத்துவிட்டு பின்பக்கம் போனான் .

” ம் நீ என்னை விட ஸ்பீடுதான் ….” அவன் கொடுத்த ப்ளானை பார்க்க ஆரம்பித்தான் .

” உன்னுடைய நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறாயாக்கும் ….? ” சஹானா குறைந்த குரலில் கேட்டாள் .

” நீ போட்டுக் கொண்டிருக்கும் வெறுப்பு என்ற கண்ணாடியை சுழட்டிவிட்டு பார் சஹானா .இது நல்ல ப்ளானில்லையா …? “

” ஒரு மண்ணும் இல்லை .எனக்கு துப்புரவாக பிடிக்கவில்லை ….” முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் .

” சரி ..நீ இப்படி உட்கார் .” அந்த வீட்டிலிருந்த ஒரே இருக்கையான அந்த ஊஞ்சலை காட்டினாள் சாம்பவி .அதற்கும் முறைத்தாள் சஹானா .

” சாம்பவி …” ரிஷிதரன்தான் வெளியிலிருந்து அழைத்தான் .

வேகமாக வெளியே போனாள் .அங்கே ரிஷி பின்புற கிணற்றினருகே எட்டிப் பார்த்தபடி நின்றிருந்தான் .

” இதில் தண்ணீர் நிறைய இருக்கிறதே . டேஸ்ட் எப்படியிருக்கும் ..? “

” மிகவும்! ருசியாக இருக்கும் .இருங்கள் நான் எடுத்து தருகிறேன் .குடித்து பாருங்கள் …” முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி கொண்டவள் …கயிற்றோடு கட்டப்பட்டிருந்த வாளியை சோதித்து விட்டு கிணற்றினுள் போட்டு , சரசரவென நீரிரைக்க ஆரம்பித்தாள் .

இளம் பச்சை காட்டன் சேலையில்  , நீளமான பின்னல் பின்புறத்தை தயங்கி தயங்க முத்தமிட்டு நகர, காதுகளின் ஜிமிக்கி தலையாட்டி அவள் கன்னத்தை தொட முயன்று தோற்க , கைகளின் பொன் வளையல்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சலசலக்க , லேசான மூச்சு வாங்கலுடன் லாவகமாக வெண் பஞ்சு விரல்களால் நீரிறைத்துக் கொண்டிருந்த சாம்பவியை பார்த்ததும் ரிஷிதரனுக்கு தான் வந்த விசயம் மறந்து போனது .

வேலைக்காக இழுத்து சொருகப்பட்ட அவளது சேலை முந்தானை காட்டிய உடல் வடிவங்கள் அவன் மனதை தடுமாற வைத்தது .முயன்று இவளிடம் நான் கோபமாக இருந்தாக வேண்டும் என தனக்கு தானே நினைவுறுத்திக் கொண்டான் .

” குடித்து பாருங்கள் ….” வாளி நீரை எடுத்து கிணற்று மேடை மேல் வைத்தாள் .




” எப்படி குடிப்பது …? “

” நீங்கள் உங்கள் கைகளை இப்படி குவித்து வைத்துக்கொள்ளுங்கள் .நான் ஊற்றுகிறேன் …”

ரிஷிதரன் அவள் சொன்னது போல் வைத்துக்கொள்ள வாளியை தூக்கி தண்ணீரை ஊற்றினாள் சாம்பவி .நிமிர்ந்து ஈரம் படர்ந்த அவள் இதழ்களை மேல் பார்வையால் பார்த்தபடி தண்ணீரை குடித்தான் ரிஷிதரன் .

” எப்படி இருக்கிறது …? “

” வெரி ஸ்வீட் …” அவன் கண்கள் அவள் இதழில் இருந்த்து .

” அட ..இப்படிக்கூட தண்ணீர் குடிக்கலாமா …?  தாகமாக இருக்கிறது சாம்பவி .எனக்கும் கொஞ்சம் ஊற்றுங்களேன் .” ஷ்ராவத் கைகளை குவித்து குனிந்தான் .

தன் வாயிலிருந்த தண்ணீரையும் , கைகளில் மீதமிருந்த தண்ணீரையும் வழித்து சாம்பவியின் முகத்தின் மீது வீசினான் ரிஷிதரன் .வாளியை பிடித்திருந்த அவள் கைகளின! மேலேயே அழுத்தமாக பற்றினான் .

” நீ நகர் .நான் ஊற்றுகிறேன்….” என்றான் .

தன் முகத்தின் மேல் விழுந்த அவன் தெறித்த நீர்த்துளிகளுக்கு சிலிர்த்து , அவனிடம் வாளியை கொடுத்துவிட்டு , முந்தானையினால் தனது முகத்தை துடைத்துக் கொண்டாள் .ஏனோ அவன் முகத்தை பார்க்க கூச்சமாக இருக்க , அந்தப்பக்கம் நடந்து போனாள் .

இன்று ரிஷியின் அணுகுமுறை வேறாகத்தான் இருந்த்து .ஒரு வாரமாக உன்னிடம் பாராமுகமாக இருந்தானே ்இப்போது ஏதோ லேசாக உன்புறம் திரும்பிப்பார்க்கிறான் .அதன் காரணம் கூட தொழில் விசயங்கள்தான் .இதில் அந்த சின்ன பார்வைக்கே நீ இப்படி சிலிர்க்க வேண்டுமா …? தனக்குள் விவாதித்து கொண்டு அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தாள் .

” அங்கே என்ன பார்க்கிறாய் …? ” பின்னாலேயே வந்து நின்ற ரிஷிதரன் கேட்டான் .

கைகளை உயர்த்தி அந்த மரத்தை காட்டினாள் சாம்பவி .
” கொடுக்காபுளி …மிகவும் ருசியாக இருக்கும் தெரியுமா …? கொஞ்சநாட்கள் முன்பு வரை இங்கே காவலுக்கு ஒரு வாட்ச்மேன் தாத்தா இருப்பார் நான் இங்கு வரும்போதெல்லாம் எனக்கு பறித்து தருவார் .இது எனக்கு ரொம்ப பிடிக்கும் …” வாயின் உமிழ்நீரை சுவைத்துக் கொண்டாள் .




” இது என்ன மரம் சாம்பவி …? ” ஷ்ராவத் வந்து நின்று கேட்டான் .

” சாம்பவி மேடத்திற்கு ரொம்ப பிடித்த பழமாம் ஷ்ரத் இது …”

திடீரென ரிஷி மேடத்திற்கு மாறியதில் முகம் சுளித்தாள் சாம்பவி .

” மேடமா ..நான் …? ” முணுமுணுத்தாள் .

” ஏன் ஷ்ரத் இந்த நண்பர்கள் கான்செப்ட் உனக்கு மட்டும்தானா ….? எனக்கெல்லாம் கிடையாதா …? ” புருவத்தை உயர்த்தியபடி கேட்டான் .

” நம் நால்வருக்குமேதான் ரிஷி ..ஏன் கேட்கறாய் ..? “

” ஓ..அப்போது இவர்களுக்கு என் பெயர் தெரியாது போலவே …நீ சொல்லவில்லையா …? பரவாயில்லை நானே சொல்கிறேன் .என் பெயர் ரிஷிதரன் சாம்பவி .நீங்கள் ரிஷி என்று கூப்பிடலாம் …”

” யெஸ் சாம்பவி …கால் ஹிம் ரிஷி ….” என்க …சாம்பவி நிமிர்ந்து ரிஷிதரனை முறைத்தாள் .

ஆமாம் இந்த பட்டிக்காடு சொல்லிட்டாலும் ….அருகே வந்து நின்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தாள் சஹானா .அவளை அலட்சியப்படுத்தி ரிஷியை முறைத்தாள் சாம்பவி .

அவள் கணவனை பெயர் சொல்லி அழைக்க கூடாது என்ற கொள்கையில் இருப்பவள் .அவர்களது ஹனிமூன் ட்ரிப்பின் போது அவளை தனது பெயரை சொல்ல வைக்க வேண்டுமென்ற ரிஷியின் தீவிர முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இப்போது தான் நினைத்ததை சாதிக்க முயல்கிறான் .

உன் வேலை என்னிடம் நடக்காது ..இதழ்களை மட்டும் அசைத்தாள் .

நடத்திக் காட்டுகிறேன் பார் …பதிலுக்கு அவனும் இதழசைக்க இதை எதிர்பார்க்காத சாம்பவிக்கு வியர்த்தது .

” எனக்கு தோன்றும் போது அழைத்துக்கொள்கிறேன் ….” மிடுக்காக சொல்லிவிட்டு உள்ளே நடந்தாள் .




” தொழிலில் உனது ஐடியாக்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறது சாம்பவி …” பின்னால் நடந்து வந்தபடி சொன்னான் .

” என்ன …அறிவில்லாத இந்த பட்டிக்காட்டு பெண்ணிற்கு எப்படி இவ்வளவு விபரம் தெரிகிறதென யோசித்தீர்களாக்கும் ….?” ரோசமாக கேட்டாள் .

” அறிவில்லாத …பட்டிக்காடு ….யார் இதெல்லாம் …இப்போது இங்கே அப்படி ஒருவர் இருக்கிறாரா ..என்ன ….? ” சொன்னதோடு ரிஷிதரன் அங்குமிங்கும் தேடும் பாவனை காட்ட …அந்த பாவனை கொடுத்த சிரிப்போடு  , அவனது பாராட்டுதல் தந்த சிலிர்ப்பும் சேர்ந்து கொண்டாலும் …ஓரமாக ஒரு உறுத்தல் .

” எப்போதோ …எங்கோ …ஒருவர் இருந்தாரென்று சொல்கிறீர்களோ …? கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் நடந்துவிட்டாள.

தங்கை நேரடியாக சொல்கிறாள் .அண்ணன் மறைமுகமாக சொல்கிறான் .இருவருக்கும் நான் அறிவில்லாத பட்டிக்காடு என்பதில் மட்டும் மாற்றமில்லை …உள்ளுக்குள் குமுறினாள் .

காரில் ஏறும் போது அவளது கைகளை பின்னால் இழுத்தான் ரிஷிதரன் .திகைத்து நின்றபோது ஒரு கொத்து தடிமனான கொடுக்காபுளிகளை அவள் கைகளில் திணித்தான் .


What’s your Reaction?
+1
44
+1
22
+1
2
+1
2
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!