Cinema Entertainment

விஜய் டிவி டிஆர்பியை குறைக்க சன் டிவியின் டாப் குக் டூப்பு குக் ப்ரோமோ வை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – காரணம் என்ன?

இனி விஜய் டிவி ஷோ சன் டிவியில் என டாப் குக் டூப் குக்கு ப்ரோமோவை கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த சனிக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கியது.




பரத், மோனிஷா, ஜிபி முத்து என பல கோமாளிகள் இதில் பங்கேற்கவில்லை. நடுவர் வெங்கட் பட் அவர்களும் இந்த சீசனில் இருந்து வெளியேறி இருந்த நிலையில் தற்போது அவர் சன் டிவியில் டாப் குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மோனிஷா, பரத், ஜிபி முத்து, தீபா அக்கா, தீனா என இடம்பெற்றுள்ள அனைவரும் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவி ஷோவை இனி சன் டிவியில் பார்க்கலாம் என கலாய்த்து வருகின்றனர்.




மேலும் சிலர் இது விஜய் டிவியா? சன் டிவியா? எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி எப்படி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சன் டிவி பக்கம் தற்போது வந்திருக்கிறார்.

அதனாலேயே தைரியமாக இந்த சமையல் நிகழ்ச்சியை அதே கான்செப்ட் உடன் இறக்கி உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் டிஆர்பியை குறைக்க சன் டிவி இப்படி ஒரு வியூகம் போட்டுள்ளது.

ஆனால் சீரியலுக்கு பெயர் போன இந்த சேனல் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறி தான். ஆனாலும் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் இது சாத்தியம் தான்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!