Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 18

   18

கோபம் போலொன்றை விழிக்கொணர
முயலும் தருணங்களிலெல்லாம் ,
கோகுல கண்ணனின் ஜாடையொன்றை
கோலத்தில் கொள்கிறாய் ,
தாங்கவியலா தவிப்பில்
தண்ணென்றானதடா உள்ளம் ,
கூரிய அம்பால் புருவம் நெரித்துவிட்டு
சோம்பல் பூனையாய்
உடல் நெறிக்கிறாய் ,
பூனையின் கரங்களில் புலியின் வலு
பூ கொய்ய முனைய
உடலுக்குள் புகுந்து உயிர்த்தேடலில் ,
தலைகீழாய் சீறுகிறது
பூவானமொன்று ,
உச்சியிலிருந்து உள்ளங்கால் நோக்கி .




” இது போர்சிலின் …இது செராமிக் …இரண்டையும் இப்படி அடுத்தடுத்து அடுக்கி வைத்தால் கஸ்டமர் குழம்ப மாட்டாரா ….? ” சாம்பவி .

” இரண்டுமே பாத்ரூம் டைல்ஸ் தானே .கஸ்டமர் செலக்ட் பண்ண ஈஸியாக இருக்கட்டுமென்றுதான் இப்படி அடுக்க சொன்னேன் …” சஹானா .

” இரண்டிற்கும் விலை வித்தியாசம் இருக்கிறதே .இப்படி பக்கத்தில் பக்கத்தில் அடுக்கிவிட்டு இரண்டும் பாத்ரூமிற்கு என பொதுவாக சொன்னோமானால் , பாத்ரூமிற்குத்தானே …என்ற அலட்சியத்துடன் எல்லோரும் செராமிக்கை செலக்ட் பண்ணிவிட்டு போய்விடுவார்கள் .அதை விட முதலில் செராமிக்கை அடுக்கி , அதன் தன்மைகளை விவரித்து விட்டு , பிறகு தனியாக அடுக்கியிருக்கும் போர்சிலினிடம் அழைத்து சென்று அதை பற்றி விளக்குங்கள் .யாரும் செராமிக் பக்கம் திரும்ப மாட்டார்கள் .நமக்கும் விலை அதிகமான போர்சிலின் விற்கும் . அவர்களுக்கும் தரம் அதிகமான கற்கள் கிடைக்கும் …”

” ஆஹா இங்கு வருபவர்கள் எல்லோருமே போர்சிலினை வாங்கி பாதரூமிற்கு அடுக்கும் அளவு வசதியானவர்கள் என்ற எண்ணமோ …? “

” ஆனால் அவர்களும் இருப்பார்கள்தானே .இல்லாது அப்படி எண்ணமின்றி வருபவர்களையும் , அதனையே வாங்க வைப்பதில்தான் நம் திறமை இருக்கிறது .அதற்குத்தான் இந்த ஷோரூம் சஹானா மேடம் ….”

லேசான கை தட்டலுடன் அந்த ரேக்கின் பின்னிருந்து வந்தான் ஷ்ராவத் .

” எக்ஸ்சலன்ட் …சாம்பவி .ரியலி யு ஆர் கிளவர் .யுவர் ஆங்கிள்ஸ் ஆர் வெரி க்யூட் அன்ட் கிளியர் ….உங்களுக்கு அவார்ட் கொடுத்ததில் தவறில்லையென்று நிரூபிக்கிறீர்கள் ….”

” இதெல்லாம் சாதாரண விசயம் சார் .இன்னும் இந்த ஷோரூமில் நிறைய மாற்ற வேண்டியதிருக்கிறது “

” ம் கோ அஹெட் . ஐ வில் புல்லி பர்மிட்டேடு யூ …”

” தேங்க்ஸ் பார் யுவர் கோஆப்ரேசன் சார் .ஐ டூ மை பெஸ்ட் …”

” என்ன சாம்பவி நாம் இந்த அளவு பழகிவிட்டோம் .நீங்கள் இன்னமும் சார் என்றே கூப்படுகிறீர்களே …”

” நீங்கள் என் முதலாளி சார் ்பிறகு உங்களை எப்படி அழைப்பது …? “

” ஷிட் ….இந்த முதலாளி தொழிலாளி கதையெல்லாம் விட்டு தள்ளுங்கள் . இதோ இவளுக்கும் நான் முதலாளிதான் .ஆனால் நாங்கள் அப்படியா பழகுகிறோம் .வீ ஸ்சோ லைக் ப்ரெண்ட்ஸ் .நவ் வீ ஆல்சோ கோ லைக் தேட் பாத் …”




” ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன் …” என்றவளின் ஓரப்பார்வை இறுகிய முகத்துடன் நின்ற சஹானாவை ஆராய்ந்த்து .

” தென் கால் மீ ஷ்ராவத் …ஆர் ஷ்ரத் .அஸ் யுவர் விஷ் ….” என கைகளை நீட்டினான் .

அவன் கைகளை பற்றி குலுக்கியபடி ” நீங்கள் குஜராத்திதானே …தமிழ் எப்படி இவ்வளவு அழகாக பேசுகிறீர்கள் …” என்றாள் .

” என் தாய்மொழி தமிழ்தான் சாம்பவி .ஐ மீன் என் தாயின் மொழி தமிழ் .அப்பா குஜராத்தி .என் வீட்டில் தமிழும் , குஜராத்தியும் கலந்து விளையாடும் .அதனால் என் நாக்கிலும் தமிழ் விளையாடுகிறது .ஆனால் உங்களை போல் தமிழை தெளிவான உச்சரிப்புடன் பேச வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு .என்னுடையது இன்னமும் மழலைத் தமிழ்தான் …”

” அது ரொம்ப சுலபம் ஷ்ராவத் .தமிழில் பேசி பேசி பழகினால் ஈஸியாக வந்துவிடும் .ஒன்று செய்யலாம் இனி நாம் இருவரும் தமிழிலேயே பேசிக் கொள்ளலாம் .மூன்றே மாதங்களில் உங்களை அழகாக தமிழ் பேச வைக்கிறேன் …”

” தட்ஸ் மை ப்ளஸர் …” என அவன் தலைகுனிய …

” ம் ..தமிழ் …தமிழ. …”என அவனை மிரட்டினாள் சாம்பவி .
” இதற்கு தமிழில் எப்படி ….? ” அவன் தடுமாற …

” அது என் பாக்கியம் …” என அவனைப் போன்றே தலை குனிந்து சாம்பவி சொல்ல ,

” இன்ட்ரெஸ்ட்டிங் …என்றபடி ” அது என் ….” என ஆரம்பித்தவனை எரிப்பது போல் பார்த்த சஹானா தட் தட்டென்ற காலடியுடன் அங்கிருந்து நகர்ந்தாள் .அவள் பின்னேயே போன ஷ்ராவத்தின் பார்வையை கவனித்துவிட்டு ….

” சஹானாவை உங்களுக்கு எவ்வளவு நாட்களாக பழக்கம் ஷ்ராவத் ….? “

” இரண்டு வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.ஏன் கேட்கிறீர்கள் … ? “

” சீ இஸ் எ குட் கேர்ள் ….”

” இதை நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை .ஐ ந்நோ ஹெர் வெரி வெல் ….கொஞ்சம் குழந்தைத்தனமான பிடிவாதம் உண்டு …அவ்வளவுதான் …”

” இதை அவளிடமே நேரில் சொல்லி பாருங்களேன் …”




” ஏன் சாம்பவி …நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன் .எனக்கு இப்படி ஒரு ராங் கைடன்ஸ் கொடுக்கிறீர்கள் …? ” முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு அவன் கேட்டதில் சாம்பவி சிரித்தாள் .உடன் ஷ்ராவத்தும் இணைந்து கொண்டான் .

” வேலை நேரத்தில் இங்கே நின்று கொண்டு என்ன சிரிப்பு …? ” ரிஷிதரன் தான் கோபத்தோடு இவர்களை பார்த்தபடி நின்றிருந்தான் .

” ரிஷி தேட்ஸ் எ நைஸ் ஜோக் மேன் .சாம்பவி ….” என ஆரம்பித்தவனை தடுத்து …

” வேலையை பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம் ….” என்றாள் சாம்பவி .

” என்ன ..இந்த டைல்ஸுக்கெல்லாம் எப்படி வெள்ளை யடிப்பது என்று பேசினீர்களா …? “

டைல்ஸுக்கு வெள்ளையா … ? அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வர சாம்பவி பளிச்சென சிரித்தாள் .

” ரிஷி …இதுதான்டா பெஸ்ட் ஜோக் …” என சிரித்தபடி ஷ்ராவத் அவனை பார்க்க , அவனோ சாம்பவியின் சிரிக்கும் இதழ்களில் பார்வையை பதித்திருந்தான் .

தன! இடத்திலிருந்து எட்டி ரிஷியின் கைகளை பற்றி அழுத்தினான் ஷ்ராவத் .” என்னடா ….” என்றான் கண்டிப்புடன் .

இந்த ரகசியத்தை கவனிக்காத சாம்பவி ” எனக்கு நமது கம்பெனி டைல்ஸ் வெரைட்டி டீடெயில்ஸ் வேண்டுமே ஷ்ராவத் ….” என்றாள் .

அவளது ஷ்ராவத்தில் முகம் கடுத்த ,ரிஷிதரன் ” அதனை நான் தருகிறேன் வாருங்கள் …” என முன்னால் நடந்தான் .

ஆபிஸ் அறையினுள் நுழைந்து தனது ரோலிங் சேரில் அமர்ந்தவன் உட்காரும்படி அவளுக்கு சைகை காட்டினான் .பெரிய மகாராஜா …தோரணையை பாரு ….ஆனால் அது எப்படி இந்த சாதாரண ரோலிங் சேரில் கூட சிம்மாசன மகாராஜா போன்ற கம்பீரத்துடன் இவனால் அமர முடிகிறது .தன் போக்கில் எண்ணிவிட்டு தலையை குலுக்கக் கொண்டாள் .

” ஆக பெரிய தொழிலதிபர் ஆகி விட்டீர்கள் .” குத்தல் குரலில் கேட்டான் .

” ஏன் ஆக்க் கூடாதா …? ” நேரடியாக அவன் கண்களை பார்த்து கேட்டாள் .அதில் கோபமோ , வெறுப்போ இல்லை .சிறு மெச்சுதலோடு கூடிய புரியாத பாவம் ஒன்றிருந்த்து .

எதற்காக இப்படி பார்க்கிறான் …? தனது பார்வையை மேலும் கூர்மையாக்கி அவன் கண்களுக்குள் செலுத்தி அவன் மனதினை அறிய முயன்றாள் . இவன் மகிழ்கிறானா …? வெறுக்கிறானா …?

என்ன முயன்றும் அவன் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியாமல் சோர்வுடன் கண்களை தாழ்த்திக் கொண்டாள் .இவன் எப்போதுமே இப்படித்தான் பார்ப்பானா …? முன்பெல்லாம் எப்படி பார்த்துக் கொண்டிருந்தான் ….?




அவனது முந்தைய பார்வைகளை நினைவுக்கு கொண்டு வந்து ஆராய முயன்றாள் .ஆனால் அது போன்ற பார்வைகள் எதுவும் அவள் ஞாபக அடுக்குகளில் இல்லை .எங்கே …அப்போதெல்லாம்
அவள்தான் அவனை நிமிர்ந்து பார்ப்பதே இல்லையே …ஓரிரு முறை அவன் கண்களை சந்திக்க முயலும் போதெல்லாம் அவன் ….

சட்டென சாம்பவியின் உடல் சூடேறியது .அவளை அவன் எதுவும் சிந்திக்கவோ …செயல்படுத்தவோ அனுமதித்தில்லை . அவர்கள் சேர்ந்திருந்திருந்த்தே சிறிது நாட்கள்தான் .அதிலும் அவர்களுக்கான தனிமை கிடைத்தது மிகச் சிறிய நேரம்தான் .

அந்த தனிமைகளில் பேசுவதற்கென சில நிமிடங்களை ஒதுக்கவும் அப்போதெல்லாம் ரிஷிதரன் தயாராக இல்லை .தங்கள் தனிமையின் ஒவ்வொரு நிமடத்தையும் கணவன் மனைவிக்கான  மோகத்தினால் மட்டுமே நிறைத்திருந்தான் .

இந்த நினைவை தொடர்ந்து தங்களின் அந்தரங்க நிகழ்வுகளும் நினைவு வர , முகம் சிவக்க ரிஷிதரனை அவள் ஏறிட்டாள் .

அவன் உணர்ச்சிகளற்ற கற்பாறை போல் முகத்தை வைத்து க் கொண்டு அவளை பார்த்தபடி யிருந்தான் .இப்படி ஒரு பார்வை பார்ப்பதற்கு கண்களை மூடிக்கொண்டேனும் இருக்கலாம் ..சலித்தபடி ..

“இங்கே இருக்கும் டைல்ஸ்களின் வகைகள் எனக்கு வேண்டும் ….வால் டைல்சிலிருந்து எலிவேசன் டைல்ஸ் வரை …”

போனால் போகிறதென தனது பார்வைகளை மாற்றிக் கொண்ட  ரிஷிதரனின் முகம் கடுத்தது .

” வாட் …யூ சேயிங் …? “

” ஐ ஆம் சேயிங் ஐ வான்ட் டூ ந்நோ தேட் தி வெரைட்டி ஆப் தி டைல்ஸ் இன் திஸ் ஷோரூம் …” தெளிவான ஆங்கிலத்தில் கூறினாள் .

ரிஷிதரனின் முகத்தில் புன்னகையின் சாயல் ஒன்று தோன்றியது .

” ம் …பென்டாஸ்டிக் …பெர்பெக்ட் .ஆனால் எப்படி இந்த மாற்றமென்றுதான் புரியவில்லை …” என்றான் .

” கார்பெட் டைல்ஸில் எத்தனை வெரைட்டி இருக்கும் …? ” அவனது பாராட்டுதலில் நெகிழ்ந்த உள்ளத்தை காட்டாமலிருக்க குரலில் மிடுக்கினை சேர்த்துக் கொண்டாள்.

” நவ் ஐ எக்ஸ்பிளைன்டு யு …” தனது லேட்டாப்பை திறந்து வைத்துக்கொண்டான் .

” இங்கே இந்த பக்கம் வந்துவிடுங்களேன் .இட்ஸ் ஈஸி பார் அஸ் …” தனக்கு அருகில் ஒரு சேரை இழுத்து போட்டுக்கொண்டு சொன்னான் .

அவனது பன்மை மனதினை உறுத்த எரிச்சலுடன் மறுக்க எண்ணியவள் அவன் அதற்குள் லேப்டாப்பில் விளக்கங்களை தர ஆரம்பித்து விட , பேசாமல் அவன் காட்டிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள் .

ஒரு மணி நேரம் டைல்ஸ் தொழிலின் நுணுக்கங்களை தெளிவாக அவளுக்கு விவரித்தான்.அப்போது ஒரு புதிய ரிஷிதரனை பார்த்தாள் சாம்பவி .

எப்போதும் குறும்பும் , வேகமுமாக தன்னை சீண்டிக் கொண்டிருந்த ரிஷிதரனா இவன் …என வியந்து போனாள் அவள் .




” தொழிலென்று வந்துவிட்டால் நான் வேறுதான் ….” பார்வையை லேப்டாப்பில் பதித்தபடி கூறினான் .

இது எனக்கு சொன்ன பதிலா ….? தனக்கு தானே சொல்லிக் கொள்கிறானா …? குழம்பினாள்.

” இப் எனி டவுட் ….? ” அவளை பார்க்காமலேயே கேட்டான் .

,” ம் …இருக்கிறது .அவ்வப்போது கேட்டுக் கொள்கிறேன் “

” மே ஐ கம்மின் …” ரிஷிதரன் கதவை தட்டினான் .

” கம்மான் ஷ்ரத் ….” ரிஷி குரல் கொடுக்க , உள்ளே வந்த ஷ்ராவத்தின் கைகளில் ஒரு டிரே இருந்த்து .

” பிஸினஸ் பேசி பேசி டயர்டாகி இருப்பீர்கள் .அதனால் டீ ….” என்றபடி ஒரு சர்வரை போல் அவன் பவ்யமாக குனிந்தான் .

” ஐயோ என்ன ஷ்ரத் இது …? உங்களுக்கு ஏன் சிரம்ம் …? என்னிடம் கொடுங்கள் …” வேகமாக எழுந்த சாம்பவியை ….

” நீ உட்கார் ….” என கீழ்க்குரலில் அதட்டினான் ரிஷிதரன் .
” இப்படி வைத்துவிடு ஷ்ரத் .நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் .,” என்றான் .

டேபிளில் டிரேயை வைத்த ஷ்ராவத் ஒரு கப்பை எடுத்து ரிஷியிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை சாம்பவிக்காக எடுத்த போது  , தன்னிடமிருந்த்தை சாம்பவியிடம் கொடுத்நிருந்தான் ரிஷி .

” நீ எடுத்துக்கோடா .சஹியை எங்கே …? ” தனது கப்பை எடுத.துக்கொண்டான் .

தொழில் பேச்சு தவிர நெகிழ்வான ஒரு பார்வையோ ..பேச்சோ இல்லாதிருந்த ரிஷிதரனின் இந்த செயல் ஏனோ சாம்பவிக்கு பிடித்தது ்இதில் ஒரு உரிமை இருப்பதாக எண்ணினாள் .

” லோட் வந்திருக்கிறது ரிஷி .சஹி குடோனில் அதனை இறக்கிக் கொண்டிருக்கிறாள் .என்ன சாம்பவி …ரிஷி என்னவெல்லாம் சொல்லி தந்தான் …? இந்த தொழிலை பற்றிக் கேட்டால் தலை கீழாக சொல்வான் .ஹி இஸ் எ ஜீனியஸ் யு நோ …? “

சாம்பவி பதிலளிக்கும் முன் ” மேடத்திற்கு எல்லாவற்றையும் விளக்கி விட்டேன் ஷ்ரத் .இனி மேடமே பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன் …”

ரிஷிதரனின் மேடத்தில் முகம் வாடியது சாம்பவிக்கு .
” பவி ” என்ற அவனது தனியான அழைப்பு வேண்டாம் .எல்லோரையும் போல் சாம்பவி என்றாவது அழைக்கலாமே …இது என்ன யாரோ போல் மேடமாம் ….

” என்ன ரிஷி …அவர்களை சாம்பவி என்று கூப்பிடலாமே …இது என்ன மேடம் …ரொம்பவே பார்மலாக தெரிகிறது …” சாம்பவியின் முகத்தை பார்த்துவிட்டு ரிஷியிடம் கேட்டான் ஷ்ரத் .

” முன்னே பின்னே தெரியாதவர்களை , பழக்கமில்லாதவர்களை எப்படியடா பெயர் சொல்லி அழைப்பது …? ” நிதானமாக கேட்டான் .

முகத்தில் அறை வாங்கியது போல் துடித்தாள் சாம்பவி .
” ஏன் நான் அழைக்கவில்லை ..? எனக்கும் அவர்கள் இப்போதுதானே பழக்கம் .நாங்கள் இருவரும் நண்பரகளாகி விடவில்லையா …? ‘” ஷ்ராவத் விடாமல் வற்புறுத்த …




” எனக்கு யாருடனும் நட்பு பாராட்டும் எண்ணமில்லை …” கத்தரித்தாற் போல் கூறிவிட்டு குடித்து முடித்த டீ கப்பினை கசக்கி குப்பை கூடையினுள் போட்டான் .

அவன் தன்னையே கசக்கியது போல் துடித்தாள் சாம்பவி .

” இப் யூ ஹேவ் எனி டவுட் ..கான்டாக்ட் மீ இன்  போன் …ஷ்ரத் கிவ் மை நம்பர் டூ ஹெர் …” சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் .

ஒரே ஒரு வார்த்தையாவது …சாஹித்யாவை பற்றி விசாரிப்பானா ..? என அவளது மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் …இந்த அவனது அலட்சியத்தில் நீர்த்து போனது .




What’s your Reaction?
+1
34
+1
25
+1
1
+1
1
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!