Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-32

32

சொல்லாமல் வரும் உன்
பிள்ளை கோபங்களுக்கு மாற்றாய் ,
கல்லாமல் விட்ட கடைசி அத்தியாயங்களில்
அடையாளமாய்  எனை நூலாய் சொருகுகிறே

மாளவிகா உடனே போய்  சுந்தரியின் காதை கடிக்க அவள் வேகமாக உள்ளே ஓடி வந்தாள் .

” இரண்டு மாசமாச்சு .சொல்லாமல் இருந்திருக்கிறாயே …? இப்போது பார் வெளியே சொல்லக் கூட முடியவில்லை …? ” வருத்தப்பட்டாள் .

சாவு வீட்டிற்குள் இந்த சந்தோச விசயத்தை எப்படி வெளிப்படையாக சொல்ல முடியும் ..?

சுந்தரி அலுத்துக்கொண்டாலும் வெளிப்படையாக தெரியாமல் அந்த செய்தி மெல்ல வீட்டினுள் பரவ தொடங்கியது .

குருநாதன் உள்ளே வந்து மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு போக , சசிகுமார் வாழ்த்துக்களை சொல்லி சென்றான் .மேலும் சில உறவினர்கள் நலம் விசாரித்து விட்டு செல்ல …நந்தகுமார் உள்ளே வரவே இல்லை .

” இது அத்தானுக்கு பிடிக்கவில்லை .அதுதான் அவர் உன் முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் .” மிருணாளினி விசமத்துடன் சொன்னாள் .

” வாயை மூடு . என் புருசனை எனக்கு தெரியும் .நீ சொல்ல வேண்டாம் ….”

” ஏதோ ஒரு பலவீனமான நேரத்தில் இந்த மாதிரி தவறுதலாக  ஆகியிருக்கும் .அது போல் வந்த பிள்ளை உனக்கு தேவையா …? பேசாமல் இந்த பிள்ளையை கலைத்து விடு ….”

” என்னடி சொன்ன …? ” ஆத்திரத்தில் கைகளை வீசி மிருணாளினியை அறைந்துவிட்டாள் மீரா .

” மீரா ….என்ன இது …? என்ன காரியம் செய்கிறாய் …? ” அடக்கப்பட்ட குரலில் ஆத்திரத்துடன் வந்து நின்றான் நந்தகுமார் .

” அத்தான் ….” அவனை பார்த்ததும் கண்களை கசக்கி அழத்துவங்கினாள் மிருணாளினி .

” அழாதே மிருணா …மீரா அவளிடம் மன்னிப்பு கேள் ….”

அதிர்ந்தாள் மீரா .

” அவள் என்ன சொன்னாள் தெரியுமா …? “

” அது எனக்கு தேவையில்லாத விசயம் .நீ செய்தது தவறு .உடனே மன்னிப்பு கேள் …”

” முடியாது ….” தலையை நிமிர்த்தி சொன்னாள் மீரா .

” நான் தவறு செய்யவில்லை .நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ….”

” அத்தான் ..இவள் மன்னிப்பு கேட்கும் வரை நான் இங்கே வர மாட்டேன் ….” நந்தகுமார் மெல்லிய குரலில் கூப்பிட கூப்பிட மிருணாளினி வீட்டை விட்டு போய்விட்டாள் .

” தப்பு மீரா .நீ செய்வது பெரிய தப்பு .நம் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி அவள் . அவள் தப்பே செய்திருந்தாலும் நாம் பொறுத்து போகவேண்டும் .”




” அந்த மாதிரி தப்பு அவள் செய்யவில்லை ….”

” இந்த இக்கட்டான சூழ்நிலையில் உனக்கு விளக்கம் சொல்ல எனக்கு நேரமில்லை …,” எரிச்சலாக சொன்னவன் …என்னமோ செய் என்பது போல் கையை அசைத்து விட்டு போய்விட்டான் .

ஒரு வார்த்தை உன் பிள்ளையை பற்றி கேட்க கூட நேரமில்லையா ….? தனது வயிற்றை வருடியபடி கலங்கினாள் மீரா .

பாட்டியின் முன் வந்து அமர்ந்தவள் ” பாட்டி எனக்கு தைரியம் கொடுங்கள் ….” என மனதிற்குள் வேண்டிக்கொண்டாள் .

பெண்கள் தண்ணீர் குடமெடுக்க ப்ளாஸ்டிக் குடங்கள் வைக்கப்பட …அனைவருடனும் மீராவும் குனிந்து குடம் தூக்க முயல ….

” வேண்டாம் மீரா ….” பின்னிருந்து அவள் கைகளை பற்றியிழுத்து தடுத்தான் நந்தகுமார் .

” நீ அலட்டிக்கொள்ளாதே ….” என்றான் .

இந்த சின்ன கரிசனத்திலேயே மீராவின் முகம் மலர்ந்துவிட்டது .அப்போது சுந்தரியும் வந்து …

” மீரா இப்போது நீ குடமெல்லாம் தூக்க வேண்டாம் .பின்னால் நகர்ந்து நில்லு ” என்றாள் .தலையாட்டி  நகர்ந்த மீரா பின்னால் நின்றிருந்த கணவனின்  மேல் மோதிக்கொண்டாள் .

உடனே நகர போனவனின் கையை பிறரறியாமல் இழுத்து மெல்ல தன் வயிற்றில் பதித்துக்கொண்டாள். ஒரு கணம் தயங்கிய நந்தகுமாரின்  கை பின் மெல்ல அவள் வயிற்றை வருட , மீரா நெகிழ்ந்தாள் .மென்மையான சின்ன அழுத்தமொன்றை அவள் வயிற்றில் வைத்தவன் விலகி போனான் .நிறைவாய் நின்றாள் மீரா .

பாட்டியை எடுக்கும் போது அழுகை பொங்கியது .பாட்டியின் பாசம் நினைவு வர சூழ்ந்திருந்தோருடன் சேர்ந்து கத்தி , கதற தொடங்கிய மீராவை ….வேண்டாம் …அமைதி என கண்களால் சொன்னபடியிருந்தான் நந்தகுமார் .கத்தல்களையும் , விம்மல்களையும் குறைத்து விசும்ப ஆரம்பித்தாள் மீரா .

” உடம்பை அலட்டாதே மீரா .ஜாக்கிரதை .உள்ளே போ …” அழுகையினூடே சுந்தரி அவளை எச்சரிக்க மறக்கவில்லை .

சோகமான அந்த சூழ்நிலையிலும் தன் வீட்டினரின் கரிசனம் மீராவின் இறுகிய மனதை இளக்கி , உருப்படியாக யோசிக்க வைத்தது .பாட்டியை எடுத்துக் கொண்டு போனதும் வீடே அமைதியாகி …ஒரு வித அமானுஷ்யமானது போலிருந்தது .

” அத்தை போனதும் வீடே மயானமாகி விட்டதே ….” சுந்தரி தரையில் படுத்து அழத்துவங்கினாள் .

பிரவீணாவும் , மாளவிகாவும் அவளை சமாதானப்படுத்த துவங்க மீரா பாட்டியின் வீட்டிற்குள் வந்து நின்றாள் .பாட்டி படுத்திருந்த கட்டிலை தடவி பார்த்தவள் சிறிதுநேரம் அதில் தலை சாய்த்து படுத்திருந்தாள் .ஏதோ பாட்டியே வந்து தலை வருடுவது போல் ஒரு ஆறுதல் உண்டாக சற்றே தெளிவான மனதுடன் நிமிர்ந்தாள் .

” என்ன சங்கீதா உன் பொண்ணுக்கு நேரம் கூடி வந்துடுச்சு போல …? “




பேச்சுக்குரல்கள் சன்னலுக்கு மறுபுறம் கேட்டன. மிருணாளினியை பற்றிய பேச்சென்பதால் சன்னலை ஒட்டி நின்று கவனித்தாள் .

கேட்ட தகவல்களை மனதில் இருத்திக்கொண்டவள் கிணற்றடிக்கு போய் நீர் இறைத்து தலைவழியே ஊற்றிக்கொண்டாள் .பாட்டியின் ஆத்மாதான் இந்த தகவல்களை தனது காதிற்கு கொண்டு வந்து அடுத்த செயல்பாடுகளுக்கு தன்னை தயாராக்கி இருப்பதாக நம்பினாள் .

உடையை மாற்றிக்கொண்டவள் வீட்டினர் யாரும் கவனிக்காத போது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள் .ஆண்கள் அனைவரும் மயானத்திற்கு போயிருக்க இருந்த பெண்களும் குளிக்க , வீடு கழுவ என ஏதோ ஒரு வேலையில் இருந்ததால் மீராவால் யார் கண்ணிலும் படாது வெளியேற முடிந்தது .

முன்பு ஒரு முறை சுந்தரி சொன்ன விலாசத்தை மனதில் நினைவுகொண்டு இரண்டு இடங்களில் விசாரித்துக் கொண்டு வந்துவிட்டாள் மீரா .

காலிங்பெல்லை அழுத்திவிட்டு …திறக்க நேரமானதால் திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள் .

சோபாவில் சரிந்து அமர்ந்து கால்களை டீப்பாயில் நீட்டிக்கொண்டு சுற்றிலும் பாக்கெட் தீனிகளை பரப்பி வைத்து டிவி பார்த்தபடி அலட்சியமாக இருந்தாள் மிருணாளினி ….அழைப்புமணி ஓசையை கேட்டபிறகும்….

அங்கே என் வாழ்வில் தனலை கொட்டிவிட்டு இங்கே வந்து நிம்மதியாக டிவியா பார்க்கிறாய் ….இப்போது நீ எனக்கு பதில் சொல்ல வேண்டுமடி …

மீண்டும் மணியை அழுத்தினாள் மீரா .

” இதோ வர்றேன்மா ….” சாவு வீட்டிற்கு போயிருக்கும் பெற்றோர் என நினைத்து நிதானமாக வந்து கதவை திறந்தவள் நிச்சயம் மீராவை எதிர் பார்க்கவில்லை .

” நீயா ….நீ …ஏன் …எதற்கு வந்தாய் …? “

” உன்னிடம் நிறைய பேசவேண்டும் மிருணாளினி …” அவளை இடித்துக்கொண்டு உள்ளே வந்த மீரா …

” ஏன் இப்படி செய்தாய் …? ” கைகளை கட்டிக்கொண்டு கேட்டாள் .

இரண்டு நிமிடங்கள் ….இரண்டே இரண்டு நிமிடங்கள்தான் எடுத்துக்கொண்டாள் மிருணாளினி .உடனே தன்னை சுதாரித்துக்கொண்டாள் .

நிதானமாக நடந்து சோபாவில் போய் அமர்ந்து கொண்டு சிப்ஸை வாயில் போட்டு மென்றபடி ” எப்படி செய்தேன்.




What’s your Reaction?
+1
23
+1
20
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
15 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!