Entertainment lifestyles News

தண்ணீர்,மணல் கிடையாது.. அலமாரியில் சோளம் விளைவிக்கும் நாமக்கல் விவசாயி..!!

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.சரவணன். அவரது நிலத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் செடிகள் நோயின் காரணமாக முற்றிலும் அழுகிவிட்டன. 58 வயதான சரவணனுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார்.




விவசாயக் குடும்பத்தில் பிறந்த சரவணன் தனது பயிர்கள் சிறந்து விளைவதற்கு தனது மூதாதையர்கள் பின்பற்றிய சாகுபடி முறைதான் சரியாக இருக்கும் என அறிந்து கொண்டார். இதனால் ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை நிறுத்தினார்.

பின்னர் நாமக்கல்லில் இருந்த கிருஷி விக்யான் கேந்த்ராவில் ஆர்கானிக் விவசாயம் பற்றிய பயிற்சியை எடுத்துக் கொண்டார். ரசாயனங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு நிலத்துக்கு சொட்டு நீர்ப் பாசனம், வெர்மிகாம்போஸ்ட் உரம், பயோகேஸ் யூனிட், ஹைட்ரோபோனிக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.

ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் மணல் இல்லாமல் தேங்காய் நாரில் தண்ணீர் சார்ந்த ஊட்டச்சத்து திரவத்தைப் பயன்படுத்தி பயிர்களை வளர்ப்பது ஆகும். இதன் மூலம் 2018 ஆம் ஆண்டிலிருந்து அவர் கேப்பை பயிரிட்டு தனது கால்நடைகளுக்கு உணவாக அளித்தார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் கேப்பை பயிரை அலமாரிகளில் விளைவித்தார்.

இதற்காக அவருக்கு இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சர் ரிசர்ச் அமைப்பின் ஹால்தார் ஆர்கானிக் விவசாயி விருதைப் பெற்றார். இத்துடன் மத்திய அரசின் புதுமையான விவசாயி விருதையும் பெற்றார். நாமக்கல் மாவட்டம் ஆரியகவுண்டபட்டியில் 40 ஆண்டுகளாக ஆர்கானிக் விவசாயத்தை செய்து வருகிறார். 2005-06இல் மைக்ரோ நீர்ப்பாசன திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. சொட்டு நீர்ப்பாசனம், பூவாளி நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்காக மானியமும் தரப்பட்டது. இதில் சரவணன் சொட்டு நீர்ப்பாசனத்தை தேர்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் வறட்சியான பகுதி என்பதால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. எனவே சொட்டு நீர்ப்பாசனம் மும்மடங்கு பயன்பாட்டை தந்தது. 2007இல் இருந்து தனது 6 ஏக்கர் 36 சென்ட் நிலத்தில் மஞ்சள், நிலக்கடலை, காய்கறிகளை சாகுபடி செய்தார்.

பயிர்கள், கால்நடை, அக்வாகல்சர், கோழி வளர்ப்பு என ஒருங்கிணைந்த விவசாயத் திட்டத்தை அவர் மேற்கொண்டார். சொட்டு நீர்ப்பாசனத்தை தொடங்கிய சில நாட்களில் அவர் தனது நிலத்தில் மண் பரிசோதனை செய்தார். இதில் அந்த மண்ணில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லையென்று தெரிந்தது. இதனால்தான் அவர் பயிரிட்ட மஞ்சள் செடிகள் அழுகின.




கிருஷி விக்யான் கேந்த்ராவை சேர்ந்த நிபுணர்கள் சில உயிரி உரங்களை மஞ்சள் செடிக்குப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தனர். அது மஞ்சள் செடிக்கு நல்ல பலனைக் கொடுத்தது. அவரது நிலத்தின் மண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால் சரவணன் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் ரசாயனங்கள், செயற்கை உரங்களை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறினார். அத்துடன் பயிர் சுழற்சி முறையையும் பின்பற்றினார். இந்த ஆண்டு பருப்பு வகைகளை சாகுபடி செய்தால் அடுத்த ஆண்டு வேறு பயிரை சாகுபடி செய்வார். வயலுக்கு வேலிப்பயிராக அரளியை விதைத்தார்.

இது மாசுப் பொருட்களை கிரகித்துக் கொள்ளும். அத்துடன் அகத்தி, கேப்பையையும் காப்பு பயிராக விளைவித்தார். இதன் மூலம் பூச்சிகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடிந்தது. 2008இல் மண்புழு உரம் தயாரிக்கும் ஆலையை சரவணன் தொடங்கினார். ஆண்டுக்கு அதில் 6000 கிலோ உரம் தயாரிக்கப்பட்டது. தனது நிலத்தில் மண்புழு உரம், வேப்பிலைக் கட்டிகள், விளக்கெண்ணெய் கட்டிகள் ஆகியவற்றை உரமாகப் பயன்படுத்தினார். அவரது பயோகேஸ் யூனிட் மூலம் குப்பைகள் ஆற்றலாக மாற்றப்பட்டு காற்றை சுத்தமாக்கினார்.

இதுமட்டுமல்லாமல் பஞ்சகவ்யத்தையும் சரவணன் பயன்படுத்தினார். இந்த நிலையில் 500 கிராம் கேப்பையிலிருந்து 5 கிலோவரை கேப்பை தீவனத்தை 8 நாட்களுக்கு உற்பத்தி செய்தார். நாமக்கல்லில் அப்போது கால்நடைத் தீவனங்களுக்கு நல்ல கிராக்கி இருந்ததால் அதன் விற்பனையை அதிகரி்த்தார்.

கேப்பை தீவனம் செய்யும் முறை: கேப்பையை தண்ணீரில் 24 மணிநேரத்துக்கு ஊற வைக்கவேண்டும். அந்த விதைகளை எடுத்து ஒரு சாக்குப் பையில் போட்டு 24 மணிநேரம் விட்டுவிட வேண்டும். கேப்பை முளைவிட்டது அதை ஒரு தட்டில் பரப்பி அலமாரியில் வைக்க வேண்டும். அதில் மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் 7 நாட்களுக்கு விடவேண்டும். 8ஆவது நாளில் கேப்பை தீவனம் ரெடியாகிவிடும். இந்த தீவனத்தை விற்று சரவணன் மாதந்தோறும் பல லட்சம் ரூபாயை சம்பாதித்து வருகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!