தோட்டக் கலை மயங்கினேன்_மன்னன்_இங்கே

பாம்புகளை ஈர்க்கும் செடிகள்.. என்னென்ன?

வீட்டின் முன்புறம் கொஞ்சம் இடம் இருந்தாலும் அங்கே அழகான தோட்டம் வைத்து பராமரிப்போம். அப்படி தோட்டம் அமைக்கும் முன் எந்தெந்த செடிகளை வைக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

போன்சாய் மரங்கள் இப்போது டிரெண்டில் உள்ளன. மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து அவற்றை அழகுக்காக வாங்குகிறார்கள். பெரும்பாலும் வீட்டு முன்பு மரம் வளர்த்தால் சுத்தமான காற்று மற்றும் நிழல் கொடுக்கும் என்பதால் மரங்கள் வளர்க்கவே ஆசைப்படுவார்கள்.




சில சந்தர்ப்பங்களில், அதிக பசுமையான இடம் சில பூச்சிகள் மற்றும் புழுக்களின் வாழ்விடமாக மாறும். எனவே வீட்டின் முன் பூந்தொட்டி அல்லது அலங்கார செடிகளை வளர்க்கிறீர்கள் எனில், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

அந்தவகையில் சில தாவரங்கள் பாம்புகளை ஈர்க்கின்றன. உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் வாசனை நிறைந்த செடிகள், பூக்கள் இருந்தால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று பூச்சியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பாம்பு வரும் என்பதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. அவற்றின் பராமரிப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுத்துகின்றனர்.




பாம்புகள் விரும்பும் மற்றும் விரும்பாத பல வகையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. சில மரங்கள் மற்றும் செடிகளின் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது. எரஹுல்லா, கருட மரம், சர்பகந்தா போன்ற சில மரங்களின் வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது. சிலவகை செடிகளின் வாசனை பாம்புகளுக்கு மிகவும் பிடிக்கும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

சில மரங்கள் பாம்புகளுக்கு வீடாகவும் மற்றும் முக்கிய உணவு ஆதாரமாகவும் இருக்கின்றன. பாம்புகள் பெரும்பாலும் அடர்ந்த இலைகள் அல்லது வெற்று மரங்களில் காணப்படும். பாம்புகளுக்கு வாசனை உணர்வு அதிகம் என்று அறிவியல் கூறுகிறது. மணம் வீசும் சந்தன மரங்களில் பாம்புகள் வாழ்கின்றன. பாம்புகள் வாழ்வதற்கு குளிர்ந்த, இருண்ட இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. சந்தனமும் அதன் குளிர்ச்சியால் பாம்புகளை ஈர்க்கிறது.

எலுமிச்சை மரம் : எலுமிச்சை மரம் பாம்புகள் வாழ மிகவும் பிடித்த மரம். ஒருவேளை இந்த புளிப்பு பழத்தை பூச்சிகள், கொறித்துண்ணிகள் மற்றும் பறவைகள் உண்ணலாம், இதன் வாசனையால் அவை இங்கு தங்குகின்றன. எலுமிச்சை பழங்களை சாப்பிட வரும் பூச்சிகள் மற்றும் பறவைகளை வேட்டையாட பாம்புகளும் இங்கு சுற்றித் திரிகின்றன.

தேவதாரு மரம் : இந்த மரத்தில் பாம்புகளும் வாழ்வதாக கூறப்படுகிறது. பைன் மரங்கள் பெரும்பாலும் காடுகளில் காணப்படுகின்றன. இந்த மரங்கள் மிகவும் உயரமாக வளரக்கூடியவை. இந்த மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், இங்கு குளிர்ச்சியான சூழல் உருவாகிறது. இதனாலேயே தேவதாரு மரங்கள் பாம்புகளை ஈர்க்கின்றன.




க்ளோவர் செடி : இந்த செடி தரையில் இருந்து உயரமாக வளராது. தரைக்கு அருகில் அடர்த்தியாக வளரக்கூடியவை, பாம்புகள் இந்த செடிகளுக்குக் கீழ் எளிதில் ஒளிந்துகொண்டு ஓய்வெடுக்கும். மேலும், இந்த செடியின் வேர் பகுதி குளிர்ச்சியாக இருக்கும்.

சைப்ரஸ் செடி : உங்கள் வீடு, முற்றம் அல்லது தோட்டத்தை சுற்றி சைப்ரஸ் செடி இருந்தால் கவனமாக இருங்கள். இது மிகவும் அடர்த்தியான தடிமனான இலைகளைக் கொண்ட ஒரு அலங்கார தாவரமாகும். இந்த செடியில் பாம்புகள் மிக எளிதாக ஒளிந்து கொள்கின்றன.

மல்லிகை செடி : பாம்புகள் மல்லிகை செடியை சுற்றி வாழ விரும்புகின்றன. இது நிழல் தரும் தாவரமாகும். பலர் வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்க,மகிழ்ச்சியையும், நேர்மறையையும் கொண்டு வர, மல்லிகையை நடுகிறார்கள். ஆனால் இது சில நேரங்களில் இப்படி ஆபத்திலும் முடியலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!