தோட்டக் கலை

கற்றாழை செடி 1 வாரத்துக்குள் நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்..!

நாம் இந்த உலகில் நிம்மதியாகவும் ஆரோக்கியமாக வள வேண்டும் என்றால் அதற்கு நமக்கு தேவை மிகவும் சுத்தமான மூச்சு காற்று. நமது மூச்சு காற்று மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இல்லை என்றால் நாம் நிம்மதியாக சுவாசிக்கவே முடியாத நிலை உருவாகிவிடும். அதற்கு நமக்கு உதவுவது தாவரங்கள் தான். அதனால் தான் இன்றைய சூழலில் அனைவருமே தங்களது இல்லத்தில் ஒரு சிறிய அளவிலான தோட்டத்தை அமைத்து தாவரங்களை வளர்க்கிறார்கள்.

அப்படி நாம் நமது வீடுகளில் விரும்பி வளர்க்கும் பலவகையான தாவரங்களில் ஒன்று தான். இந்த சோற்று கற்றாழை. இதனை வளர்ப்பவர்கள் அனைவரும் கூறுவது எங்கள் வீட்டு கற்றாழை நன்கு செழித்து வளரவில்லை என்று. அதனால் இன்றைய பதிவில் கற்றாழை செடி நன்கு செழித்து வளர உதவும் ஒரு எளிமையான டிப்ஸினை பற்றி பார்க்கலாம் வாங்க. 




கற்றாழை செடி வளர்ப்பது எப்படி.?

How to grow aloe vera at home in tamil

நாம் அனைவருமே கற்றாழை செடியினை நமது வீடுகளில் மிகவும் விரும்பி வளர்ப்போம். ஏனென்றால் இதில் உள்ள சதையினால் நமக்கு பலவகையான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் கற்றாழை செடி நன்கு செழித்து வளரவில்லை என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும். எனவே நமது வீடுகளில் உள்ள கற்றாழை செடி நன்கு செழித்து வளர உதவும் ஒரு டிப்ஸினை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.




தேவையான பொருட்கள்:

  1. வாழைப் பழத்தோல் – 4

  2. தண்ணீர் – 1 கிளாஸ் 

  3. கண்ணாடி பாட்டில் – 1

செய்முறை விளக்கம்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப் பழத்தோல்களையும் இரண்டு முதல் மூன்று நாட்கள் நன்கு வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடி பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை நன்கு சலித்து அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து நன்கு மூடிபோட்டு மூடி கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து 1 டீஸ்பூன் எடுத்து அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் வீட்டில் உள்ள கற்றாழை செடியில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை 10 நாட்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கற்றாழை செடி நன்கு சதைப்பற்றுடன் வளர ஆரம்பிக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!