Serial Stories udalena nan uyirena nee

உடலென நான் உயிரென நீ-2

2

” வாட்  ரூபா மேடம் ..நீங்கள் என்ன சொல்கிறீர்கள் …? ஆர் யு கன்பார்ம் ? “

வரிசையாக இதே ரீதியிலான  ஆச்சரியம் சுமந்த கேள்விகளே … ஆங்கிலத்திலும் , கன்னடத்திலும் மாறி மாறி அவளது ஊர்ஜிதத்தை கேட்டன. அழுத்தமான தலையசைப்புடன் அனைத்திற்கும் உறுதி சொன்னாள் ரூபா .

” உங்கள் இருவரின் சேவை இல்லாமல் நம் ஹாஸ்பிடல் எப்படி இயங்க போகிறதென்றே தெரியவில்லையே …? ”  குரியகோஸ் தனது பாதி வழுக்கையை மெலிதாக தடவிக் கொள்ள , ரூபா புன்னகைத்தாள்.

” டோன்ட் ஒர்ரி சார். எங்கள் இருவரை விட  திறமையானவர்கள் வருவார்கள் “

” ஓ …நோ .அம்மா – மகன் இருவரில் ஒருவராவது இங்கேயே கன்டினியூ பண்ணலாமே …” ஷீபா உடன் பணியாற்றும் டாக்டர் கோரிக்கை போல் வைத்தாள்.

” எங்கள் இருவரையும் பிரிப்பதில் உங்களுக்கு அவ்வளவு ஆசையா ஷீபா ?

” சேச்சே தாயையும் மகனையும் பிரிக்க நினைப்போமா …? ” ஷீபா வாயை மூடிக் கொண்டாள்.

” ஆனாலும் ரூபா மேடம் ரொம்ப  மிஸ்ட்டீரியஸ் . லண்டனில் வேலை கிடைத்ததை நம் யாரிடமும் சொல்லவே இல்லை பார்த்தீர்களா ? ” குரியகோஸின் பார்வை கூர்மையாக ரூபாவின் மேல் படிந்தது.

” வேலை எனக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது டாக்டர்.என் மகன் அங்கே மேலே படிக்க போகிறான் “

” ம் …சரிதான். ஆனால் இங்கே உங்களுடைய ப்ரெண்ட்ஸ் , ரிலேடிவ்ஸ், கோ ஒர்க்கர்ஸ் அன்ட் …யுவர் பேவரிட் பேஷன்ட்ஸ்…இவர்களையெல்லாம் மறந்து விட்டு போகிறேன் என்கிறீர்களே ? “

” நான் ஹோமில் படித்து வளர்ந்து இந்த வேலைக்கு வந்தவள் . படிக்கும் போதே லவ் மேரேஜ் .  என் கணவர் இறந்த பிறகு அவர் பக்கத்து சொந்தங்களும் ஒதுங்கி விட்டனர். ப்ரெண்ட்ஸ் என்னோட கோ ஓர்க்கர்ஸ் நீங்க எல்லோரும் தான் .என் மகன் மேலே படிக்க போவதால் உங்களையெல்லாம் விட்டு பிரிய நேர்கிறது ” தெளிவாக இருந்தது ரூபாவின் விளக்கம் .

 ” எங்களையெல்லாம் சமாளித்து விட்டீர்கள் சரி. உங்கள் பேவரிட் பேஷன்ட்ஸ் …? அவர்களையும்  பிரிவீர்களா ? ” ஹாஸ்யம் போல் சிரித்துக் கொண்டார் குரியகோஸ் .

 ” என்னிடம் ட்ரீட்மென்ட் எடுத்த பேஷன்ட்ஸ் எல்லோருமே எனக்கு பேவரைட்தான் சார் .முதல் பேஷன்ட்  ஷிராவத்திலிருந்து இரண்டு நாள் முன்பு பார்த்து முடித்த தாரா வரை . இந்த எல்லோரையும் நான் இப்போது பிரிந்துதான் இருக்கிறேன் என்று உங்களுக்கு விளக்க தேவையில்லை தானே ?”

” ஹா …ஆமாம் அவர்கள் ட்ரீட்மென்ட் முடிந்து இங்கிருந்து சென்றவர்கள். இப்போது இருப்பவர்கள் …குறிப்பாக சஷிஸா …? “

” சஷிஸா இன்னமும் ட்ரீட்மென்டில் தான் இருக்கிறார்கள்.   அவர்களை நான் டாக்டர் மனீஷ்கோயலிடம் ஹேன்ட்ஓவர் செய்து விட்டு  போகிறேன். அவர் பார்த்துக் கொள்வார் ” குரியகோஸின் துருவல் கேள்விகளுக்கு ரூபாவின் பதில்கள் அநாயசமாக வந்து விழுந்தன .




மீண்டும் ஒரு கேள்விக்கு குரியகோஸ் வாய் திறக்க யத்தனித்த போது, ரூபா எழுந்தாள். ” வீடு ஒதுக்க வேண்டும். கொஞ்சம்  பர்சேசிங் இருக்கிறது.  இன்று எனக்கு சீக்கிரம் பர்மிசன் வேண்டும் சார் “

” ஓ.கே கோ அஹெட் …” குரியகோஸ் எழுந்து நின்று தன் கோட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப் எடுத்து தன் நெற்றியையும்,  முடியற்றிருந்த முன் மண்டையையும் துடைத்துக் கொண்டார் .

அன்று மாலை சஷிஸாவின் அறையில் …உள்ளே ட்ரீட்மென்டிற்கு வந்த புது டாக்டர்களை மிரட்சியாக பார்த்தாள் அவள்.

” யா …யார் நீங்கள் ?” முதலில் தமிழில் கேட்டு பின் கன்னடத்தில் திணறி ஆங்கிலத்திற்கு மாறினாள்.

” நான்தான்  இனி உங்களுக்கு ட்ரீட்மென்ட் தரப் போகிறேன் ” மனீஷ்கோயல் புன்னகைத்து கை நீட்டினார் .

” மிஸஸ் ரூபாவை எங்கே ? “

” அவர்கள் வேலையை ரிசைன் செய்து விட்டார்கள் .”

சஷிஸாவின் முகம் கலவரமானது . பயத்தில் வெளுத்தது.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் ரூபாவும் , கணநாதனும் மணிப்பாலிலிருந்து சிங்கப்பூர் போய், அங்கிருந்து லண்டனுக்கு பறந்தனர் .

  தொடர்ந்த சிகிச்சைகள்  வழக்கத்தை விட அதிக வலி தருவதாக சஷிஸாவிற்கு தோன்றியது. இனியும் இந்த சிகிச்சைகளை தன்னால் தாங்க முடியாது என்ற முடிவிற்கு அவள் வந்த போது , ஓரிரவு அந்த ஆஸ்பத்திரியை விட்டு தப்பி ஓடினாள் .

முன் கேட்டை விட்டு பின் கேட்டுக்கு மறைந்து நகர்ந்தாள் . முன் கேட்டில் இரண்டு வாட்ச்மேன்கள். பின் கேட்டில் ஒருவர்தான் . அந்த ஒருவர் சற்றே அசந்த நேரத்தில் கேட்டை தாண்டி குதித்து பின்னாலிருந்த குறுகலான தெருவில் ஓடினாள். இரண்டு இடுக்கான இருளான சந்துக்களை கடந்த பின், எந்தப் பக்கம் போவதென தெரியாமல் திகைத்து ஒரு தெரு முக்கில் நின்று கொண்டிருந்த போது,  ஹெட்லைட்டுக்களை போட்டுக் கொள்ளாமல் மிக மெலிதான சிறு உறுமல் ஒன்றுடன் அவளருகே ஒரு கார் வந்து நின்றது .

பின்கதவு அவளுக்காக திறந்து விடப்பட்டது. சட்டென சஷிஸா அதில் ஏறி அமர்ந்ததும் கார் கதவு சத்தமின்றி மூடப்பட்டது . தலையை சுற்றி போட்டிருந்த ஷாலை நன்றாக இழுத்து முக்காடிட்டுக் கொண்டு ,பின்சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து வேகமான பெருமூச்சுக்கள் விட்டு சஷிஸா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

” மூச்செல்லாம் பிறகு விட்டுக்கலாம். முதலில் கீழே குனிந்து சீட்டிற்கடியில் மறைந்து உட்கார் ” டிரைவர் சீட்டிலிருந்து கட்டளை பிறக்க, சஷிஸாவின் மனம் திடுக்கிட்டது. அநிச்சையாக குனிந்து சீட்டிற்கடியில் மறைந்து கொண்டவளின் இதயத்துடிப்பு அவள் காதுகளில் கேட்டது .

இது …அ..அவன் கு …குரல் போல் தெரிகிறதே …அவன்தானா …? அவன் போகவில்லையா ….? இங்கேதான் இருக்கிறானா ? திடுமென தன் கை கால்கள் செயலிழந்தாற் போல் உணர்ந்தாள். இவனிடம் நான் மாட்டிக் கொண்டேனா?

சீட்டிற்கடியில் உடலை குறுக்கி உட்கார்ந்த கஷ்டமான நிலையில் இடது கையை நீட்டி மெல்ல கார் கதவை தள்ளிப் பார்த்தாள் .அது மிக இறுக்கமாக பூட்டப்பட்டிருந்தது . டிரைவரின் உதவியின்றி திறக்க முடியாத தினுசு கதவு அது.




What’s your Reaction?
+1
19
+1
15
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!