lifestyles

ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்களா? – எப்படி சாத்தியம்?

கோடைக்காலம் என்றவுடன் மாம்பழ சீசன் வந்துவிடும். மற்ற பழங்களை விட மாம்பழம் அனைவரும் விரும்பக்கூடிய பழவகை!

மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவை அவற்றின் தனித்துவமான சுவைகளில் வேறுபடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் 14 வகையான மாம்பழங்கள் ஒரே மரத்தில் காய்க்கிறது என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?




குஜராத் மாநிலம் அம்ரேலியை சேர்ந்த 70 வயதாகும் மாம்பழ விவசாயி உகாபாய் பாட்டி தனது கடும் முயற்சியால் 14 வகையான மாம்பழங்கள் காய்க்கும் ஒரே மாமரத்தை உருவாக்கியுள்ளார்.

இதனை சாத்தியமாக்கியது குறித்து உகாபாய் பாட்டி கூறுகையில் இதை செயல்படுத்த தாவர ஒட்டுதல் முறையைப் பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்.




விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக இரு தாவரத் தண்டுப்பகுதிகளை இணைத்து புதிய தாவரமாக வளர்க்கப்படுவதே ஒட்டுதல் எனப்படும்.

தனது வீட்டில் இருக்கும் இந்த மாமரம் ஹோலி முதல் தீபாவளி பண்டிகை வரை அனைத்து சீசன்களிலும் இனிப்பான மாம்பழங்களையும் வழங்கி வருவதாக கூறுகிறார்.

பாட்டியின் மரத்தில் அம்ரபாலி, நீலம், தாஷேரி, பேகம், நிலேசன், நீல் பகுன், சுந்தரி, பனாரசி லாங்டோ, கேசர், டாட்மியோ, குலாபியோ, கனோஜியோ, துத்பீடோ மற்றும் கோடி போன்ற மாம்பழங்கள் உள்ளன.

இந்த மரத்தில் காய்க்கும் பழங்கள் விற்பனைக்கு செல்வதில்லை என்றும் , வரலாற்றில் தான் படித்த பல வகையான மாம்பழங்கள் அழிந்துவிட்டதாக உகபாய் பாட்டி கவலையுடன் கூறுகிறார்.

மேலும் தற்போது இந்த மாம்பழத்தில் புதிய சுவைகளை சேர்க்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!