Beauty Tips

பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா?அப்போ இத செய்து பாருங்க!

ஒரு விசேஷ நாளன்று, உங்கள்  முகத்தில் திடீரென ஒரு பரு தோன்றுவதை விட சோகமான விஷயம் எதுவும் இருக்காது. பளிச்சென்ற முகத்தில், சிவப்பான பவளம் போல மின்னும் பருக்களை, பார்க்கும் போது கோவமாக வரும். ஆனால், அவற்றை நம்மால் எதுவும் செய்யமுடியாது. காரணம், அதில் கை வைத்தால், முகத்தில் தீராத வடுவை ஏற்படுத்தும் கொடூர குணம் கொண்டது.அதை சமாளிக்க சில வீட்டு குறிப்புகள் உங்களுக்காகவே.




கற்றாழை: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பிய, கற்றாழை ஜெல், பருக்களுடன் தொடர்புடைய வலி ​​மற்றும் வீக்கத்தைத் தணித்து, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை உங்கள் பருக்கள் மீது தடவவும். காலையில் எரிச்சல் குறைந்து இருப்பதை உணருவீர்கள். 

சருமத்தை மிருதுவாக்கும் பாதம் எண்ணையும், தேனும் கலந்து பருக்களின் மீது இடலாம்

தேயிலை எண்ணெய்: முகப்பருவினால் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தலாம். அது, முகப்பரு வெடிப்புகளை ஏற்படுத்தும் புரோபியோனி எனப்படும் பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பிய, தேயிலை மர எண்ணெய், வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டைத் தூண்ட உதவுகிறது.

ஆப்பிள் சிடார் வினிகர்: இதில் உள்ள சிட்ரிக் அமிலம் பருக்களுடன் தொடர்புடைய சிவப்பையும் வீக்கத்தையும் போக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாக்டிக் அமிலம் பருக்களால் ஏற்படும் தழும்புகளை குறைக்கிறது.

எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் மற்றும் தேன்: எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பருக்களை மங்கச்செய்கிறது. அதே வேளையில், இது உங்கள் சருமத்தின் நிறத்தை சீராக்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பிய தேன், வீக்கத்தைக் குறைக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!