Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல்-9

9

 

 

 

” இது என்னஇந்த பட்டிக்காட்டு பஞ்சு மிட்டாய் கலரையா  எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்நாங்கள் இந்த மாதிரி  கலர்களை எல்லாம் கட்டுவது கிடையாது .அதுவும் எங்க வாசுகி குட்டி ரொம்ப ரொம்ப ஸ்டைல் .இதுமாதிரி கலரை எல்லாம் அவள் திரும்பி கூட பாக்க மாட்டாள் ” கீதா தன் அண்ணன் மகளுக்கும் சேர்த்து வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

 




தான் எப்போது அத்தையின் அருமை குட்டி ஆனோம்என்ற விபரம் புரிபடாத வாசுகி தலையைச் சொறிந்து கொண்டாள் .இன்று  என்ன இந்த அத்தைக்கு நம் மீது அளவில்லாத பாசம் பொங்குகிறது..?

 

” பஞ்சு மிட்டாய் கலர் பட்டிக்காடு என்று யார் சொன்னதுஇது எனக்கு பிடித்த கலர் .என் அண்ணனின் மனைவிக்கு நான் தான் கலர் செலக்ட் செய்வேன் .அண்ணியின் முகூர்த்த சேலை நிச்சயமாக இந்த பஞ்சு மிட்டாய் கலர் தான் ” அடித்து பேசினாள் திலகா.

 

”  அது எப்படி…? உங்களது விருப்பமாகட்டிக் கொள்ளப்போவது எங்கள் வீட்டுப் பெண் .அவளுக்கு இந்த கலர் கொஞ்சமும் பிடிக்காது . வாசுகி  நீ வாடா செல்லம் நாம் வேறு சேலை செலக்ட் செய்யலாம் ” அண்ணன் மகளை பாசத்தோடு அணைத்துக் கொண்டாள் கீதா.

 

” இல்லை இந்த  கலர் எங்கள் குடும்பத்தில் தொடர்ச்சியாக பெண்ணிற்கு முகூர்த்த  சேலையாக எடுத்துக் கொண்டிருப்பது .அதனால் வாசுகிக்கும் இதே சேலையே இருக்கட்டும்மங்கையின் குரல் அழுத்தமாக மாமியார் தோரணையுடன் வெளிப்பட்டது.

 

” கீதா கொஞ்ச நேரம் சும்மா இரு  ” ஜெயக்குமார் தங்கையை அதட்டினார் .” உங்கள் குடும்ப வழக்கப்படி சேலை எடுத்துக்கொள்ளலாம் அக்கா ” மங்கையிடம் சமாதானமாக பேசினார்.

 

திலகா அந்த ஆளை அடிக்கும் கலரில் இருந்த கனத்த கட்டை பிரித்து வாசுகியின் தோளில் போட்டு ” பாருங்கள் அண்ணி உங்களுக்கு மிக அழகாக மேட்ச் ஆகிறது இந்த சேலை ” என்று எதிரில் இருந்த கண்ணாடியை காட்டினாள் .வாசுகி கண்ணாடியை பார்க்க அப்போதுதான் அவள் பின்புறம் இருந்த கடை வாசல் வழியாக தேவராஜன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் .




தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதால் நீங்கள் முன்னால் போய் சேலையை பார்த்துக் கொண்டிருங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று அவர்களை அனுப்பி இருந்தான் அவன் .இப்போது வந்துகொண்டிருந்த

அவனுடைய கண்களும்  சேலை போர்த்தியிருந்த வாசுகியின் மீது இருந்தது.

 

கண்ணாடி வழியே அவன் கண்களை சந்தித்த வாசகி மிக லேசாக தலையை அசைத்து கண்களை சுருக்கினாள். தனது பிடித்தமின்மையை வெளிப்படுத்திய அவளது இந்த ஜாடையை அவன் கவனித்தானா என்று பிறகே அவளுக்கு சந்தேகம் வந்தது .ஏனெனில் தேவராஜன் அவனது அம்மா தங்கையின் மேல் பார்வையை திருப்பிக் கொண்டு அவர்கள் அருகே போய் அமர்ந்திருந்தான்.

 

அப்படியே இவள் ஜாடையை கவனித்தாலும் தாய் தங்கை தேர்ந்தெடுத்த புடவையை அவன் மாற்றுவான் என வாசுகிக்கு  தோன்றவில்லைஅவன்தான் அவன் குடும்பத்தின் மேல் அவ்வளவு உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறானேகசப்புடன் எண்ணமிட்டபடி தனது தோளில் இருந்த சேலையை எடுத்து கீழே வைத்தாள் வாசுகி.

 

” எங்கே திரும்பவும் அந்த சேலையை மேலே வைத்து காட்டு ” கேட்டது தேவராஜன்தான் .அவனது தேவையை நிறைவேற்ற வாசுகிக்கு  மனமில்லை என்றாலும் சூழ்நிலைஅந்த சேலையை மீண்டும் தன் தோள்களில் போட்டாள் .பிடிவாதமாக அவன் பார்வையை தவிர்த்தாள் .இப்போது கடை சேல்ஸ் கேர்ள் உதவிக்கு வந்தாள்.

 

” இந்த சேலையை பிரித்து மேடமுக்கு கட்டி காட்டட்டுமா சார்உங்களுக்கு செலக்ட் செய்ய வசதியாக இருக்கும் ”  எனக்  கேட்க தேவராஜன் தலையசைத்து சம்மதித்தான் .” ஆமாம் அப்படியே செய்யுங்கள்இந்த சேலையை மட்டுமல்ல இதோ இவற்றையும் என்றபடி அங்கே இருந்தவற்றுள் மேலும் ஐந்து சேலைகளை தேர்ந்தெடுத்து கொடுத்தான்.

 

ஆளுயர கண்ணாடி முன்னால் வாசுகி நிறுத்திய கடை பெண்  ஒவ்வொரு சேலையாக மடிப்பு வைத்து அவள் தோள்களில் போட்டு பார்டரை பிளவுஸ் போல் கைகளைச் சுற்றி அழகாக வடிவமைத்து காட்டினாள்விதம் விதமாக மாறி தெரிந்த தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்த்தபடி இருந்தாள் வாசுகிஒவ்வொரு புடவையிலும் அவளை தனது போனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான் தேவராஜன்.

 




இறுதியாக அவன் அந்த ஆறு புடவைகளில் தேர்ந்தெடுத்து எடுத்த இரண்டு புடவைகள் தனக்கும் பிடித்த புடவைகள் என உணர்ந்த வாசுகி ஆச்சரியமடைந்தாள் .” இந்த இரண்டு புடவைக்கும் பில் போட்டு விடுங்கள் ” என்று அவன் அனுப்பிய புடவைகளில் அந்த பஞ்சு மிட்டாய் கலர் இல்லை.

 

” அம்மா திலகா உங்கள் இருவருக்கும் சேலைகள் பாருங்கள் ” தாயையும் தங்கையையும் கவனத்தை திருப்பி விட்டு தன் பக்கம் திரும்பிய தேவராஜனை நிமிர்ந்து பார்க்கவில்லை வாசுகி.

 

ஓகே தானே ? ” வாசுகி பக்கம் லேசாக சாய்ந்து அவன் கேட்க அவள் மெல்ல தலையசைத்தாள்.

 

” ஏய் கொஞ்சமாவது சிரிடி ” என்றவனை முறைத்தாள்வேண்டுமென்றே இதழ்களை இறுக்கி கொண்டாள் .மாட்டேன் என்று தலை அசைத்தாள்.

 

வாயை இப்படி வைத்துக் கொண்டால் எனக்கு வேறு ஏதோ தோன்றுகிறது  ” முணுமுணுத்த அவனின் பார்வை இறுகி குவிந்து மொட்டாக தோன்றிய அவள் இதழ்கள் மேல் அர்த்தத்துடன் பதிந்தது .வாசுகி அவசரமாக தனது உதடுகளை நேராக வைத்துக் கொண்டாள்.

 

மூஞ்சியைப் பாரு இத்தனை பேர் சுற்றி இருக்கிற இடத்தில் என்ன பேசுகிறான் என்றுதானாக சிவந்து விட்ட தன் கன்னங்களை பொத்திக் கொண்டாள் அவள்.

 

” இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை ” முணுமுணுத்தாள்.

 

” இது நீ எனக்கு கொடுத்திருக்கும் வாக்கு .வாக்கு தவறு தவறுபவர்களை பொதுவாக எனக்கு பிடிப்பதில்லை

 

” பிடிக்கவில்லை என்றால் எழுந்து போக வேண்டியதுதானே .இங்கே எதற்கு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் ? ” 

 

” என்ன செய்வதுஎன் தலையெழுத்து இதுதான் என்று ஆகிவிட்டது .அப்படி உதறிவிட்டு போக முடியுமா ? ” சோகமாய் ஒலித்தது அவன் குரல்

 

வேண்டாம் வேண்டாம் என்பவளை பலவந்தமாக இழுத்து பிடித்து கல்யாணம் என்று உட்கார வைத்து இருப்பவன் இவன்ஏதோ நான் இவனை கட்டாயத் திருமணம் செய்வது போல இப்படி சலித்துக் கொள்கிறானே

 

வாசுகிக்கு அலுத்து வந்தது. இதுபோல் இவனுடன் வாழ்நாள் முழுவதும் போராட முடியுமாஎன்ற சந்தேகம் வந்தது .தவிப்புடன் அலைந்த அவள் பார்வையை கண்ட தேவராஜன் புடவை குவியல்களுக்கு இடையே புரண்டு கொண்டிருந்த அவள் கையை அழுத்திப் பற்றினான்.

 

” வசு பதட்டப் படாதேஎல்லாம் நல்லபடியாகவே நடக்கும் ” 

 

 

” என்ன நடக்கும்  ? ” அவனிடமிருந்து தன் கைகளை விடுவித்துக் கொள்ள முயன்ற படி கேட்டாள்

 

” நம் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் ”  உறுதி தெரிந்தது அவனுடைய குரலில் .அதே உறுதி அவளைப் பற்றியிருந்த அவனுடைய கையிலும்நசுங்கிய தனது கை வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்தபடி மற்றொரு கையில் புடவையை புரட்டினாள்  அவள்.

 

” உனக்குப் பிடித்த புடவை தான் பில்லுக்கு போயிருக்கிறது ” அவனது வலியுறுத்தல் தொடர்ந்தது.

 

” எனக்கு பிடித்த எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுவீர்களா ? ” 

 

” இல்லை மாட்டேன் ” அவள் கேள்வி முடியும் முன்பே பதில் சொல்லி இருந்தான் அவன்.

 

பிறகு எதற்கு இப்படி ஒரு பார்வையும் இந்த மாதிரி ஒரு பேச்சும் ? ” 

 

” எந்த பார்வைஎந்த பேச்சு  ? ” அவனது சுவாரஸ்யமான கேள்விக்கு வாசுகிக்கு  கோபம் வந்தது. விளக்கம் கொடுக்க முடியாத கோபம்.

 

” கையை எடுடா…”  தன் கோபத்தை காட்டினாள் அவள் . இன்னும் அழுத்தமாக அவள் கையோடு தன் கையைப் பிடித்துக் கொண்டான் அவன் .” இதோ இந்த புடவையை பார் ” இன்னமும் இரண்டு புடவையை அவள் முன் எடுத்து வைத்து அந்த சாக்கில் அவள் தோளிலும்  லேசாக உரசினான்.

 

” செல்லக்குட்டி இந்த கலர் கூட நன்றாக இருக்கிறது .இதில் ஒன்று எடுத்துக் கொள்கிறாயா ? “இதற்கும் சேர்த்து நீதான் பணம் கொடுக்க வேண்டும் என்ற மறைமுக அறிவிப்போடு அவர்கள் அருகே வந்து அமர்ந்து அந்த சேலையை முன்னால் வைத்தாள்  கீதா.

 

” அதுதான் இரண்டு சேலை எடுத்தாயிற்றேஇன்னமும் எதற்கு ? ” வேகமாக கேட்டபடி வந்தாள்.

 

” எங்கள் பக்கம் நாங்கள் மூன்று சேலை எடுப்போம் ” 

 

 ” நாங்கள் இரண்டு சேலை தான் எடுப்போம் ” 

 

திலகாவும் கீதாவும் நேருக்கு நேர் நின்று சண்டை ஒன்றுக்கு ஆயத்தமாக ”  யார் இந்த அம்மாமுகூர்த்த சேலைகள் எடுப்பதற்கு இவர்களை எதற்கு கூட்டி வந்திருக்கிறாய் ? ” தேவராஜன் எரிச்சலாக கேட்க வாசுகி ஆச்சரியமானாள்.

 

” இவர்களை உங்களுக்குத் தெரியாதா  ? இவர்கள் வீட்டு திருமணத்திற்கு எல்லாம் வந்தீர்களே ? ” 

 

”  ஆமாமில்ல …? ஏதோ உன்னுடைய உறவு . ம்சித்தி கரெக்டா ? ” 

 

” அத்தை ” என்றாள் முறைத்தபடி.

 

” ஆமாம் அத்தை .ஆனால் இவர்கள் எதற்கு இங்கு ? ” 

 

வேறு ஏதோ வேலையாக வீட்டிற்கு வந்த கீதா அண்ணன் குடும்பம் முகூர்த்த சேலை எடுக்க கிளம்பி கொண்டிருப்பதைப் பார்த்ததும் நானும் வருவேன் என்று ஒட்டிக்கொண்டதோடு மாப்பிள்ளை வீட்டினரிடம் அண்ணன் குடும்பத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை காட்ட எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தாள் .

 

” என் அம்மாவின் நாத்தனார் .பொதுவாக நாத்தனார்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் ” விளக்கம் சொன்ன வாசுகியின் கண்கள் கீதாவோடு திலகாவின் மேலும் படிய தேவராஜன் சட்டென்று அவள் கையை உதறிவிட்டு எழுந்து விட்டான்.

 

” ஒரு முக்கிய வேலை. நீங்கள் தேவையான சேலைகள் எடுத்து முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்புங்கள் . பில்லை கடைக்கு அனுப்பச் சொல்லிவிட்டுப் போகிறேன் ” ஜெயக்குமாரிடம்  விளக்கங்கள் கொடுத்து விட்டு வேகமாக நடந்து விட்டான் .கடையை விட்டு வெளியேறும் கடைசி நொடியாவது திரும்பிப் பார்ப்பான் என்ற வாசுகியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டு போய்விட்டான்.

 

 




What’s your Reaction?
+1
24
+1
22
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!