தோட்டக் கலை

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

மா  மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள்.




அதே போல, மா மரங்களின் அடியில் காய்ந்த இலைகள், குப்பைகள் இல்லாமல் தோப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தரையில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில்தான் தண்டுத் துளைப்பான் முட்டை போடும். மரத்தைத் தட்டிப்பார்த்து, பட்டையை உரித்துப் பார்த்தால் உள்ளே சைலத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புழுக்களைக் காண முடியும். அந்தப் புழுக்களை எடுத்துவிட்டு, தண்டுப் பகுதி முழுக்க, முந்திரி எண்ணெயைத் தடவ வேண்டும். பட்டையை உரித்துவிட்டு, தரையிலிருந்து மூன்று அடி உயரம் வரை.. ஒரு லிட்டர் கோல்தாருடன், இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்தும் தடவி விடலாம். மா மரங்களைக் கவாத்துச் செய்வதற்கு இதுதான் ஏற்ற தருணம். செப்டம்பர் மாதத்துக்குள் கவாத்துச் செய்வது மிகவும் முக்கியம்.




குப்பைமேனிக் கலவை!

ரசாயன விவசாயிகள் கவாத்து செய்த இடத்தில் ‘போர்டோ’ கலவையைப் பூசி விடுவார்கள். ஆனால், ‘போர்டோ கலவைக்கு மாற்றாகக் குப்பைமேனி கலவையைப் பயன்படுத்தலாம். இரண்டு மடங்கு குப்பைமேனி இலை, தலா ஒரு மடங்கு மாட்டுச் சிறுநீர், மண்புழு குளியல் நீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கிளறினால், குப்பைமேனிக் கலவை தயார். இக்கலவையை வெட்டுப்பட்ட இடங்களில் பூசினால் பூசணம் பிடிக்காது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!