Beauty Tips

கருகரு முடியை பெற அவுரி ஆயில் செய்யலாம்

கரும்பச்சை இலைகளையுடைய சிறு செடியினம், நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையது.

வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. குணமாகும் நோய்கள் – வலிப்பு, நரம்பு நேய்கள், புண்கள், மூலம்,  காமாலை, நீர்சுருக்கு ஆகியவற்றை நீக்கும்.




இயற்கை சாயம்:

டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரி இலைகளைப் பயன்படுத்தினால், எந்த கலவையும் இல்லாமல் கருகரு முடியை பெறலாம்.

அவுரி ஆயில் செய்ய:

அவுரி இலை – 50 கிராம்

மருதாணி இலை – 50 கிராம்

வெள்ளை கரிசலாங்கண்ணி – 50 கிராம்

கறிவேப்பிலை – 50 கிராம்

பெருநெல்லி  (கொட்டை நீக்கியது) – 10 எண்ணிக்கை.

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.




தயாரிக்கும் முறை:

  • ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் அரைத்து, வைத்திருக்கும் அவிரி கலவையுடன் சேர்த்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து  மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.

  • கொதிநிலைக்கு வரும்போது இரக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி தலைக்கு என்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!