Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை -13

13

மலரா.. என்னம்மா நல்லபடியா ஊர் போய் சேர்ந்தீங்களா ?

ஆமாம்மா… அங்கே அப்பா தம்பி தங்கையெல்லாம் எப்படி இருக்காங்க.

நல்லாயிருக்கோம்டா… நீ பக்கத்திலே இல்லைங்கிற குறைதான்.

மலரிடமிருந்து ரீசிவரை வாங்கினார் பெரியம்மா, அம்மா உங்க பிள்ளைங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம நான் பார்த்துக்கறேன்.

நீங்க?

நான் இந்த வீட்டுப் பெரியம்மா?

அம்மா நான் உங்களை நம்பித்தாம்மா இரண்டு பொம்பளைப்பிள்ளைகளை அனுப்பியிருக்கேன்.

நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்.என் மகன் சின்னவனிடம் சொல்லி உங்களை கவனிக்க சொல்றேன்மா வைச்சிடவா?!

பெரியம்மா ரிசிவரை வைத்துவிட்டு மலரிடம் நிமிர்ந்தாள்.இனிமேல் எதையும் நினைச்சு கவலைப்படக் கூடாது தெரியுதா? நானிருக்கேன். என்றவரின் பேச்சுத் தோரணையும் அந்தக் கண்களும் மலருக்கு வெகு பரிச்சயமாய்த் தோன்றியது. உணவு உண்டபின், உங்களுக்கு களைப்பா இரந்தா போய் ஓய்வெடுங்க இல்லைன்னா வீட்டைச் சுத்திப் பாருங்க என சொல்லிவிட்டு பெரியம்மா அறைக்குள் சென்றுவிட, ராஜனும் நான் ஸ்கூலில் போய் பிள்ளைகளை அழைத்து வருகிறேன் என்று கிளம்பினான். தேவியம்மாவும் நீலாவும் அந்த வீட்டை அவங்களுக்கு சுற்றிக் காட்டினார்கள். ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே வந்தார்கள். மலர் கேட்டாள். ஏன்? தேவியம்மா இத்தனை பெரிய வீட்டில் ஒரு இடத்தில் கூட புகைப்படம் மாட்டக் காணோமே?

இங்கே எல்லாமே தனித்து இருக்காது, குடும்பப் படமாத்தான் தொங்கும் கண்ணு,ஆனா குழந்தைங்க அதையெல்லாம் பார்த்தா அவங்க அம்மா ஞாபகம் வந்து அழுவுறாங்கன்னு பெரியம்மா எல்லாத்தையும் கழற்றிடச் சொல்லிட்டாங்க,,,

பாவம் சிறிய வயசிலேயே தாயை இழக்கிறது பெரிய வேதனைதான். அதை நான் அனுபவிச்சிக்கேன்.வசந்தி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடியே கூறினாள்.

தேவியம்மா நீங்க இங்கே ரொம்ப காலமா வேலை பாக்கறீங்களோ?வசந்தி குழந்தைகளுக்கான பொம்மைகளை எடுத்து வரச் செல்லவும், மலர் கேட்டாள்.




ஆமாம்மா நான் இந்த வீட்டுக்கு வேலைக்கு வரும் சமயம் முருகனுக்கு 18லயது,இங்கே வந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு, முருகனுக்கு கல்யாணமாகி நீலா பிறந்தாள். எம்மருமவ தங்கமான பொண்ணு தாயி, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஏதோ விஷக்காய்ச்சல் வந்து படுத்தவ பிறகு எழுந்திருக்கவே இல்லை,அடக்கடவுளே?

சில நேரங்களில் அந்தக் கடவுள் இருக்கிறாரான்னு கூட சந்தேகம் வருகிறது.கண்ணு ஏன்னா வாழ்ககையின் ஆரம்பத்திலேர்ந்தே நான் அத்தனை வேதனைப்பட்டேன். பூவும் பொட்டும் தந்த கடவுள் நல்ல புருசனைத்தரலை,அவர் வேறொரு பொண்ணோட தொடர்பு வைத்திருந்தார். என்னாலே அதை தாங்கிக்க முடியலை நீயும் உன்னோட வாழ்ந்த வாழ்க்கையும் போதுன்னு பிள்ளையைக் கையிலே பிடிச்சிட்டு வந்திட்டேன். மலர் பிரமிப்புடன் பார்த்தாள்

பின்னேயென்ன கண்ணு?என்ன அட்டூழியம் செய்தாலும் பொம்பிளை தாங்கிப்பான்னு நினைப்பு ஆம்பிளைங்களுக்கு! இத்தோட வருஷம் பல கடந்து போச்சு, ஆனா அடைக்கலமா இங்கே வந்த நாள்லேயிருந்து இந்தக் குடும்பத்திலே ஒருத்தராத்தான் என்னை எல்லாரும் பாக்கிறாங்க.

அதற்குள் குழந்தைகள் வந்த அரவம் கேட்டு நடந்தனர் அனைவரும். தோளில் சிறிய பேக்கும், கையில் லன்ஞ் கூடையுமாய் கருகருவென்ற விழிகளும், பாப் செய்யப்பட்ட தலையுமாய் அந்த ஐந்து வயது சிறுமியும், சிறுவன் ஆகாஷீம் அழகில் மனதைக் கொள்ளையடித்தார்கள்.

ராஜனின் பின்னால் பதுங்கியிருந்த குழந்தைகளை நோக்கி வந்தாள் வசந்தி, மென்மையாய் பார்த்து சிரித்தாள். என் பெயர் வசந்தி உங்களுக்குப் பிடிச்சிருக்கா, பயம் நீங்கி மெல்ல குழந்தைகள் அவளருகில் வந்தனர், உங்க இரண்டு பேருக்கும் நான் கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்.

கிப்ட்டா…

ம்… மலர் அந்த இரண்டு பார்ச்சலைக் கொண்டு வந்து தந்தாள், இது உனக்கு இது ஆர்த்திக்கு !

அதில் பெரிய சைஸ் டெடிபேர் ஒன்று புஸ்புஸ்வென்ற முடியோடு அவன் கையில் இருந்தது. வாவ் சூப்பர் ஆண்ட்டி ! ஐ லவ் டெடிபேர் எனக்கு இது பிடிக்குமின்னு உனக்கு எப்படித் தெரியும். ஆகாஷ் குதித்தான்.

ம்.. நீயும் பிரி ஆாத்தி

கலர் பெயிண்டிங்ஸ் வாட்டர் ப்ரூப்ஸ் கலர்ஸ்,வாவ் எனக்கு பெயிண்ட்டிங்கில் இண்டரஸ்ட் இருக்கு நான் நிறைய வரைஞ்சி இருக்கிறேன். தேங்யூ ஆண்ட்டி என்று வசந்தியைக் கட்டிக்கொண்டனர் பிள்ளைகள் ஆமா இவங்க யாரு?

இது மலர் என்னோட தங்கை

மலர்ன்னா பூ..தானே?

யூ ஸ்வீட் கேர்ள்.. சரி நீங்க யூனிபார்ம் மாத்தலையா? அவர்கள் புன்னகையுடன் உள்ளே ஓடினார்கள்.

அழகான குழந்தைகள் இல்லைக்கா…

ஆமாம் மலர் சரி நீ கொஞ்சம் நேரம் போய் ரெஸ்ட் எடு, நான் குழந்தைகள் கூட இருக்கேன். என்று வசந்தி நகர மலர் படுக்கையில் சரிந்தாள்.




What’s your Reaction?
+1
20
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!