Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-16

16 

பள்ளியின் முகப்பினில் வண்டியயை நிறுத்தி விட்டு இறங்கினாள் வசந்தி காலையில், ஆர்த்தியும், ஆகாஷும் குறிப்பிட்டு இருந்த நேரத்தைக் காட்டிலும் சற்று முன்னதாகவே வந்திருந்தாள். குழந்தைகள் இருவரும் அவளின் வரவை ஆவலோடு எதிர் நோக்கி இருந்தனர்.

“ஆன்ட்டி இவங்க தான் எங்க கிளாஸ் மிஸ் அர்ச்சனா ரொம்ப நல்லவங்க.”

“ஓஹோ…இவங்க இரண்டு பேரும் எப்படி படிக்கிறாங்க.”

“வெரி பைன்”

“இந்தாங்க மேம்! தெர்மகோலின் மூலம் செய்த ஸ்கூல் செட்டும், ஆரஞ்சு பழ டிரஸ்ஸையும் மிஸ்ஸிடம் தந்தாள்.”

“ஒ.கே . பங்க்ஷன் ஆரம்பிக்க கொஞ்சநேரம் ஆகும் நீங்க மற்ற ப்ராஜக்டை எல்லாம் போய் பாருங்க.”

ஒவ்வொரு பிரிவு வகுப்பிலும் குழந்தைகள் தங்களால் இயன்ற பொருட்களை செய்திருந்தனர். பள்ளிஎங்கும் வண்ண வண்ணத் தோரணங்கள், கோலங்கள்,என வண்ணமயமாய் இருந்தது. பபூன் டிரஸ் அணிந்த குழந்தைகள் வெல்கம் கூறினார்.முகம் கண்ணின் மேல்புறம் உதடுகள் ரோஸ் பவுடர், ஜிகினா ஒட்டினார்கள்.

3 -ம் வகுப்பு மாணவிகள் சோலார் சிஸ்டம் பற்றிய பேச்சும், அது செயல்படும் விதமும் பற்றிய, ரசிக்கும் விதமாக இருந்தது. புக் ஸ்டாலில்இருந்த புத்தகங்களில் பார்வையை விரட்டினாள். ஆகஷ்ஷிற்கென காமிக்ஸ்ஷும் ஆர்த்தி ஓவியம் பழக டிராயிங் புத்தகங்களையும் வாங்கினாள்.




அடுத்த வகுப்பறையில், திரையில் டாக்குமென்ட்டறி படம் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு மேடையில் ஆகாஷ் கலந்து கொள்ளும் மாறுவேடப் போட்டியும் ஆர்த்தியும் நடந்ததோடு பிள்ளைகளுக்கு சின்ன மொமண்டோவும் சர்டிபிகேட்டும் தரப்பட புன்னகையோடு அதனை தன்னை நோக்கிக் கொண்டு வந்த குழந்தைகளை ஆசையோடு அனைத்துக் கொண்டாள் வசந்தி.

“வீட்டுக்குப் போனதும் முதல்ல உங்களுக்கு சுத்திப் போடணும்.”

“உங்களுக்கும் தான்” ஆர்த்தி கழுத்தை கட்டிக் கொண்டாள்.”

காரில் வரும் போதும் ஒரே பேச்சும் கொண்டாட்டமாகவும் இருந்தது. “ஆன்ட்டி எங்களுக்கு இன்னும், இரண்டு நாள் லீவுதான் நாம எங்கேயாவது அவுட்டோர் போகலாமா ?”

சரி! அப்பாகிட்டே கேட்டுகிட்டு சொல்றேன். பேச்சும் சிரிப்புமாய் வீட்டை வந்து அடைய மலரும் ராஜனும் தோட்டத்தில் நிற்பது தெரிந்தது.

நாங்க போய் பாட்டிகிட்ட சொல்லப் போறோமே குழந்தைகள் குதூகலத்தோடு ஓடிட, வசந்தி தோட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தவர்களை நெருங்கினாள்.

“என்ன மேடம்! எக்சிபிஷன் எல்லாம் முடிஞ்சதா ?”

“ம்…ஆர்த்திக்கும், ஆகாஷிற்கும் கூட கிப்ட் கிடைத்தது.இவங்களுக்கு கொண்டாட்டத்தை பாக்கணுமே ?”

“நீ வந்த பிறகு அவங்க முகத்திலே ஒரு புது மலர்ச்சி தெரியறது உண்மைதான் வசந்தி.”

“இந்த மலர்ச்சி நிலைக்கறதுக்கு இன்னொரு உதவி நீங்கதான் செய்யணும் .”

“என்னது?”

“பசங்களுக்கு நாளையிலேருந்து இன்னும் இரண்டு நாளைக்கு லீவாம், எங்கேயாவது அவுட்டோர் போகலாமின்னு கேட்டாங்க, நான் உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்.”

“இதில என்னைக் கேட்க என்னயிருக்கு, நீங்க பெரிய மனுஷங்க முடிவு பண்ணியாச்சு, நான் என்ன ஆட்சேபனையா சொல்லப் போறேன்.”

“மலர் நீயும் என் கூட வர்ற?”

“இல்லைக்கா நான் வரலை நீங்க போயிட்டு வாங்க ?”

மலர் எப்பவுமே இப்படி இறுக்கமாவே இருக்காதே ! உன் வயசுப் பொண்ணுங்க எல்லாம் எவ்வளோ சந்தோஷமா இருக்காங்க ! நீ ஏன் எப்பவு நத்தை மாதிரி கூட்டுக்குள்ளேயே சுருங்கிப் போய் இருக்கே, எனக்கென்னமோ நான் தான் உன்னை கூட்டிட்டு வந்து கஷ்ட படுதேறேனொன்னு தோணுது .”

“என்னக்கா நீங்க ? என்னோட நல்லதுக்கு தானே செய்தீங்க, இந்த வழியை நீங்களே சொல்லைனா அப்பாவோட உடம்பு நலமாக இத்தனை முயற்சிகள் நடந்து இருக்குமா ? அதுவுமில்லாம, இத்தனை நல்ல உள்ளங்கள் நம்ம கூட இருக்குமா, மனசு ரொம்ப டிஸ்டர்பா இருக்கு அவ்வளவு தான் .”

“அதுக்காகதான் வெளியே வரணும் மலர், சில வயசிலே தான் நாம் சந்தோஷமா இருக்க முடியும் பின்னர் தேவையில்லாத கவலை வட்டத்திற்குள் சிக்கி வேதனை பட வேண்டி வரும்.”




அனைவரும் வற்புறுத்த மலரும் வருவதாய் ஒப்புக் கொண்டாள்.மறுநாள் காலை,மதிய உணவு, ஸ்நாக்ஸ் போன்ற அனைத்தையும் தயார் செய்து கொண்டு கிளம்பினார்கள். இனிமையான சங்கீதம் டேப்பில் வழிய கார் கண்ணாடியின் வழியே வெளியே தெரிந்த அந்த அழகிய கடலை ரசித்த வண்ணம் வந்தால் மலர். குழந்தைகளும் நீளவும் பாட்டு பாடிக் கொண்டே வந்தார்கள்.

காலையிலிருந்தே மலரின் மனம் பரவசப்பட்டு போய் இருந்தது. தன்னுடன் நீண்ட நாள் பழகிய உறவினை அடையப் போவதுப் போல் ஒரு உணர்வு, நேற்றைய தினம் தாயிடம் பேசியது வேறு ஆறுதலாய் இருந்தது. தன் குடும்பத்திற்கு உதவி செய்யும் சின்னவர் முகம் தெரியாத அவளுக்கு தன் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

நேரு பார்க்! அந்தமானில் உள்ள இப்பூங்காவிற்கு குழந்தைகளின் வருகை அதிகம், ராட்டினம் ஊஞ்சல் என குழந்தைள் விளையாட சிறிய கேம்ஸ் என வடிவமைக்க பட்டு இருந்தது. பூங்காவைச் சுற்றி அலையில்லாத கடல் நீர் சற்று தொலைவில் குட்டிக் குட்டி தீவுகளில் இருந்து மீன்கள் நீந்துவது போன்ற ஒலிகள் கொள்ளை கொள்ளும் அழகை தந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவச்சிலை ஒன்றும் இருந்தது.

ஓடிப்பிடித்தல், கண்ணாமூச்சி ஆடுதல் என விளையாட்டுகளில் எல்லாரும் கலந்து கொண்டனர். பின்னர் அலையில்லாத கடல் நீரில் போட்டிங் போனார்கள். மலருக்கு இந்த புதிய உலகம் வித்தியாசமாய் இருந்தது. நீண்ட நாளிற்கு பிறகு புது உற்சாகம் அவளை ஆட்கொண்டது. மனதும் உடலும் களைத்துப் போய் வயிறும் கப கபவென்று பசிக்க,காரில் ஸ்நாக்ஸ்ஸோடு .கூடவே லெமன் சாதமும், உருளைக்கிழங்கு வருவலும் இருந்தது. சாப்பிட்டு சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். குழந்தைகள் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க, ராஜனின் செல் அலறிட உயிர்பித்தான். பேசியவனின் முகம் புன்னகையை பூசிய படி இருந்தது.

“என்ன ராஜ்?” போன்ல யாரு ?”

“தம்பிதான் .”

“எங்கேயிருந்து பேசறாராம்?”

“நம்ம வீட்ல இருந்து தான் இப்பதான் வந்தானாம்.”

“என்ன திடீர்னு ? எந்த முன்னறிவிப்பும் இல்லமா ?”

“அவன் எப்பவுமே இப்படித்தான், திடுதிப்புன்னு எதையாவது செய்து வைப்பான்.”

“ஹை… சித்தப்பாவா ?

“ஆமாம் ..உங்க சித்தப்பா வீட்டுக்கு வந்திட்டானாம், போகலாமா ?”

“ஓ..! கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கட்டி வண்டியில் போட்டு விட்டு, கிளம்பினார்கள்.
வரும் வழியில் சகோதரியிடம் வாய் விட்டு சந்தோசமாய் பேசியபடியே வந்தால் மலர்.

“அக்கா, இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா உணர்றேன். எத்தனையோ நாளைக்கு பிறகு இன்று தான் நிம்மதியா இருக்கேன்.”

இந்த மாதிரி மலர்ந்த முகத்தோடு உன்னை பார்க்க எப்படியிருக்கு தெரியுமா மலர் , இத்தனை நாள் இந்த புன்னைகையை ஒளிச்சு வைச்சிட்டு இருக்கே ? ஏண்டா உனக்கு ஏதும் பிரச்சினையா ? என்னை அக்காவா நினைக்கமா ஒரு நல்ல தோழியா நினைச்சிகோடா.”

“அக்கா நீங்க என்னைக்குமே எனக்கு நல்ல தோழிதான், சில வருடங்களுக்கு முன்னால் என்னையும் அறியாமல் என் மனசிலே ஒரு கீறல் விழுந்துடுச்சு. இன்றைக்கு வரை அதை அடைக்க முடியல.” மலரின் குரல் தழு தழுத்தது.

“சரி விடு ! மறக்க நினைக்கறத ஏன் தோன்டனும். காலம் எத்தனையோ பெரிய பெரிய காயங்களை எல்லாம் களைச்சிருக்கு அதுபோல் இந்த கீறலும் சீக்கிரமாய் மூடிவிடும்.”




“சகோதரியின் ஆறுதலான பேச்சு மனதிற்கு ஒருவாறு தெம்பளித்தாலும், இந்த கீறல் பெரிய பாதாளமாய் ஆகி விட்டதை உணராமல் வசந்தி பேசுவதை அறிந்து அழுவதா சிரிப்பதாஎன்ற நிலை மலருக்கு !”
குழந்தைகளுக்கு ஒரே குஷி, வழி நெடுகிலும் சித்தப்பாவின் புராணம் தான். நமக்கு இத்தனை உதவி செய்த அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற நினைப்போடு மலர் பயணம் செய்தாள்.
ஆனால், வரப்போகிறவன் ஏறகனவே தன்னைச் சந்தித்து தன் வாழ்க்கை பாதையினை மாற்றியவன் என்று அவள் அறிந்திருக்கவில்லை.யாரை காணக் கூடாது என்று இங்கு ஓடி வந்தாளோ மறக்க நினைத்தும் முடியாமல் நெஞ்சுக் கூட்டில் யாருடைய நினைவுகள் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவிக்கிறாலோ அவன்தான் வரப்போகிறான் என்று மலர் கனவிலும் நினைக்கவில்லை.

எண்ணங்களே வாயிற்படிகள், அதை கடந்து உள்ளே செல்லும் போது கடற்கரை மணலென என்ன முடியாத அளவிற்கு கவலைகள் மனதை வந்து அழுத்துகின்றன. அதனைப்பற்றி உணர முடியமால் மனிதர்கள் வாழ்க்கைச் சேற்றில் சிக்கி அல்லல் படுகிறாகள் . ராஜ் வண்டியை காம்பவுண்டில் நிறுத்தினான்.

“ஆன்ட்டி எங்க சித்தப்ப்பா ரொம்ப நல்லவங்க” ஆர்த்தி சொல்லிக் கொண்டே வந்தாள்.
பெரியம்மாவின் அறைக்குள் நுழைந்ததும், முதுகு காட்டி நின்றிருந்த அந்த இளைஞனின் கால்களை ஓடி சென்று குழந்தைகள் கட்டிக் கொண்டனர்.

“சித்தப்பா…”

“ஹேய்…வாண்டுகளா என்னை விட்டுட்டு எல்லாரும் எங்க போய் ஊர் சுத்திட்டு வர்றீங்க.”

“பார்க்குக்கு! அங்கே ரொம்ப ஜாலியா இருந்ததே !” பேசியபடியே திரும்பிய ஆனந்தன், மலர் அந்த அறைக்குள் நுழையவும் சடாரென திரும்பிக் கொண்டான்.அவளிற்கு முகம் காட்டாத வண்ணம்.

“என்னடா இது திடீர் விஜயம்?”

“எதிர்பாக்காமல் வருவதில் தான் சுவாரசியம் அதிகம் அண்ணா,”குழந்தைகளுடன் கொஞ்சுவது போன்ற பாவனையில் திரும்பாமல் பதில் கூறினான்.

“டேய் தம்பி மலருடைய அப்பாவிற்கு உடல்நலம் எப்படியிருக்கு.”

“பரவாயில்லைம்மா… ரொம்பவே நல்லா தேறிட்டு வர்றார். 24 மணி நேரமும் அவர் கூடவே இருக்கிற மாதிரி ஒரு நர்ஸ் போட்டிருக்கேன்”

“ரொம்ப நன்றி ஸார்…. மலர்.”

“தம்பி உனக்கு நான் வசந்தியின் தங்கையை அறிமுகபடுத்த வில்லையே இதுதான் மலர், வந்த கொஞ்ச நாளிலேயே எல்லா மனசிலும் பூந்துகிட்ட அபிமானி.

பெரியம்மா சொல்ல. ஆனந்தன் மலரின் புறம் திரும்பி நேருக்கு நேராய் அவளின் கண்களைச் சந்தித்தான்.




What’s your Reaction?
+1
15
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!