Barathi Kannmma Serial Stories பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா – 2

2

கண்ணம்மா வகுப்பறையினுள் நுழையவும் அந்த புத்தகம் நேராக வந்து அவள் முகத்தில் மோதவும் சரியாக இருந்த்து .மூக்கை தாக்கிய அதன் கடினமான பைன்டிங்கால் சுரீரென வலியால் தாக்கப்பட்டவள் , கோபத்துடன் உள்ளே வந்தாள் .

” யாரது புத்தகத்தை தூக்கி வெளியே எறிந்த்து ….? “

வகுப்பு அமைதியாக இருந்த்து .

” யாருன்னு சொல்லலைன்னா முழு வகுப்பையும் கிரௌண்டில் மண்டி போட வைத்து விடுவேன் ….” மிரட்டினாள் .




சலசலவென்ற பேச்சிற்கிடையே ஒரு பெண் கடைசி பெஞ்சிலிருந்து  எழுந்து நின்றாள் .ஒல்லியாக ஒடிந்து விடுவாள் போலிருந்தாள் .

” நான்தான் மிஸ் ….”

” உன் பெயர் நித்திகாதானே ….? “

தலையசைத்தாள் .

” எதற்காக என் மீது புத்தகத்தை எறிந்தாய் …?

” உங்கள் மீது போடவில்லை .புத்தகத்தை வெளியே எறிந்தேன் .அப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள் ” செய்கிற தப்பை செயதுவிட்டு நிமிர்வை பார் .கண்ணம்மாவிற்கு கோபம் வந்த்து .

” எதற்கு வெளியே எறிந்தாய் …புத்தகம் சரஸ்வதி இல்லையா …அதை இப்படி எறியலாமா …? பிறகு உனக்கு எப்படி படிப்பு வரும் …? “

” எனக்கு கோபம் வந்த்து .எறிந்தேன் ….” திரும்பவும் அடங்காத பதில் .

” யார் மேல் கோபம் ..? “

இப்போது அவளுக்கு முன் பெஞ்ச் பெண் மெல்ல எழுந்தாள் .

” அது என் புத்தகம் மிஸ் .இவள் பிடுங்கி எறிந்துவிட்டாள் …”

” ஓ…அடுத்த பிள்ளை புத்தகத்தை பிடுங்கி எறிந்தாயா ..?? இந்த வயதில் அப்படி என்ன கோபம் உனக்கு …போ வெளியே போய் முட்டி போடு ….”

நித்திகா போகாமல் அந்த பெண்ணை முறைத்தபடி நின்றிருந்தாள் .

“இப்போது நீ போகவில்லையென்றால் ஆபீஸ்ரூம் போய் தலைமைஆசிரியரை பார்க்க வேண்டியதிருக்கும் …”

நித்திகா இப்போது கண்ணம்மாவை முறைத்தபடி வெளியே போய் முட்டி போட்டாள் .

சை ….எட்டாவது படிக்கிறார்கள் அதற்குள் எவ்வளவு திமிர் …? எரிச்சலுடன் பாடம் நடத்த ஆரம்பித்தாள் .இடையிடையே அவளது பார்வை வெளியே போனபோது …நித்திகா அங்கிருந்தபடியே விழியெடுக்காமல் இவளையே பார்த்படி இருந்தாள் .தப்பு செய்த உறுத்தல் எதுவும் அந்த பார்வையில் இல்லை .




ஏனோ மனது ஒரு மாதிரியாக இருக்க கண்ணம்மா அவளை உள்ளே கூப்பட்டாள்.

” இனி ஒழுங்காக இருக்க வேண்டும் .போய் உட்கார் ” சிறு தலையசைப்பு கூட இல்லாமல் நேரான நடையுடன் போய் தன் இடத்தில் அமர்ந்தாள் நித்திகா .

பாரேன் இந்த வயதில் இந்த பிள்ளைக்கு இருக்கும் அழுத்தத்தை …விய்ந்தபடி பாடத்தை தொடர்ந்தாள் .

” பாரதியார் பிறந்தநாள் விழாவிற்கு டீச்சர்ஸுக்கு நம்ம பள்ளியிலிருந்தே சேலை எடுத்து தருவார்கள் .செட் சாரீஸ் .அதனை நாமே போய் செலக்ட் செய்வோம் .வர்ரீங்களா டீச்சர் …” சக ஆசிரியைகள் அழைக்க மனதுக்கு ஒரு மாறுதலாக இருக்குமே என கிளம்பி விட்டாள் .

ஏசி செய்யப்பட்டு ஜில்லென்றிருந்த அந்த பெரிய ஜவுளிக் கடையினுள் அந்தக் குளிரை அனுபவித்தபடி விற்பனை பெண் விதம் விதமாக விசிறியடித்த சேலைகளை …ஒன்றிலிருந்து ஒன்றிற்கு  மாறிய
படி இருந்தனர் .

அதென்னவோ ….அவர்கள் எடுத்து வைத்ததெல்லாம் கண்ணம்மாவிற்கு காடியாக தெரிய , கண்ணம்மா காட்டியதெல்லாம் அவர்களுக்கு மோசமாக தெரிந்த்து .அவர்களுக்குள்ளாகவே காரசாரமாக விவாதித்து சண்டை போடுமளவு அவர்கள் போக …நீங்களே செலக்ட் பண்ணுங்கள் என்றுவிட்டு மெல்ல கடையினுள் நடக்க தொடங்கினாள் கண்ணம்மா .

உடை மாற்றும் அறை பக்கம் ஒரு டீனேஜ் பெண்கள் கூட்டம் கையில் டாப்ஸுடன் நின்றனர் .நீ இதை போட்டு பாரு …இது உனக்கு நன்றாக இருக்கும் .இந்த கலர் என்னிடம் இல்லை .வானவில்லாய் கை நிறைய வண்ணங்களை அள்ளிக்கொண்டு கலகலத்துக் கொண்டிருந்தனர் .

இந்த இளம்பருவம்தான் எத்தனை இனிமையானது …கண்ணம்மா தன்னை மறந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் .ஏதோ கல்லூரியிலிருந்து மொத்தமாக வந்திருப்பார்கள் போலும் .

அப்போது ஒரு உடை மாற்றும் அறைக் கதவை திறந்து வெளியே வந்த ஒரு பெண் முகத்தல் கலவரத்தோடு …

” ஏய் இந்த ரூமுக்குள்ளே போகாதீங்கப்பா .எனக்கென்னவோ அங்கே ஏதோ சரியில்லைன்னு தோணுது …” என்றாள் .

” என்னடி …என்ன …” தங்களுக்குள் கவலையோடு பேசிக்கொண்டிருந்தவர்களை அணுகினாள் .

” ஹாய் கேர்ள்ஸ் …என்ன பிரச்சினை …? “

அவர்கள் இவளையும் பயத்துடன் பார்த்தனர் .

” நான் ஒரு ஆசிரியை .என் பெயர் கண்ணம்மா …உங்களுக்கு என்ன பிரச்சினை …? “

இப்போது ஒருத்தி தைரியத்துடன் ” வந்து மேடம் அந்த ரூமுக்குள் …யாரோ …அதாவது அந்த ரூமின் பின்னால் …”

சட்டென பொங்கிய கோபத்துடன் கண்ணம்மா அந்த அறைக்குள் நுழைய போனவள் சட்டென நிதானித்து ” கேமெரா இருக்கிறதா …? ” தாழ்ந்த குரலில் கேட்டாள் .

” தெரியவில்லை .ஏதோ பேச்சு சத்தம் கேட்கிறது .கேமிராவோ …ஆட்களோ இருக்கவேண்டும் …”

” சரி யாராவது இரண்டு பேர் மட்டும் என்னுடன் வாருங்கள் .மற்றவர்கள் உடைகளை பார்த்துக் கொண்டிருங்கள் …”




அந்த அறையின் பின்புறம் எங்கே போகிறதென கவனித்தவள் , அது மற்றொரு அறையாக இருக்கவே …அந்த அறையின் கதவை தட்டினாள் .அது ஸ்டாக்குகள்
வைக்கும் அறையாக இருக்கவே பூட்டப்பட்டிருந்த்து .

”  மேடம் அது குடோன் .அதற்குள் கஸ்டமர்கள் போக கூடாது …உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது …” ஊழியர் கடுமையாக சொல்ல …

” இங்கே பாருங்கள் நீங்களாக என்னை சத்தமில்லாமல் அனுமதித்தீர்களானால் நான் உள்ளே போய் பார்த்துவிட்டு வந்துவிடுவேன் .நான் சத்தம் போட்டால் கடையே திரும்பி பார்க்கும் .உங்கள் கடைக்குத்தான் அசிங்கம் .எப்படி வசதி …? “

அந்த சேல்ஸ் பெண் பயந்தபடி கதவை திறந்துவிட்டு விட்டாள் .பண்டல் பண்டலாக உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி மூட்டைகளின் பின்புறம் ஒரு சிறிய மரத்தடுப்பு வைத்து அதில் ஒரு டேபிளும் போடப்பட்டிருக்க , அங்கே ஒரு ஒரு துளை இருந்த்து.நேராக அந்த டிரஸ்ஸிங் ரூமினுள் இருந்த்து .இங்கே ஒரு சாவியை அதன் மேல் கோர்த்து மறைக்கபபட்டிருக்க , அங்கே அது ஏதோ ரூம் அலங்காரம் போல சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருந்த்து .

” ஏய் …யாரது கஸ்டமர்ஸை உள்ளே விட்டது ..? ” கத்தியபடி ஒரு ஐம்பது வயதுள்ள ஆள் உள்ளேவந்தார் .

” மேனேஜர் ….” என இவளிடம் முணுமுணுத்துவிட்டு ” சார் இவுங்க இந்த ரூமை திறந்து காட்டவில்லையென்றால் எல்லாரையும் கூப்பிட்டு காட்டுவேன் என்றார்கள் .அப்படி காட்ட இங்கே ஒன்றுமில்லையே என்றுதான் நான் இவர்களை ….”

படாரென அந்த சேல்ஸ் பெண்ணை அறைந்துவிட்டான் அந்த மேனேஜர் .” யாரை கேட்டு இதையெல்லாம் செய்தாய் …? ” அவள் அழ ஆரம்பித்துவிட்டாள் .

” மிஸ்டர் நான் இப்போதே உடனடியாக உங்கள் முதலாளியை பார்க்க வேண்டும் ….” அந்த சேல்ஸ்பெண்ணை தன் பின்னே இழுத்தபடி கூறினாள் கண்ணம்மா .

” எங்கள் முதலாளி இங்கே இல்லை …”

” போன் பண்ணி வரவையுங்கள் மிஸ்டர் .நான் வெயிட் பண்ணுகறேன் .உடனடியாக கூப்பிடுங்கள் ….”

” அவர் ஊரிலேயே இல்லை ….”




” இல்லை அக்கா .முதலாளி மாடியில் அவருடைய அறையில்தான் இருக்கிறார் ….”

மீண்டும் கையை ஓங்கியபடி வந்த மேனேஜரிடமிருந்து அந்த சேல்ஸ்பெண்ணை காப்பாற்றி இழுத்தபடி ” வா …எனக்கு காட்டு .உனக்கும் சேர்த்துதான் பேசப்போகிறேன் ….” மாடியேறினார்கள் .

” அவர் முக்கிய மீட்டிங்கில் இருக்கிறார் .ஒரு மணிநேரம் வெயிட் பண்ணுங்கள் .” முதலாளி அறைக்குள் நுழையும் முன்பு மீண்டும் தடுக்கப்பட்டார்கள்.

” வெயிட் செய்து சொல்லும் அளவு சாதாரண பிரச்சினை இல்லை இது …” கண்ணம்மா கதவை தட்டாமலேயே அதிரடியாக உள்ளே நுழைந்தாள் .

” ஒரு முக்கியமான விசயம் பேசவேண்டும் சார் ….” பேசியபடி உள்ளே வந்த கண்ணம்மாவை திரும்பி பார்த்த அவன் கண்களில் எரிமலை இருந்த்து .

What’s your Reaction?
+1
2
+1
4
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!