Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று- 8

8

இமைக்குள் நெறுநெறுக்கும் மணலாய்
உனது அன்றைய வார்த்தைகளை கூட 
தள்ளிவிடுவேன் …
நீயற்ற இந்த மாரி மாலையைத்தான் 
தள்ள முடிவதில்லை

சிலந்தி வலையின் மென்மையுடன், வெண்தாமரையின் மெருகுடன், நுரைக்குமிழியின் ஒளியுடன், நாரைச்சிறகின் நுட்பத்துடன், வழியும் பாலின் நெளிவுடன், வெண்ணையின் குழைவுடன் கூடிய செதுக்குதல்கள்…. எவையுமே மண்ணில் உள்ள மலர்கள் அல்ல. மலர்களின் வடிவ அழகை மட்டும் எடுத்துக்கொண்டு கற்பனையில் விரிவாக்கிக்கொண்டு உருவாக்கப்பட்டவை. தாமரை இதழ்களுக்குள் அல்லிவட்டம். அதற்குள் மந்தார இதழ்வரிசை. அதற்குள் அல்லிபீடம். இக்கோயில் விதானங்களில் உள்ள மலர்வடிவங்களைப்பற்றி மட்டும் ஒரு தனி நூல் எழுத முடியும். ஓவிய – சிற்ப வரலாற்றில் இந்த வடிவ நுட்பங்களுக்கு அப்பால் மிகக்குறைவான சாதனைகளே நிகழ்த்தப்பட்டிருக்கும் …




வெண்பளிங்கை இப்படி வளைக்க முடியுமா …? ரப்பர் போல் எப்படி வளைந்தன அந்த கற்கள் ….? இதனை செதுக்கிய சிற்பி யார் …? ஒருவனா …அவன் .ஓராயிரம் பேர் இருக்க மாட்டார்களா …? இத்தனை சிற்பங்களையும் செதுக்க வேண்டுமென்றால் அத்துணை பேர் வேண்டுமல்லவா …? ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களிக்கு முன்பு அவர்கள் இதோ …இங்கே நான் நின்றிருக்கும் இடத்தில்தானே நின்று இவைகளை உருவாக்கியிருக்க வேண்டும் .சாத்விகாவிற்கு சட்டென குனந்து தன் பாதம் பட்ட இடத்தை தொட்டு தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் போல் , இல்லை தரையோடு படுத்து அந்த இடத்தை முத்தமிட வேண்டும் போலிருந்த்து .

கண்ணெதிரே காணும் அதிசயங்கள் அவளை இது போல் ஒரு மாதிரி பித்து பிடித்த நிலைக்கு தள்ளிக் கொண்டிருந்தன.




” கி.பி 11 – 13 ஆம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட  இந்த தில்வாரா கோவில் ஒரு ஜெயின் கோவில். உலகின் தலை சிறந்த ஜெயின் கோவில்களுள் ஒன்று. இது தாஜ்மகாலின் கட்டிடக்கலைக்கு நிகராக போற்றப்படுகிறது. 4000 அடி உயரத்தில், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத போதே, யானைகள் மூலமாக அம்பாஜி மலையிலிருந்து, அபு மலைக்கு பாறைகளை எடுத்து சென்று இந்த அதிசயமான கோவிலை உருவாக்கியுள்ளனர் . “

திடீரென கைடாக மாறிவிட்ட வீரேந்தர் விளக்கங்கள் கொடுத்து கொண்டருக்க , சொர்க்கத்தல் இருப்பது போன்ற உணர்விலிருந்த சாத்விகாவிற்கு அவனது குரல் கந்தர்வனுடையது போல் ஒலித்தது .

அவள் மட்டுமல்ல சண்முகபாண்டியன் , சௌந்தர்யா , சுகுமார் அனைவருமே பிரமிப்பில்தான் இருந்தனர் .

” இது வேறு ஒரு உலகம் போலிருக்கிறது வீரேந்தர் . இந்த இடத்தை எங்களுக்கு அறிமுகம் செய்த்தற்கு உனக்கு நன்றி ….இன்னமும் இந்த கோவில்களை பற்றிய தகவல்களை சொல்லு ” சண்முகபாண்டியன் கேட்டார் .

வீரேந்தர் சொல்ல துவங்க சாத்விகா அந்த கோவிலை மீண்டுமொரு முறை சுற்ற தொடங்கினாள் .கண்களை அகல விரித்து அந்த சிற்பங்களை பார்த்தாள் .அப்படியே அவற்றை மனதிற்குள் பூட்டிக் கொள்ள முயன்றாள் .ஏனெனில் மேமெரா , போன் போன்றவற்றிற்கு அங்கே அனுமதியில்லை .

” முட்டாள்தனமாக போனை கூட பிடுங்கி வைத்துக் கொண்டனர் . இப்போது ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை .” அவள் பின்னாலேயே வந்த சுகுமார் சலித்தான் .




” அதனால் என்ன சுகு .இதோ கண்ணால் படம் பிடித்து நெஞ்சுக்குள் சேர்த்து வைத்துக் கொள்ளுங்களேன் …” தாமரையின் மடிந்த இதழ் ஒன்றை ஆச்சரியமாக வருடியபடி சொன்னாள் .

” இந்த சிற்பங்களை மட்டுமென்றால் அப்படி செய்யலாம் ்நான் இந்த உயிரற்ற சிற்பங்களோடு உயிரோடுள்ள இந்த சிற்பத்தையும் சேர்த்து வைத்து போட்டோவாக்க நினைக்கிறேனே …சாத்வி …”

” பளிங்குகளை இப்படி பேப்பர் போல் மடிக்க முடியுமா சுகு …எவ்வளவு மென்மை பாருங்களேன் ” சுகுமாரின் கொஞ்சு மொழியை உணராமல் அந்த கலையிலேயே ஆழ்ந்திருந்தாள் சாத்விகா .

” ஆமாம் மிக மென்மை …” சுகுமாரின் கை சாத்விகாவின் கையை மென்மையாய் வருடியது .

” வெளேரென்ற இந்த சிற்பங்களோடு கறுப்பான என்னையும் சேர்த்தா …? ” முகம் சுளித்தாள் .

” உன் உடலின் அமைப்பு இந்த சிற்பங்களின் வளைவு , நெளிவை விட அற்புதமானது சாத்வி …”




தாகப்பார்வையோடு சுகுமார் சாத்விகாவை நெருங்கிய போது ….

” பொது இடத்தில் கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் வக்கீல் சார் ….” வீரேந்தரின் குரல் கேட்டது .

சட்டென விலகி திரும்பி பார்த்தபோது முகம் முழுக்க வெறுப்பை தேக்கி நின்றிருந்தான் .

” உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வரும் இடம் இது .நமது பண்பாடும் ,கலாச்சாரமும் உலக நாடுகளிடையே பெருமையாக பேசப்படுகிறது .அதனை கெடுப்பது போல் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ளாதீர்கள் …? “

” இதில் என்ன கீழ்த்தரத்தை கண்டாய் …நாங்கள் காதலர்கள் .ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம் …” சுகுமார் பதிலுக்கு சீறினான் .

வீரேந்தரின் பார்வை திரும்பி சாத்விகாவை எரித்த போது அவள் ” என்ன ….என்ன நடந்த்து இங்கே …? ” என்றாள் .

உண்மையிலேயே சுகுமாரின் தாகத்தை , நெருக்கத்தை அவள் உணர்ந்து கொள்ளவே இல்லை .அந்த அளவு அந்த சிற்பங்களில் ஆழ்ந்திருந்தாள் .

குழப்பமாக தன் முகம் பார்த்த சாத்விகாவை பார்த்ததும் வீரேந்தரின் முகம் சிறிது மென்மையானது .

” ஒன்றுமில்லை மேடம் ..சார் அதோ அந்த சிலை போல் உங்களை நினைத்துக் கொண்டிருந்தார் ” அவன் சுட்டிக்காட்டிய சிலை நின்று கொண்டிருந்த தோற்றத்தில் சாத்விகாவின் முகத்தில் அருவெறுப்பு வந்த்து .

” சுகுமார் நீங்கள் அப்பாவிடம் போங்கள் .நான் வருகிறேன் …” அழுத்தமாக பேசி அவனை வெளியேற்ற , அவன் வீரேந்தரை முறைத்தபடி சென்றான்.

” சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை கூட உணராமல் அப்படி என்ன கலாரசனை …? ” வீரேந்தரின் கண்டிப்பில் முகம் சுருங்கினாள் .

” அவர் எனக்கு வீட்டில் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை. எந்த அளவு நான் அவரிடம் கவனம் வைத்திருக்க வேண்டும் …? ” சாத்விகாவிடம் அறியாத்தன குழந்தை கேள்வி .

ஒரு பெருமூச்செறிந்தவன் திரும்பி அங்கிருந்த சிலை ஒன்றின் தகவல்களை அவளுக்கு அளிக்க தொடங்கினான் .சாத்விகாவும் பெருமூச்சொன்றுடன் அதனை கவனிக்க தொடங்கினாள் .

அற்புதமான அந்த கோவிலின் அகன்ற படிக்கட்டுகளின் அமைப்பை ரசித்தபடி அவற்றின் மேல் பாதம் பதித்து மெல்ல இறங்கிக் கொண்டிருந்தாள் சாத்வி .அவளுக்கு இரண்டு படி பின்தங்கி இறங்கி வந்து கொண்டிருந்த வீரேந்தர் ….

” அவனை நீ திருமணம் செய்துகொள்ள போகிறாயா …? ” மென்குரலில் கேட்டான் .

” செய்து கொள்ளட்டுமா …? ” நின்று திரும்பி தன் பின்னிருந்தவனை ஊடுறுவி பார்த்தபடி கேட்டாள் .

பதிலே சொல்லாமல் அவளை கடந்து படியிறங்கி போனான் அவன் .




What’s your Reaction?
+1
18
+1
9
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
priya
priya
4 years ago

nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!