Cinema Entertainment

டான்ஸ் மாஸ்டரையே கதிகலங்க வைத்த அந்த நடிகர் யார்?

டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார் பாஸ் என்ற பாஸ்கரன், மாஸ்டர், லியோன்னு பல வெற்றிப்படங்களில் பணியாற்றியுள்ளார். கொஞ்சம் வெரைட்டியாக டான்ஸ் ஸ்டெப்களைப் போட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார். இவரது பாடல்களை சிறுவர்கள் அதிகம் ரசிக்கின்றனர். லியோ படத்தில் மன்சூர் அலிகானை ஒரு பாடலுக்கு ஆட வைப்பதற்குள் அரும்பாடு பட்டாராம். என்ன நடந்ததுன்னு அவரே சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

1500 நடன கலைஞர்களை வைத்து லியோ படத்தில் ஒரு பாடலை எடுத்தோம். டைரக்டர் தான் அந்த ஐடியாவைக் கொடுத்தாரு. எனக்கு சுதந்திரமும் கொடுத்தாரு. மாஸ்டர் படத்திலயும் 500 டான்சர்ஸ் வச்சி ஒரு பாடலை எடுத்தோம். அதுலயும் டைரக்டர் லோகேஷ் தான் அந்த ப்ரீடத்தை எனக்குக் கொடுத்தாரு.

காலேஜ்னு வரும்போது எல்லாரும் ஒரே மாதிரி ஆட மாட்டாங்க. எங்காவது ஒரு இடத்துல மெனக்கிடல் வேணும். ஒரே மாதிரியாகவும் ஆடணும். அப்படித் தான் விஜய் சாரோட அந்த ஓபனிங் சாங்கை எடுத்தோம்.




8 நாள் எனக்கு கொடுத்தாங்க. 6 நாளில் முடிச்சிக் கொடுத்தோம். மொத்த பேரையும் செட்டுக்குள்ள வர வைக்கறதுக்கே 2 மணி நேரம் ஆகும். அதுக்குப்பிறகு தான் விஜய் சாரை வர வைக்கணும். அவரு வந்து ஆடினதும் அந்த 1500 பேரும் காணாம போயிடுவாங்க. நான் ரெடியா வரவாங்கறது தான் அந்தப் பாட்டு.

சக்கு சக்கு வத்திக்குச்சி பாட்டுக்கு எல்லாம் மன்சூர் அலிகான் நல்லா ஆடினார். ஆரம்பத்துல டான்சர்ஸ் யூனியன்ல தான் மெம்பரா இருந்தாரு. நிறைய பாடல்கள், நிறைய மாஸ்டர்கிட்ட எல்லாம் ஆடிருக்காரு. நடிப்புக்குப் போனதுக்கு அப்புறம் டோட்டலா டச்சே இல்லாமப் போயிடுச்சு. ஆனா ரிகர்சல் 2 நாள் பண்ணிப் பார்த்தோம். நம்ம ஒண்ணு ஆடுனா அவரு ஆடுறாரு. ஆனா அது வேற மாதிரி வருது. திரும்ப திரும்ப ஆடுறாரு. வேற மாதிரியே வருது.

போராடி போராடி பார்த்தேன். ஒரு கட்டத்துல தேர்டு பிஜிஎம் சிங்கிள் ஷாட் வச்சிட்டேன். விஜய் ஒரே டேக்ல ஆடிட்டு வந்துடுவாரு. ஸ்கிரிப்ட் இல்லேன்னா தான் இன்னொரு டேக் கேட்பாரு. ரொம்ப கஷ்டப்பட்டு ஆட வச்சேன். அடிக்கடி ஒன்மோர் போட்டு எனக்கே இதுக்கு என்ன செய்யன்னு தோணுச்சி. அப்புறம் மன்சூர்கிட்யே சொல்லிட்டு அதைக் கொஞ்சம் மாற்றிப் பண்ணினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!