lifestyles

அட எட்டு போட்டு நடங்க.. நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்றீங்களா ?

மூளைக்கு மட்டும் வேலை கொடுக்காமல் உடலுக்கும் வேலை கொடுங்கள். அப்போதுதான் உடலும் உறுதியாக இருக்கும் நோய்களும் அண்டாமல் இருக்கும் என்று சொல்வதோடு வலியுறுத்தவும் செய்கிறார்கள் மருத்துவ நிபுணர்களும், உடற் பயிற்சியாளர்களும்.

நான் தான் தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போகிறேன். அப்புறம் ஆபிஃஸுக்கு போகும் போது கால் மணி நேரம் நடக் கிறேன் திரும்பி வரும் போதும் நடக்கிறேன். இது போதாதா என்கிறவர்கள் ஒருபுறம். காலையில் எழுந்து பக்கத்தில் இருக் கும் கிரவுண்டில் ஓடுகிறேன் என்கிறவர்கள் ஒருபுறம்.


வெளியே நடைபயிற்சி செய்ய வழியே இல்லையே என்று அலுத்துகொள்பவர்கள் ஒருபுறம் என்று ஆரோக்கியத்தின் மீது கரிசனம் காட்ட மறுபுறம் சத்தமே இல்லாமல் உடலை கட்டுகோப்பாக ஆரோக்கியமாக வைக்க ஜிம்முக்கு போகிறேன். வீட்டிலேயே ட்ரெட் மில் பயிற்சி செய்கிறேன் என்று பெருமிதம் கொள்பவர்களும் நம்மில் உண்டு.

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.




Benefits Of 8 Walking,எட்டு போட்டு நடங்கப்பா.. முதுமை எட்டாம இளமையா இருப்பீங்க... - 8-shaped walk to help you stay healthy while still getting youthful - Samayam Tamil

8 வடிவ நடை பயிற்சி செய்யும் முறை:

எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது  மாடியிலேயோ  செய்து கொள்ளலாம்.

சிறிய இடமாக இருந்தால் ஆறுக்கு 12 அடியும், பெரிய இடமாக இருந்தால் எட்டுக்கு 16 அடியும் இருக்குமாறு  செவ்வக வடிவில் முதலில் கோடிட்டுக் கொள்ளுங்கள். அதனுள் எட்டு வடிவத்தை வரைந்து கொள்ளவும்.

வடக்கு தெற்கு நோக்கி இருக்குமாறு வரைந்து கொள்ளவும். ஏனெனில் வடக்கு பகுதியில் இருந்து காந்த அலைகள் தெற்கு நோக்கி பாய்ந்துகொண்டிருக்கும் . கிழக்கு மேற்கு திசை நோக்கியும்  வரைந்து கொள்ளலாம்.

ஆனால் அதன் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் வடக்கு தெற்கு தான் சரியான திசையாகும்.ஆண்கள் என்றால் வலப்புறமாகவும் ,பெண்கள் என்றால் இடப்புறமாகவும் நடையை தொடங்கவும் .

21 நிமிடம் வடக்கு நோக்கியும் ,21 நிமிடம் தெற்கு நோக்கியும் மொத்தம் 42 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்ளவும் ..




எட்டு பயிற்சியினால் குணமாகும் நோய்கள்:

மார்புச் சளி, மூக்குச்சளி மற்றும் நாசியில்  உள்ள சளிகளை கரைத்து வெளியேற்றும். இந்த நடைப்பயிற்சியை செய்த சில நேரங்களில் கைகள் சிவந்து காணப்படும் .அப்படி இருந்தால் ரத்த ஓட்டம் சீராகிறது என அர்த்தம்.

தினமும் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாத எரிச்சல் குணமாகும். மேலும் பாத வெடிப்பு உள்ளவர்களுக்கும் வெடிப்பு விரைவில் குணமாக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலை மாலை என தினமும் இரு முறை ஒரு வருடத்திற்கு செய்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

இந்த 8 வடிவத்தில் நடக்கும் போது  நம் கண்கள் சுழற்சியாகும்  .இதனால் கண்களுக்கு ரத்த ஓட்டம் நன்கு பாயும் ,இது பார்வை குறைபாடு வராமல் தடுக்கும் .அதுமட்டுமல்லாமல் கவனிக்கும் திறனும் மேம்படும் .

8 வடிவ நடை பயிற்சியின் மூலம் ஆகார சக்கரங்கள் சரியாக இயங்கி குடலிறக்கத்தை  குணமாக்கும் . அது மட்டுமல்லாமல் சுவாசம் சீராகவும், மன அழுத்தம் குறையும், தூக்கமின்மை சரியாகும்.

இந்த பயிற்சியை தொடங்கிய சில நாட்களிலேயே நீங்கள் இவற்றையெல்லாம் உணரக்கூடும் ஏனென்றால் இது சித்தர்களால் கூறப்பட்ட உடற்பயிற்சியாகும்.

எட்டு வடிவ நடை பயிற்சியை தவிர்க்க வேண்டியவர்கள்:

குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை  செய்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புற்று  நோயாளிகள் இந்த முறை பயிற்சியை தவிர்ப்பது நல்லது.

எனவே இவர்களை தவிர மற்ற அனைவரும் வயது வரம்பின்றி இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் .




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!