Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 6

6

நீயற்ற சாப இரவுகளில் 
சத்தியங்கள் சில செய்து கொள்கிறேன் ,
உன்னோடு விதிக்கப்படும் 
ஷண பொழுது விமோசனங்களுக்காக …

பூக்கள் …மலர்கள் …இலைகள் …தலைக்கு மேலே , வலதுபுறம் , இடதுபுறம் …எங்கும் …எங்கேயும் பூக்கள்தான் .வடிவாய் , நேர்த்தியாய் , அழகாய் இருந்த அந்த பூக்குவியல்களில் லயித்த சாத்விகா ஆர்வத்துடன் அவற்றை தொட்டாள் . திடுக்கிட்டாள் .அவை ….கற்கள் …கடினமாக இருந்தன .பூக்கள்தான் …ஆனால் கற்பூக்கள் .பார்க்க மென்மையாக இருந்தவை தொட்டதும் வன்மையாக அவள் கையை அழுத்தின .

திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் சாத்விகா .கனவா …? என்ன ஒரு அனுபவம் …வியர்வை நசநசத்த கழுத்தடியை துடைத்துக்கொண்டாள் ்இப்படி ஒரு குளிர் பிரதேசத்தில் அவளுக்குத்தான் வியர்க்கும் .அவர்கள் இப்போது மவுண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் இருந்தனர் .குன்னூரை விட இங்கே பல மடங்கு அதிக குளிர் இருந்த்து .

சண்முகபாண்டியனின் வேலைக்காக அவர் இங்கே கிளம்பிய போது , அடம்பிடித்து அவரோடு சாத்விகாவும் சேர்ந்து கிளம்பி வந்திருந்தாள் . சாத்விகாவை காரணம் சொல்லி சௌந்தர்யா வும் வந்துவிட , இது என்ன பாமிலி டூரா என முகம் சுளித்தவன் வீரேந்தர்தான் 




” என் அப்பா …என் அம்மா …இதில் நீங்கள் இடையில் வர முடியாது … ” சவாலாக சொன்ன சாத்விகாவை அவன் கார் துடைக்க பயன்படுத்தும் துணியை பார்க்கும் பார்வை பார்த்தான் .எப்போதும் இப்படித்தான் பார்க்கிறான் .வாசல்படியை போல் மிதிக்கிறான் . எதிலும் அவனுக்கு அலட்சியம் …அதிலும் சாத்விகா என்றால் தனி அலட்சியம் .

இவ்வளவு அலட்சியப்படுத்துமளவா தான் இருக்கிறோம் …? புரியாமல் இப்போதெல்லாம் அதிக நேரம் கண்ணாடி முன் அதிக நேரம் நின்றிருந்தாள் . விபரம் தெரிந்த நாளிலிருந்து அடுத்தவர்களிடமிருந்து இது போன்றதொரு அலட்சியத்தை அவள் பெற்றதில்லை .அவளை எல்லோரும் போற்றினர் , புகழ்ந்தனர் , வாழ்த்தினர் …பிரமித்தனர் .

அவள் எதிர்நோக்கிய முதல் அலட்சியம் வீரேந்தருடையதுதான் . பளீரென்ற வெள்ளையோ …அசத்தும் மஞ்சளுமோ அற்ற , சற்றே பழுப்பேறியிருக்கும் தன் மாநிறம் காரணமோ …? தன் தோலின் நிறத்தை ஆராய்ந்தாள் .

அவள் வீட்டில் எல்லோருமே ரங்கநாயகியில் இருந்து கார்த்திக் வரை எல்லோருமே பளிச் சிவப்பு .லைட் போட்டது போல் இருட்டிலும் வெளுப்பாக தெரிவார்கள் .ஆனால் சாத்விகா மட்டும் கொஞ்சம் நிறம் கம்மி .கம்மி என்ன கறுப்பு .இவையெல்லாம் இதுவரை சாத்விகா மனதில் பட்டதில்லை .ரங்கநாயகி சிலநேரம் கருவாச்சி என்பது போல் ஏதோ கூறியிருக்கிறாள் .சண்முகபாண்டியனின் பார்வையில் அமைதியாகிவிடுவார் .

தான் கறுப்பு என்பதை இதுநாள் வரை சாத்விகா உணர்ந்த்தே இல்லை .ஆனால் இப்போது …இந்த வீரேந்தர் என்னை கண்டு கொள்ளாமல் போகிறானே …நான் கறுப்பென்று நினைக்கிறானோ …ஏனென்றால் அவனும்தான் , பனியில் கிடந்து…கிடந்துதான் வெளுத்து தொலைந்தானோ என்னவோ …உடைத்த கோதுமை போல் நல்ல நிறமாக இருந்தான் .அந்த நிறம் தந்த கர்வத்தில் கறுப்பான என்னை அலட்சியமாக பார்க்கிறானா …?

சண்முகபாண்டியனுடன் அவள் மவுண்ட் அபு வரக்கூடாது என வீரேந்தர் பிடிவாதம் காட்ட , வந்தே தீருவேன் என தந்தையிடம் கொஞ்சி சாதித்துக்கொண்டாள் அவள் .உடன் இலவச இணைப்பு போல் தாயையும் சேர்த்து கொண்டாள் .
விமான இருக்கை முதல் இங்கே ஹோட்டல் அறை  வரை வீரேந்தர் அவர்கள் இருவரையும் தனியாக பிரித்தே வைத்தான் .கேட்டால் பாதுகாப்பு என்றான் .

சண்முகபாண்டியனுக்கும் , அவனுக்கும் தனி அறையும் , சௌந்தர்யாவுக்கும் , சாத்விகாவிற்கும்  தனி அறையென அவன் பிரித்த போது ” பெண்களை தனியாக …” என சண்முகபாண்டியன் தயங்கினார் .




” அவர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்திருக்கிறேன் சார் .உங்கள் திருப்திக்கு நீங்களும் யாரையாவது அவர்களுடன் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் ்எனக்கு நீங்கள் மட்டும்தான் மிக முக்கியம் .உங்களை விட்டு ஒரு நிமிடம் கூட என்னால் நகர முடியாது …”

யாராலும் பேச முடியாது போயிற்று .

” அப்பாவிடம் கேட்க வேண்டும் பாப்பா .பிறகு போகலாம் …” சௌந்தர்யா சொல்லிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள , சாத்விகா எரிச்சலடைந்தாள் .

அப்பாவிடம் கேட்டால் அவர் அந்த வீரேந்தரின் முகத்தை பார்ப்பார் .அவன் வேண்டாமென்று கண்ணசைப்பான் …இவரும் சரியென்பார் .சாத்விகாவிற்கு அந்த பிளவர் வாஷை தூக்கி போட்டு உடைக்கலாம் போல் இருந்த்து .

அவர்கள் வந்து இரண்டு நாட்களாக இந்த அறையை விட்டு வெளியே காலை எடுத்து வைக்கவில்லை .இப்படி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து டிவி பார்ப்பதற்கு பேசாமல் குன்னூரிலேயே இருந்திருக்கலாமே …என எண்ண தொடங்கினாள் .அப்படி அவள் நினைக்க வேண்டுமென்றே வீரேந்தர் இது போல் அவளை வெளியேற விடாமல் வைத்திருப்பதாக நினைத்தாள் .

சலிப்புடன் அமர்ந்திருந்தவள் கதவு தட்டியதும் போய் திறந்தாள் .வெளியே  புன்னகையுடன் நின்றவன் சுகுமார் .

ஹேய் சுகு …வாங்க …வாங்க .நல்லவேளை என்னை காப்பாற்ற நீங்களாவது வந்தீர்களே …”

” யாராவது உன்னை கொல்ல முயற்சித்து கொண்டிருந்தார்களா சாத்வி ? ” சிரிக்காமல் கேட்டவனை முறைத்தாள் .

” கொழுப்பா …? நான் வெளியே எங்கேயும் போக முடியாமல் அறைக்குள்ளேயே அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன் . நீங்கள் கிண்டல் பண்ணி கொண்டிருக்கிறீர்களே …? “

” அதுதான் வந்துவிட்டேனே . இனி ஊர் சுற்றலாம் …”

” ஓ.கே அம்மா குளித்து விட்டு வரட்டும் .கொஞ்சம் வெளியே நிற்கலாம் வாருங்கள் …”

அறையை விட்டு வெளியே வந்து அந்த ஹோட்டலின் பால்கனியில் நின்றனர் .எங்கு பார்த்தாலும் பசுமை .பச்சை குன்றுகளை போர்த்தியபடி சென்ற பனிப்படலங்களை ஆவலுடன் பார்த்தாள் சாத்விகா .

” எவ்வளவு அழகு பாருங்கள் …”

” ஆமாம் ..மிகவும் அழகு …” சுகுமாரின் பார்வை சாத்விகாவின் மேல் இருந்த்து .

” இதையெல்லாம் வெளியே போய் அனுபவிக்க முடியாமல் இப்படி உள்ளே அடைத்து போட்டுவிட்டானே ….”

” யார் சாத்விகா …? “

” அவன்தான் ….அப்பாவோட டிரைவர் …” அலட்சியமாக உதட்டை சுளித்தபடி திரும்பியவள் சுகுமாரின் பார்வை தன் மேல் ஆணியடித்திருப்பதை உணர்ந்தாள் .

” என்ன பார்வை …? “

” ம் …இங்கே வந்த்தும் இன்னமும் அழகாக இருக்கிறாய் .இன்று நாம் இருவருமாக வெளியே எங்கேயாவது போகலாமா சாத்வி …? ” மெல்ல அவள்புறம் நகர்ந்து அவள் கைகளை தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டான் சுகுமார் .

” வெளியே போகலாம் .ஆனால் அம்மாவையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டுதான் ….”




” ஏய் சாத்வி …நாளை எனக்கு கோர்ட்டில் இரண்டு முக்கியமான கேஸ் இருக்கிறது .அதையெல்லாம் என் ஜூனியரிடம் விட்டு விட்டு உனக்காகத்தான் நான் இத்தனை கி.மீ பறந்து ஓடி வந்திருக்கிறேன் .நீ என்னடாவென்றால் இப்படி அநியாயம் செய்கிறாயே …? “

” என்ன அநியாயம் …நான் உங்களுடன் வருவதாகத்தானே சொல்லிக் கொண்டிருந்தேன் …”

” சாத்வி …நாம் மட்டும் தனியாக போகலாம்பா …ப்ளீஸ் …” சுகுமாரின் கை சாத்விகாவின் கன்னத்தை வருடியது .

” ம்ஹூம் …உங்க பார்வை சரியில்லை .உங்களோடு தனியாக வரமாட்டேன் …”

” உயிர் மேல் ஆசை இல்லாமலிருந்தால் இரண்டு பேரும் ஊர் சுற்ற போங்கள் ….” திடுமென பின்னால் ஒலித்த குரலில் இருவரும் திடுக்கிட்டு நகர்ந்தனர் .

அங்கே வீரேந்தர் ரௌத்ரமாக நின்று கொண்டிருந்தான் .முடிந்தால் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே சுட்டு விடலாமா என்ற ஆசை கூட அவன் கண்களில் தெரிந்த்து .




What’s your Reaction?
+1
18
+1
10
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!