Cinema Entertainment

நகைச்சுவை காவியம் ‘கன்னி ராசி’ ஒரு பார்வை

படத்தின் தொடக்கத்திலேயே சோறுனா சட்டி திம்போம்.. என்ற பாடல் ரசிகர்களை சிரிப்போடு இருக்கையில் அமர வைத்தது. வெட்டித்தனமாக ஊர் சுற்றும் இளைஞனாக இருக்கக்கூடிய பிரபு. எங்கு சென்றாலும் சண்டை வம்பு அடிதடி என சுற்றிவர, ஊர் மக்கள் அனைவரும் தந்தையாரிடம் வந்து குறை கூறி அவரை ஊரை விட்டு அனுப்பும்படி கெஞ்சு கொண்டனர்.

தந்தையாரின் வற்புறுத்தலின் காரணமாக பட்டணத்தில் இருக்கக்கூடிய தனது அக்கா வீட்டிற்கு செல்கிறார் பிரபு. பிரபுவின் அக்கா மகள் தான் ரேவதி. சிறுவயதில் இருந்து மாமா மீது காதல் கொண்ட ரேவதி மிகவும் அக்கறையோடு தனது வீட்டிற்கு வந்த மாமாவை கவனிக்கிறார்.

தனது தம்பிக்கும் மகளுக்கும் திருமணம் செய்து வைக்க பிரபுவின் அக்காவான சுமித்ரா முடிவு செய்கிறேன். இருவருடைய ஜாதகத்தை பார்க்கும் பொழுது ரேவதிக்கு செவ்வாய் தோஷம் இருப்பது தெரிய வருகிறது. இந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண் இறந்து விடுவார் என ஜோசியக்காரர் கூறுகிறார்.

இதனால் தனது மகளுக்கு தம்பியின் திருமணம் செய்யக்கூடாது என்று அடம் பிடிக்கின்றார் பிரபுவின் அக்கா. இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இதற்கு இடையில் நம்மை சோகத்தில் ஆழ்த்தாமல் நகைச்சுவையில் கொண்டு செல்வதற்காக ஒரு தலை காதலாக நடிகர் ஜனகராஜ் ரேவதியை காதலிக்கின்றார்.




அவருடைய காதல் நகைச்சுவை பயணம் என்றாலும் கடைசியில் ரேவதி இடம் அவர் கூறும் வார்த்தை அனைவரின் மனதையும் நிகழ வைக்கும். ரேவதிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யும் முடிவு செய்யப்படுகிறது. சொந்த ஊருக்கு வந்த பிரபு செய்தி கேட்டு ரேவதி தேடி ஓடுகிறார். கடைசியில் ரேவதி இடம் ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்னுடன் வாழ்ந்தால் போதும் என அழுது கொண்டே கூறுகிறார்.

கடைசியில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தாலி கட்டிய உடனே ரேவதி பிரபுவின் மடியில் மீது சாய்கின்றார். என்ன நடந்தது என கேட்கும் பொழுது செவ்வாய் தோஷம் தோற்றுவிட்டது மாமா. என்னை கட்டினால் நீங்கள் இறக்க மாட்டீர்கள். இப்போது நான் தான் இறக்கப் போகிறேன் என பிரபுவின் மடியிலேயே அவர் இறந்து விடுகிறார். பிரபுவின் அழுகை சத்தத்திலேயே திரைப்படம் முடிகின்றது.

முழுமையான நகைச்சுவையில் தொடங்கி கண்ணீரில் முடியும் அழகான ஃபுல் பேக்கேஜ் இந்த கன்னி ராசி. திரைப்படத்தின் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளுமே இருக்கையில் இருந்து எலும்பு சிரிக்கும் அளவிற்கு இருக்கும். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா போட்ட பிஜிஎம் சொல்ல தேவையே இல்லை நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும்.

திரையரங்குகளில் இந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 38 ஆண்டுகள் ஆகின்றன. பல ஆண்டுகள் கடந்தும் சிறந்த காவியமாக இன்று வரை இந்த திரைப்படம் பயணம் செய்து வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை இந்த திரைப்படத்தை பாருங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!