Beauty Tips lifestyles

இயற்கையான முறையில் கஸ்தூரி மஞ்சள்

அழகான முகம், வசீகரமான முகம், கலையான முகம் ,கவர்ந்திருக்கும் முகம். கருகரு என்று ஆரோக்கியமாக வளரும் தலைமுடி, மாசு மருவற்ற வழு வழுவென்ற கன்னங்கள். இவை அனைத்தும் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாராவது உண்டா..?

குழந்தைகள் என்றாலும், பருவ வயதினர் என்றாலும், திருமணம் ஆனவர் என்றாலும், வயதானவர் என்றாலும், ஆண் என்றாலும், பெண் என்றாலும், யார் என்றாலும்,

ஒருமுறை முகக் கண்ணாடியை தாண்ட நேரும் ஒரு வினாடி நேரம் என்றாலும் அதன் முன்னே நின்று தன்னுடைய முகத்தின் தோற்றத்தை பார்க்காமல் கடந்து போவது கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுடைய வயதிற்கு ஏற்ப முகக் கண்ணாடி முன்னே நின்று பெருமூச்சு விடாமல் செல்ல முடியாது. “என்னுடைய பருவ வயதில் என் கண்களைச் சுற்றியே இந்த கருவளையம் கிடையாது. என் முகத்தோலில் இவ்வளவு தளர்ச்சிகள் வந்து விட்டதா.! ? இது என்ன நான் இவ்வளவு கருப்பாக போய் விட்டேன் .என் தோழிக்கு மட்டும் கன்னம் எவ்வளவு வழு வழுவென்று இருக்கிறது. என்னுடைய கன்னத்தை பார்”…

அப்படி ஏதாவது ஒன்றை கண்ணாடியின் முன்னே பேசிவிட்டு பெருமூச்சு விட்டுத்தான் நடந்து செல்கிறார்கள். தாங்கள் விரும்பும் அந்தத் தோற்றப்பொழிவை பெறுவதற்கு அவர்கள் கையாளும் முறைகள் இருக்கிறதே… அப்பப்பா! ! சொல்லி முடியாது.

இவர்களுடைய இந்த கனவை காசாக்கி கொள்வதற்காகவே முக்குக்கு முக்கு, முனைக்கு முனை பியூட்டி பார்லர் முளைத்திருக்கிறது. எத்தனையோ ஃபேஸ் கிரீம்கள், எத்தனையோ சன் ஸ்கிரீன் லோஷங்கள், எத்தனையோ சிகப்பழகு சாதனங்கள் இவர்களை குறி வைத்துதான் விற்கப்படுகிறது.

ஆனால் நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன் இந்தப் பொருள்களால் நீங்கள் முழுமையாக திருப்தியடைந்து விட்டேன் என்று சொல்ல முடியுமா ? எந்த ஒரு பியூட்டி பார்லர் ஆவது உங்களை அழகாக்கி விட்டது என்று உங்களால் அறுதியிட்டுக் கூற முடியுமா?




பொதுவாக முக அழகு ,பொலிவு என்பது நாம் உருவாக்குவது அல்ல. உங்கள் உள்ளே இருப்பது .ஏற்றி வைத்திருக்கும் தீபத்தை தூண்டி விடுவது போல் வசீகரமான முகபொழிவிற்கு நாம் செய்ய வேண்டியது தூண்டுதல் மட்டுமே.

நீங்கள் நினைப்பது போல் நீங்கள் எதையும் இழந்து விடவில்லை. சில விஷயங்களை கடைப்பிடிக்க தவறி விட்டீர்கள் என்பது தான் உண்மை. அல்லது நீங்கள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் சரியானதாகவோ அல்லது சுகாதாரமானதாகவோ அல்லது தூய்மையானதாகவோ இல்லை என்பது தான் உண்மை .

உங்கள் முகத்தை அழகு படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதைத்தான சொல்லப் போகிறேன் .உங்கள் உடம்பில் வேர்வை நாற்றம் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதைத்தான் செய்யப் சொல்லப் போகிறேன். கவர்ந்திழுக்கும் கண்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? அதைத்தான் சொல்லப் போகிறேன்.

பொருங்கள்… அடிக்க வராதீர்கள்.. “சொல்லிவிடுகிறேன் “எந்தவிதமான கெமிக்கலும் இல்லாமல், எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல், இயற்கையான முறையில் துளியும் கலப்படம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான அழகை பெறுவது எப்படி?

  • கஸ்தூரி மஞ்சள்

  • நலங்கு மாவு

  • குழந்தைகளுக்கான குளியல் பொடி

  • இயற்கை சீயக்காய் தூள்

  • பாசிப்பயறு பவுடர்

என்ன? இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா ..என்று சொல்கிறீர்களா??! இவை அனைத்தும் நீங்கள் கேள்விப்பட்ட பெயர்களாக இருக்கலாம். ஆனால் இவற்றின் பின்னே நீங்கள் அறிந்திடாத அதிசய விஷயங்கள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட அதிசய விஷயங்களுடன் ஆரோக்கியமும் அழகும் தரும் இந்தப் பொருட்களை பற்றிய அழகு குறிப்புகளையும் பற்றி நாம் இந்தக் கட்டுரையில் கூற போகிறோம்.




அது மட்டுமல்ல இத்தகைய ஆரோக்கியமான அழகு தரும் பொருட்களை நீங்கள் வாங்க விரும்பினால் முற்றிலும் கலப்படமில்லாமல் அரசு அனுமதி பெற்று வீட்டிலேயே வைத்து இத்தகைய பொருட்களை தரமான முறையில் தயார் செய்து சிறிதும் கலப்படமில்லாமல் குறைவான விலையில் விற்கும் நபர்களைப் பற்றிய தகவல்களையும் தரப் போகிறோம்.

பிறகென்ன இனி உங்கள் கண்ணாடியில் உங்கள் ஏக்க பெருமூச்சு வரப்போவதில்லை .பின் வரும் விஷயங்களை படியுங்கள்! அழகு குறிப்புகளை பாலோ செய்யுங்கள், பொருட்களை வாங்குங்கள்: உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.




கஸ்தூரி மஞ்சளின் – மருத்துவ குணங்கள்

◆கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமாக இருக்கும். தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

◆அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் அதிகளவில் உதவுகிறது.

◆கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.

◆பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் வராமல் தடுக்கும்.

◆கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தினால் கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

◆கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுத்து, இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை சரியாகும்.

◆கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

◆கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

◆கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் சரியாகும்.




கஸ்தூரி மஞ்சளின் அழகு குறிப்புகள்

◆சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் பாதுகாக்கும்.

◆இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளரும். இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகமும் பொலிவு பெரும்.

கஸ்தூரி மஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொழிவு பெரும். இதனை  தினமும் செய்து வர வேண்டும்.

கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப்  பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும்.

முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம்  கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.




இதுவரை சொன்னது மட்டும் தான் இதன் பலன்கள் என்று நினைத்து விடாதீர்கள். இது சும்மா சாம்பிள் தான் மெயின் பிக்சர் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணுங்கள் கஸ்தூரி மஞ்சளை முழுமையாக அலசி ஆராய நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை உபயோகப்படுத்தி பார்க்க நினைப்பவர்கள் சிறிய அளவில் பெரிய தரத்துடன் குறைந்த விலையில் அரசின் தரச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்யும் நபரின் தொலைபேசி எண்ணை இதனுடன் இணைத்து இருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள். நாளை மற்றொரு பதிவுடன் பார்க்கலாம். Ph.no:9488731404




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!