Cinema Entertainment

பாடல் பிறந்த கதை(எந்த ஊர் என்றவனே )

ஏ.சுப்பராராவ் இயக்கத்தில் 1963 இல் வெளிவந்த குடும்பப்பாங்கான திரைப்படம் காட்டு ரோஜா.மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. எம்.எஸ்.சோலைமணி எழுதிய கதைக்கு என்.பத்மநாபன் மற்றும் ஜி.தேவராஜன் ஆகிய இருவரும் வசனங்களை எழுதியுள்ளனர்.இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? என்ற பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

கண்ணதாசன் வரிகளில், கேவி மகாதேவன் இசையில் பிபி ஸ்ரீனிவாஸ் பாடிய அற்புதமான பாடல் இது. இப்பாடலை கண்ணதாசன் தனக்கு நடந்த சம்பவத்தை வைத்து தான் எழுதி இருப்பார். இந்த பாடலுக்கான காட்சியையும் உணர்வையும் இயக்குனர் ஏ.சுப்பராராவ் கண்ணதாசனிடம் எடுத்துக் கூறுகிறார். இந்த காட்சியை கேட்டவுடன் கண்ணதாசனுக்கு தன் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.




அதில் ஒன்று இவர் தன் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்ற சமயத்தில் நன்கு குளித்துவிட்டு ஒரு இளைஞர் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை கண்ணதாசனின் நண்பர் ஒருவர் இறங்கி சென்று அந்த இளைஞருக்கு உதவி செய்ய சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அந்த இளைஞரை எந்த ஊர் என்று கேட்டவுடன் நான் பிறந்த ஊரை சொல்லட்டுமா? வளர்ந்த ஊரை சொல்லட்டுமா? இல்லை இப்போது இருக்கின்ற ஊரை சொல்லட்டுமா? என கேள்வி கேட்டுள்ளார். இது கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த சம்பவத்தை வைத்து சில வரிகளையும் அவர் எழுதி விட்டார்.

அதேபோல அண்ணாவை சந்தித்த தருணத்தில் அண்ணா அங்கு வந்த ஒருவரிடன் நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டவுடன் கரூரில் இருந்து வருகிறேன் என்று சொல்லவும் அவர் அனைவரும் கருவூரில் இருந்து தான் வந்திருக்கிறோம் என நகைச்சுவை செய்துள்ளார். இதையும் மனதில் வைத்துக் கொண்டு கண்ணதாசன் ஒரு பாடல் வரிகளாக எழுதி வைத்துக் கொண்டார்.

தற்போது இந்தப் படத்தில் இதே போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டதால் இந்த பாடலுக்கு அந்த வரிகளை போட்டால் சரியாக இருக்கும் என கண்ணதாசனின் உதவியாளர் சொல்கிறார். இதனை கேட்ட கண்ணதாசன் ஆமாம் என சொல்லி அந்த பாடல் வரிகளை உதவியாளரை தேட சொல்லி எடுத்து வந்து இந்த படத்திற்கான பாடலாக கொடுக்கிறார். கண்ணதாசன் இந்த பாடல் வரிகளை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் அருமையான பாடல் என கூறி பாடலுக்கு இசை அமைத்து இருப்பார்கள். இப்பாடல் இப்படி தான் உருவானது.




பாடல் வரிகள் இதோ:

எந்த ஊர் என்றவனே,
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!