Serial Stories கடல் காற்று நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

கடல் காற்று-19

 ( 19 )

” பதில்ஹலோ  சொல்லும் நாகரீகம் கூட இல்லாமல் எழந்து போனாயே …?” நினைவூட்டினான் .

” ஆஹா நீ அன்று என் மதிப்பில் மிக உயர்ந த இடத்தில் இருந்தாய் பார் .உன்னிடம் கைகுலுக்கி பேச ….” வெறுப்பை உமிழ்ந்தாள் .

” விடு நல்லவன் பட்டம் எனக்கு தேவையில்லை .இப்போது உனக்கு என்ன வேண்டும் ? “

” லாவண்யாவை என்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் . சாயாதேவியை அவள் முதல் கணவனுடன் சேர்ந்து வாழ விட வேண்டும் .இதுதான் என் கோரிக்கைகள் .இதற்கு சம்மதமென்றால் இப்போதே வந்து என் புகாரை திரும்ப வாங்கிக் கொண்டு பாட்டியை விடுவிக்கிறேன் ” பயமின்றி அவன் கண்களை நேரடியாக சந்தித்தபடி கூறினாள. .

” இந்த இரண்டு நிபந்தனைகளிலும் நேரடியாக பாதிக்கப்படுவது நான் .பின் ஒரு பாட்டிக்காக இதனை நான் ஒத துக் கொள்வேனென எப்படி நினைக்கிறாய் சமுத்ரா ” சாதாரணமாக கேட்டான் .

திக்கென்றது சமுத்ராவிற்கு .உண்மைதானே …இதனை எப்படி இந்த வில்லனிடம் அவள் எதிர்பார்க்க முடியும் ? இது ஏன் எனக்கு உறைக்கவில்லை ..?சிறு டென்சனுடன் கை விரல் நகத்தை கடிக்க துவங்கினாள் .
அவளருகே நெருங்கியவன் வாயிலிருந்த அவள் கைகளை எடுத்து விட்டான் .” நகம் கடிப்பது கெட்ட பழக்கம் . இனி செய்யாதே .உனக்கு அவ்வளவு டென்சன் தர நான் விரும்பவில்லை .உன் நியந்தனைகளுக்கு நான் சம்மதிக்கிறேன். வா ஸ்டேசனிற்கு போய் பாட்டியை விடுவித்து வரலாம் ” என்றான் .

” ஆனால் நான் எப்படி உங்களை நம்புவது …? தன் கைகளை அவன் கரங்களிலிருந்து உருவிக் கொண்டாள் .

” நம்பித்தான் ஆக வேண்டும் சமுதரா .இப்போது இல்லையென்றால் வேறு வழியில் பாட்டியை விடுவிக்க என்னால் முடியும். ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம் .நீ வந்தால் வேலை உடனே முடியும் அவ்வளவுதான் .”

வாயை இறுக மூடியபடி காரில்  அவனருகில் அமர்ந்து கொண்டாள் .டிரைவர் காரை ஓட்டியதால் வேறொன்றும் பேசாது வந்தாள் .காவல்நிலையத்தில்  யோகனுக்கு இருந்த மரியாதை சமுத்ரா எதிர்பார்த்ததுதான் .ஆனாலும்  தவறுகளை மட்டுமே செய்து வாழ்ந்து கொண் டிருப்பவனுககு அரசாங்கத்திலிருந்து இவ்வளவு மரியாதையா ? என வெறுப்பாக இருந்த்து .

இவர்களை பார்த்ததும் அவசரமாக எழுந்து வாசலுக்கு வந்த இன்ஸ்பெக்டர் ” வணக்கம் ஐயா .நான் அப்பவே சொன்னேன் .இந்த பொண்ணுதான் கேட்கவே மாட்டேனென்று ….” என று ஆரம்பித்தார் .

ஒரு நாற்காலியை முதலில் வசதியாக இழுத்து போட்டு , ” நீ உட்காருடா ..சமுத்ரா ..்” என அவளை உபசரித்து அவள் அமர்ந்த்தும். பின் தானும் அமர்ந து கொண்டு ” ம் …சொல்லுங்க என்னவோ சொன்னீர்களே …” என்றான் .

” வந்து ….மேடம் …அவர்களுக்கு ..உங்களை பற்றி அவ்வளாக தெரியவில்லை சார் ..அதனால்தான் கொஞ்சம் அப்படியிப்படி நடந்துவிட்டார்கள் .வாபஸ் கூட நானே எழுதி வைத துவிட்டேன் .மேடம் ஒரு கையெழுத்து போட்டால் போதும் .இந்தாங்க மேடம் பேனா …” பவ்யமாக பேனாவை நீட்டினார் .

இவளை நன்றாக போட்டுக் கொடுக்க வேண்டுமென்ற அந்த இன்ஸ்பெக்டரின் நினைப்பை தனது ஒரு சிறிய செய்கையின் மூலம் மாற்றி விட்ட யோகனின் சாமர்த்தியத்தை வியந்தபடி கையெழுத்திட்டாள் .மேலும் அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து வெளியே வந்து நின்று கொண்டாள் .

” ஏன்டியம்மா நான் உனக்கு என்ன பாவத்த செஞ்சேன் .இந்த தள்ளாத வயசுல என்ன இப்படி உள்ள கொணாந்து வந்து ஒக்கார வச்சுட்டியே …நீயெல்லாம் நல்லாருப்பியா …? ” அழுகையுடன் கைகளை ஆட்டி சாபமிட  தயாரானாள் கிழவி .

” பாட்டி …” அதட்டியபடி பின்னால் வந்து நின்றான் யோகன் .” அவர்கள்தான் உங்களை இப்போது வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள்.தவறை நீங்கள் செய்துவிட்டு சாபத்தை அவர்களுக்கு  கொடுக்கிறீர்களா ? முதலில் இனி இப்படி செய்ய மாட்டேனென அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள் …” கடும் மிரட்டல் அவனிடம் .

” ஐயோ தப்புதானுங்கய்யா , தாயி என்னய மன்னிச்சிடும்மா …ஏதோ வயசான காலத்துல புத்தி கெட்டு போயி இப்படி செஞ்சுட்டேன் ” கை கூப்பினாள் கிழவி .

” ஐயோ மன்னிப்பெல்லாம் வேண்டாம் பாட்டி .இனி இது போன்ற தவறெல்லாம் செய்யாமல் இருங்கள் .அதுவே போதும் .” கூப்பிய கிழவியின் கரங்களை பிரித்து விட்டாள் சமுத்ரா .

” ஆமாம் பாட்டி .அப்படி இனியொரு தடவை இந்த தவறு செய்தீர்களானால் மேடம். உங்களை சும்மா விட மாட்டார்கள் .இனி இருபத்தி நான்கு மணி நேரமும் மேடம் உங்களை கண்காணித்தபடியே இருப்பார்கள் “

இவனெதற்கு இப்படி பேசுகிறானென புரியாமல் அவனை பார்த்தாள் . அந்த நேரம் அவனும் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான் .இவளது பார்வையை சந தித்ததும் சட்டென கண் சிமிட்டினான் .உள்ளம் படபடக்க அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள் .ஏதோ ஒரு பயப்பந்து உருண்டது அவள் வயிற்றில் .

பாட்டியையும காரிலேற்றிக் கொண்டு கிளம்பினர் .கடற்கரையோரம் வந்ததும் காரை ஓரமாக  நிறுத்த சொன்னவன் சமுத்ராவை இறங்க சொல்லிவிட்டு  தானும் இறங்கினான் .” அப்துல் பாட்டியை அவுங்க வீட்டில். விட்டுட்டு வா ்நாங்க இங்க பேசிட்டிருக்கோம் ” என அனுப்பினான் .

” வா சமுத்ரா உன்னுடன் பேச வேண டும் .” முன்னால் நடந்தான் .சற்று உட்புறமாக சென்றதும் ஒரு சுத்தமான இடத்தில் அமர்ந்த்து கொண்டு அவளுக்கு எதிரில் கை காட்டினான் .அவளும் அமர்ந்தாள் .

ஏதோ கடினமான விசயம் பேசுபவன் போல் அமைதியாக மண்ணை அள்ளி அள்ளி கை வழியாக கீழே விட்டான் .அவனது அந்த நிலைமை எரிச்சலை தர தூரத்தில்  சாலையில் போகும் வாகனங்கள் பக்கம் பார்வையை  திருப்பிக் கொண்டாள் .பஸ் வந்து நிற்கவும் , பயணிகள் ஏற இறங்கவுமாக அங்கே பரபரப்பாக இருந்த்து .

இன்னமும் யோகனின் நிலையில் மாற்றமில்லாது போக ” எப்போது லாவண்யாவையும் , சாயாதோவியின் கணவனையும் வர வைக்க போகிறீர்கள் ? ” கோபமாக கேட்டாள் .

” எதற்கு …?” நிதானமாக தலையை நிமிர்த்தாமலேயே பதில் கேள்வி கேட்டான் அவன் .

” எதற்கா …? உறுதி கொடுத்தது மறந்து விட்டதா ? “

” நானா ..?என்ன உறுதி …?யாருக்கு ….?எப்போது கொடுத்தேன் ….?” கேள்விகளை அடுக்கினான்.

படபடக்கும் நெஞ்சோடு ” இப்படியெல்லாம் பொய் கூறுவீர்களா ? ” நம்ப முடியமல் கேட்டாள் .

” கண்டிப்பாக …எனக்கு தேவையென்றால் இப்படியெல்லாம் மட்டுமல்ல எப்படியெல்லாமோ பொய்கள் கூறுவேன் ….” அழுத்தந்திருத்தமாக அறிவித்தான் .

சாயாதேவி பிரச்சினையை முடித்துவிட்டு , லாவண்யாவை கையோடு அழைத்துக் கொண்டு , தனது பத்திரிக்கை பணிகளையும் முடித்துக் கொண்டு  இன்னமும் ஒரு வாரத்தில் இங்கிருந்து கிளம்பி விட வேண்டுமென எண்ணியிருந்தாள் சமுத்ரா .

” எவ்வளவு பெரிய அநியாயம் …? சை …ஒரு பெரிய மனிதன் வேலையா நீங்கள் செய்வது …?” ஆத்திரத்தில் குரல் நடுங்கியது .

” யார் பெரிய மனிதன் ? நானா …?அப்படியென நீயாக சொல்லிக் கொண்டால் நானென்ன செய்வது ? ” நிதானமாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான் .

” அப்போது …சாயாதேவி …லாவண்யா விசயத்தில் எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்க போவதில்லை …?” இறுதியாக ஒட்டிக் கொண்டிருந்த சிறு நம்பிக்கையுடன் கேட்டாள் .

” நிச்சயம் இல்லை …” புகையை உறிஞ்சி வெளியே விட்டபடி உறுதியாக கூறினான் .

ஆத்திரம் தலைக்கேற ” நீ…நீ…பெரிய ஏமாற்றுக்காரன் .என்னை நன்றாக ஏமாற்றி விட்டாய் .சொல்லு …லாவண்யாவை உயிரோடு விட்டு வைத்திருக்கிறாயா ? இல்லை கொன்று விட்டாயா ? “கத்தினாள் .




” உஷ் ..அமைதியாக இரு .ஏன் இப்படி ஹிஸ்டீரியா நோயாளி போல் கத்துகிறாய் ? ” அதட்டினான் .

ஹிஸ்டீரியாவா …எனக்கா ….?இப்படி அவனிடம் ஏமாந்த்து தன்னிரக்கமாக மாறி தாக்க முகத்தை கைகளால் மூடியபடி அப்படியே மணலில் மண்டியிட்டு அமர்ந்தாள் .உள்ளங்கை கண்ணீர் கறை படிய துவங்கியது .

சிறிது நேரம் அவளை வெறித்து பார்த்தவன் சிகரெட்டை எறிந்துவிட்டு அவளை அணுகினான் .முகம் மூடியிருந்த அவள் கைகளை பற்றியபடி ” உஷ் …முத்ரா என்ன இது ? ஒரு சாதாரண பெண் போல இப்படியா உடைவது …ம் ..நான் உன்னை பெரிய வேலைகளெல்லாம் செய்யக்கூடிய அளவிற்கு மிக தைரியமான பெண்னென எண்ணிக் கொண்டு டிருக்கிறேன் …எழுந்திரு …” என்றான் கனிவுடன் .

முந்தைய அலட்சியமும் , இந்த கனிவும் ஒன்றும் புரியவில்லை சமுத்ராவிற்கு .ஆனால் இவன் முன் இப்படி பலவீனமடைந்து விட்டோமே என சிறிது அவமானமாக உணர்ந்தாள் .கைகளினாலேயே முகத்தை அழுந்த துடைத்து கண்ணீரை மறைத்தாள் .உறுதியான மனதுடன் எழுந்து நின்றாள் .

திருப்தியுடன் ” குட் …,” என்றான் .

அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் நடக்க எத்தனித்தவளை ” உன் எதிர்பார்ப்புகளெல்லாம் நிறைவேற வேறு வழிகளும் இருக்க கூடும் சமுத்ரா ” என்றான் .

இன்னும் வேறென்ன குண்டு போட போகிறான் …சிறு பயத்துடன். அவனை பார்த்தாள் .

” உன் எதிர்பார்ப்புகளையெல்லாம் நான் அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேற்றுகிறேன் .என் ஒரே ஒரு நிபந்தனைக்கு நீ சம்மதிக்கும் பட்சத்தில் “

இமையோரம் சுருங்க ” என்ன நிபந்தனை அது …?” என்றாள் .

” இந்த குப்பத்து மக்களை கவனித்திருப்பாய் .அவர்களின் கீழ்மட்ட வாழ்க்கையை உணர்ந்திருப்பாய் .நான் அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற சில காலமாக முயன்று கொண்டிருக்கிறேன் .ஆனால் அது என் ஒருவனால் மட்டும் முடியாதென்பதை சமீபமாக உணர தொடங்கியிருக்கிறேன்…அத்தோடு இந்த பெண்களின் நிலைமை மிக பரிதாபமாக உள்ளது .அதனை மாற்ற என்னாலான …”

அவன் கூறிக்கொண்டிருக்கையிலேயே சிறு அலட்சியத்துடன் நீயெல்லாம் முன்னேற்றி ஒரு சமுதாயம் முன்னேற வேண்டியிருக்கு பாரேன். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல என்பதான நக்கல் பார்வையுடன் அவனை பார்த்தாள் சமுத்ரா .

அந்த பார்வையை தயங்காமல் எதிர் கொண்டவன் ”  நான் கெட்டவன்தான் .பெண்கள் விசயத்தில் பலவீனமானவன்தான் .ஆனால் இந்த மக்கள் விசயத்தில்எனது தகாத குணங்களை சேர்க்காதே .இந்த பெண்கள் அனைவரும் எனது உடன்பிறப்பிற்கு ஒப்பானவர்கள்.அவர்கள் நிலைமை என் கண்களில் கண்ணீர். வர வைக்கிறது .என்னால் ஓரளவிற்கு மேல் இறங்கி சென்று அவர்களுக்கு உதவ முடியவில்லை .அதற்கு ஒரு பெண் அவசியம் …” என நிறுத்தினான் .

” அதனால் ….? ” கேள்வியுடன் நோக்கினாள் .

” அதனால் நீ அவர்களுக்கு உணர்த்த வேண்டும் . உடனிருந்து வழி காட்ட வேண்டும் ..்”

” நிச்சயம் என்னால் முடிந்த வரை அதனை செய்வேன் .” மனதார கூறினாள் .

” ஒரு வாரத்தில் இங்கிருந்து கிளம்ப போகிறவள் என்ன செய்வாய் ..?”

” நான் அடிக்கடி இங்கே வந து ….”

” இதெல்லாம் நடக்காத காரியம் என று உனக்கே தெரியும் ..”

” பின் நானென்ன செய்வது …?”

” நீ இங்கேயே தங்கியிருந்து இந்த நல்ல காரியங்களை செய்ய வேண்டுமென நினைக்கிறேன். “

” இல்லை …அதெப்படி …முடியாது ..எனது ஊர் சென்னை …வேலை அங்கேதான் .நானெப்படி இங்கே ..? முடியாது …”

” உனது ஊர் , வேலை எல்லாம் இங்கே மாற்றி க் கொண்டால் …”

” அது எப்படி …..?” கேட்கும் போதே ஏனோ வயிற்றில் புளியை கரைத்தது சமுத்ராவிற்கு




” என்னை திருமணம் செய்து கொண்டாயென்றால் எளிதாக இந்த ஊர் உனதாகிவிடும் .நீயும் இங்கே வேலை பார்க்கலாம் ” மிக சாதாரணமாக சாப்பிடலாம். வா என அழைப்பது போல் இதனை கூறினான் .

ஆழ்ந்து வீசும் கடற்கரை காற்று அவன் சொற்களை தப்பு தப்பாக தன் காதுக்கு கடத்துகிறதெனத்தான் நினைத்தாள் சமுத்ரா .காதுகளை நன்றாக தேய்த்து விட்டு கொண்டாள் .

” ம் …சொல்லுங்கள் …” என்றாள் .

” என்னை திருமணம் செய்து கொண்டு இந்த ஊரிலேயே செட்டிலாகி விடு என சொல்லிக் கொண்டிருந்தேன் ” அதிகாரம் அவன் குரலில் .

” உனக்கென்ன புத்தி பிசகி விட்டதா ? இதற்கு நான் எப்படி சம்மதிப்பேன் என நினைக்கிறாய் ” ஆர்ப்பரித்த மனதினை அடக்கியபடி கேட்டாள்

” இதுதான் முடிவென்றானபின் சம்மதமெதற்கு …?”

முடிவு …? யார் வாழ்விற்கு யார் முடிவெடுப்பது …?குமுறியபடி ” ஏன் …? எதற்கு …? இந்த முடிவு …?இந்த மக்களுக்காக என கூறாதே ….அவ்வளவு நல்லவனில்லை நீ …” மிக கடினப்பட்டு நிதானமாக வார்த்தை கோர்த்தாள் .

” ம் …குட் …நிறைய நேரங்களில் சரியான இடங்களை
தொட்டு விடுகிறாய் …” என்றபடி தனது இதயத்தை வருடிக் கொண்டான் அவன் .

” எனக்கு பதில் வேண்டும். ” கறாராக அவன் முகம் பார்த்தாள் .

மெல்ல அவளை நெருங்கி அவளுக்கு மிக அருகே நின்றான் .என்ன பயமுறுத்துகிறாயா ? என்ற பார்வையுடன் சமுத்ராவும் அசையாது அவனை வெறித்தாள் .

” என்னுடைய நிறைய ரகசியங்களை நீ தெரிந்து கொண்டாய் சமுத்ரா .உன்னை இனி நான் சுதந்திரமாக விட முடியாது …” சாதாரணம் போல் தோன்றினாலும் எஃகினை ஒத்திருந்த்து குரல் .

இதற்கா..?இந்த அற்ப விசயத்திற்காகவா …என்னை ஆயுள் முழுவதும் அடிமையாக்க நினைக்கிறான் .

” நான் மறுத்தால் …? ” முடிந்தளவு நிதானமாகவே கேட்டாள் .

” ஹா …அது உன்னால் முடியாது … சாயாதேவி …வேண்டாம் அவளை விட்டுவிடு ….லாவண்யா வேண்டாம் உனக்கு …அவளை இதுவரை உயிரோடுதான் வைத்திருக்கிறேன் ” மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான் .

இதுவரை காட்டி வந்த பொறுமை பறக்க ” நீயெல்லாம் ஒரு மனுசனாடா …? இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடுவாய் ..?இதற்கு இந்த மக்களுக்காக போராடுவதாக ஒரு பெயர் வேறு …? ” தனை மறந்து அவன் சட்டையை பற்றி ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உலுக்கு உலுக்கினாள் .

முதலில் பொறுமையாயிருந்தவன் நேரம் செல்ல செல்ல அவளது உலுக்கல் அதிகமாக கோபத்துடன் அவளை பற்றி தள்ளினான் .அவன் தள்ளிய வேகத்தில் தடுமாறி கீழே விழ இருந்தவளை ஆதரவாக தாங்கின ஒரு தோள்கள் .

நிமிர்ந்து பார்த்தவள் ” தனா …” என்ற கேவலுடன் அவன் தோள் சாய்ந்தாள் .ஆதரவாக அவள் தோளணைத்தவன் ஆத்திரத்துடன் யோகனை நோக்கினான் .

அவர்களிருவரையும் ஒரு உக்கிர பார்வையால் எரித்தபடி விசமுண்ட நீலகண்டனாய் நின்றிருந்தான் யோகன் .




What’s your Reaction?
+1
15
+1
14
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!