Serial Stories ஓ…வசந்தராஜா…!

ஓ…வசந்தராஜா…!-15 (நிறைவு)

15

பட்டுச்சேலையை அடுக்கடுக்காய் அமைத்து தோள் பக்க ஜாக்கெட்டோடு சேர்த்து பின் செய்த போது பிளாஸ்டர் ஒட்டியிருந்த காயம் சுரீரென வலித்தது.பல்லைக் கடித்து பொறுத்தபடி சேலையை பின் செய்து முடித்த அஸ்தியினுள் கவலை மழைக்கால மேகமாக திரண்டிருந்தது.

கழுத்தில் பட்டிருக்க வேண்டிய வெட்டு.அப்படி பட்டிருந்தால் நிச்சயம் அதே இடத்தில் மரணம்.ஆனால் அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை.திடீரென வசந்த் அங்கே வந்திருந்தான்.அவளை பிடித்து தன் பக்கம் இழுத்திருந்தான்.கழுத்துக்கு குறி வைத்த கத்தி அவள் தோள்பட்டையை லேசாக சிராய்த்து நகர்ந்தது. 

தன்னை இழுத்தவன் பக்கம் திரும்பிய அஸ்வதி “வசந்த்..” என்ற கதறலுடன் அவன் மார்பில் தஞ்சம் புக அவளை இறுக அணைத்துக் கொண்டவன்,மீண்டும் கத்தியை உயர்த்திக் கொண்டு வந்தவனின் கையை பிடித்து நிறுத்தினான்.

“யார் இவர்கள்?” இவளிடம் கேட்டான்.

“அத்தானின் சொந்தக்காரர்கள்…மாமா பெண்… திருமணம் செய்யாததால்… திருமணத்தை நிறுத்த முயல்கிறார்கள்”.தந்தியாய் படபடத்தாள்.

“இதையெல்லாம் முன்பே சொல்லமாட்டாயா? உன் கழுத்திற்கே கத்தி வைக்கிறான் இவனை…”என்றவன் பற்றியபற்றியிருந்த கையை அழுத்தி அவனை கத்தியை கீழே போட வைத்துவிட்டு அப்படியே சுழற்றி அந்தரத்தில் தூக்கி எறிந்தான்.

“நீ உள்ளே போய் காயத்திற்கு மருந்து போடு.இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்” கீழே விழுந்து கிடந்தவனை நோக்கி மத யானையாய் போனவனை பெருமையாக பார்த்தாள்.

” வசந்த் அவர்களை விட்டு விடாதீர்கள்.அக்காவின் கல.யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும்” 

“ம்…நீ…போ” என்றபடி விழுந்தவனை நெருங்கினான்.

அஸ்வதி உள்ளே போய் தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டு வெளியே வந்து பார்த்த போது வெளியிடம் வெறிச்சிட்டிருந்தது.அஸ்வதிக்கு துணுக்கென்றது.

வசந்தின் பலத்தின் பின்னால் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவர்கள் தாக்குபிடிக்க மாட்டார்களென்றே அவள் கணித்திருந்தாள்.ஆனால்…இங்கே என்ன நடந்தது? யாரையும் காணோமே…அவள் பதறி நின்ற போது மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது.

கல்யாண நாளுக்குரிய பரபரப்பு தொடங்கி விட அஸ்வினியால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.”அக்கா” என்று விம்மலோடு சகோதரியின் மடியில் தஞ்சமடைந்தாள்.விதார்த்தின் வீட்டினர் உள்ளே வர இருவரும் அமைதியானார்கள்.




புடவை கட்டி முடித்த அஸ்வினி அக்காவின் அறைக்குள் நுழைந்தாள்.மேக்கப் பெண்ணிற்கு முகத்தை கொடுத்திருந்த சைந்தவியின் கண்கள் சிவந்திருந்தன.”ஏதாவது விபரம் தெரிந்ததா?” தங்கையிடம் கேட்டாள்.

“இல்லை அக்கா .அவரை போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.ஆனால் பயப்படாதே .ஒன்றும் நடந்திருக்காது.உன் திருமணம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்”ஆதரவாக தன் தோளணைத்த தங்கையின் உடலிலிருந்த நடுக்கத்தை உணர்ந்தாள் சைந்தவி.

“ஒரு நிமிடம் எலலோரும் வெளியே இருங்களேன்”சுற்றியிருந்த உறவினர்களை அகற்றினாள்.”அஸ்ஸு நீ போய் அத்தானை இங்கே அழைத்து வா”

“இப்போது..எதற்கு அக்கா?”

“நிறைய நடந்து விட்டது அஸ்ஸு. இனியும் அவரிடம் மறைப்பது சரியில்லை.நடந்தவற்றை அவரிடம் சொல்லி விடலாம்.எங்கள் திருமணம் நடப்பதென்றால் நடக்கட்டும்…இல்லையென்றால் என் விதியென இருந்து விட்டு போகிறேன்”

“வேண்டாம் அக்கா.அவசரப்படாதே…நிதானமாக யோசிக்கலாம்”

“இவ்வளவு நாட்களாக ரொம்ப நிதானமாக இருந்து விட்டோம்.இனியும் மௌனமாக இருந்து ஒரு நல்ல உயிரை இழந்து விடக் கூடாது.போடி…”பெரியவளாக அக்கா அதட்ட தங்கையாக கீழ்படிந்தாள் அஸ்வினி.

அக்காவும் தங்கையும் சொன்னவற்றை கைகளை கட்டியபடி நின்று கேட்டு முடித்தான் விதார்த்.”ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை சைது?” அவன் கேள்விக்கு விம்மினாள் சைதன்யா.

“ஏற்கெனவே நமக்குள் வேறு பிர்ச்சனைகள்.இதனையும் சொன்னால் எங்கே என்னை வெறுத்து விடுவீர்களோ என்றுதான்… “விதார்த் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

” இதுபோல சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் கரைந்து போகக் கூடியதா நம் காதல்? எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லி விட வேண்டாமா?”விதார்த் கேட்க, இதையெல்லாம் சொல்ல மாட்டாயா என்று வசந்த் கேட்டது அஸ்வினிக்கு நினைவு வந்தது.

இருவரின் பதட்டமும் ஒன்றுதான்,அவரவர் காதலுக்காகத்தான் என உணர்ந்தாள் அஸ்வினி.

” தப்புதான் அத்தான், எல்லாவற்றையும் உங்கள் இருவரிடமும் சொல்லியிருக்க வேண்டும்.இப்போது அவருக்கு என்னவாயிற்று என்று பார்க்க வேண்டும்” முகம் வியர்த்து பயந்து நின்றவளை விதார்த் யோசனையாய் பார்த்தான்.

” அஸ்வதி மனதிற்குள் வசந்த் இருக்கிறார்” என்றாள் சைந்தவி. 

“ஓ..அப்படியென்றால் நிதானம் சரி வராது.அதிரடியாக இறங்க வேண்டியதுதான். திருமணத்தை அடுத்த முகூர்த்தத்திற்கு தள்ளி வைத்து விடலாம்.இப்போது வசந்த் விஷயம் பார்க்கலாம். மண்டப வாசலில் உள்ள கேமராவை பார்த்தால் நடந்தது தெரிந்துவிடும்” விதார்த் வேகமாக மண்டப வாயிலுக்கு வர ஓசையின்றி வந்து நின்ற கறுப்பு நிற தோர் ஜீப்பிலிருந்து புன்னகையுடன் இறங்கினான் வசந்த்.

“என்ன இது பொண்ணு மாப்பிள்ளையும் மேடையில் இல்லாமல் வாசலில் நிற்கிறீர்கள்?” சாதாரணமாக விசாரித்தவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தாள் அஸ்வினி.எந்த பழுதும் இன்றி ஆறடி உயரத்திற்கு முழுதாக நிமிர்ந்து நின்றான் வசந்த். 

“சார் உங்களுக்கு ஒன்றும்…”விதார்த் அவன் கைப்பற்றி விசாரிக்க, “எனக்கு ஒன்றுமில்லை, வாங்க முகூர்த்தம் முடிவதற்குள் கல்யாணத்தை முடிக்கலாம்”

 குறித்த நேரத்தில் விதார்த் சைந்தவியின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டி மனைவியாக்கிக் கொண்டான். பூக்களினால் மணமக்கள் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்க அஸ்வினி வசந்தின் சட்டைக் காலரை பிடித்து மணமகள் அறைக்குள் இழுத்துப் போனாள்.

“ஏய் என்னாச்சு? முத்தம் வேணும்னா நேரடியாக கேட்கனும் அஸ்வா…இதென்ன அடிதடி…?”

“உங்களை…” அஸ்வினி அவன் மார்பில் குத்து,” எல்லோரும் இருக்கும்போது என்னை மட்டும் இப்படி அறைக்குள் இழுத்து வந்தால் நான் என்ன நினைக்கட்டும் சொல்லு…” தன் குறும்பான சீண்டலை தொடர்ந்தான் வசந்த்.

“முத்தமெல்லாம் இல்லை..மொத்துதான் கிடைக்கும்” படபடவென தன் குத்தலை தொடர்ந்தாள்.”எங்கே போனீங்க?”

” ஆ..ஆ…பிசாசே எனக்கு அடி பட்டிருக்குதுடி..” 

“ஐய்யோ…எங்கே…?”

வசந்த் சட்டையின் மேல் மூன்று பட்டன்களை சுழற்றி இறக்கி கையை காட்டினான்.”லேசாக அடிபட்டுவிட்டது அஸ்வா. திருமண நேரத்தில் அபசகுனம் போல் ரத்தக்காயத்துடன் இருக்க வேண்டாம் என்று ஹாஸ்பிடலுக்கு போய் விட்டேன்”

” என்னிடம் சொல்லிவிட்டு போயிருக்கலாமே” அவன் காயத்தை கண்கலங்க வருடினாள்.

” என் போன் எங்கேயோ விழுந்து விட்டது. தேடிக் கொண்டிருக்க நேரமில்லை.முகூர்த்த நேரத்திற்கு வந்து விட வேண்டும் என்று நினைத்து அவசரமாக போய்விட்டேன். உன் அக்கா திருமணத்தை தடங்கல் இல்லாமல் நடக்க வைத்து விட்டேன் அஸ்வா”

” எனக்காகவா…?” தளுதளுத்த குரலில் அவள் கேட்க, “உனக்காக மட்டும் தான்” என்றான்.

“ஏனோ.. நீங்களே திருமணத்தை நிறுத்தும் ஐடியாவில் தானே இருந்தீர்கள்?”




அவள்  கன்னத்தின் மேல் தன் கன்னத்தை பதித்து அவளது  கண்ணீரை துடைத்தபடி சொன்னான். “எல்லாம் கூடி வந்து அவர்களும் மனம் ஒத்து இணையும் ஒரு திருமணத்தை நிறுத்த எனக்கு என்ன பைத்தியமாடி?” 

” ஆனால் நீங்கள் அப்படித்தானே எங்களை மிரட்டிக் கொண்டே இருந்தீர்கள்?”

” ஆமாம் அக்காவும் தங்கையும் சேர்ந்து செய்த தப்பிற்கு ஒரு சிறு தண்டனை கொடுக்க நினைத்தேன். வெறும் மிரட்டல் மட்டும்தான். ச்ச்சும்மா…” என்று அவன் கண்களை சிமிட்ட 

“தெரியாமல் தப்பு செய்து விட்டோம் சார். மன்னித்து விடுங்கள்” என்றபடி உள்ளே வந்தாள் சைந்தவி.

” ஆமாம் சார் தெரிந்தோ தெரியாமலோ இதற்கு நானும் உடன் போய்விட்டேன். என்னையும் மன்னித்து விடுங்கள்” கைகட்டி பணிவாய் நின்றான் விதார்த்.

 வசந்த் அஸ்வினியிடம் இருவரையும் கண்களால் காட்டினான். “பார்த்தாயா மனைவிக்கு கணவனின் சப்போர்ட்டை. இவர்களைப் போய் பிரிக்க நினைப்பேனா?”கண்களில் நீர் வழிய நேர்மாறாக இதழ் பிரித்து சிரித்தவளை ஆசையாக பார்த்தான். 

“அந்த வீடியோக்களை சமையல் குறிப்புகளை எல்லாவற்றையும் டெலிட் செய்து விடுகிறேன் சார்” சைந்தவி சொல்ல “வேண்டாம்” என்றான் வசந்த்.

” அவையெல்லாம் உங்கள் திருமணத்திற்கு என்னுடைய பரிசு. கனடாவில் நமது ஹோட்டல் பிரான்ச் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு .அதனை நீங்கள் தான் தொடங்கப் போகிறீர்கள். அந்த உணவுகளை அங்கே தயாரித்து விற்க போகிறீர்கள். விரைவிலேயே அதற்கான ஏற்பாடுகளை நான் ஆரம்பிக்க போகிறேன். சைதன்யா இன்னமும் கூட நிறைய புது புது உணவு குறிப்புகள் உனக்கு அனுப்புவேன். பத்திரமாக வைத்துக்கொள்”என்றான்.

“கிரேட் ஆபர்சுனிட்டி சார்.தேங்க்யூ” என்று விதார்த் வசந்தின் கை குலுக்க “யூ ஆர் கிரேட் சார்” என்றாள் சைந்தவி.

 “நீங்கள் இரண்டு பேரும் உடனே வெளியே போய் திருமண விஷயங்களை பேசி முடியுங்கள்”. வசந்த் சொல்ல இருவரும் விழித்தனர்.

” என்ன திருமணம் சார்? யாருக்கு?”

” பார்த்தீர்களா உங்கள் கல்யாணத்திற்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றவில்லையே. மண்டபத்தில் என் அப்பா அம்மாவை உங்கள் அப்பா அம்மாவுடன் பேச ஏற்பாடு செய்திருக்கிறேன் சைதன்யா. நீங்கள் இருவரும் போய் கொஞ்சம் என்னை பற்றி எடுத்து சொன்னீர்களானால் எல்லாம் நல்லபடியாக முடியும்”

” அட இது எப்போது?”எல்லோரும் ஆச்சரியப்பட “இது முதலிலேயே போட்ட திட்டம் தான். திருமணம் முடிந்ததும் இரு பக்கத்து பெற்றோர்களையும் சந்தித்து பேச வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அதற்குள் இந்த எதிர்பாராத சம்பவம்” தன் கைக்கட்டை தூக்கி காண்பித்தான். 

“இதோ இப்போதே போகிறோம் சார்” விதார்த்தும் சைந்தவியும் பரபரப்பாக கிளம்பினர். அவர்கள் சென்றதும் அஸ்வினியை பார்த்து காயமற்ற இடது கையை வசந்த் விரிக்க தயங்காமல் அவன் கை வளையத்திற்குள் சரணடைந்தாள் அஸ்வினி்.

“எப்போது பெங்களூர் கிளம்பும் திட்டம்…?” வசந்த் கேட்க அப்பாவியாய் விழி விரித்தாள்.”பெங்களூரில் எனக்கென்ன வேலை?”

“அட உன் வேலையே அங்குதானேம்மா..” என்றவனின் இதழ் மீது அழுத்தமாக தன்னிதழ் பதித்து மீண்டாள்.” பெங்களூர் போயிடவா?” கிறக்கமாய் கேட்டவளை “ம்கூம்” என இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“உங்களை காயப்படுத்தியவர்களை…”

” அதெல்லாம் போலீசில் பிடித்துக் கொடுத்தாயிற்று.. “

” உங்கள் அம்மா அப்பாவை அழைத்து சம்பந்தம் பேசும் வரை திட்டமிட்டிருக்கிறீர்கள். இதெல்லாம் எப்போது…?” 

“அதற்காகத் தானே மம்சாபுரம் சென்றேன். அப்போதே உறவினர்களிடம் எல்லாம் தெளிவாக பேசி விட்டேன். உன் அக்கா திருமணம் முடிந்ததும் நம் திருமண பேச்சு எடுக்க வேண்டும் என்று எல்லோருக்கும் வசனம் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்து அழைத்து வந்தேனாக்கும்” அவன் பெருமிதமாய் சட்டைக் காலரை உயர்த்தினான்.

” ஓ என் வசந்த ராஜா…” என்று உருகியபடி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் அஸ்வினி.

                               நிறைவு




What’s your Reaction?
+1
37
+1
10
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
9 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!