Uncategorized

உடலென நான் உயிரென நீ-6

6

” சாப்பிடலாம் வா ” இடையில் கார் நின்றிருக்க அவளை அழைத்தான் கணநாதன் .

” நான் …எ…எனக்கு பசியில்லை “

‘ அதெப்படி இல்லாமலிருக்கும் .இறங்கு “

” இ…இல்லை வேண்டாம் …” தடுமாறினாள் .நல்ல வெளிச்சம் வந்து விட்டது .இப்போது இது போல் கோரமான முகத்துடன் அவள் எப்படி வெளியே வருவாள் ?

அவள் முகத்தை சுற்றி வட்டம் போல் காற்றில் வரைந்து காட்டினான். “இதையெல்லாம் செய்து கொள்ள தீர்மானிக்கும் முன் கவலைப்பட்டிருக்க வேண்டும் .இப்போது வெளியே வர கூசி என்ன பயன் ? இறங்கு …” அவனது அதட்டலுக்கு கால்கள் நடுங்க கீழே இறங்கிவிட்டாள் .

ஹோட்டலுக்குள் நுழையும் முன் சேலையால் தலையில் முக்காடிட்டுக் கொள்ள முயன்றவளின் கையை அழுத்திப் பிடித்து தடுத்தவன் , சேலையை இழுத்து முன்னால் கொண்டு வந்து அவள் இடுப்பில் சொருகினான் .

” இனி உன்னை நீயே மறைத்துக் கொள்ளும் காலம் கிடையாது பேபி.  துணிந்து முக்காடிலிருந்து வெளியே வா .புது உலகம் …புது மனிதர்கள். உனக்காக காத்திருக்கின்றனர் ” அவள் கை பற்றி  உள்ளே நடந்தான்.

அவன் சொல்வது ஒன்றும் புரியவில்லை என்றாலும் , அவனது பேபி அவள் மனதை வருடியது. அவனை முதன்முதலில் சந்தித்த போது அப்படித்தான் அவளை அழைத்தான் அவன் .

மணிபால் காஸ்மெடிக் சர்ஜரி் சென்டருக்கு அவள் முதன் முதலாக  வந்தது அம்மாவின் சிகிச்சையின் போது உடன் வந்தது தான் .அங்கே  காத்திருந்த போது , அவளது அம்மா  அவளை ரிசப்சன் சோபாவில் அமர்த்தி விட்டு ஒரு கன்சல்டிங் என டாக்டரின்  அறைக்குள்  போயிருந்தாள் . மதுரவல்லி் போனில் டாக்கிங் டாம் விளையாடிக் கொண்டிருந்தாள் .

” ஹேய் கூ ஆர் யு பேபி ? ” அவள் பின்னால் கேட்ட குரலுக்கு திரும்பிப் பார்த்தவள் , உயரமாக தாடியும் , மீசையுமாக நின்றவனை பார்த்து முகம் சுளித்தாள் .யாரிவன் ? பூச்சாண்டி போல் … இவனுக்கு ஏன் பதில் சொல்லவேண்டும் .முகத்தை திருப்பிக் கொண்டு டாமுடன் பேச ஆரம்பித்தாள் .

” யாருடன் வந்தாய் நீ ? ” அவனது கேள்வி கன்னடத்தில் இருக்க  , கையசைத்து புரியவில்லை என சைகை செய்துவிட்டு விளையாட்டை தொடர்ந்தாள்.

பக்கத்தில் வந்து அவளது விளையாட்டை எட்டிப் பார்த்தவனின் முகத்தில் புன்னகை. . ” வாட் ஆர் யு டூயிங் பேபி்…? “




” ப்ளேயிங் கேம்ஸ் ” பதில் சொன்னபடி போனை திருப்பி் அவனிடமிருந்து மறைத்துக் கொண்டாள் .

 ” ஓ.கே …ஓ.கே. நீ் குட் பேபியாம் . இந்த மாதிரி ட்ரீட்மென்ட் நடக்குமிடமெல்லாம் உனக்கு தேவையில்லையாம் .அதனால் நல்லபிள்ளையாக இங்கிருந்து உங்கள் வீட்டிற்கு  போய் கேம்ஸ் விளையாடுவாயாம் ” ஆங்கிலத்தில் பேசினான் .

குடுகுடுவென தெருவிற்கு ஓடும் குழந்தையை பற்றி இழுத்து மடி மேல் அமர்த்திக் கொண்டு அறிவுரை கூறுவானே பொறுப்பான வழிப்போக்கன். அப்படி இருந்தது அவனது பேச்சு . ஆனால் அன்று மட்டும்தான் அவளிடம் அப்படி குழைவாக பேசினான். பிறகு எப்போதும் அவளிடம் முறைத்தலும் , திட்டுக்களும்தான் .

அதோ அன்றைய நாளுக்கு பிறகு இதோ இப்போதுதான் அவளை அப்படி அழைக்கிறான். முதல் நாள் நெகிழ்வு குரலில் இல்லையென்றாலும் அந்த அழைப்பே அவளுக்கு நெகிழ்வை தருவதாக இருந்தது .ஆற்றிக் கொள்ளவோ , தேற்றிக் கொள்ளவோ உறவோ நட்போ அருகில் இல்லாத அநாதரவான நிலைமையில் கிடைத்த சிறு ஆதரவையும் இறுக பற்றிக் கொள்ள துடித்தது மதுரவல்லியின் மனம் .

” உதட்டில் படாமல் ஸ்பூனால் சாப்பிடு ” இட்லியை பிட்டு துண்டாக்கி அவள் சாப்பிட வசதி செய்து கொடுத்து விட்டு தானும் உண்ணலானான் .

” அவர்  ….? ” தள்ளி அமர்ந்து உண்டு கொண்டிருந்த டிரைவரை காட்டிக் கேட்டாள் .

” மிகவும் நம்பிக்கையானவர். பயப்பட தேவையில்லை. சீக்கிரம் சாப்பிட்டாயானால் சீக்கிரம் கிளம்பலாம் ” கறாரான பேச்சு அவனிடம்.  இதுதான் அவன் பேசும் வழக்கமான பாணி . உணவு பட்டு எரிந்தது உதட்டுக் காயம் .

காரில் ஏறியதும்  ” நகர் ” என அவளை நகர வைத்து அவளருகே உட்கார்ந்து அவள் முகம் தொட்டு தூக்கி இதழ்களை ஆராய்ந்தவன் காயத்திற்கு மருந்து தடவினான்.

” இது …” அவள் கன்னத்தை தொட்டுக் காட்டிக் கேட்க , கட்டை விரலால் கன்னம் வருடினான். “சீக்கிரம் சரியாயிடும்.படுத்து தூங்கு” எழுந்து கொண்டு அவள் தோள் பற்றி சீட்டில் சரித்தான் .

” இந்த குழி எப்போதும்  இப்படியேதான் இருக்குமா ?” படுத்துக்கொண்டு எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்துக் கேட்டாள்.

” சரியாகிடும்னு சொல்றேன்ல ” குரலில் எரிச்சல் தெரிய வாயை மூடிக்கொண்டாள்.

” எங்கே போகிறோம் ? ” கொஞ்ச நேரம் கழித்து மெல்ல கேட்டாள் .

” பெரியகுளம் “

” என்ன குளத்திற்கா ? “

 ” ஏய் அறிவாளி, அது ஒரு ஊர். கொடைக்கானல் பக்கத்தில் இருக்கிறது. நாம் அங்கேதான் தங்க போகிறோம் “

” ஓ ” என்ற மதுரவல்லிக்கு இன்னமும் கேட்க நிறைய விசயங்கள் இருந்தன. அது ஏன் பெரியகுளம் ? அங்கே ஏன் தங்கவேண்டும் ? யார் வீட்டில் தங்க போகிறோம்?என்ன செய்ய போகிறோம்? என்பது போன்ற நிறைய நிறைய கேள்விகள் .

ஆனால் இனி பேசவே போவதில்லை எனும் வைராக்கியத்தை கணநாதன்  கை  கொண்டு விட்டான் போலும். கர்ச்சீப்பால்முகத்தை மூடிக்கொண்டு சன்னலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்திருந்தான். சரிதான் போடா …முணுமுணுப்பாய் அவனை வைது விட்டு கண் மூடி தூங்க முயன்றாள் மதுரவல்லி .

கார் பெரியகுளம் ஊருக்குள் நுழைந்ததும் ” மிராசுதார் வீடு எதுன்னு விசாரித்து அங்கே போ ” டிரைவரிடம் கூறினான் கணநாதன்,




What’s your Reaction?
+1
18
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
9 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!