Serial Stories கடல் காற்று

கடல் காற்று-18

 ( 18 )

சூடான காபியில் பன்னை நனைத்து வாயால் ஊதி ..ஊதி ஆற வைத்து தன் குழந்தையின் வாயில் கொடுத்துக் கொண்டுருந்தான் கனகவேல் …இருளாயி கணவன் .நல்ல பசியோடு அதனை விழுங்கி கொண்டிருந்தது அந்த குழந்தை .

” அம்மா ஏன்பா தூங்கிட்டே இருக்கா ..? எப்போ எந்திரிச்சி வருவா …?”

” அம்மாக்கு உடம்பு சரியில்லடா .இப்போ எந்திரிச்சிடுவா ..எந்திரிச்சதும் வீட்டுக்கு போகலாம்.. என்ன ..” சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் தகப்பன் .

மருந்துகளோடு உள்ளே வந்த யோகேஷ்வரன் அதனை கனகவேலிடம கொடுத்தான் .” நர்ஸிடம் விபரம் கேட்டுக் கொண்டு சரியாக கொடு கனகு .இனி இது போன்ற முட்டாள் தனமெல்லாம் செய்யக் கூடாதென சொல்லு ” என்றான் அதட்டலாக .

” சரிங்கய்யா …” என்ற போது அவன் குரல் தழுதழுத்தது .

சமுத்ரா உள்ளே எட்டி பார்த்தாள் .நீரற்ற கொடியென வாடிக் கிடந்தாள் இருளாயி .அவளருகிலுள்ள ஸ்டூலில் அமர்ந்தாள் .” இப்போ எப்படியிருக்கும்மா ?”

” சரியாயிடுச்சிங்கம்மா …,” சொல்லும் போதே வலியில் அடிவயிற்றை பிடித்தாள் அவள் .

” அந்த பாட்டி வீடு எங்கே இருக்கு இருளாயி .நான் போய் இனி இப்படி செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டு வர்றேன் ” தயங்கிய இருளாயியை சமாதானப்படுத்தி முகவரியை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள் .

“டாக்டர்  ஐந்து நாட்கள் தங்க சொல்லியிருக்காங்க .ஆஸ்பத்தரி பில் எனக்கு அனுப்ப சொல்லியிருக்கேன் .மருந்து வாங்கி கொடுத்திட்டேன் ” ஜீப்பில் திரும்பும் போது விபரம் சொன்னான் யோகன் .

” ஆனால் ஐந்து நாட்கள் அவர்கள் பிழைப்பு .அதன் பிறகும் உடல் தேறும் வரை அவள் வீட்டுநிலைமை …? ” கோபமிருந்த்து சமுத்ரா குரலில் .

” என்னம்மா செய்வது ?நானும் இந்த மக்களின் இது போன்ற சில அறியாமைகளை போக்க முயன்று கொண்டிதான் இருக்கறேன் .சில நேரம் என்னையும் மீறி இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன ” பெருமூச்சு விட்டான் .

நான் இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் .மனதிற்குள் முடிவு செய்து கொண்டாள் சமுத்ரா .

மறுநாள்  இருளாயி கொடுத்த விலாசம் விசாரித்து அந த இடத்தை அடைந்தாள் .மிக குறுகி கூனல் முதுகோடு தரையில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார் அந்த பாட்டி .இவரையா …? என பாவமாக இருந்த்து அவளுக்கு .ஆனால் ரத்தம் தெறிக்க துடித்த இருளாயியின் தோற்றம் நனைவு வர மனதை கல்லாக்கி கொண்டாள் அவள் .

” பாட்டி கொஞ்சம் என் கூட வருகிறீர்களா ?”

” எங்கேம்மா …? நீ யாரு தாயி …?…தெரிஞ்சாப்பல இல்லயே …” கைகளை நெற்றியில் வைத்து குழம்பினார் அந த  மூமூதாட்டி .

” இருளாயிதான ்அனுப்பி விட்டா ….உங்களிடம் ஏதொ விபரம் கேட்கனுமாம் “

” அதான் அல்லா வெவரமும் அவாட்ட தெளிவா சொன்னேனே ….சொன்னபடி துன்னாளா ? இல்லையா….? ” ஒரு கெத்தாப்பு கிழவி குரலில் .

பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கிய சமுத்ரா ” வாங்க அது சம்பந்தமாதான் விபரம் கேட்கனுமாம் .ஆட்டோ கொண்டு வந்திருக்கேன் “

” ஏட்டி ரோசி …என்னய ஆட்டோல கூட்டிட்டு போகப் போவுது இந்த புள்ள ” பெருமையாக உள்ளே நோக்கி குரல் கொடுத்தாள் கிழவி .

” அப்படியே ஒரே போக்கா போயிடு ….” குரல் மட்டும்  உள்ளிருந்து வந்த்து .

கிழவியின் கைகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றி சமுத்ரா கூட்டி வந்து நிறுத்திய இடம் போலீஸ் ஸ டேசன் .
அந்த அப்பாவி பெண் இருளாயிக்கு கரு கலைப்பு மருந்து கொடுத்து அவளை கொல்ல பார்த்தது இந்த பாட்டிதான் .இவர்களை உள்ளே பிடித்து வைங்க “

தாடியை தடவியபடி சமித்ராவை பார்வையால் வருடிய அந்த இன்ஸ்பெக்டர் முறுக்கு மீசையும்  பரந்த தோள்களுமாக  ஒரு ஹீரோ தோரணை காட்டினான் .,”கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க ,” என்றான் .

தன்னை அழைத்து சென்று சிறைக்குள் உட்கார வைக்கும் வரை நடப்பது தெரியாமல் இருந்த கிழவி , கம்பி கதவு மூடவும் , ஐய்யோவென அலற துவங்கினாள் .” அடக்கடவுளே என்னை ஏமாற்றி இங்கே புடிச்சு போட்டாங்களே …இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா ? “. கதற தொடங்கினாள் .

” கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்துட்டேன் .ஆளைக் கொண்டு வந்து ஒப்படைச்சிட்டேன் .இனி எப். ஐ.ஆர் போடுங்க …” கறாரான குரலில் பேசினாள் சமுத்ரா .

” மேடம் அது வந்து ….சாரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு …” தயக்கமாக இழுத்தார் .

” எந்த சாரிடம் …? கமிசனரிடமா …?இப்படி ஒவ்வொரு கேசும்  கமிசனரிடம் கேட்டு கேட்டுத்தான் எப் .ஐ.ஆர் போடுவீர்களா சார் …? ” நக்கலாக கேட்டாள் .

தடுமாறினார் அவர் . ” இல்லை மேடம் யோகேஷ்வரன் சாருக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார் ….?”




” சார் நான் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் தெரியுமில்ல.இப்போ நீங்க எப் .ஐ. ஆர் போடலை முதல் தகவல் எங்க பத்திரிக்கைக் கு , அப்புறம் எல்லா சேனல்களுக்கும் …இந்த பாட ்டி போட்டோவோட போகும் .இருளாயியை சேர்த திருக்கிற ஆஸ்பிடல் பில் , மெடிக்கல் பில் எல்லா ஆதாரமும் வச்சிருக்கேன் .என்னோட கம்ப்ளைன்ட் மேல்  நீங்க எந்த நடவடிக்கையையும். எடுக்கலைன்னும் சேர்த்து சொல்வேன் .” மிரட்டினாள் சமுத்ரா .

” சரி மேடம் நடப்பது நடக்கட்டும் …” பெருமூச்சுடன் எப்.ஐ.ஆர் எழுத துவங்கினார் அந்த இன்ஸ்பெக்டர் .

—-

செண்பகத்தின்  பேச்சுகளுக்கு போனில் சிறு எரிச்சலுடன. காது கொடுத்து கொண்டிருந்தாள் சமுத்ரா .” அப்படி மாமாவை தப்பாக நினைக்காதடா …அவர் ஏதோ பிள்ளை பாசத்தில. பேசி விட்டார் .அதற்காக இப்படி எங்களுடன் பேசாமலேயே இருந்து விட்டாயேம்மா ” …அழத்துவங்கினாள் செண்பகம் .

” அத்தை இதெல்லாம் நாம் அன்றே பேசிவிட்டோம் .இப்போது ஏன் திரும்ப முதலிலிருந்து வருகிறீர்கள் ? வேறேதும் விசயமில்லையென்றால் போனை வைக்கிறேன் “

” இருடாம்மா …கட் பண்ணி விடாதே ..எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ..? எங்க பொண்ணுதான் வேண்டும் .அத்தோடு அந்த கொலுசு …”

” அத்தை …உங்கள். தேவை உங்க பொண்ணா …?கொலுசா …?” அழுத்தமாக கேட்டாள் .

சிறிய மௌனத்திற்கு பின் ” எங்கள் பொண்ணுதான்மா …ஆனால்  அந்த கொலுசு எங்கள் தொழிலாச்சே …அதுதான். …”

” இங்கே பாருங்க அதை பற்றி எனக்கு கவலை .ஆனால் உங்கள் மகள். என்பதை தாண்டி லாவண்யாவின் உண்மையான நட்பிற்கு நான் கடமை பட்டுள்ளேன் .அதனால் லாவண்யாவை கண்டிப்பாக அவனிடமிருந்து மீட்டு உங்களிடம் ஒப்படைப்பேன் .நீங்கள் கவலைபடாதீர்கள் ” உறுதியளித்தாள் .

எதற்கும் தனசேகரிடம் இது விபரம் பேசிவிட எண்ணி அவன் எண்ணை அழுத்தினாள் .தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது .சை ..சரியான நேரத்தில் கழுத்தறுக்கும் .மீண்டும் முயன்றாள் .ம்ஷூம் …கிடைக்கவில்லை .

சாத்தி வைத்திருந் த அவள் அறைக்கதவு வேகமாக திறக்கப்பட்டது .அந்த பெரியமனுசனாகத்தான் இருக்கும் .அவனுக்குத்தான் நாகரீகமென்பது கொஞ்சமும் கிடையாதே …இந்நேரம் அவனுக்கு தகவல் போயிருக்கும் …அதுதான் இங்கே கதவு உடைபடுகிறது .ஏளனமாக நினைத்தபடி திரும்பினால் வந்த்து செல்வமணியும், புவனாதேவியும்.

அருகருகே வந்து நின்ற இருவர் முகத்திலும் ஒரே கோப பார்வை .

” கதவை தட்டினீர்களா ? என் காதில் விழவில்லை பாருங்களேன் .கொஞ்சம் சத்தமாக தட்டியிருக்க கூடாது ..?” கேலியாக கேட்டாள் .

” என்னடி திமிரா ?இது எங்க வீடு .நீ இங்க வந்தேறி கழுதை .எங்களை அனுமதி வாங்கிட்டு உள்ளே வரச் சொல்றியா …? கத்தினாள் செல்வமணி .

அந்த மாதிரி  டீசென்ஸிதான் உங்க குடும்பத்தில் யாருக்கும் கிடையாதே என்று எண்ணியபடி ” என்ன விசயம் ? ” என்றாள் .அவள் பார்வை அருகருகே நின்றதால் தொட்டுக். கொண்டு நின்ற இரு பெண்களின் தோள் சேலையில் நின்றது .

அட அம்மாவும். , மகளும். இவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்களா ? கிண்டலாக எண்ணிக் கொண்டாள். என்னை விரட்ட வேண்டுமென்பதற்காகவாவது  ஒன்று சேர்ந்தால் சரிதான் .

” அன்றே உன்னிடம் சொன்னேனே …உடனே இந்த வீட்டை விட்டு போய்விடு என்று …” எப்போ போக போற ..?* புவனா.

” ஆமாம். உடனே கிளம் பு …” செல்வமணி குரலிலும். அதே அவசரம் .

இவர்களென்ன நான் ஏதோ இங்கேயே தங்கிவிட போவது போல் பேசுகின றனரே …? ஏன் … என்ன நினைக்கிறார்கள் .இவர்கள் பார்வை என்னவோ சொல்கிறது .ஆனால் அது எனக்குதான் புரிந்து தொலைய மாட்டேனென்கிறது …சமுத்ரா மண்டையை பிய்த்து கொள்ளாத குறைதான் .

” இங்கே பாருங்கள். நான். என் பத்திரிக்கை வேலைக்காக மட்டுந்தான். இங்கே வந்தேன் .இன்னும் சிறிது நாளில் அதனை முடித்துவிடுவேன் .அது முடிந்த்தும. நீங்களே இருக்க சொன்னாலும். அதிகமாக ஒரு நிமிடம. கூட இங்கே தங்க மாட்டேன் .போய் கொண்டேயிருப்பேன் “

செல்வமணி கண்களில் முழு திருப்தியோடு கூடிய சந்தோசம. தெரிந்த்து .” கண்டிப்பாக போய் விடுவாய்தானே ..? ” சந்தேகம. கேட்டு கொண்டிருந்தாள் புவனாதேவி .

” நிச்சயம் …” உறுதியளித்தாள் .




” அப்படி போகலைன்னா நிச்சயம் நம்ம குலதெய்வத்திற்கு படையல்தான். …நீங்க வாங்க …” புவனாவிடம் கையசைத்துவிட்டு வெளியேறினாள் செல்வமணி .நம்பாத பார்வை ஒன்றை சமுத்ராவின் மேல் போட்டு விட்டு போனாள் புவனா .

மீண்டும் தனசேகரனுடன் பேச முயற்சித்தாள் சமுத்ரா .ரிங் போனது . அவன்  எடுத்தான் .ஒரே கொற கொற சத்தங்களுடன் இரைச்சலாக கேட்டது கட்டாகி விட்டது .மீண்டும் முயன்ற போது கிடைக்கவில்லை ்இப்போது அவனே அழைத்தான் .அதே தெளிவற்ற சத்தங்கள் .

” ஹலோ …தனா ..என்னப்பா …எங்கேனும் டிராவலிங்கில் இருக்கிறீர்களா ? ஒரே இரைச்சல் …?” பேசியபடி சிக்னலுக்காக வெளியே நடந்தாள் .

ஆனால் தனசேகரன குரல் கேட்கவேயில்லை .விட்டு விட்டு வந்த்து ..ஆனால் குரல் நிறைய உற்சாகமிருந்த்து .

” என்ன ..என்னப்பா அவ்வளவு சந்தோசம் …என்ன சர்ப்ரைசா …?எனக்கா ..? …” அவனது உற்சாகத்திற்கு ஈடாக தனது குரலை மாற்றிக். கொண்டிருந்த சமுத்ராவின் கை போன் பறிக்க பட்டது .

” அங்கே இல்லாத அபவாதமெல்லாம் பண்ணி விட்டு இங்கே வந்து எவனுடனோ போனில் என்ன கொஞ்சல் உனக்கு …?” கோபம் கன்ன்று தெரித்தது யோகனின் குரலில் .போனை கட் செய்தான் .

” ஏய் மரியாதையாக பேசு ….” அவனது திமிர் பேச்சில. வெகுண்டாள் .

” உனக்கென்ன மரியாதை …அங்கே ஒரு வயசாளியை அநியாயமாக சிறையில் போட்டு விட்டு …இங்கே யாருடன்  குலாவிக் கொண்டிருக்கிறாய் …”

” இதோ பார் சும்மா பொழுது போகாமல. அந்த பாட டியை தூக்கி உள்ளே வைக்கவில்லை .அவர்கள் செய்த்து கிட்டதட்ட ஒரு கொலை முயற்சி….”

” அது அவர்கள் அறியாமல் செய்த்து .அதற்கு தண்டனை தர நான். அனுமதிக்க மாட்டேன் ” மீண்டும் ஒலித்த அவள் போனை கட் செய்து சுவிட்ச் ஆப். செய்தான் .

” வேண்டாம் போ …போய் விடுதலை செய்து கூட்டிட்டு வந்துக்கோ …” அலட்சியமாக கூறிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் .

ஐந்தே நிமிடங்களில் அவள் அறைக்குள் கதவை தட்டி அனுமதி கேட்டு வந்த யோகன் முகத்தில் தேவைக்கு அதிகமான அமைதியிருந்த்து .அவள் போனை அவளிடமே நீட்டினான் .

” சமுத்ரா அவர்கள் மிக வயதானவர்கள் .இந்த தள்ளாத வயதில் அவர்களுக்கு இந்த தண்டனை தேவையா ? நீ நியாயம் அநியாயம் தெரிஞ்ச பொண்ணு . கொஞ்சம் யோசிம்மா ..” மிகுந்த குழைவு குரலில் .

” அப்படியா …?” யோசிப்பது போல் மண்டையை தட்டினாள் சமுத்ரா .பற்களை இறுக கடித்து தன் ஆத்திரத்தை அடக்கியவன் மீண்டும் முகத்தில். பொறுமை பூசிக்கொண்டு …” பாரும்மா சும்மாவே அந்த பாட்டி அவர்கள் மருமகளிடம் இடிசோறு சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் …இப்போது இது வேறு …அவர்கள் ஆயுளை இந்த நிகழ்வு குறைத்து விடாதா ? …ம் ….” அபூர்வ குழைவு குரலில் .

அட்டா …என்ன மென்மை ….மனதிற்குள்ளாக அவன் பணிவை ரசித்தபடி அப்படி வா …வழிக்கு …உனக்கொரு காலம் வந்தால். எனக்கெரு காலம் வராது ….?மகிழ்ந்தாள் .

” சரிதான் …” என்றாள் .

” வா …போய் உன் கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கிக் கொண்டு …பாட்டியை  கூட்டி வரலாம் ” யோசனையோடு அவளை பார்த்தபடி கூறினான் .

” ம் ….அப்படியா சொல்றீங்க …?யோசிப்பது போல் தலையை சாய்த்தபடி நின்றவள் , கட்டிலில் அமர்ந்து கால் மேல் கால. போட்டுக் கொண்டாள் .எதிரே நின்றபடி அவளையே பார்த்திருந்தான் அவன் .

” ஏன் சார் …இந்த லாவண்யா …..? என்றபடி அவன் முகம  பார்த்தாள். .அவன் முகம் கறுத்தது .

” நம்ம சாயாதேவி …இல்ல …?” மீண்டும் அவன் முகம் பார்த்தாள் ்கறுத்த அவன் முகம் பயங்கரமாக மாறிக் கொண்டிருந்து.தோள்களை குலுக்கியபடி அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் .

” இப்போது உனக்கு என்ன விபரங்கள் தெரிய வேண்டும் ?” உணர்ச்சிகளேதும் இல்லை அவன் குரலில் .

” எனக்கு லாவண்யாவை பற்றிய விபரங்கள் வேண்டும் .அவளை உயிரோடு வைத்ணிருக்கிறாயே ? இல்லை கொன்றுவிட்டாயா ? இப்படி காதல் நாடகம் ஆடி அந்த பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து …என்ன கதியென்றே தெரியாமல் பண ணிவிட்டாயே ? “

” இதெல்லாம் அந்த கருணாமூர்த்தி உனக்கு தந்த விபரங்களா ? “

” இல்லை …நானே என் கண்ணால் பார்த்தவை .நீ்.லாவண்யாவிற்கு காதல் சொட்ட சொட்ட எழுதிய கடிதங்கள் இப்போது என்னிடமே உள்ளன.உன்னைப் பற்றி லாவண்யாவும் என்னிடம் கூறியிருக்கிறாள் .”

” ஓஹோ…்ஏதோ புது தகவல் போல் அவற்றை உள் வாங்கிக் கொண்டான் .

” அடுத்தது ….சாயாதேவி ….ஆனந்தமாக கணவனுடன் குடும்பம் நடத்திக். கொண்டிருந்த பெண்ணை இப்படி பைத்தியமாக்கி விட்டாயே …?”

” என்னடா இது வம்பு …கணவனை இழந்து தடுமாறிக் காண டிருந்த பெண்ணிற்கு மீண்டும் வாழ்வளிப்பதற்காக மறுமணம. செய்து வைத்தது தவறா ? வெளி ஆண்களென்றால் பிரச்சினைகள் வர கூடுமென று அவள் கணவன் தம்பியையே தேர்வு செய்து மணமுடித்தேன் .அவள் சந்ணோசமாகத்தான் இருந்தாள் .இன்னொரு குழந்தை கூட பெற்றுக் கொண்டாள் .இடையில் ஏதோ மனக்குழப்பம. .அதனால்தான… ” 

” அவளுக்கு மறுமணம் செய்து வைத்ததில் எந்த தவறும் இல்லை ்மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விசயம் அது .ஆனால் உங்களுக்கு தொழிலில் உதவாத  அண்ணனை  கொன்றுவிட்டு ,சலாம் போடும் தம்பியை சாயாவுக்கு மணமிடித்து வைத்தது  பெரிய பிழையில்லையா ?”

ஆஹா .என்ன அருமையான கதை இது ? ” கைகளை தட்டினான் யோகன் …இது யார் உபயம் ….அமல்ராஜா ? “சிரிப்பு வந்த்து அவனுக்கு .

” இது கதைதான் .இதனை அந்த அமல்ராஜ் சொன்னதுமே நான் புரிந்து கொண்டேன் .ஆனால் உயிரோடு இருக்கும் முதல் கணவனை மறைத்து வைத்துவிட்டு சாயாவிற்குமறுமணம் முடிக்க என்ன காரணம் …? “

” இது யார் கூறிய கதை …?” இப்போது யோகனின் குரல் மிகவும் இறுகியிருந்த்து .

” நான் பத்திரிக்கைக்காரி சார். யார் என்ன சொன்னாலும் அதை ஆராயாமல் நம்ப மாட்டேன் .சாயாதேவியின் முதல் கணவனை நானே என் கண்ணால் பார்த்தே ன் .சென்னையில் வைத்து …உங்களுடன் “

அப்படியே அமைதியாகி விடட் யோகன் .சிறிதுநேரம் கழித்து ” எப்போது ?” என கேட்டபோது அவன் குரலில் ஒரு அமைதி வந்திருந்த்து .




” லாவண்யா பற்றி உங்களுடன் பேச வந்தேன் ….மாமா அழைத்து வந்து விட்டுவிட்டு ஒரு நநண்பருடன் பேசிக்கொண்டு வெளியே நின்றார் .அப்போது …..”

” ஆர்த்தி ஹோட்டலில் வைத்து …அன்றுதான் உன்னை இரண்டாம் முறை பார்த்தேன் .பர்ப்பிள் கலரில் கறுப்பு வட்டங்கள் கொண்டிருந்த சுடிதார். அணிந்திருந்தாய் .தலையைவாரி உச்சியில் பேன்டிட்டு கறுப்பு கலர் கம்மல் கூட …வளையலை …”யோகனின் கண்கள் ஒருவித கனவில் சுழன்றன.

பாவி அன்று பார்த்தது ஒரு இரண டு நிமிடமா கத்தான் இருக்கும் .அதற்குள் இந்த வர்ணனை செய்கிறானே . அப்படியா கவனித்தான் ? சை அசூசையாக இருந்த்து அவளுக்கு .

அன்று சாயாதேவி வீட்டில் வைத்து போட்டோவில் மாலையோடு மாடசாமியை  பார்த்த போது சமுத்ராவிற்கு அன்று சென்னையில்  பார்த்தவனென சட்டென தோணவில்லை ்பிறகு அமல்ராஜ் பல கதை கூறியதும்தான் அவனைபார்த்த நினைவு வந்த்து .

அன்று சென்னையில் யோகன் கை நிறைய பணத்தை அந்த ஆளின் கையில் திணித்து போய்விடு இனி நம் ஊர் பக்கமேவரக்கூடாது ்என கூறிக் கொண்டிருந்தான் .ஐயா ஒரு முறை என் பொண்ணையாவது வத பார்த்திட்டு போயிடுறேன் என கெஞ்சினான் அவன்
இல்லை முடியாது இனி என் கண்ணில் பட்டாயானால் என்னசெயவேனென எனக்கே தெரியாது ஓடு ஓடிவிடு என மிரட்டிக் கொண்டிருந்தான். .

ஏற்கெனவே அன்றுஅந்த பெண்ணுடன் யோகனை வேறொரு ஹோட்டலில் ஒரு அசிங்கமான சூழலில் பார்த்தது ்இப்போது இப்படி ்…இவன் யாரென தெரியவில்லை …மிக பரிதாபமாக தோன்றுகிறான் .இவனை இந்த விரட்டுவிரட்டுகிறானே .சமுத்ராவஇற்கு அவனிடம அப்போது நேரில் பேசும் எண்ணமே விட்டுப் போனது .அப்படியேஅங்கே அந்த ஹோட்டல் வரவேற்பறை சோபாவில் அமர்ந்துவிட்டாள் .

” ஹலோ ….”என்ற புன்னகையுடன் அவள் எதிரில் வந்து அமர்ந்தான் யோகன் ்அவன் கண்களில் அவளிடம் பேசும் ஆவல் தெரிய , இவளுக்கு இவனிடம் பேசவே பிடிக்காமல் போக , லாவண்யாவை மறந்து அவனை முறைத்தபடி எழுந்து வந்துவிட்டாள்.




What’s your Reaction?
+1
14
+1
13
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!