Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 17

   17

மறுக்க மறுக்க என்னுள் உன்னை
ஊற்றிக்கொண்டிருக்கிறாய்
மறுத்தலின் முடிவென்பது
விருப்பத்தின் ஆரம்பம் தொடுகையில்
பாம்பு விழுங்கும் சந்திரனாகிறேன்
முழு உருவும் செரிக்கப்பட்டு
சூழும் அந்தகாரம்
சுவர்க்கோழி ரீங்காரமாய் என்னுள்
புகுகிறது
வானவில் சிறகணிந்து வானில்
உலவி விட்டு
ஏழு வண்ணங்களையும் உண்டு
செரித்து விட்டு
வெண்ணிற  நிலவாகிறேன்
கடைந்து விட்ட தயிராய்
பிரிந்து கொண்டிருக்கையில்
இழுத்து கோர்த்து
என் மீது மிதக்கிறாய்
சுவையான வெண்ணையாய் .




” சஹி கேட்ட நேரத்தை …அந்த மூன்று மாதங்களை நாம் அவளுக்கு கொடுத்து பார்க்கலாமே ஷ்ரத் …” ரிஷிதரன் .
” ம் ஹூம் ..இது தொழில் ரிஷி .இங்கே உனது தங்கை பாசத்தை கொண்டு வராதே …தொழிலின் நஷ்டத்தை நீயே பார்த்தாயே ….எனக்கு தோன்றுவதெல்லாம் இரண்டே வழிகள்தான் .ஒன்று இந்த ஷோரூமை இழுத்து மூடிவிட வேண்டும் ்அல்லது எனது ஐடியாப்படி தொடர்ந்து நடத்த வேண்டும் …”

” அப்படி என்னதான் பெரிய ஐடியா வைத்திருக்கிறீர்கள் …சொல்லித் தொலையுங்கள் …” எரிச்சலாக சொன்னாள் சஹானா .

” நானே நேரடியாக பேசி ஒரு ஆளை செலக்ட் செய்து வைத்துள்ளேன் . அவரும் இந்த ஷோரூமை மீட்க மூன்றே மாதங்கள்தான் டைம் கேட்டிருக்கறார் .அவரை இந்த க்ஷோரூம் மேனேஜராக நியமிக்க போகிறேன் .நீயும் அவரும் சேர்ந்து வேலை பார்த்துக் கொள்ளலாம் …”

” எங்கிருந்தோ நீங்கள் இழுத்து கொண்டு வரும் ஆளிடம் நான் வேலை பார்க்க வேண்டும் அப்படித்தானே …? “

” இல்லை சஹானா .அவர் எங்கிருந்தோ வருபவரல்ல .இதே மதுரையை சேர்ந்தவர்தான் .ஏற்கெனவே ஒரு கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர் .நான் கேட்டுக் கொண்டதற்காகவே நமது கம்பெனியில் மூன்று மாதம் மட்டும் வேலை பார்க்க ஒத்துக் கொண்டுள்ளார் .  இருவரும் சேர்ந்து வேலை பாருங்கள் என்றுதான் சொன்னேனே தவிர, அவரிடம் நீ வேலை பார் என்று சொல்லவில்லையே ….”

” இதை விட பெரிய இன்செல்ட் எனக்கு இருக்கமுடியாது …”

” என்ன சஹி …உனக்கு ஒரு இன்செல்ட் என்றால் அதை நானும் உணரமாட்டேனா …? இது தொழில்மா .இங்கே தேவையில்லாத சென்டிமென்டுகள் வைத்துக் கொள்ள கூடாது . இதனால் உனது தன்மானத்திற்கு எந்த இடைஞ்சலும் வராது .ப்ளீஸ் பிலீவ் மீ ….” இறங்கிய குரலில் ஷ்ராவத் மென்மையாக பேச , அவனை மறுக்கும் வகையற்று , உதவிக்காக தனது சகோதரனை நோக்கினாள் சஹானா .

தன் கையிலிருந்த ஜூஸை நிதானமாக உறிஞ்சிக் கொண்டிருந்த அவன் ” அது யார் ஷரத் …? நான் அவரை மீட் பண்ண வேண்டுமே …” என்றான் .

” வரச்சொல்லியிருக்கிறேன் .நாளை ஹோட்டல் லிங்காவில் நாம் சந்திக்கலாம் …”

” வொய் இன் ஹோட்டல் …இங்கேயே வரச் சொல்லலாமே …”

” நான் சொன்னேனே .அவர் ஏற்கெனவே ஒரு கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் .நான் கேட்டுக் கொண்டதற்காகவே நமக்காக வேலை செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறார் .சோ திஸ் இஸ் தி எக்ஸாக்ட்லி வெல்கம் பார் தேட் பெர்சன் …”

” ம் …வீ ஆர்  ஈகர் டூ மீட் தேட் பர்சன் ….ரைட் சஹி …? “




தனக்கும் சேர்த்து முடிவெடுத்துவிட்ட சகோதரனை முறைத்தாள் சஹானா .இவனும் இந்த ஷ்ரத்தும் ஒன்று .இருவருக்கும் தொழிலும் அதன் லாபமும் மட்டும்தான் கண்ணிற்கு தெரியும் .

” நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன் .நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் …? “

” ஈஸி சஹி .போத் வீ ஆர் வித் யு டியர் .யு டோன்ட் ஒர்ரி …” தங்கையின் தோள்களை அணைத்து சமாதானப்படுத்தினான் .

” எஸ் சஹி .ரிஷியை பற்றி எனக்கு தெரியாது .பட் ஐ ஆம் ஆல்வேஸ் வித் யூ மா ….” இதனை ஷ்ராவத் சாதாரண குரலில் சொல்லியிருந்தால் தெரியாது .ஆனால் சாக்லேட்டிற்கு அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் குரலில் சொல்ல , சஹானாவிற்கு மிகுந்த கோபம் வந்த்து .

” டோன்ட் ட்ரீட் மீ லைக் சைல்ட் …” தனது தோள்களில் இருந்த ரிஷியின் கைகளை தட்டிவிட்டு வேகமாக எழுந்து வெளியே போய்விட்டாள் .

” மூன்று வயதில் ஸ்கூலுக்கு போக மாட்டேனென அழுத அதே சஹிதான் இப்போதும் இருக்கிறாள் …” ரிஷி சிரித்தபடி கூறியதை ஷ்ரத் ஆமோதித்தான் .

” இந்த சிக்கன் நன்றாக இருக்கும் .இதுவும் ஆர்டர் செய்து விடலாமா …? ” தங்களுக்குள் மெனுகார்டை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருந்த இருவரையும் அறையலாமா என தோன்றியது சஹானாவிற்கு .

வரப்போகும் புது நபருக்கான டென்சனில் அவள் இருக்க அந்த எண்ணமேதுமின்றி , சிக்கனை விமர்சித்து கொண்டிருக்கும் இருவரையும் வெறுத்து போய் பார்த்தாள் .நிமிர்ந்து அவளை பார்த்த ஷ்ராவத் ” சஹி இது ஆபிஸ் இல்லை .இங்கே உன் மனதில் பட்டதை நீ பேசலாம் .செய்யலாம் …” என்றான் .

” ஓ…பீ கேர்புல் ஷ்ரத் முதல் கொட்டு உனக்காகத்தான் இருக்கும் ….” என்றான் ரிஷி .

” உங்கள் இரண்டு பேருக்கும் கொழுப்புடா . வேண்டுமென்றே என்னை சீண்டுகிறீர்களா ….? ” ரிஷியை போன்றே ஷ்ரத்திற்கும் ” டா ” போட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் .

” ஸாரி நான் தெரியாமல் …. “

” ஐ ஆம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் மேடம் …” தலைகுனிந்தான் ஷ்ராவத் .

” எல்லா பவ்யமும் பேச்சில்தான் .செயலில் ஒன்றும் கிடையாது .ஒரே கறார்தான் ….” முணுமுணுத்தாள் .




” ரிஷி வாட் இஸ் மீனிங் கறார் மேன் ….இரண்டு நாட்களாக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் …” ஷ்ராவத் சஹானாவை பார்த்தபடி ரிஷியிடம் கேட்டான் .

” அப்படி ஒரு வேர்ட் இருக்கிறதா என்ன ..? அது போன்ற வேர்ட்ஸ்செல்லாம் உனக்கு தெரியுமா சஹி …? ” ரிஷி கிண்டலை தொடர ,

” டேய் …உன்னை …” என்றபடி எழுந்து அவன் தலையில் கொட்ட…

” ஐ ஆம் எஸ்கேப்டு …” தனது தலையை மூடியபடி ஷ்ராவத் சொல்ல ….

சஹி அவனை முறைக்க …அந்த நேரத்தில் அந்த ஹோட்டலினுள் நுழைந்த சாம்பவியை முதலில் பார்த்தது சஹானாதான் .

இவள் இங்கே ஏன் இப்போது வருகிறாள் …?

சஹானாவினை அறிமுகமற்ற பார்வை பார்த்தபடி நிமிர்ந்த நடையுடன்  உள்ளே நுழைந்த சாம்பவியின் வேகம் , அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த ரிஷியை கண்டதும் தயங்கியது .

இ..இது…அ…அவன்தானே …இன்றே அவனையும் சந்திக்க வேண்டியதிருக்குமா …? ஷ்ராவத் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே …நடை தயங்க நின்றவளை பார்த்த ஷ்ராவத் அங்கிருந்தபடியே கையை ஆட்டினான் .

” ஹாய் ..வீ ஆர் ஹியர் …கமான் …”

சஹானா அதிர்ந்தாள் .இந்த ஷரத் சொல்லிக்கொண்டிருந்த ஆள் இவளா …? இவளுடனா நான் வேலை செய்ய வேண்டும் .உடனே அந்த இடத்தை விட்டு போக வேண்டும் போலிருக்க , வேகமாக எழுந்தவளை முறைத்தான் ஷ்ராவத் .

” டோன்ட் பிகேவ் சைல்டிஷ் சஹி .சிட்டவுன் ….” தாழ்ந்த குரலில் அதட்டினான் .

சஹானாவின் கோபத்தையும் , ஷ்ராவத்தின் அதட்டலையும் பார்த்தபடி திரும்பாமல் அப்போதுதான் வந்த ஒரு காலை  தனது போனில் பேசியபடி இருந்தான் ரிஷிதரன் .

” ஹாய் ….” என்றபடி அவர்கள் அருகில் வந்தமர்ந்த சாம்பவியை வெறியோடு நோக்கினாள் சஹானா .எதிர்பாராத அதிர்ச்சி வேறு அவளுக்கு .

ஆனால் சஹானாவை அங்கே எதிர்பார்த்தே வந்திருந்த்தால் , சாம்பவிக்கு அவளளவு தடுமாற்றம் இல்லை .ஆனாலும் அவள் எதிர்பார்த்திராத  இன்னமும் அவளை நிமிர்ந்து பாராமல் போனில் பேசியபடியிருந்த ரிஷிதரன் அவளுக்கும் தடுமாற்றதை கொடுத்தான் .

“ஹாய் சாம்பவி ..மீட் மிஸ் சஹானா …ஜி.எம் ஆப் அவர் மதுரை ப்ரான்ஞ் ….” ஷ்ராவத் முறையாக அறிமுகம் செய்விக்க சஹானா சாம்பவியோடு ஷ்ராவத்தையும் சேர்த்து முறைக்க ஆரம்பித்தாள் .

நிதானமாக தனது போன் பேச்சை முடித்துவிட்டு நிமிர்ந்த ரிஷிதரன் எதிரில் அமரந்திருந்த சாம்பவியை பார்த்ததும் ஒரே ஒரு சிறு புருவ சுளிப்பு .அவ்வளவுதான்.திரும்பி ஷ்ராவத்தை  பார்த்தான் .




” மீட் மிஸஸ் சாம்பவி .அவர் நியூ ஜி.எம் ….மீட் ரிஷிதரன் .மை பார்ட்னர் ….” ஷ்ராவத் மீண்டும் அறிமுக படலத்தை நிகழ்த்தினான் .

” மிஸஸ் …????” கூர்ந்து அவளது கழுத்தை  பார்த்தபடி ரிஷிதரன் கேட்ட இந்த கேளவி சாம்பவிக்கு  கோபத்தை உண்டாக்க …

” எஸ் …மிஸஸ் ….” என்று அழுத்தமாக உரைத்தாள் .

” க்ளாட் டூ மீட் யூ ….” நீண்ட ரிஷியின் கரங்களின் விரல் நுனிகளை தயக்கமாய் பற்றிவிட்டு விலகின சாம்பவியின் கரங்கள் .

” ரிஷி …சாம்பவி இந்த வருட இளம் பெண் தொழிலதிபர் அவார்டை நமது கலெக்டரிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள் .அவர்களது ஆர்ட்டிக்கிள் நிறைய பிஸினஸ் மேகசின்ல வந்திருந்த்து .அதில் ஒன்றை பார்த்துவிட்டுத்தான் நான் சாம்பவியிடம் போனில் பேசினேன் .வீடியோ சாட்டிங் கூட பண்ணினோம் .நான் கேட்டுக் கொண்டதற்காக நமது கம்பெனியில் ஒரு மூன்று மாதம் வொர்க் பண்ண சாம்பவி ஒத்துக்கொண்டார்கள் ….”

” ஓஹோ ….” என்ற ரிஷிதரன் நேரில் அமர்ந்திருந்த சாம்பவியை இமைக்காமல் பார்த்தான் .அவனது பார்வையின் தீட்சண்யம் தாங்க முடியாது திரும்பிய சாம்பவியின் பார்வையில் கொலை வெறியோடு அமர்ந்திருந்த சஹானா தென்பட்டாள் .

ஆக நீ இங்கே வேலை பார்க்க வருவது உனக்கு முன்பே தெரியும்….தெரியாத்து போல் என்னிடம் கோவிலில் நடித்திருக்கிறாய் ….? பார்வையிலேயே கேட்டாள் .

” எனக்கு இந்த மேடத்தை தெரியுமே சார் .இரண்டு நாட்கள் முன்பு கோவிலில் வைத்து பார்த்தேன் .நமது ஷோரூம. பற்றி பேசலாமென போனேன் .மேடம் ஏதோ கோபத்தில் என்னிடம் பேசாமலேயே போய்விட்டார்களே ….” அன்று உன்னிடம் இந்த விசயம்தான் பேச வந்தேன் .நீ திமிராக போய்விட்டாய்  என  சொல்லாமல் சொன்னாள் சாம்பவி.

” அப்படியா ஏன் சஹி …? ” என்ற ஷ்ராவத் .

” விடுங்கள் சாம்பவி . அவள் கொஞ்சம் மூடி டைப் .கொஞ்சம் படபடவென பேசுவாள் .மனதில் எதையும் வைத்துக்கொள்ள தெரியாது….”

தெரியாதா எனக்கு …?இவளுக்கு நீ என்னிடம் சப்போர்ட் பண்ணுகிறாயா …? மனதிற்குள் நினைத்தபடி திரும்பியவள் முகம் கூச்சத்தில் சிவந்த்து .ரிஷிதரன் இன்னமும் அவள் மீதிருந்த பார்வையை அகற்றவில்லை .

இவள் திரும்பியதும் நிதானமாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டவன் ” மேடத்தை பற்றி நீ வேறு ஒன்றும் சொல்லவில்லையே ஷ்ரத் ….? ” என்றான் .

” என்ன ரிஷி இப்போதுதான் நிறைய சொன்னேனே …இவர்கள் இந்த வருடம் கலெக்டரிடம்…..”

” இந்த ப்ளா ப்ளாவை விட்டு தள்ளு .நான் மேடத்தோடு பேமிலி டீடெயில்ஸ் கேட்டேன் …” சிகரெட்டை ஆழ்ந்து இழுத்தான் .

” அது எதுக்குடா உனக்கு …? ” ஷ்ராவத்தின் குரலில் எரிச்சல் இருந்த்து .

” ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்க போகிறோம் .ஒருத்தரையொருத்தர் தெரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி …? சொல்லுங்க மேடம் உங்க ஹஸ்பென்ட் என்ன பண்ணுகிறார் …? ” சஹானா விசம்ம் கலந்து விசாரித்தாள் .

அவளை அலட்சியப்படுத்திய சாம்பவி ரிஷிதரனை பார்த்து ” டோன்ட் ஸ்மோக் …” என்றாள் .




” வாட் …? ” விழிகளை விரித்தான் அவன் .

” சிகரெட் பிடிக்காதீர்கள் என்றேன் .இரண்டு பெண்கள் இருக்கும் இடத்தில் அவர்களது அனுமதியில்லாமல் சிகரெட் பிடிப்பது …இன்டீசன்டாக தெரியவில்லையா உங்களுக்கு…? “

” எக்ஸ்கியூஸ் மீ மேடம் .திஸ் இஸ் மை பெர்சனல் மேட்டர் .யு வார் நாட் இன்டர்பியர் திஸ் ….” மேலும் சிகரெட்டை இழுத்தான்.

” தென் ஐ ஆம் கோயிங் .வீ போஸ்ட்போன்டு திஸ் மீட்டிங் டூ அனதர் டே .தேட் டே ஸ்டரிக்லி நோ ஸ்மோக்கிங் டே …” அழுந்தந்திருத்தமாக அறிவித்து விட்டு தனது பேக்கை எடுத்துக் கொண்டு …

” பை சார் …” என ஷ்ராவத்துடன் கை குலுக்கி விட்டு இவர்கள் இருவரையும் திரும்பியும் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டாள் .

அவளது இந்த தைரியத்தையும் , நிமிர்வையும் …முக்கியமாக அவளது ஆங்கில பேச்சையும் கேட்டுவிட்டு இமைக்க மறந்து அமர்ந்திருந்தனர் ரிஷியிம் ,சஹியும் .

டேபிளின் மேலிருந்த இருவரது கைகளையும் பட்டென தட்டிய ஷ்ராவத் ” என்னடா இப்படி பண்ணிட்டீங்க …? என்றான் .

” நாங்க என்ன பண்ணினோம் …? அவளாகத்தானே போனாள் .போய் தொலையட்டும் .விட்டு தள்ளுங்க …”

” நீ அவர்களிடம் இதற்கு முன்பே பேசியிருக்கிறாயா …? என்ன பேசினாய் …? இதோ இப்போது போலத்தான் பேசினாயா …? “

” என்ன கோர்ட்டில் கேட்பது போல் மடக்கி மடக்கி கேட்கிறீர்கள் .எனக்கு அவளை தெரியாது .நான் இதற்கு முன் பார்த்ததில்லை …” சொல்வது பொய் என்று தோன்றும்படியாகவே தலையை நிமிர்த்தி தைரியமாக சொன்னாள் சஹானா .

எரிச்சலுடன் அவளை விட்டுவிட்டு ” நீ என்னடா …? ” என்றான் ரிஷிதரனிடம் .

” என்னை ஏன்டா கேட்கிறாய் …? ஒரு சிகரெட்டிற்காக இப்படி மூஞ்சை தூக்கிக் கொண்டு ஓடும் பெண்ணோடு எப்படி வேலை பார்க்க முடியும் …? “

” நோ ரிஷி .சாம்பவி இஸ் கரெக்ட் .தி மிஸ்டேக இஸ் யுவர்ஸ் ….” என்றவன் எழுந்து நின்று …

” உங்கள் இருவருக்குமே சாம்பவியை வேலைக்கு வைத்துக்கொள்வது பிடித்தமில்லையென தெரிகிறது .ஆனால் என் முடிவில் மாற்றமில்லை .சாம்பவி நம் கம்பெனியில் வேலை பார்க்கத்தான் போகிறார்கள் ….” உறுதியாக கூறிவிட்டு போய்விட்டான் .

” ரி ஷி என்னால் இவளோடு சேர்ந்து வேலை பார்க்க முடியாது …”

” என்னாலும் முடியாது சஹி …”

” அப்போ நாம் இரண்டு பேருமே வேலையை ரிசைன் பண்ணிடலாம் …”

” ஜி.எம் போஸ்ட்டை ரிசைன் பண்ணிடலாம் .பார்ட்னர்ஷிப்பை என்ன பண்ணுவது …”

” கேன்சல் பண்ணு …”

” அது அவ்வளவு ஈஸி இல்லை சஹி ….ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து கணக்குகளை முடித்து எங்கள் பிஸினஸ் டீலிங்ஸை முடித்தாலும் , முழுவதுமாக எங்களுக்குள் உள்ள கணக்குகளை முடிக்க ஆறு மாதமாகும் …”




” அதனால் ….? “

” ஷ்ராவத்துடனான பிஸினஸ் எல்லாமே நல்ல எர்னிங் பிஸினஸ்சஸ் சஹி .இதில் எதையும் விட்டுவிட நான் விரும்பவில்லை ….”

” அப்படியானால் ….? “

” நாம் ஒரு மூன்று மாதம் கண்ணை மூடிக்கொண்டு கடந்து விடுவோமே ….வா போகலாம் ” எழுந்தான் .

” ஜி. எம் போஸ்ட்டை ரிசைன் பண்ணிவிடலாம்தானே ….? ” எழுந்து கொள்ளாமல் கேட்டாள் .

” ஷ்யூர்  …நீ அதை செய்வதைத்தான் ஷ்ரத்தும் விரும்புகிறான் .உன் தோழியும்  விரும்புகிறாள் …அவர்களுடைய ப்ராப்ளம் சால்வ் ஆகிவிடுமே …”

” பயந்து போய் ஓடிவிட்டாயா …? என சாம்பவி கேட்டுவிடுவாளோ என நினைத்தவள் ….

” இல்லை …நானும் வேலை பார்க்க போகிறேன் …” என்றாள் .




What’s your Reaction?
+1
35
+1
26
+1
2
+1
7
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!