gowri panchangam Sprituality

மாவட்ட கோவில்கள்: சென்னை கபாலீஸ்வரர் கோயில்

திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோயில். திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற திருத்தலம் இது. பெரிய புராணம் போன்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்திற்கான திருப்புகழ் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம் இது.

இக்கோயிலின் மூலவர் அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர். புராண இதிகாச வீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பார்வதி அன்னை மயிலாக வேண்டும் என்று சிவபெருமான் சபித்தார்.

அதன்படி பார்வதி அன்னை மயிலாக மாறினார். தான் பழைய வடிவைப் பெற என்ன வழி என்று கேட்டபோது, பிரம்மா என்னை வழிபட்ட கபாலீஸ்வரதிற்குச் சென்று என்னை வழிபடு என்று சிவபெருமான் சொன்னார்.




அதன்படி மயில் வடிவில் வந்த பார்வதி அன்னை இத்தலத்திற்கு வந்து கபாலீஸ்வரராக விளங்கும் சிவபெருமானை வணங்கி, அன்னை உருவம் பெற்று கற்பகாம்பாளாக இக்கோயிலில் திருவருள் செய்கிறார்.

பார்வதி அன்னை சிவபெருமானை நோக்கி, மயில் வடிவிலிருந்த நான் உங்களை வழிபட்ட இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வரவேண்டும். மயில் வடிவிலிருந்து இங்கே நான் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு மயில் தீர்த்தம் என்கிற பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனால் இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வந்து. மயிலாப்பூர் என்றாகி, மயிலை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பண்டைய புராண வரலாறுகளில் ஒன்று சிவன் பிரம்மா அவை சபித்தது.

பிரம்மாவிற்குக் கோய்ல் கிடையாது என்றும், பிரம்மனுக்கு உதவியாகப் பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜையில் சேர்க்கக்கூடாது என்றும் கூறிய சிவபெருமான்.

பைரவரை உருவாக்கி பிரம்மாவின் ஒரு சிரத்தை கொய்யச் சொன்னார். அதனால் ஐந்து தலைகள் பெற்றிருந்த பிரம்மா, நான்கு தலை கொண்டவராக ஆனார். அதன்பிறகு விமோசனம் வேண்டி சிவபெருமானைப் பிரம்மா வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

இங்கே சிவபெருமானை வழிபட்டு நான்காவது கோஷத்தைப் பெற்றார் பிரம்மா. நான்முகனான பிரம்மா, சிவபெருமானை நோக்கி, இத்தலத்தில் நான் உங்களை வணங்கியதாலும், நீங்கள் பிரம்ம கபாலம் ஏந்தியதாலும் இனி இத்தலத்திற்குப் பிரம்ம கபாலீஸ்வரம் என்றும், உங்களுக்கு கபாலீஸ்வரர் என்கிற பெயரும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் அருளினார். இத்தலத்தில் பிரம்மாவை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். இத்தலத்தில் சிவபெருமானை வேதங்கள் வணங்கின. ராமபிரான் ஜடாயுவிற்கு இறுதி கடமைகளைச் செய்த பின்பு, இங்கே வந்து கபாலீஸ்வரரை வணங்கினார்.

ராமபிரான் முடிசூட்டிக் கொண்ட பின்பு மீண்டும் இங்கே வந்து ஐப்பசி திருவோண விழாவில் கலந்துகொண்டு வழிபட்டார். முருகப்பெருமான் தாய் தந்தையரை வழிபட்டு பேறு பெற்றதால் சிங்காரவேலர் என்று போற்றப்படுவது போன்று, எண்ணற்ற சிறப்புகள் இத்தலத்திற்கு உள்ளன.

இத்தலத்திலிருந்த அங்கம் பூம்பாவை என்ற பெண், நாகம் தீண்டி இறந்து அவள் உடலை எரித்த சாம்பலையும், எலும்புகளையும் அவள் தந்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து மட்டிட்ட புன்னை என்று தொடங்கும் பதிகம் பாடி அவளை மீண்டும் உயிரோடு எழுப்பி அதிசயம் நிகழ்த்தி, அவரைத் தன் மகளாக ஏற்றுக் கொண்டார்.

மட்டிட்ட புன்னை என்று தொடங்கும் அந்தப் பதிகத்தைப் பாடி நாம் நலமாக ஆரோக்கியமாக வாழலாம். இத்தலத்தில் அருள்கின்ற ஸ்ரீ கற்பகாம்பாள் அன்னை, நாம் கேட்டவைகளை கொடுப்பதோடு, கேட்க மறந்தவைகளையும் கொடுக்கிறார்.




இக்கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் அறுபத்து மூவர் விழா சிறப்பானது. இந்த மயிலையில் ஏழு சிவாலயங்கள் சப்த ஸ்தானங்களாக உள்ளன.

ஸ்ரீ கபாலீஸ்வரர், ஸ்ரீ வெள்ளீஸ்வரர், ஸ்ரீ காரணீஸ்வரர், ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர், ஸ்ரீ விருபாட்சீஸ்வரர், ஸ்ரீ வாலீஸ்வரர், ஸ்ரீ மல்லீஸ்வரர் என்று ஏழு சிவாலயங்கள் அமைந்துள்ளது. சென்னை நகருக்கு வந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்று சொல்லி வழி கேட்டால் பலரும் சொல்வார்கள்.

பிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.

நேர்த்திக்கடன்: நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் 8-ம் நாளில் மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள். தவிர அம்பாளுக்கு புடவை சாத்துதல், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிசேகம் ஆகியவை செய்யலாம்.

ஆலயம் முகவரி:

  • நிர்வாக அதிகாரி, அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை 600 004.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!