Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 16

  16

சாரலாய் ஆரம்பித்து
சடசடக்க துவங்குகிறது மழை ,
விழிக்க மறுத்து இறுக்கிக் கொண்டிருந்த
இமைமயிர்களின்
ஏதோ ஓர் இடுக்கின் வழியாக
துளித்துளியாய்
இறங்கிக் கொண்டிருக்கிறாய் ,
கருத்துக் கிடந்த என் வான்வெளியில்
கண்சிமிட்டும் விண்மீன்களை,
இருக்கட்டுமென விட்டுவிடவே
முனைகிறேன் .




இதற்கு முன் தான் இவ்வளவு டென்சனாக இருந்த நினைவு சஹானாவிற்கு இல்லை .கைகளை பிசைந்தபடி  அறையினுள் நடந்தபடி இருந்தாள் .வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது .ஜன்னல் திரையை விலக்கி பார்த்தாள் .ஏஸி காரை விட்டு இறங்கியதும் அடித்த வெப்பத்தற்கு முகம் சுளித்த அவன் ரோபானை தனது கண்களுக்கு போட்டுக்கொண்டான் .மை நீல ஜீன்சும் , எலுமிச்சை மஞ்சள் சட்டையும் அணிந்திருந்த  அவன் இந்த டைல்ஸ் கம்பெனியின் எம் .டி .ஷ்ராவத் .குஜராத்திலிருந்து வருகிறான் .இந்த ஷோரூமை மூடும் எண்ணத்தில் வருகிறான் .

அடர்ந்த தனது தலை முடியை கோதிக்கொண்டு சுற்றிலும் பார்த்தபடி உள்ளே நுழைந்த ஷ்ராவத்தை விரோதியைப் போல் பார்த்தாள் சஹானா .எல்லாம் இந்த சபரீஷால் வந்த்து .கொஞ்சநாள் பொறு ரிப்போர்ட் அனுப்பாதே என சொல்லி பார்த்தேனே …கேட்டானா அவன் …? அந்த சாம்பவி கூட சேர்ந்து இவனும் ஆட்டம் போடுகிறானே …இனி ஒரு தடவை என் முன்னால் வரட்டும் அவனை ….பற்களை கடித்தாள் .

ஆனால் கொஞ்ச நாட்களாக கண்ணிலேயே தட்டுப்படவில்லை அவன் .எங்கே போய் தொலைந்தானோ …?தெரியவில்லை …

இந்த சாம்பவிக்கு எவ்வளவு கொழுப்பு .என்னிடமே ஷோரூமை பிடுங்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள் .அவளுக்காகவேனும் இந்த ஷோரூமை விட்டு விட மாட்டேன் போராடுவேன் .இந்த எண்ணத்துடன்தான் ஷ்ராவத்தை புன்னகையோடு வரவேற்று அமர வைத்தாள் .

” ஹாய் …எப்படி இருக்கிறாய் சஹி….? போன தடவை பார்த்ததை விட இப்போது இன்னமும் ப்யூட்டியாக தெரிகிறாய் .ஏதாவது ஸ்பெசல் மருந்து அதற்காக சாப்பிடுகிறாயா ….? ” இயல்பான தோழமையுடனான அவனது பேச்சில் புன்னகைத்து கை குலுக்கினாள் .

” யு ஆர் ஆல்சோ சீன் லைக் தேட் ஷ்ரத் …”

” ம் …ஜிம்மெல்லாம் போய் பாடியை இம்ப்ரூவ் பண்டி  வைத்திருக்கிறேனாக்கும் …” கையை மடக்கி புஜத்தை பெருமையாய் காட்டினான் .

” சரி …சரி ஒத்துக்கிறேன் .அதுக்காக இப்படியெல்லாம் பயமுறுத்தாதீர்கள் .. ….”

” என்ன பயமுறுத்துகிறேனா ….? என் பாடி டெவலப்மெண்ட் டை காட்டினால் …என்ன தைரியம் உனக்கு …எனது உழைப்பை ஊக்குவிக்காமல் உதாசீனப்படுத்துவதற்கு …இந்த அவமானத்திற்கு உன்னை பாதாளசிறையில் தள்ளும் தண்டனை விதிக்கலாமென இருக்கிறேன் …அரசர் ஆணையை நிறைவேற்றும் தளபதியை காணோமே ….” சுத்தமாக மழிக்கப்பட்டு பச்சையாய் மாறி இருந்த மீசையற்ற தனது மோவாயை கம்பீரம் போல் காட்டிக்கொண்டு முறுக்குவது போல் அவன் காட்டிய பாவனையில் சிரித்துவிட்டாள் சஹானா .கூடவே முயன்று பேசிய அவனது செந்தமிழ் பேச்சிலும் …




” பார்த்து …மெல்ல …மெல்ல …இருக்கிற நாலு முடியும் உதிர்ந்திட போகுது …இல்லாத மீசையை  இந்த முறுக்கு முறுக்கனுமா …? ,”

” ஓ…இல்லையோ ….உன் முன்னால் முறுக்கி காட்டுவதற்காகவாவது மீசை வளர்த்துவிட்டால் போச்சு .என்ன சஹி …மீசை பிடிக்குமா உனக்கு …? வளர்த்துக் கொள்ளவா …? ” குரலை மென்மையாக்கி கேட்டான் .

” அதெல்லாம் எங்கள் தங்க தமிழ் நாட்டு ஆண்களுக்குடையது .உங்களை போல் இந்திக்காரர்களுக்கு பொருந்தாது ….” சுவரில் மாட்டியிருந்த பெயின்டிங்கை ஆராய்ந்தாள் அவள் .

” நான் இந்திக்காரனா ….? பாதி தமிழனாக்கும் ….” மீண்டும் மீசை முறுக்க முயற்சித்து விட்டு வேண்டாமென விட்டுவிட்டான் .

“இதெல்லாம் சரிதான் பிஸினஸ் என்றால் மட்டும் ….சரியான கறார் பேர்வழி ….” மெல்ல முணுமுணுத்தாள் சஹானா.

” கறார் ….வாட் இஸ் தி மீனிங் ஆப்  தேட் வேர்ட் சஹி …? ”
” பாதி தமிழர்தானே தெரியாதாக்கும் …” அலட்சியமாக உதடு சுளித்தாள் .

” இட்ஸ் எ நியூ வேர்ட் பார் மீ .ஓ.கே …அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் …”

உடனே சஹானாவிற்கு ஷ்ராவத்தின் அம்மா காயத்ரியின் நினைவு வந்த்து .

” ஆன்ட்டி எப்படி இருக்கிறார்கள் …? “

” ம் …பைன் .உன்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் .நீ எப்போது குஜராத் வருகிறாய் சஹி ….? “

” என் பிஸினஸ் இங்கேதானே இருக்கிறது .இந்த ஷோரூம் ….” என்றபடி அவனைக் கூர்ந்தாள் .

” இந்த தலைவலியெல்லாம் உனக்கெதற்கு சஹி .இதையெல்லாம் விட்டு விட்டு நீ என் ஹெட் ஆபிசிற்கு வந்துவிடேன் .அங்கே உனக்கு நான் ஜி.எம் போஸ்ட் தருகிறேன் ….அல்லது எம் .டி போஸ்ட் ….”

ஷ்ராவத் இதனை இரண்டு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறான் .எப்போது ரிஷியும் , சஹானாவும் அவனை அமெரிக்காவில்  சந்தித்தார்களோ அன்றிலிருந்து .தன் மன உணர்வை மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான் .புரிந்தும் புரியாத்து போல் நடித்துக் கொண்டிருக்கிறாள் சஹானா .

இன்றும் பேசாமல் ரிமோட்டினால் ஏஸி டெம்பரேச்சரை குறைத்தாள் சஹி .

” ஒரே புழுக்கம் …” என்றாள் .

” உடலிலா …மனதிலா …? “

” நாம் பிஸினஸ் பேசலாம் ஷ்ரத் …”




பிஸினஸ் பேச ஆரம்பித்து விட்டால் ஷ்ராவத் ஆளே மாறிவிடுவான் .இப்போது இருக்கும் நிலைமையில் அவன் பிஸினஸ் பேசினால் பாதிப்பு சஹானாவிற்குத்தான் .ஆனாலும் இது போன்ற குறிப்பு காட்டும் பேச்சுகளுக்கு அது போன்ற அழுத்தமான தொழில் பேச்சுகளே தேவலை என நினைத்தாள் சஹானா .

” எப்போதுமே நாம் தொழிலேயே இருக்க போவதில்லை சஹி ….” என்றவன் ஏதோ பேச ஆரம்பித்த சஹானாவை கையுயர்த்தி தடுத்துவிட்டு …

” கிவ் மீ த சேல்ஸ் ரிப்போர்ட் ….” என்றான் .அவன் குரலில் மென்மை மறைந்து அழுத்தம் கூடியிருந்த்து .

தனது லேப்டாப்பை அவன் புறம் திருப்பியவள் , ” சபரீஷ் அனுப்பவில்லையா …? ” மெல்லிய குரலில் கேட்டாள் .

” எனக்கு உன்னுடையது வேண்டும் ….” அரைமணியில் ஆறு மாத சேல்சை அலசி முடித்துவிட்டவன் …

” வாட் இஸ் திஸ் சஹி …? ஏன் இவ்வளவு மோசமான ரிப்போர்ட் …? “

” இந்த ஏரியாவிலேயே இன்னமும் இரண்டு ஷோரூம்கள் ஆரம்பித்துவிட்டார்கள் …அதனால் நமக்கு வியாபாரம் குறைந்துவிட்டது ….”

” இஸ் திஸ் ரீசன் இஸ் கரெக்ட் பார் யு …? “

சஹானா விழித்தாள் .

” உனக்கே இந்த காரணம் சரியாக படுகிறதா ….? ” தனது கேள்வியை மேலும் அழுத்தமாக்கினான் .

தலைகுனிந்தாள் சஹானா .உண்மையில் ஆரம்பத்தில் போல் அவளால் இப்போது இந்த தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை .இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிஷிதரனின் நண்பனான ஷ்ராவத்தை அமெரிக்காவில் சந்தித்தார்கள் ரிஷியும் , சஹியும் …

துக்கத்தை மறக்கவென தனசேகரும் , மஞ்சுளாவும் அவர்கள் இருவரையும் கொஞ்சநாட்கள் அங்கே போய் இருந்துவிட்டு வரும்படி வற்புறுத்தி அனுப்பி வைத்திருந்தனர் .ரிஷிக்கும் ,ஷ்ரத்திற்கும் தொழில் விசயத்தில் ஒரே அலைவரிசை .பத்து நாட்களாக அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிய சஹானாவிற்கும் அவர்கள் பேசிய தொழிலில் ஈடுபாடு வர , உற்சாகமாக தானும் அந்த பேச்சுக்களில் கலந்து கொண்டாள் .

ஷ்ராவத்தின் ஆர்வமான பார்வை மட்டுமே அவளை தொல்லைப்படுத்தியது .மற்றபடி அவர்களது தொழில் பேச்சுக்கள் நொந்திருந்த அவளது மனதிற்கு ஆறுதலாகவே இருந்தன. ஏற்கெனவே ரிஷிதரனின் இரண்டு தொழில்களில் பார்ட்னராக இருந்த ஷ்ராவத் , தனது குடும்ப தொழிலான டைல்ஸ் தொழிலில் பங்கேற்கும்படி ரிஷிதரனை அழைத்தான் .

ஆதி முதல் அந்தம் வரை அந்த தொழிலை அலசிவிட்டு அதற்கு ஒத்துக்கொண்டான் ரிஷிதரன் .தனது தந்தை போல் பழமையான முறை தொழிலை விட்டுவிட்டு நவீன முறையில் ஷோரூம்கள் அமைத்து தொழிலை பெருக்கும் யோசனையில் இருந்தான் ஷ்ராவத் .அதனை ரிஷியும் ஒப்புக் கொள்ள இந்தியா முழுவதும் ஷோரூமிற்கான இடங்களை அலசி தேர்ந்தெடுத்தார்கள் .

அதில் ஒரு ஷோரூம் அமையும் இடம் மதுரை என ஷ்ராவத் கூறியபோது ” வேண்டாம் …” என ரிஷியும் , ” வேண்டும் ” என சஹானாவும் ஒரே நேரத்தில் கூறினர் .வினோதமாக இருவரையும் பார்த்தான் ஷ்ராவத்.

” அது கொஞ்சம் சின்ன ஊர் ஷ்ரத் …அங்கே நாம் எதிர்பார்க்கும் பிஸினஸ் நடக்குமோ …என்னவோ ….? ” ரிஷிதரன் .

” அப்படி ஒன்றும் சின்ன ஊர் கிடையாது ஷ்ரத் .அங்கே பிஸினஸ் நன்றாகவே போகும் . அங்கே ஒரு ஷோரூம் போட்டு அதன் பொறுப்பையும் எனக்கு தர வேண்டுமென நான் விரும்புகறேன் …” சஹானா .




” வேண்டாம் சஹி …அந்த ஊர் நமக்கு ஒத்துவரவில்லை “

” இல்லை ரிஷி …அந்த ஊரில் எனக்கு ஒரு முடிக்கப்படாத கணக்கு இருக்கிறது .நான் அதனை முடிக்கவேண்டும் …” சஹானா தீவிரமாக கூறினாள் .

” ஓ.கே சஹி டன் .தமிழ்நாட்டில் நமது கம்பெனியின் முதல் ஷோரூமை மதுரையிலேயே ஆரம்பிப்போம் …” ஷ்ராவத் முடித்துவிட ரிஷிதரன் தோள்களை குலுக்கிக் கொண்டு அமைதியாகிவிட்டான் .

அன்று அப்படி கேட்டு வாங்கி வந்த இந்த ஷோரூமை இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக நடத்திக்காட்டினாள் சஹானா .அதுவும் சாம்பவி தனியாக தொழில் தொடங்குவதை அறிந்து அவள் முன்  தான் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற வெறியில் நிறைய உழைத்தாள் .தொழிலும் வளர்ந்த்து .

ஆனால் சாம்பவி கடந்த ஒரு வருடமாக அவளுக்கென்று ஒரு இடத்தை தொழிலில் தக்க வைத்துக்கொள்ள , அதனை பொறுக்க முடியாமல் அவளை விரட்டிக்கொண்டே இருந்தாள் .அவளது தொழிலை விரிவடைய விடாமல் அவள் கேட்ட பேங்க் லோன் அவளுக்கு கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தாள் .மேலும் அவளால் முடிந்த இடைஞ்சல்களை அவளது தொழிலுக்கு கொடுத்தபடியிருந்தாள் .

இது போன்ற தேவையற்ற விசயங்களில் சிதறிய அவளது கவனம் அவள் தொழிலை பாதித்தது . அதனை சஹானா உணர்ந்த போது , தொழிலின் சரிவை சரிப்படுத்தவேண்டிமென்ற எண்ணமே அவளுக்கு பெரும் ஆயாசமாக இருந்த்து . எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு போனால் என்ன என தோன்றியது .

நெற்றிப் கோட்டை அழுத்தியபடி தலையை குனிந்து கொண்டாள் சஹானா .

” ரிலாக்ஸ் சஹி …டேக் திஸ் ….” அவள் கைகளில் ஷ்ராவத் வைத்த தண்ணீரை வேகமாக குடித்தாள.

” லீவ் திஸ் மேட்டர் டூ மீ சஹி .ஐ வில் மேனேஜ் இட் …” ஷ்ராவத் ஆதரவாக கூறினான் .

உடனே அவனுக்கு தலையாட்டி தனது தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லை சஹானாவிற்கு .அத்தோடு அந்த சாம்பவியை வேறு ஒரு கை பார்க்க வேண்டியதிருக்கறது .

” நோ …ஐ ஆம் ஒன்லி சால்வ் திஸ் ப்ராப்ளம் .ப்ளீஸ் கிவ் மீ த்ரீ மன்த்ஸ் …”

” நோ …” ஷ்ராவத் அழுத்தமாக மறுத்தான் .

” மேலும் …மேலும் நஷ்டப்பட நான் தயாரில்லை சஹி …”

” ஒன்றரை ஆண்டுகளாக உங்களுக்கு நான் லாபக்கணக்குதான் காட்டியிருக்கிறேன் ஷ்ரத் .இப்போது ஒரு ஆறு மாதமாகத்தான் இப்படி ….திரும்பவும் அதே லாபத்தை என்னால் காட்ட முடியாதா …?   என் மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு …? “

” நட்பு வேறு …தொழில் வேறு சஹி .ஒரு நண்பனாக உன் தொழில் திறமையில் எனக்கு நறைய நம்பிக்கையிருக்கறது .ஆனால் இந்த கம்பெனி எம் .டி யாக …ம்ஹூம் …பூஜ்ஜியம் ….” ஒற்றைவிரலால் காற்றில் சைபர் வரைந்து காட்டினான் .




” ஏன் …எதை வைத்து இவ்வளவு மோசமாக சொல்கிறீர்கள் …? ” அவனது அலட்சிய ஜாடையில் ஆத்திரமுற்று கேட்டாள் சஹானா .

” முன்பு போல் இப்போது நீ இல்லை சஹி .இப்போது உன் மனது அலைபாய்கிறது .ஓரிடத்தில் நிற்பதில்லை அது .அதனால் உன்னால் இந்த தொழிலில் நிற்க முடியாது …” உறுதியாக கூறினான் .

போடா …பெரிய இவன் .எல்லாம் தெரிந்த்து போல் என்னை சொல்ல வந்துவிட்டான் .இதழ்களை மெல்ல அசைத்தபடி தனது வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள் .

” இந்த ப்ராப்ளத்தை சால்வ் செய்தபிறகு உனது மன எண்ணத்தை நீ தாராளமாக வெளிப்படையாக சொல்லலாம் சஹானா .இப்போது அல்ல …” முணுமுணுக்கும் அவளது உதடுகளை கூர்ந்தபடி சொன்னான் .

” என்ன மன எண்ணம் …? அப்படி எதை கண்டுபிடித்தீர்கள் ….? ” உடனடியாக சண்டைக்கு தயாராக இருக்கையை விட்டு எழுந்தாள் .

” ரிலாக்ஸ் …சிட் டவுன் .நௌ ஐ ஆம் யுவர் பாஸ் .யு வார் மை வொர்க்கர் ..ஓ.கே…? ” என்றான் அதிகாரமாக .

நீயுமாச்சு ..உன் வேலையுமாச்சு …என எல்லாவற்றையும் உதறிவிட்டு வெளியேறி விடுவோமா
என யோசித்தபடி அவனை பார்த்தவள் , அவனும் அதனையே எதிர்பார்த்து அமர்ந்திருப்பது போல் தோன்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு தலையை நிமிர்த்தி …” தென் ….” என்றாள் .

எழுந்து விட்ட சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியபடி ” நீ தான் சொல்ல வேண்டும் ….” என்றான் .

” எனது முடிவு முன்பே நான் சொன்னதுதான் ….”

” ம் …ஓ.கே .அப்போது …அதில் எனது சில சேஞ்சஸ் நான் பண்ண வேண்டியதிருக்கும் ….”

வேறு என்ன குண்டை தூக்கி போடப்போகறான் என எண்ணியபடி …” வாட் …சேஞ்சஸ் ….? ” என்றாள் .

” மே ஐ கம்மின் …? ” வெளியே கதவு லேசாக தட்டப்பட்டது .
உடனே முகம் பிரகாசமாக ” ரிஷி ….” என்றபடி வேகமாக எழுந்து போய் கதவை திறந்தவள் ” ஹாய் ரி ஷி ….” என அண்ணனுக்கு கை குலுக்கினாள் .

ஷ்ராவத்தும் புன்னகையோடு ரிஷிதரனை வரவேற்றான் .




What’s your Reaction?
+1
30
+1
25
+1
0
+1
2
+1
2
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!