Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 13

    13

சீறிவரும் போதெல்லாம்
சிரித்து விட்டு போகிறாய் ,
சிவந்து விட்ட மச்சத்தை
ஒதுக்கி வைக்கிறேன் மறைவாக ,
நெஞ்சக்குளத்தில் சதா ஓடும்
தீரா நதியை ஸ்பரிசித்து விட்டு ,
தேடல்களின் வரப்புகளில்
நேர்த்திகளை விதைத்து விட்டு ,
தயங்கி தயங்கி பிரிக்கிறேன்,
பொட்டலமாக்கி போட்டு வைத்த
என் முந்தைய குழப்பங்களை,
சத்தியம்தானடி என
சாவகாசமாய் சரித்துவிட்டு
சிரித்துச்  செல்கிறாய்  ,
சாத்திவிட்ட கதவு பார்த்து
நிற்கிறேன் ,
பூத்து விட்ட கள்ளியாய் .




மஞ்சளும் , சிவப்புமாக மலர்ந்திருந்த அந்த கல்வாழை பூக்களை பார்த்தபடி பால்கனியில் அமர்ந்திருந்தாள் சாம்பவி .முன்தின இரவு ரிஷியின் கோபத்தில் அவள் மனம் மிகவும் அதிர்ந்திருந்த்து .இவர் மிகவும் கோபக்கார்ராக தெரிகிறாரே ….இந்த பிரச்சனையை இவரிடம் சொல்லலாமா …? எப்படி சொல்வது …? அதற்கும் மிகவும் கோப படுவாரா ….? குழப்பத்துடன் விழிகளை மூடிக்கொண்டாள் .

அவளது இமைகள் மென்மையாக வருடப்பட்டன .மெல்ல கண்களை திறந்தாள் .மணமான காபியை நீட்டினான் ரிஷி.

” உனக்கு சர்க்கரை எத்தனை ஸ்பூன் …? “

” ஒன்று ….கொடுங்கள் நான் கலக்குகிறேன் .உங்களுக்கு …? “

” இதோ நான் கலந்து கொண்டேன் .நீ குடி …” காபியை குடித்தபடி எதிரே அமர்ந்து அவளை உற்று பார்த்தான் .காபி கோப்பையின் விளிம்பில் வட்டமிட்டாள் சாம்பவி .

“சாம்பவி ஹேவ் யூ எனி ப்ராப்ளம் …? “

திடீரென ரிஷி இப்படி கேட்கவும் விழித்தாள் சாம்பவி .என்ன சொல்வது …? எப்படி சொல்வது …? அவள் இதழ்கள் நடுங்க துவங்கின .

தனது இடத்திலிருந்து எழுந்து வந்து அவளது இருக்கையின் கைப்பிடியில் நெருங்கி அமர்ந்தான் .

” ஏன் பவி என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா உனக்கு …? ” அவள் முகத்தை உயர்த்தியபடி கேட்டான் .இப்போது அவள் உடலும் நடுங்க தொடங்கியது .

பயமில்லை .ஆனால் ஏதோ ஒரு உடன்படாத தனிமைப்படும் உணர்வு .அவனது அதீத நாகரீக , அல்ட்ரா மாடர்ன் பேச்சுக்கள் ….போக்குகளில் .இதனை எப்படி அவனிடம் கூறுவது .

இதழ்களை இறுக்க மூடியபடி இருந்த மனைவியை பார்த்தவன் ” ஐ  டூ நாட்  ந்நோ ஹவ் ட்டூ  ஹேன்டில் யு சாம்பவி ….”

பெருமூச்சுடன் அவளை விட்டு பால்கனியின் ஓரத்திற்கு சென்று கீழே வேடிக்கை பார்க்க துவங்கினான் .

வழக்கமான அவனது வேகத்துக்கு மாறான இந்த நிதானம் சாம்பவிக்கு இதமளிக்க , மெல்ல குளிர்ந்த்து அவள் உள்ளம் .பரந்திருந்த அவன் முதுகு அவளை வா என அழைக்க , அப்படியே போய் அவன் முதுகில் சாய்ந்து கொண்டால் இந்த நெஞ்சை அறுக்கும் பிரச்சனைகள் தீராதா …என்ற ஏக்கம் வர , தன்னையறியாமல் எழுந்து அவன் அணைப்பிற்காக அவனை நோக்கி நடக்க துவங்கினாள் .

இன்னமும் இரண்டே எட்டுக்கள் அவனை நெருங்க இருந்த போது , அவனது போன் ஒலித்தது . போனை எடுத்தவன் …




” என்னாச்சு மம்மி …? ஒய் ஆர் யு டாக்கிங் டூ டென்சன் …? ” என்றான் .

” ம் …ஓ.கே …ஓ.கே ..டோன்ட் ஒர்ரி …ஐ ம் கம்மிங் சூன் ….” என்றவன் திரும்பி சாம்பவியை பார்த்து ” நாம் உடனே கிளம்ப வேண்டும் …” என உள்ளே நடக்க துவங்கினான் .
” என்னங்க …? என்ன ஆச்சு …? “

” தெரியலை .பட் மாம் இஸ் வெரி டென்சன் அன்ட் கன்புயூஸ்டு .கமான் லீவ் ஏர்லி …”

எப்படியோ உடனே ப்ளைட்டிற்கு ஏற்பாடு பண்ணி இரண்டு மணி நேரத்தில் கிளம்பி விட்டனர் .இது சந்திரன் பற்றிய பிரச்சனை என்று சாம்பவிக்கு நன்கு தெரிந்த்து .

தப்பு பண்ணிவிட்டோமோ ..இதை பற்றி இவனிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டுமோ ….ஏனோ சாம்பவியின் இதயம் ஏதோ விரும்பத் தகாத ஒன்று நிகழப் போவதாக கூறியது .சிறு புருவ சுளிப்புடன் தன்னருகில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்த ரிஷியை ஏறிட்டாள் .மீண்டும் அந்த எண்ணம் மனதில் வந்த்து .

இவனை பிரிய வேண்டி வந்துவிடுமோ ….? எதனால் அந்த எண்ணம் வந்த்தென தெரியவில்லை .ஆனால் அவள் இதயம் இப்படித்தான் அடித்துக் கொண்டிருந்த்து.இறுதியில் அவள் பயந்த்து போலத்தான் நடந்துவிட்டது .

வீட்டு வாசலில் கால் வைக்கும் போதே அங்கே நிலவிய அசாதரணமான சூழல் விளங்கியது .படபடக்கும் நெஞ்சோடு உள்ளே நுழைந்தவளின் கண்ணில் முதலில் பட்டது ஹால் சோபாவில் தொய்ந்து அமர்ந்திருந்த சஹானாதான் .எப்போதும் நிமிர்வுடனே
பார்த்து பழக்கப்பட்ட தோழியை இப்படி தளர்ந்து போய் பார்ப்பது மனதிற்கு கஷ்டத்தை கொடுக்க ,மெதுவாக சென்று அவளருகில் அமர்ந்தாள் .ஆதரவாக அவள் கைகளை பிடித்துக் கொண்டாள் .ஆனால் அந்த தொடுகையை சஹானா உணரவில்லை .தன் போக்கில் தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் .

ஆனால் சாம்பவியின் செய்கைகளை கூர்மையான பார்வையோடு கவனித்தபடி இருந்தாள் மஞ்சுளா .

” நாம் ஏமாந்துவிட்டோம் ரிஷி ….” என்றாள் என்னவென்று கேட்ட மகனிடம் .

” என்ன மம்மி …? “

” இவள் …அண்ணன் யாரோ ஒரு பெண்ணை திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக் கொண்டானாம் ….” ஆணி கொண்டு அறைவது போலிருந்த்து மஞ்சுளாவின் பேச்சு .

” வாட் …? இஸ் இட் சுயூர் மாம் …? நம்பமுடியாமல் கேட்டான் ரிஷி.

அது திருட்டு கல்யாணமில்லை …மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் சாம்பவி .




” இரண்டு நாட்களுக்கு முன்பே நடந்துவிட்டதாம் ரிஷி. நம் ரிலேடிவ்  ஒருவருக்கு இன்றுதான் தகவல் தெரிந்து , அந்த ஊர்கார்ர் ஒருவர் மூலமாக விசாரித்து உறுதியும் படுத்தியிருக்கிறார் .” தனசேகர் சொன்னார் .

” உங்கள் சம்பந்தி வீட்டு விசயம் .உங்களுக்கு தெரியாதான்னு கிண்டலாக கேட்கிறார் .இட்ஸ் சேம் டூ மீ ….” ஸ்டைலாக தோள்களை குலுக்கினாள் மஞ்சுளா .

ரிஷிதரன் சிந்தனையோடு நின்றான் .மஞ்சுளாவின் பார்வை சாம்பவியை ஆராய்ந்த்து .

” அஸ் யு அல்ரெடி ந்நோ திஸ் மேட்டர் …? “

” எ…என்ன …அத்தை …? ” திணறினாள் சாம்பவி .

” ஓ…உனக்கு இங்கிலீஸ் அவ்வளவாக வராது இல்லை …?இந்த விசயம் முன்பே உனக்கு தெரியுமா …என்று கேட்டேன் …” நிதானமாக அழுத்தி கேட்டாள் மஞ்சுளா .

தன்னருகில் அமர்ந்திருந்த தோழியை திரும்பி பார்த்தாள் சஹானா .அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்து சாம்பவியின் மறுபுறம் அமர்ந்து கொண்ட ரிஷிதரன் கேள்விகளின்றி அவளை கூர்ந்து பார்த்தான் .

” சொல்லுடி …இந்த விசயம் உனக்கு ஏற்கெனவே தெரியுமா …? ” சஹானா சாம்பவியின் தோள்களை பற்றி உலுக்கினாள் .

பதில் சொல்ல முடியாது அமைதியாக இருந்தாள் சாம்பவி .அந்த அமைதியே உண்மையை அனைவர்க்கும் உணர்த்தியது .

” தெரிந்து கொண்டாயா ரிஷி .நாம் ஏமாந்துவிட்டோம் ….” மஞ்சுளா கூறினாள் .

” ஏன்டி …ஏன்டி ..நீ இப்படி இருக்கிறாய் ….நான் எதையாவது உன்னிடம் மறைத்திருக்கிறேனா …? நீ மட்டும் ஏன் இப்படி எல்லாவற்றையும் உனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறாய் …? என் மனது உனக்கு தெரியும்தானே …பிறகு ஏன் இதனை மறைத்தாய் ….? ” குமுறலுடன் சாம்பவியை உலுக்கியவள் , அவள் தொடர்ந்து மௌனமாகவே இருப்பதை பார்த்து  ” சை …” என்றபடி அவளை தள்ளிவிட்டாள் .

அவள் தள்ளிய வேகத்தில் பின்னால் அமர்ந்திருந்த ரிஷியின் மேல் மோதிக் கொண்டவளை அவன் விலக்கி பற்றினான் .” மனதை பற்றிய கவலை இவர்கள் குடும்பத்திற்கே கிடையாது போல சஹி. இவர்கள் எப்போதும் தன்னிலேயே முழுகி இருப்பவர்கள் .மம்மி சொல்வது போல் நாம் ஏமாந்துவிட்டோம் …” என்றபடி அவளை அங்கே சோபாவிலேயே அழுத்தி இறுத்திவிட்டு டக்கென எழுந்து போய் சன்னல் வழியே வெளியே பார்க்க தொடங்கினான் .

சஹானாவின் வார்த்தைகள் நெஞ்சை புண்ணாக்கினால் ரிஷியின் வார்த்தைகள் அந்த புண்ணின் மேல் சுடு தண்ணீர் ஊற்றியதை போல் உணர்ந்தாள் சாம்பவி .




” இ…இல்லை ..எ…எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .அதனால்தான் நான் பேசாமல் இருந்தேன் ….” தயங்கி கூறினாள் .

” உன் மரமண்டைக்கு ஒன்றும் தெரியாது …புரியாது என்று எனக்கு தெரியும் .ஆனால் விசயத்தை என்னிடம் முதலிலேயே சொல்லியிருக்கலாமே …சொல்லியிருந்தால் நான் இந்த திருமண பேச்சையையே ஆரம்பித்திருக்க மாட்டேனே ….” சஹானா கூறியதும் அதிர்ந்தாள் சாம்பவி .

வேகமாக திரும்பி ரிஷியை பார்க்க அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் .சாம்பவி பார்க்கவும் மீண்டும் வெளியே திரும்பக் கொண்டான் .

” அதனால்தான் சொல்லவில்லை சஹி ….” மஞ்சுளா எடுத்துக் கொடுத்தாள் .

” முதலிலேயே சொல்லிவிட்டால் இந்த திருமணம் நடப்பதேது …? ஒரு சாதாரண குடும்பத்து பெண் இதோ இப்படி …கோடீஸ்வர்ர் தனசேகரது மருமகளாக , தொழிலதிபர் ரிஷிதரனின் மனைவியாக …உரிமையாக அவர்கள் வீட்டு ஹால் சோபாவில் அமர்ந்திருப்பது எப்படி ….”

மஞ்சுளாவின் இந்த குத்தல் குரலில் உடல் கூசிவிட அநிச்சையாக சோபாவை விட்டு எழுந்து நின்றாள் சாம்பவி .

மஞ்சுளாவிற்கு ஆரம்பத்திலிருந்தே இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை .அவள் பிறந்த்து கோடீஸ்வர குடும்பத்தில் .வளர்ந்த்தும் அதே உயர்ந்த தோரணையில் .கோடீஸ்வர்ரான தனசேகரை மணமுடித்து மகா ராணி அந்தஸ்துடன் இன்று வரை வாழ்ந்து வருபவள் .தனது மகனுக்காக் தங்கள் தகுதிக்கு இணையான பல வசதியான வீட்டு பெண்களை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள் .ஆனால் ரிஷிதரன் அவ்ர்களை திரும்பியும் பாராமல் மறுத்துக் கொண்டிருந்தான் .

அப்படிபட்டவன் இவளை …இந்த சாதாரண நடுத்தர குடும்பத்து , நாகரீகம் தெரியாத பெண்ணை மணக்க சம்மதிப்பானென அவள் நினைக்கவில்லை .சஹானாவிற்கு சந்திரன் மேலுள்ள ஆசையை அவளிடம் பேசி தன்னால் சரி செய்து விட முடியுமென்ற நம்பிக்கை மஞ்சுளாவற்கிருந்த்து .ஆனால் ரிஷி விசயம் அப்படியல்ல .அவன் சுதந்திரமானவன் .தன் விசயங்களில் முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதென நினைப்பவன் .

அதனால்தான் இந்த திருமண யோசனையை சஹானா கூறியபோது , செப்பு வைத்து விளையாடும் சிறு பிள்ளையை பார்ப்பது போல் மஞ்சுளா மகளை பார்த்துக் கொண்டிருந்தாள் .ஆனால் ரிஷி …ஒரே வார்த்தையில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி சென்றதும்தான் விசயம் அளவு மீறுவதை உணர்ந்தாள் அவள் .

அந்தஸ்து என்ற பேச்சை கணவரிடமோ , மகளிடமோ , மகனிடமோ …அவள் எடுக்க முடியாது .அவர்கள் மூவரும் என்றுமே அந்தஸ்து பார்ப்பவர்களில்லை .எனவே செய்வதறியாது அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் கண் முன்னாலேயே ரிஷிதரன் – சாம்பவி திருமணம் நடந்து முடிந்துவிட்டது .

சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணு என்ற எண்ணமே முதலில் இருந்து சாம்பவியை மஞ்சுளாவிற்கு பிடிக்காமல் போனது .பெயரை பார் சாம்பவியாம் ….இந்த பெயருள்ள ஒருத்தியை நான் எப்படி என் மருமகளென என் வட்டாரத்தில் அறிமுகம் செய்வேன் …? மனதிற்குள்ளேயே பொருமியபடியிருந்தாள் அவள் .இதோ அவளது பொருமல்களுக்கெல்லாம் ஒரு வடிகால் கிடைத்துவட்டது .




” மஞ்சு மைன்ட் யுவர் வேர்ட்ஸ் ….” தனசேகரின் அதட்டலை அலட்சியப்படுத்திய மஞ்சுளா தொடர்ந்தாள் .
” நீயே சொல்லு சஹி …இவள் அண்ணனுக்கு இது போல் தெருவில் போகும் ஒருத்தியை வீட்டிற்குள் இழுத்து வரும் எண்ணமிருப்பது தெரிந்திருந்தால் …நீ இவளை நம் வீட்டிற்குள் இழுத்து வந்திருப்பாயா ….? ” என்றாள் .

நீயும் தெருவில் போகும் ஒருத்திதான் என மறைமுகமாக சொன்னாள் .அதனை மற்றவர்கள் உணர்ந்து கொண்டார்களோ இல்லையோ சாம்பவி உணர்ந்தாள் .அவமானத்தில் முகம் சிவக்க தலை குனிந்தாள் .

” நிச்சயமாக மாட்டேன் மம்மி .அந்த சந்திரனை திருமணம் செய்யும் எண்ணத்தில்தான் ,நான் நம் யாருக்கும் சம்மதமில்லையென்றாலும் இவளை இங்கே ..நம் வீட்டிற்குள் அழைத்து வந்தேன் …” என்றாள் .
யாருக்கும் சம்மதமில்லையா …? அப்போது ரிஷிதரனுக்கும் சம்மதமில்லையா …? அவனும் இஷ்டமில்லாமல்தான் என்னை மணந்து கொண்டானா …? சாம்பவியின் இதயம் ஊமையாக அழுதது .என்னை பிடிக்காத ஒருவனுடனா நான் ஒரு வாரமாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்….கணவனை திரும்பி பார்த்தாள் .

ரிஷிதரன் சன்னலுக்கு வெளியேயிருந்து திரும்பவே இல்லை .இதுவே அவனது மனநிலையை நன்கு உணர்த்தியது . அந்த விநாடியில் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டுமென சாம்பவிக்கு தோன்றியது .

” நா …நான் எங்கள் வீட்டிற்கு போய் விபரம் கேட்டுக்கொண்டு வருகிறேன் …” திக்கி திணறி கூறினாள் .

” நோ …யு கான்ட் கோ ….இனி நீ அங்கே போகவே கூடாது …” கத்தினாள் சஹானா .

” நோ சஹி .லெட் ஹெர் கோ …இந்த பிரச்சனையை அவளே முடித்து வைக்கட்டும் .நீ கிளம்பு …” என்றான் ரிஷிதரன் .

சஹானா அங்கே போகவே கூடாது என்றதை விட , நீ போ ..என்று ரிஷி கூறியதில்தான் சாம்பவி அதிகம் அதிர்ந்தாள் .இப்போதைக்கு போ என்கிறானா …ஒரேடியாக போ என்கிறானா …?

” டிரைவர் …” குரல் கொடுத்தான் .

” இந்த பெட்டியை காரில் கொண்டு போய் வை .சாம்பவியின் அம்மா வீடு தெரியுமில்லையா …அங்கே அவளை இறக்கி விட்டு விட்டு வா ….,” அவர்கள் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பெட்டிகளில் சாம்பவியினுடையதை டிரைவரிடம் காட்டி விட்டு திரும்பி பாராமல் மாடியேறினான் .

இறுதிவரை அவளை திரும்பியே பார்க்காமல் சென்ற அவனது செய்கை மனதினை காயப்படுத்த , சாம்பவி சஹானாவை திரும்பி பார்த்தாள் .அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் .உடைந்த மனதுடன் சாம்பவி வெளியே நடந்தாள் .

காரினருகில் நின்று கொண்டிருந்தார் தனசேகரன் .சற்று பயத்துடன் பார்த்த சாம்பவிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக புன்னகைத்தார் .

” உன் அத்தை பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதேம்மா .சீ  இஸ் நாட் இன் மூட் .நீ உன் அம்மா வீட்டிற்கு போய் ஒரு வாரம் இருந்து அங்கே நிலைமையை கொஞ்சம் சரி பண்ணிவிட்டு வா …” என்றார் .

சாம்பவிக்கு மிகவும் மனநிம்மதியாக இருந்த்து .” ரொம்ப நன்றி மாமா …” என்றுவிட்டு காரில் ஏறினாள் .

அங்கே மதுரையில் சாம்பவி நினைத்ததை விட நிலைமை மோசமாக இருந்த்து .இரண்டு நாட்களாக வீட்டில் சமையல் செய்த்தற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை .சந்திரன் முன் வராண்டாவில் கிடந்த மூங்கில் சேரில் சரிந்திருந்தான் .மாணிக்கவாசகம் ஹால் சோபாவில் சாய்ந்தபடி கிடக்க , மரகதவல்லி அழுதபடி தரையில் படுத்திருந்தாள் .

இரண்டு நாட்களாக சுத்தம் செய்யாத வீடு தூசியாக இருந்த்து .எப்போதும் சுத்தமும் , கலகலப்புமாக இருந்த தன் தாய் வீட்டை இந்த நிலையில் பார்த்ததும் சாம்பவிக்கு மனது வலித்தது .




சந்திரனை அதட்டி உள்ளே இழுத்து வந்து சோபாவில் அப்பாவின் அருகே அமர வைத்தாள் .மரகதவல்லியை எழுந்து முகம் கழுவ வைத்து மற்றொரு சோபாவில் உட்கார வைத்துவிட்டு , அடுப்பை பற்ற வைத்து பாலை சூடாக்கி மூவருக்கும் காபி போட்டு கொடுத்தாள் .

” உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் , அதற்காக வீட்டை இப்படியா போட்டு வைப்பீர்கள் …” திட்டியபடி ஹாலை பெருக்கி குப்பையை பின்பக்க குப்பை கூடையில் தட்ட போனவள் அப்படியே நின்றாள் .அங்கே குப்பை கூடை பக்கத்திலிருந்து எழுந்தாள் மாலினி .

” நான் போட்ட்டுமா ….? ” என கேட்டபடி அவள் கையிலிருந்த குப்பையை வாங்கி கூடையினுள் கொட்டினாள் .

” உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் , நான் வீட்டை பெருக்கட்டுமா …? ” கேட்டபடி அவள் கையிலிருந்த விளக்குமாற்றை வாங்கியவள் அங்கேயே பின்புறத்தில் சேர்ந்திருந்த குப்பைகளை கூட்டி அள்ள துவங்கினாள் .

தடுமாறிய அவளது நடை அவளது சோர்வை சொல்ல உள்ளே வந்த சாம்பவி அவளுக்கு ஒரு கப் காபி போட்டு எடுத்து வந்து நீட்டினாள் .

” இதை குடித்து விட்டு வேலையை பார் . “

” உங்கள் கருணைக்கு நன்றி …” காபியை வேகமாக வாங்கி ஊதி …ஊதி உறிஞ்ச ஆரம்பித்தாள் அவள் .

” இதில் என்ன கருணையை கண்டுவிட்டாய் …? ” எரிச்சலாக கேட்டாள் சாம்பவி .

” இரண்டு நாட்களாக அத்தையும் , மாமாவும் வெளியே போ …வெளியே போ …என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கறார்கள் .நீங்கள்தான் காபியை குடித்து விட்டு வேலையை பார் என்றீர்கள் .அது பெரிய கருணையில்லையா ….? ” என்றபடி காபி டம்ளரை கழுவி சாம்பவியிடம் கொடுத்துவிட்டு ….

” பின்புற தோட்டத்தில் மர இலையெல்லாம் உதிர்ந்து குப்பையாக கிடக்கிறது .அதனை கூட்டி அள்ளி விடுகிறேன் …” என சொல்லிவிட்டு போனாள் .

அவள் போவதையே பார்த்திருந்த சாம்பவிக்கு இந்த வீட்டினுள் அவளது நுழைவை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை .எனக்கே இவளை ஏற்றுக் கொள்வது இவ்வளவு சிரம்மாக இருக்கிறதே .அம்மா , அப்பாவிற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் .உள்ளே நுழைந்து சமைக்க ஆரம்பித்தாள் அவள் .

சந்திரன் வரவும் கையை உதறிவிட்டு சாப்பிடாமல் எழப் போன மாணிக்கவாசகத்தையும் , தந்தை எழுந்த்தும் தானும் எழப் போன சந்திரனையும் அதட்டி , பிறகு நானும் சாப்பிட மாட்டேன் என மிரட்டி அருகருகே அமர்ந்து சாப்பிட வைத்தாள் .துடைக்க துடைக்க கண்ணீர் வடிந்தபடி இருந்த மரகதவல்லிக்கு அரும்பாடுபட்டு நான்கு வாய் உணவை வாயில் திணித்து உறங்க  வைத்தாள் .

தானும் சாப்பிட்டு விட்டு , மாலினியை சாப்பிட அழைத்தாள் .அமைதியாக அடுப்படியினுள் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மாலினியை யோசனையாக பார்த்தாள் .

” நீங்கள் இருவரும் எப்போதிருந்து காதலிக்கிறீர்கள் ….? “

நிமிர்ந்து அவளை பார்த்த மாலினி மீண்டும் சாப்பாட்டு தட்டில குனந்து கொண்டாள் .” அதெல்லாம் எனக்கு தெரியாது .எனக்கு ஒரு கிழவனுடன் கட்டாய திருமணம் செய்ய என் சித்தி ஏற்பாடு பண்ணினார்கள் .சார் இன்ஸ்பெக்டருடன் வந்து அதை நிறுத்தி என்னை காப்பாற்றினார் …அவ்வளவுதான் .” மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள் .

சந்திரன் மேலிருந்த அதிருப்தி சாம்பவிக்கு மறைந்த்து .அண்ணன் தங்களையெல்லாம் ஏமாற்றி ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கவில்லை .இதுவே போதும் என்றிருந்த்து .மாலினி சாப்பிட்டு முடித்துவிட்டு பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள் .




” அடுப்பை துடைத்து விடவா …? இரவு என்ன சமைக்கவென்று சொல்லிவிட்டீர்களானால் செய்து விடுவேன் .நான் ஓரளவு நன்றாகவே சமைப்பேன் …” என்றாள் .

தலையாட்டிய சாம்பவிக்கு உன் வீட்டில் நான் வேலைக்காரியாகவேனும் இருந்து கொள்கிறேன் என்ற மாலினியின் மனோபாவம் புரிந்த்து.அவளது பார்வை மாலினியின் கழுத்து மஞ்சள் கயிறுக்கு சென்றது .இதனை கழுத்தில் கட்டியிருப்பதால் இந்த வீட்டில் இவளது இடம் தெரியுமா இவளுக்கு …?

மாலினியை அந்த வீட்டில் தங்க வைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை சாம்பவிக்கு .மாணிக்கவாசகமும் , மரகதவல்லியும் அவளை வெளியேற்றுவதில் குறியாக இருந்தனர் .அப்படி அவள் வெளியேறினால் தானும் வெளியேறி விடுவதில் சந்திரன் உறுதியாக இருந்தான் .

மாலினியோ வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைப்பதில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தாள் .

” கழுத்தில் தாலி கட்டிய கடமைக்காகவேனும் அவரும் என் பின்னாலேயே வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும் .பிறகு ஊரார் என்ன பேசுவார்கள் …? மகனை இவள் வந்து பிரித்துவிட்டாள் என என்னைத்தானே பேசுவார்கள் …? “

” ஊரார் பேச்சுக்கு பயந்துதான் நீ இங்கே இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா …? ” லேசான உறுததலுடன் கேட்டாள் சாம்பவி .

,” இங்கிருந்து வெளியே போனால் எனக்கும் வேறு கதி இல்லையே .வெளியே என் சித்தி அடியாட்களுடன் காத்திருக்கிறாள் .நான் போன மறுநிமிடம் என்னை தூக்கி எவன் கையிலாவது கொடுத்துவிடுவாள் .எனது பாதுகாப்பிற்காகவும்தான் ….” தனது நிலைமை குன்றலின்றி பகிர்ந்து கொண்டாள் .

ஙேலைகளை முடித்துவிட்டு ஒரு நிறைவோடு தனது வழக்கமான பின்புற இடத்திற்கு படுக்க போனவளை யோசனையுடன் பார்த்தாள் சாம்பவி .ஒரு வாரமாக மாலினி அங்கேதான் படுத்துக் கொள்கிறாள் .அவளை வீட்டற்குள் விட மரகதவல்லி சம்மதிக்கவில்லை .

இவளை எப்படி வீட்டினுள் சேர்க்க போகிறேன் …கவலையுடன் நெற்றியை தேய்த்துக்கொண்டாள் சாம்பவி .




What’s your Reaction?
+1
27
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!