Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 12

  12

உன் வெறுப்பு முகத்தை
தீவிரமாய் முறைக்கையில் ,
அவசரமாய் நினைவில் வந்து தொலைகிறதுன்
அந்த அதிகாலை அவசர முத்தம் ,
அத்துமீறல்களின் அதீதங்களில்
முதலிடத்தை பிடித்துக் கொண்டு
குவியலாய் உதட்டில் ஒட்டிக்கொள்கிறது ,
துடைத்தெறிய மனமின்றி விழுங்குகையில் …
மயக்குதலுக்கும் ..மயங்குதலுக்குமிடையே
கலகலவென்ற வெண்மையில்
கொத்தாய் மலர்கிறது மல்லிகை
கூந்தலில் .




” அம்மா அழுகிறீர்களா …என்ன …? என்னம்மா என்ன விசயம் …? ” பதட்டத்தோடு கேட்டாள் சாம்பவி .

” பாப்பு உன் அண்ணன் …அந்த கடங்காரன் நம்ம குடும்ப கௌரவத்தையே பாழாக்கிட்டான்டி ….”

” அம்மா …என்னம்மா சொல்கிறீர்கள் …? புரியும்படி சொல்லுங்கம்மா .எனக்கு படபடங்குது …”

” இந்த சந்திரன் பய …எவளையோ இழுத்துட்டு வந்து என் பொண்டாட்டிங்கறான்டி ….”

” என்ன …? அம்மா உண்மையாகத்தான் சொல்கிறீர்களா ….? “

” இதில்தானா விளையாடப்போகிறேன் .இப்படி தலையில் கல்லை தூக்கி போட்டுவிட்டானே ….” மரகதவல்லி சத்தமாக அழத் துவங்கினாள் .

” அம்மா தயவுசெய்து கொஞ்சம் அமைதியாக இருங்கள். என்ன நடந்ததென்று சொல்லுங்கள் .கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறாரா …? அண்ணனா …? யாரை …? எப்படி …? “

” அந்த அறிவு கெட்ட பயதான் .புத்தி பேதலிச்சிப் போயி இப்படி தெருவில் போகிறவளையெல்லாம் பொண்டாட்டின்னு இழுத்துட்டு வருவானா …? ” தொடர்ந்து அழுதாள் .

” அம்மா நீங்க கொஞ்சம் இருங்க .எனக்கு ஒண்ணும் புரியலை .யாரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறார் …? “

” அதான்டி …ஆதரவு யாருமில்லைன்னு சொல்லி , நம்ம கம்பெனிக்குள்ளேயே ஒருத்தியை தங்க வச்சானே …அந்த மேனா மினுக்கியைத்தான் கல்யாணம் பண்ணிட்டேங்கிறான் .அவளை பற்றி தெரியாமல் என் இடத்திற்குள் விட்டு விட்டேனே .இப்போது அவள் என் தலையிலேயே கை வச்சிட்டாளே .என்ன சொல்லி என் பிள்ளையை மயக்கினான்னு தெரியலையே …” புலம்பினாள் .

” அம்மா நீங்க போனை அண்ணனிடம் கொடுங்க நான் பேசுகிறேன் ….”

” அந்தப்பய அங்கிட்டு நிற்கிறான்.நீயே போன் பண்ணி பேசு …” போனை கட் செய்தாள் .

சாம்பவி சந்திரனின் போனுக்கு அழைத்தாள் .

” அண்ணா …என்னண்ணா அம்மா ஏதேதோ சொல்றாங்களே .அதெல்லாம் ….”

” உண்மைதான்மா .நான் மாலினியை திருமணம் செய்து கொண்டேன் …”




” என்னண்ணா  இப்படி …? நீங்கள் இருவரும்….” காதலித்தீர்களா என அண்ணனிடம் கேட்க தயங்கி நிறுத்தினாள் .

” ஆமாம் சாம்பவி .நாங்கள் ஒருவரையொருவர் விரும்பினோம் ….”

” ஆனால் எதற்காக அண்ணா இந்த திருட்டு கல்யாணம் …? ”
” இது திருட்டு கல்யாணமில்லை பாப்பு .முறைப்படி கோவிலில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் தலைமையில் நடந்த கல்யாணம் .உனக்கு மாலினியின் நிலைமை தெரியும்தானே .அவளை ஒரு கிழவருக்கு மணம் முடிக்க அவரது சித்தி ஏற்பாடு பண்ணினாள் .அதை தடுப்பதற்காக நான் போன போது , அவளை நானே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது ….”

” என்னண்ணா இது …? கொஞ்சம் பொறுத்திருக்கலாமே ….” சாம்பவியால் இப்படித்தான் கேட்க முடிந்த்து. அவளது வீட்டை பொறுத்த வரை காதலே பெரிய பாவம் .இதில் திருட்டு கல்யாணமென்றால் …இது அம்மா , அப்பாவிற்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்பதை அவள் அறிவாள் .

” நம்ம வீட்டு நிலைமை எனக்கும் தெரியும் பாப்பு .ஆனால அப்போது எனக்கு வேறு வழியிருக்கவில்லை …”

” சரி விடுங்க .நீங்க அம்மாவிடம் போனை கொடுங்கள் நான் சமாதானப்படுத்த முயற்சிக்கிறேன் …”

” அம்மா வீட்டிற்குள் இருக்கிறார்கள் .நீ அம்மாவிற்கு அல்லது அப்பாவிற்கு போன் செய்து பேசு …”

” அப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் …? “

” நாங்கள் இருவரும் நம் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறோம் …”

” என்னது …? எவ்வளவு நேரமாக …? சரி இருங்க அப்பாவிடம் பேசி உங்களை உள்ளே கூப்பிட சொல்கிறேன் …”

தந்தையை அழைத்தாள் அவள் .மாணிக்கவாசகம் முடியாதென்பதில் உறுதியாக இருந்தார் .அந்த மாலினியை அனுப்பி விட்டு சந்திரன் மட்டும் உள்ளே வந்தால் பெற்ற பிள்ளையென்பதால் வீட்டினுள் சேர்த்து கொள்வதாக கூறினார் .மரகதவல்லியும் அதையேதான் கூறினாள் .

இருவருக்கும் மாறி மாறி பேசி அலுத்த சாம்பவி கடைசியாக அப்பாவிடம் குரலை உயர்த்தினாள் .

” அப்பா இங்கே நாங்கள் கோவா கிளம்பிக் கொண்டிருக்கிறோம் .நீங்கள் மட்டும் இப்போது அவர்களை வீட்டிற்குள் கூப்பிட்டு கொள்ளவில்லையென்றால் , நான் எனது பயணத்தை கேன்சல் பண்ணிவிட்டு நேராக அங்கே வரப்போகிறேன் .வந்து நம் வீட்டு பிரச்சினையெல்லாம் தீர்த்து விட்டு வருகிறேன் .என்ன சொல்கிறீர்கள் .வரட்டுமா …? “




மாணிக்கவாசகம் இதனை அப்படியே மரகதவல்லியிடம் கூற அவள் போனை பிடுங்கி ” ஏய் உனக்கு அறிவிருக்கிறதாடி …? இப்படி ஒரு அசிங்கம் நம் வீட்டில் நடந்திருப்பது உன் புகுந்த வீட்டினருக்கு தெரிந்தால் நமக்கு எவ்வளவு அசிங்கம் …? “

” இது மறைக்க கூடிய விசயம் இல்லையேம்மா …”

” அதுவாக தெரியும் போது தெரியட்டும் .நீயாக வாயை திறக்காதே .இப்போது சத்தமில்லாமல் உன் கணவனுடன் ஊருக்கு கிளம்பு …”

பெற்றோரின் பயத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டு
” அப்போது அண்ணனையும் , அந்த பெண்ணையும் வீட்டிற்குள் கூப்பிடுங்கள் …” என்றாள் .

” அது முடியாது …”

” அம்மா .. ப்ளீஸ் இப்போதைக்கு இரண்டு பேரையும் வீட்டிற்குள் நுழைய விடுங்கள.நான் கோவாவிலிருந்து வந்த்தும் நேரே அங்கேதான் வருவேன் . மற்ற விபரங்களை அப்போது பேசிக் கொள்ளலாம் …”

” அப்பா …இப்படி இரண்டு பேரையும் வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்களே .எத்தனை பேர் வேடிக்கை பார்ப்பார்கள் .இதுவும் நம் குடும்ப கௌரவத்தை பாதிக்கத்தானே செய்யும் ….”

மிரட்டி , விரட்டி , கெஞ்சி …என்னென்னவோ செய்து சந்திரனையும் , மாலினியையும் வீட்டினுள்ளே அழைக்க வைத்தாள் சாம்பவி .இதற்கே இரண்டு மணி நேரம் ஓடியிருந்த்து .

ஆயாசத்தோடு தலையை பிடித்தபடி அமர்ந்தாள்.அவளது தலை மெல்ல நீவப்பட்டது .

” என்னடி  எதுவும் பிரச்சினையா …?தலை வலிக்கிறதா …? ” சஹானா அவள்  தலையை வருடியபடி கேட்டாள் .

” ஆமான்டி …” என்றபடி தனது பிரச்சினையை அவளிடம் சொல்ல வாயை திறந்தவளுக்கு , சஹானா மறைமுகமாக உணர்த்திய அவளது  எண்ணம் நினைவு வர , சுரீரென ஓர் குத்தூசி இதயத்தினுள் நுழைந்த்து போன்ற உணர்வில் துடித்தாள் அவள் .

இதோ இந்த அருமையான பெண்ணிடம் இதனை நான் எப்படி கூறுவேன் .தோழியை சாம்பவி நன்கு அறிவாள் .இது போன்று எண்ணங்களுக்கெல்லாம் இடமில்லாமல் இது வரை சுத்தமான மனதுடன் வாழ்ந்தவள் சஹானா .அவள் பார்வை சந்திரன் மேல் படிவதையே ஆச்சரியமாகத்தான் பார்த்தாள் சாம்பவி .

இப்போது சஹானாவின்  அந்த தூய்மையான அன்பு வெளிப்படையாக ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிட்ட துயரத்தை அவள் எப்படி சொல்லுவாள் …?
கண்கள் நீரை பொழிய தோழியை பார்த்தபடி இருந்தாள் அவள் .

” சம்பா …எதுக்குடா அழுற …? என்னம்மா ..என்ன ஆச்சு …? ” தோழியை தன் மார்புடன் அணைத்துக் கொண்டு தேற்ற முயன்றாள் அவள் .

அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ரிஷிதரனும் சாம்பவியின் அழுகையை புரியாமல் பார்த்தான் .

” சாம்பவி என்ன ஆச்சு …? ” அவளை நிமிர்த்த முயன்றான் .

” என்ன ரிஷி ..நீ ஏதாவது சொன்னாயா …?இப்படி அழுகிறாளே ….”




” நானா …? உன் ப்ரெண்ட் என்னிடம் நாலு வார்த்தை சேர்ந்தாற் போல் பேசினால் அல்லவா நான் ஏதாவது சொல்வதற்கு ….முகத்தை பார்ப்பதில் கூட அப்படி என்ன கூச்சமோ …. ” அந்த நேரமும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினான் .

” ஏய் நீ வேற சும்மா இருடா ..புதிதாக எந்த பிரச்சினையையும் இழுத்து விடாதே .அவள் கொஞ்சம் மூடி டைப் .தட்ஸ் ஆல் .அதற்காக நீ அவளை எதுவும் பேசி விடவில்லையே …” சந்தேகத்தோடு அண்ணனை பார்த்தாள் அவள் .

” சரிதான் கடைசியில் பழி என் தலையிலா …? அவள் என்னவோ அவள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் .அங்கே எதுவும் பிரச்சினையா என்று கேளு …” சிறு எரிச்சலுடன் கூறினான் .

அவன் உள்ளே நுழையும் போது அழுது கொண்டிருந்த சாம்பவியை பார்த்ததும் பதறி , தங்கையின் மேல் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளை  வேகமாக திருப்பி தன் மேல் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல முயன்றான் .ஆனால் அவளோ …அவன்புறமே திரும்பவில்லை .சஹானாவுடன் மேலும் ஒட்டிக்கொண்டாள் .இப்படி சாம்பவி அவனை விலக்குவது அவனது தன்மானத்தை சீண்டியது .அந்த கோபத்தை இப்படி வெளிப்படுத்தினான் .

” ஓ…ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாளா  …? அப்போது அவர்கள் வீட்டை நினைத்து அழுதிருப்பாள் .ஏய் சம்பா அப்படித்தானடி …? ” சஹானா ஏற்படுத்திக் கொடுத்த காரணத்தை ஆவலோடு பிடித்துக் கொண்டு ஆமாமென்பது போல் தலையாட்டினாள் சாம்பவி .

” வாட் ஸ் திஸ் சஹி …? திஸ் இஸ் அன்பிலிவபிள் பார் மீ .இந்த குழந்தை விரலை சப்பிக் கொண்டு எப்போது அம்மா மடியில் போய் ஏறிக்கொள்ளுமோ என்று பயந்து பயந்துதான் நான் என் வாழ்க்கையை தள்ள வேண்டும் போல …”

ரிஷிதரனின் குத்தல் குரலில் சாம்பவிக்கு இன்னமும் அழுகை வந்த்து .இவன் ஏன் எப்போது பார்த்தாலும் என்னை மட்டம் தட்டுவது போன்றே பேசுகிறான் .அவன் தங்கையை போன்றே …சஹானாவும் இப்படித்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவளை …அவளது எளிமையை …குத்திக் காட்டிக்கொண்டே இருப்பாள் .

இப்படி குத்தல் பேச்சுகளுடன் காலம் முழுவதும் என்னால் வாழ முடியுமா …? சாம்பவியின் அழுகை கூடியது .

” லீவ் இட் ரிஷி .சூன்லி சீ ல் பி சேன்ஞ்டு …” சஹானா .

” ஓ.கே .எனஃப் .கோ அன்ட் வாஷ் யுவர் பேஸ் ….” என அவள் தோளில் கை வைத்தான்  ரிஷிதரன் .

முதலில் இப்படி மாறி ….மாறி ஆங்கிலத்தில் அளப்பதை நிறுத்துகிறீர்களா …? என அண்ணன் தங்கை இருவரையும் அறைய வேண்டும் போலிருந்த்து சாம்பவிக்கு .இவர்கள் மட்டுமில்லை தனசேகரும் , மஞ்சுளாவும் கூட …பத்து வார்த்தைகள் பேசினால் ஆறு ஆங்கிலமாகத்தான் இருந்த்து .போனால் போகிறதென்று இடையில் சில சேர்தநுக் கொண்ட தமிழ் வார்த்தைகள் .

குடும்பமே இப்போதுதான் இங்கிலாந்திலிருந்து வந்து இறங்கியது போலத்தான் …எரிச்சலோடு நினைத்தாள் சாம்பவி .ரிஷியின் கையை விலக்கி விட்டு பாத்ரூமிற்குள் போனாள் ….

அவர்களது கோவா டிரிப் முழுவதும் அவளது எண்ணம் முழுவதும் , தனது பிறந்த வீட்டிலேயே இருந்த்து .கூடவே சஹானா இதனை எப்படி எடுத்துக் கொள்வாள் …? அவளிடம் இதனை எப்படி சொல்வது ..? தன்னையறியாமலேயே அடிக்கடி கலங்கிவிடும் கண்களை ரிஷிக்கு தெரியாமல் மறைப்பதிலேயே அவளுக்கு பொழுது சரியாக இருந்த்து .

அங்கே உறவினர்களுடன் இருந்த போதுதான் அப்படி ..இங்கே இருவருமாக தனிமையில் இருக்கும் போதும் அடிக்கடி இப்படி முகம் திருப்பிக் கொண்டால் …எப்படி ….? ரிஷிக்கு மிகவும் சலிப்பாக இருந்த்து .




” ரிஷி….சாம்பவி் மிகவும் சென்டிமென்ட் .அவள் குடும்பத்தை விட்டு பிரிந்த துயரம் அவளுக்கு நிறையவே …மற்ற பெண்களை விட சற்று அதிகமாகவே இருக்கும் .நீதான் அட்ஜஸ் செய்து கொள்ளவேண்டும் …” சொல்லி அனுப்பினாள் சஹானா .

ஆனாலும் இந்த அளவிற்கா …என்று இருந்த்து ரிஷிதரனுக்கு .அழகான இளம் மனைவியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் தனது தேனிலவை அனுபவிக்கும் வேகத்தில் இருந்தான் அவன் .ஆனால் அவளோ …அந்த எண்ணமேயின்றி எந்நேரமும் ஏதோ சிந்தனையிலேயே இருந்தாள் . அதிகமாக தனிமையை நாடினாள் .

இடையில் அடிக்கடி ஒதுங்கி போய் அவர்கள் வீட்டினருடன் போனில் வேறு பேசினாள் . ரிஷிக்கு சலித்து போனது .தனது வேகத்திற்கு ஈடு கொடுக்காத மனைவி மீது அதிருப்தி ஏற்பட்டது ரிஷிக்கு .

” இந்த மணலில் வெறும் காலுடன் நடந்து பார்த்தால் நன்றாக இருக்குமில்லையா …நடக்கலாமா ..?” கடற்கரையில் மௌனமாக உடன் நடந்து வந்து கொண்டிருந்த மனைவியின் கைகளுடன் கை கேர்த்துக் கொண்டு கேட்டான் .

” ம் …” என்றபடி தனது செப்பலகளை சுழட்ட தொடங்கினாள் அவள் .

முகத்தை பார்க்கிறாளா …பாரேன் ….தனக்குள் புலம்பியபடி தனது ஷூக்களை சுழட்டி விட்டு அவள் கைகளை விட்டு விட்டு இடையை இழுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டான் .

” வா …அலையில் கால் நனைக்கலாம் …” இழுத்து போனான் .

கணவனின் இழுவைக்கு கொஞ்ச நேரம் கால்களை நனைத்த சாம்பவி , திடீரென அவனது கைகள் தனது இடையிலிருந்து அத்து மீறி உடலில் ஊர்வதை உணர்ந்தாள் .பட்டென கைகளை தட்டிவிட்டாள் .

” வெளி இடத்தில் வைத்து என்ன இது அசிங்கம் …? ” கோபமாக கேட்டாள் .

” என்ன அசிங்கமா …? எது அசிங்கம் …? ” அவளது தோள்களை பற்றி தன்புறம் திருப்பியபடி அவளை விட கோபமாக கேட்டான் அவன் .

” ப்ச்….” என்ற சலிப்புடன் அவனை தாண்டி தன் பார்வையை வீசினாள் அவள் .

” ஏய் …என் முகத்தை பார்த்து பேசுடி …நான் உன் புருசன் நினைவிருக்கிறதா …? ” அவள் முகத்தை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி உயர்த்தினான் .

அவனது கைகளை உதறியவள் ” போகலாம் …” என்ற ஒற்றை சொல்லோடு காரை நோக்கி நடந்தாள் .அவளை முறைத்தபடி நின்றவன் பின் தானும் நடந்தான் .

காரினுள் ஏறி அமர்ந்த்தும் அவனது ” டி ” யும் ….” புருசன் ” ம் நினைவு வர …இப்போது அந்த அமெரிக்க ஆங்கிலம் எங்கே போனது …எனத் தோன்ற சாம்பவியின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்த்து .

கோபத்தோடு காரினுள் ஏறி அமர்ந்த ரிஷி சிவந்த  இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்த மனைவியை கண்டதும் மாறினான் .காரின் கண்ணாடியை ஏற்றி பூட்டியவன் ,

” என்னன்னு கேட்க கேட்க பதில் சொல்லாமலேயேவா வருகிறாய் ….உன்னை …” என்றபடி அவள் மேல் விழுந்து பரவினான் .

மூச்சு திணற ..திணற ..அவனது முத்தத்தை வாங்கிக் கொண்டவள் ,வெட்கத்துடன் கார் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள் .

” உங்களுக்கு நேரம் …காலம் …இடமெல்லாம் கிடையாதா ….? ” காரின் முன்னால் தலையாட்டியபடி ஆடிக் கொண்டிருந்த குருவி பொம்மையை பார்த்து கேட்டாள் .




” ஏய் ..ஐ ஆம் ஹியர் டார்லிங் .அந்த குருவிகிட்ட என்ன பேசுகிறாய் …? ” அவள் முகத்தை திருப்பினான் .

இமைக்கும் பொழுதில் அவன் கண்களை சந்தித்துவிட்டு பார்வையை திருப்பினாள் அவள் .

அந்த கண பார்வைக்கே போதையேறியவன் போல் அவளருகே நெருங்கியமர்ந்து அவளை இறுக்கிக் கொண்டு ” வாட் எ பவர்புல் ஐஸ் யு ஹேவ் பேபி …..? ” என கொஞ்சினான் .

” ஒய் யு ஹேவ் காட் ஆங்ரி லைக் தேட் டார்லிங் …? ” அவள் கன்னத்தில் தன் மூக்கு நுனியால் உரசியபடி கேட்டான் .

” அது …அங்கே எத்தனை பேர் இருந்தார்கள் …? அங்கே வைத்து நீங்கள் ….” வேகமாக ஆரம்பித்தவள் மேலே தொடர முடியாமல் உதட்டை கடித்து நிறுத்தினாள் .

” ம் …கமான் பேபி ..டெல் தேட் …கம்ப்ளீட் யுவர் வேர்ட்ஸ் டியர் …ப்ளீஸ் …” கெஞ்சல் போல் கொஞ்சியபடி அவள் மேல் படிந்தவன் …

” நோபடி ஆர் நாட் நவ் ஹியர் பேபி ….யு…அண்ட் ஒன்லி மீ …சோ ….” என்றவன் மீதியை செயல்களில் சொல்ல துவங்கினான் .

கணவனின் வேகத்தில் அயர்ந்த உடலுடன் படுக்கையில் புரண்டவளின் மனதில் கணவனுடனான கூடலின் சில்லிப்பை விட …சஹானா ….சந்திரன் பற்றிய எண்ணங்களின் சில்லிப்பே அதிகமிருந்த்து .

இந்த பிரச்சினை எப்படி முடிய போகிறது …? இதனை எப்படி சஹானாவிடம் சொல்வது …? அவள் என்ன நினைப்பாள் …? தாங்கிக் கொள்வாளா …? சாம்பவியின் மண்டையை குடைந்த்து இந்த நினைவுகள் .

அவளது இடை மேல் கைகளை போட்டபடி அருகில் தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி. இவனுக்கு இவ்வளவு அருகில் இருந்து கொண்டு எதனையும் உருப்படியாக யோசிக்க முடியாது என தோன்ற , மெல்ல அவனது கைகளை எடுத்தாள் .பாதி தூரம் விலகியதும் மெல்ல எழ முயன்ற போது , மீண்டும் அவள் இடை மேலேயே அழுத்தமாக விழுந்த்து அவன் கரங்கள் .

வேகமாக அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டவன் ” எங்கே ஓட பார்க்கிறாய் …அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் ….” என்றபடி அவளை தனக்குள் இழுத்துக் கொண்டான் .எதையும் நினைத்து பார்க்க கூட விடாத அளவிற்கு அவளை ஆளுமை செய்து கொண்டான் .

மனமும் , உடலும் சிலிர்த்து நிறைய மெல்ல மெல்ல கணவனுள் ஆழத் தொடங்கியவளின்  மனதில் திடீரென இந்த பிரச்சினையால் இவனை பிரிய வேண்டி வந்து விடுமோ ….? என்ற எண்ணம் தோன்ற , மனமதிர கண் கலங்க துவங்கினாள் .

தனது பிடியிலிருந்த மனைவியிடம் மாற்றத்தை உணர்ந்த ரிஷி , தனது பிடியை தளர்த்தி அவளை உற்று நோக்கினான் .கலங்கிய அவள் கண்களை கண்டதும்  முதலில் குழம்பியவன் பிறகு கோபமானான் .
” இப்போது கூட உனக்கு உன் பிறந்த வீட்டார் நினைவா …சை …அதே நினைப்புடன் இப்படியே இரு ….” அவளை உதறிவிட்டு தள்ளிப் படுத்து கொண்டான் .

சத்தம் வெளியே வராமல் வாயை மூடிக்கொண்டு அழத்துவங்கினாள் சாம்பவி .




What’s your Reaction?
+1
24
+1
24
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!