Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 2

2

” என்ன சொல்றீங்க …சார் புரியலை …? ” எரிச்சலாக அவனை பார்த்தாள் வைசாலி .

” ஆள் வைத்து என் காரை இடித்து விட்டு , பிறகு அதனை நீயே கேட்பது போல் …நல்ல செட்டப்தான் …”




இவன் என்ன பேசுகிறான்…நான் ஏன் அப்படி செய்ய வேண்டும் …?

” ஆமாம் சார் இந்த பொண்ணுதான் எங்களை காரில் இடிக்க சொன்னது .” அந்த இருவரும் சந்தர்ப்பத்தை தங்கள் பக்கம் மாற்றிக் கொண்டனர் .

வைசாலி திரும்பி அவர்களை முறைத்தாள் .பிறகு திரும்பி அவனை பார்த்து,”  நானா …? ஏன் அப்படி செய்ய போகிறேன் …? “

” இதோ இப்படி எதையாவது பேசியபடி என் கண் பார்வையில் படத்தான்  “

இப்போது அவன் சொல்ல வருவது சிறிது புரிய தொடங்க , இவன் …திமிர்பிடித்தவன் …சரியான பணத்திமிர்….என எண்ணியபடி …

” நீங்கள் என்ன அந்த குரு பகவானா …? உங்கள் பார்வை பட வேண்டுமென உங்கள் பின்னாலேயே திரிவதற்கு …? ” என்றாள் .

” குரு பகவானா …? ” அவன் புரியாமல் இழுத்தான் .

” ஆமாம் அவர் கடவுள் .அவர் பார்வை பட்டால் நல்லது என பக்தர்கள் அவர் முன் நிற்க விரும்புவார்கள் .ஒரு வேளை நீங்கள் அப்படியோ  …என எண்ணினேன் “




உனக்கென்ன அந்த கடவுள் என்ற நினைப்போ ..என சொல்லாமல் சொன்னாள் …கேட்டாள் .

” உலகை காக்கும் கடவுள் என்ற நினைப்பா உனக்கு …? என்று கேட்கிறாய் …ம் ….” என்றபடி தன் கண்களை மறைத்திருந்த கூலர்ஸை சுழற்றியவனின் கண்களில் சுவாரஸ்யம் இருந்த்தது .

” சார் நான்கு சிக்னலுக்கு முன் இந்த பொண்ணு எங்களை நிறுத்தி உங்க காரை காட்டி இதை இடிக்கனும்னு சொன்னது சார் …” இவர்களின் சண்டையை தங்களுக்கு சாதகமாக்கி தாங்கள் தப்பிவிட எண்ணி இடையில் வந்தனர் அந்த பைக் ஓட்டிகள் .

வைசாலி எரிச்சலுடன் அவர்களை பார்க்க , ” ஹலோ பிரதர்ஸ்”  என அவர்களுக்கு கை கொடுத்தான் அவன் .

சந்தோசமாக கை கொடுத்தவர்கள் ” ஏன் சார் ரோட்டில் போகும் போது ..வரும் போது இப்படி இடிப்பது …உரசுவது சகஜம்தான் .அது தெரியாமல் என்னா கத்து கத்துது …ஏதோ அதோட காரை இடிச்ச மாதிரி …” என கொஞ்சம் உண்மை பேசிவிட்டு , பிறகு தடுமாறி ..” அ..அங்கே ..வைத்து காரை காட்டி இடிக்க சொன்னது இந்த பொண்ணுதான் சார் …” என உளறி முடித்தனர் .

” ஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள் ..? நீங்கள் வேண்டுமென்றே காரை இடிக்கவில்லை ..? ” வைசாலி கேட்டாள் .

அவளை கையுயர்த்தி நிறுத்தியவன் , அந்த இருவரின் தோள்களிலும் தனது கைகளை போட்டு தன் அருகில் இழுத்துக் கொண்டான் , ” பிரதரஸ் இன்னும் ஒரே ஒரு நிமிடம்தான் உங்களுக்கு டைம் .உங்க ஓட்டை பைக்கை தூக்கிட்டு ஓடிடனும் .இல்லை  இந்த காரில் பட்ட கீறல் மாதிரி உங்கள் உடம்பு முழுவதும் கீறல் இருக்கும் ” தாழ்ந்த குரலில் ஏதோ அவர்களிடம் நலம் விசாரிப்பது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு இதனை கூறினான் அவன்.

தாழ்ந்த குரலென்றாலும் அதில் தெரிந்த வன்மம் அந்த இருவரின் கை கால்களை நடுங்க செய்த்து .” சாரி சார் ..இதோ ..போய் விடுகிறோம் ” தடுமாறியபடி வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு ஓடினர் .

அவர்களது அந்த ஓட்டத்தை திருப்தியாக பார்த்துவிட்டு திரும்பிய வைசாலி அவன் தன்னையே பார்த்தபடி நிற்பதை பார்த்து ” அந்த பக்கம் வந்து பாருங்கள் .உங்கள் காரை எப்படி இடித்திருக்கிறார்கள் என்று …” காரின் மறுபக்கம் அவனை அழைத்து சென்றாள் .

” பாருங்கள் சார் .எவ்வளவு அழகான கார் ்இதனை இப்படி காயப்படுத்த எப்படி அவர்களுக்கு மனசு வந்த்தோ ..? ” குழந்தையை தடவும் தாயாய் வாஞ்சையுடன் காரினை தடவினாள் .




நிமிர்ந்தவள் அவனை பார்த்து புருவம் சுருக்கினாள் .அவ்வளவு நேரமும் தன் தலையில் போட்டுக்  கொண்டிருந்த ஹெல்மெட்டின் முன் கண்ணாடியை மட்டும் தூக்கிவிட்டு பேசிக் கொண்டிருந்தவள் , இப்போது முழுவதுமாக ஹெல்மெட்டை சுழட்டிவிட்டு , அவனிடம் காரின் கீறலை காட்டிக் கொண்டிருந்தாள் .

மெச்சுதலான விழிகளோடு அவள் முகத்தில் பார்வை பதித்திருந்தான் அவன் .என்ன என்பதான பாவனையுடன் அவனை பார்க்க அவன் அவள் முகத்தில் பார்வையை பதித்து ” ப்யூட்டிபுல் …” என்றான் .

” வாட் …? “

” நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றேன் ” பளிச்சென சிரித்தான் .

கோபத்தில் முகம் சுருங்க ” சை …” என்றவள் வேகமாக தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள் .

ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணியபோது , ” உங்கள் பெயரை கூட சொல்லாமல் போகிறீர்களே மிஸ் ” என்றபடி அவன் கார் கதவை திறந்தான் .

அவன் பக்கமே திரும்பாமல் வண்டியுடன் போக்குவரத்தில் கலந்தாள் அவள் .

ஸ்டுடியோவினுள் வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வைசாலி உள்ளே நுழைந்தபோது அவளை முறைத்தபடி எதிரே வந்தாள் வேதா .

” சாரி வேதாக்கா ..மேடம் வந்துட்டாங்களா ..? லேட்டாயிடுச்சுக்கா …”

” அரைமணி நேரமாக காத்திருக்காங்க .போ…” கடினமான குரலில் கூறினாள் .அவள் அம்ருதாவின் தூரத்து உறவுப்பெண் .எப்போதும் அவளுடன் இருப்பவள் .வைசாலியை வேலைக்கு வைத்தது வேதாவிற்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை .அவளை பற்றி அம்ருதாவிடம் எப்போதும் ஏதாவது குறை சொல்லியபடியே இருப்பாள் .

அம்ருதா அவளது குறைகளை பெரும்பாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள் . ” விடுங்க வேதாக்கா …வைசு …சின்னப்பெண் …கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிடுவாள் …” என முடித்துவிடுவாள் .

இது போன்ற சாமாளிப்பு சூழ்நிலைகளை அம்ருதாவிற்கு உண்டாக்க கூடாது என வைசாலி எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பாள் .இன்று அந்த பைக்காரன் …கார்க்காரனால் எல்லாம் கெட்டு போய்விட்டது .

காரை எவனோ இடித்துவிட்டு போகிறான் ..என சொல்ல வந்தால் முதலில் இறங்கி வரவேயில்லை …பிறகு என்னை பார்க்கவென்று  நீதானே அவர்களை ஏற்பாடு பண்ணினாய் என்கிறான் …பிறகு நீ அழகாக இருக்கிறாய் என்கிறான் …ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இந்த நடவடிக்கைகளால் இவனுக்கு மூளைக் கோளாறு கொஞ்சம் இருக்குமோ …? என வைசாலிக்கு சந்தேகம் வந்த்து .




” சாரி மேடம் ..இன்று டிராபிக்கால் கொஞ்சம் லேட்டாகிவிட்டது ” அம்ருதா மேக்கப்பிற்கு தயாராக சாய்ந்து அமர்ந்திருந்தாள் .

” கொஞ்சமில்லை ..நிறைய லேட் …அம்ரு  எவ்வளவு நேரமாக வெயிட் பண்றான்னு தெரியுமா …? ” வேதா எரிச்சல் குரலில் சொன்னாள் .

” வேதாக்கா நம்ம சென்னை டிராபிக் பத்தி உங்களுக்கு தெரியாதா …? வைசுவை ஏன் குறை சொல்றீங்க .நீ ஆரம்பிம்மா ….” சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அம்ருதா .

வைசாலி வேலையை ஆரம்பித்தாள் .முகத்தை சுத்தமாக துடைத்துவிட்டு , தசைகளை பிடித்து விட்டு சிறிது முகத்தை இலகுவாக்கியவள் , இறுக்கம் தளர்த்த மெல்ல நீவினாள் .இதனால் முகம் டைட்டாகி …இளமையாக காட்சியளிக்கும் .

தொழிலில் இது போன்ற அவளது சிறு சிறு கவனங்கள்தான் அம்ருதாவை கவர்ந்து , அவளை இந்த வேலையில் நிரந்தரமாக இருக்க வைத்திருந்த்து.முக மேக்கப் முடித்துவிட்டு , கழுத்திற்கு வந்தாள் .

பவுண்டேசனை கழுத்திறகு தடவிக் கொண்டிருந்த போது , வேகமாக உள்ளே வந்த வேதா ” அம்ரு …புரடியூசர் வந்துருக்கிறாரு .” என்றாள் .

சட்டென எழுந்தவள் ” என்ன இப்போவா …? எப்படிக்கா ….? ” என்றாள் .

” தெரியலை .எதற்கும் நீ போய் பார்த்திடுறது நல்லது “

” வைசு …கொஞ்சம் வெயிட் பண்ணும்மா .வந்திடுறேன் ” பாதி மேக்கப்பில் எழுந்து போய்விட்டாள் .

வைசாலிக்கு கொஞ்சம் எரிச்சல் வந்த்து .இப்படி பாதியில் போனால் மேக்கப் கன்ட்டினியுட்டி போய் விடாது …? என எண்ணியவள் , மறுநிமிடமே ..சே …பாவம் மேடத்திறகு என்ன பிரச்சினையோ …? என எண்ணிக் கொண்டாள் .

மேக்கப் ரூமை விட்டு வெளியே வந்து நின்று அந்த செட்டினை வேடிக்கை பார்த்தபடி நின்றாள் .ஒரு பெரிய வீட்டிற்குரிய செட் அங்கே போடப்பட்டிருந்த்து .தூரத்தில் ஒரு சிறு கும்பல் யாரை சுற்றியோ நின்றபடியிருந்த்து .




அந்த கும்பலில் சினிமா சம்பந்தப்பட்ட பல முக்கிய புள்ளிகள் தெரிய …இப்படி முக்கியமானவர்கள் எல்லோரும் சுற்றி வளைத்து நிறகுமளவு முக்கியமான ஆள் யாராக இருக்கும் …? சுற்றியிருந்த மனித தலைகளிடையே லேசான இடுக்குகளில் தெரிந்த அந்த ஹேர்ஸ்டைல் பரிச்சய நினைவுகளை கொடுக்க , அந்த ஆளை பார்க்க தலையை அங்குமிங்கும் அசைத்து முயற்சித்தாள் .

சரியாக முன்னால் மறைத்து நின்ற அந்த பெண் சிறிது நகர்ந்த்தும் , லேசாக தெரிந்த அந்த பக்கவாட்டு முகம் சிறு அதிர்வை கொடுத்தது . அது …அவன்தான் …சற்று முன் வைசாலியுடன் சண்டையிட்ட அந்த காஸ்ட்லி காருக்கு சொந்தக்காரன் .இங்கே எதறகு வந்தான் …?

எதற்காக அவனை சுற்றி இவ்வளவு கூட்டம் ..? இப்படி இவனை சுற்றிக்கொள்வதற்கு ஆட்கள் இருப்பதால்தான் , இன்று இவர்களைப் போன்றே என்னையும் நினைத்தான் போல …எண்ணமிட்டபடி அவனை பார்த்தபடி நின்றாள் .

திடீரென பார்வையை திருப்பிய  அவன் இவளை பார்த்துவிட்டான் .புருவங்களை உயர்த்தியவன் சுற்றியிருந்தவர்களை ஏதோ சொல்லி ஒதுக்கியபடி நகர்ந்தான் .

இவன் என்ன டைரக்டரா …? புரோடியூசரா …? இல்லை ஹீரோவாக இருக்குமோ …பார்த்தால் ஹீரோ போலத்தான் தெரிகிறான் .எதுவும் புது அறிமுகமாக இருக்க்குமோ ….? அவனை பார்த்தபடி யோசித்துக கொண்டிருந்தவள் திடீரெனத்தான் கவனித்தாள் .அவன் புன்னகையுடன் அவளை நோக்கிதான் வந்து கொண்டிருந்தான் .

இவனென்ன என்னை பார்த்து வருகிறான் …? என்னிடம் பேசவா …வருகிறான் ….இல்லை இவனிடம் இப்போது பேசும் எண்ணம் எனக்கில்லை …இந்த முடிவிற்கு மனம் வந்த்தும் சட்டென திரும்பி மேக்கப் அறையினுள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள் .

படபடக்கும் நெஞ்சுடன் சிறிது நேரம் உள்ளே அமர்ந்திருந்தாள் .இத்தனை பேர் சுற்றியிருக்கும் போது அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு அவன் பாட்டுக்கு என்னை நோக்கி வருகிறானே ..! பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் .

அத்தனை பேரை தள்ளிவிட்டு உன்னிடம்தான் பேச வந்தான் என்று என்ன நிச்சயம் …? வைசாலியின் மனம் நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பியது .அப்படியும் இருக்குமோ …? அவன் யாரையோ பார்க்க போக , நான் என்னை பார்க்கத்தான் வருகிறானென அதிகமாக கற்பனை பண்ணக் கொள்கிறேனோ …?

அப்படித்தான் என அவள் முடிவு செய்தபோது ,மென்மையாக கதவு தட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்டாள் .ஒரு வேளை அவன்தான் வந்துவிட்டானா …?

தயக்கத்துடன் கதவை மெல்ல திறந்தாள் .கோப முகத்துடன் வேதா நின்றிருந்தாள் .பின்னால் அம்ருதா .

” கதவை பூட்டிக்கொண்டு உள்ளே என்ன செய்கிறாய் …? ” வேதா கத்தினாள் .

” ஷ் அக்கா …ஏன் கத்துறீங்க …வைசு ஒரு பாதுகாப்பிற்காக அப்படி செய்திருப்பாள் ” சொன்னபடி மேக்கப்பிற்காக ஏறி அமர்ந்தாள் அம்ருதா .




குறை வேலையை தொடர்ந்தாள் வைசாலி .அம்ருதாவின் முகம் இப்போது பொலிவிழந்த்து போல் தோன்ற , முக மேக்கப்பை மேலும் கொஞ்சம் டச் செய்ய ஆரம்பித்தாள் வைசாலி .

கைகளை கன்னத்தில் வைத்தபோது திடுக்கிட்டாள் .கன்னங்கள் ஈரமாயிருந்தன.அழுகிறாளா என்ன ?

” என்னாச்சு மேடம் ..?? ” மெல்ல கேட்டாள் .

” ஒன்றுமில்லை ” என்ற அம்ருதாவின் குரலில் கலக்கம் இருந்த்து .அதனை புரிந்து கொண்ட வைசாலி க்ரீமை தடவும் போது ஆதரவாக அவள் கன்னங்களை தடவி , தோள்களை அழுத்திவிட்டாள் .

” எல்லாம் நல்லபடியாக நடக்கும் மேடம் ” என்றாள .

” தேங்க்ஸ் வைசு …” என்றவள் டிஷ்யூவால் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள் .அந்த பேப்பரை தான் வாங்கி கண் அலங்காரம் கலையாமல் பக்குவமாக துடைக்க தொடங்கினாள் வைசாலி .

” என்ன …ஏதுன்னு துருவாமல் …உடனே ஆறுதல் சொல்கிறாய் பார் …யூ ஆர் க்ரேட்மா …இதுதான் உன்னை எனக்கு பிடிக்கிறது …” வைசாலியின் கைகளை தனது கன்னத்தில் பதித்நுக் கொண்டாள் .வேதாவின் முகம் கடுத்தது .

அன்று வேலை முடிந்து  வீட்டிற்கு திரும்புகையில் அந்த பைக்கும் , காரும் வைசாலியின் நினைவில் வந்த்து .கூடவே அவளை நோக்கி வேகநடையில் வந்த அவனும் .அவன் வந்த வேகமும் , விதமும் அவளிடம் பேச வந்தாற் போலத்தானேயிருந்த்து .சிந்தனைகள் அங்கேயிருந்தாலும் சரியாக இன்டிகேட்டரை போட்டு ஸ்கூட்டியை வலப்பக்கம் திருப்பினாள் .

அவளருகே ஒரு கார் உரசியபடி திரும்பியது .இத்தனை இடத்தில் எதற்காக இப்படி இடிப்பது போல் வருகிறான் …கோபமாக அவள் திரும்பி பார்த்தாள் .அந்த காரினுள் இருந்த நான்கு இளைஞர்களில் இருவர் இவள்புறம் தலையை நீட்டி கொச்சையாக சில வார்த்தைகளை உதிர்த்தனர் .

ஒரு நிமிடம் அப்படியே வண்டியை நிறுத்தி நின்றுவிட்டாள் .பெண்ணுடலை கேவலமாக குறிக்கும் அந்த வார்த்தைகள் அவளுள் கொதிப்பை உண்டாக்கியது .

இந்த காரையும் இவர்களையும் அவள் அறிவாள் .இது போல் சாலையில் போகும் போது அடிக்கடி அவளது வழியில் குறுக்கிடுவர் .ஏதாவது அவளிடம் பேச முயல்வர் . அவர்களது பார்வை போகும் போக்கு பிடிக்காமல் எப்போதும் அவர்களை முறைத்தபடி இருப்பாள் .

இவர்கள் வெகுநேரமாக அவளை பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும் .இங்கே வேகம் குறைத்து திரும்பும் போது வேண்டுமென்றே அருகே வந்து இது போல்  வம்பு வளர்க்கின்றனர் .




அப்படியே அவர்களை அறைய வேண்டும் போல் இருந்த்து ஆனால் அவர்கள் கார் எப்போதோ பறந்துவிட்டது .ஆனால் அடுத்த சிக்னலில் வண்டியை நிறுத்திய போது , அந்த கார் அருகேயிருந்த ஹோட்டலினுள் நின்றிருப்பது தெரிந்த்து .

ஒரு முடிவுடன் தனது ஸ்கூட்டியை ஹோட்டலினுள் திருப்பியவள் , தனது ஹேண்ட்பேக்கிலிருந்து அதை எடுத்திக்கொண்டு , சுற்றும் முற்றும் பார்த்தபடி அந்த காரை நோக்கி நடந்தாள் .

அந்த காரை நெருங்கியதும் , அதை பார்த்து செய்ய நினைத்த செயலை செய்ய மனமின்றி அதனை பார்த்தபடி நின்றாள் .பளபளவென்ற க்ரே வர்ணத்தில் மின்னியபடி நின்றது அந்த போர்ட் கார் . மெல்ல அதனை வருடினாள் .கண்களை இறுக மூடி அவர்கள் தன்னை பார்த்து உதிர்த்த மட்டமான வார்த்தைகளை நினைவிற்கு கொண்டு வந்து கொண்டாள் .

பிறகு யாரும் பார்க்கவில்லையே என கவனித்துக் கொண்டு , தனது கையிலிருந்த பாதுகாப்பிற்காக எப்போதும் வைத்திருக்கும் அந்த சிறிய கத்தியினால் கார் டயரை குத்தி கிழித்தாள் .

” அழகாக கண்ணை உருட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சாம்பல் வண்ண முயல்குட்டி போல இருக்கிறாய் .உன்னைக் காயப்படுத்த மனமில்லை .ஆனால் இன்று உன் மேல் ஏறி வந்தவர்கள் என்னை ரொம்ப கேவலமாக பேசி விட்டனர் .என் மனது போலென்றால் அவர்களைத்தான் இப்படி குத்தி கிழிக்கவேண்டும் .ஆனால் அது முடியாத்தால் உன்னை …மன்னித்துவிடு ” உயிருள்ள ஜீவன் ஒன்றுடன் பேசுவது போல் மெல்லிய குரலில் பேசியபடி அந்த கார் டயர்கள் நான்கையும் குத்தி கிழித்தாள் .

கொஞ்சம் வேதனை கலந்த திருப்தியுடன் கைகளை தட்டியபடி எழுந்தவள் திடுக்கிட்டாள் .இடுப்பில் கைகளை தாங்கியபடி எதிரே நின்றிருந்த அவன் ” என்னதிது ….? ” என்றான் கையசைவில் .

கையிலிருந்த கத்தியை அவசரமாக பின்புறம் மறைத்தாள் வைசாலி .

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!