Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 4 –

4

பச்சை மூங்கில் துளை நுழை காற்றாய்
என்னகம் நிறையும் நீ .

 

வாசலில் ஆட்டோ நின்றதும் இறங்கி அப்பாவை தாங்க கைகளை நீட்டிய வேதிகாவின் கைகள் தொட்டு தள்ளப்பட்டன .
” நீ நகர் .நான் பார்த்துக்கிறேன் .போய் கதவை திற ” அவளை நகர்த்திவிட்டு சாமிநாதனை அமரேசன் தாங்கிக் கொண்டான் .




இவன்  பைக்கில்   பின்னாலேயே வந்தானா …? இதுவரை துணையிருந்த்து ஒரு மனிதாபிமானத்தினால் இருக்கலாம் .இப்போதும் இங்கே வீடு வரை வருவானென அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை .அதுவும் இனி நானாக வர மாட்டேன் என அன்று உறுதயாக கூறிச் சென்ற பிறகும் .

ஆஸ்பத்திரியில் இருந்த ஐந்து நாட்களும் அவன்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் .   ஆஸ்பத்திரியில் மட்டுமல்ல அங்கே விபத்து நடந்த இடத்திலும் , அது தொடர்பான போலீஸ் ஸ்டேசன் வேலைகளையும் , தொடர்ந்து இவர்கள் அலுவலகத்தையும் என்று எல்லாவற்றையும.

பிரச்சினை செய்யவென்றே பாயிண்டுகளை சேகரித்து வைத்துக் கொண்டு தொண்டையை சரி செய்தபடி வந்த அவர்கள் பக்க உறவினர்களை பார்வையாலேயே விரட்டிக் கொண்டிருந்தான் .சாவித்திரியும் , சரோஜாவும் உதட்டின் மேல் ஒட்ட வைத்த ஆட்காட்டி விரலுடன் மெல்ல இதழ் பிரித்து அப்பா , அம்மாவிடம் நலம் விசாரிக்கும் பேச்சுக்களை மட்டும் பேசுவதை வேதிகா அதிசயமாக பார்த்தாள் .இந்த வகை பெண்கள் இல்லையே இவர்கள் …??

அவர்கள் அளவு இல்லையென்றாலும் தங்களால் இயன்ற அளவு குத்தூசிகளை வார்த்தைகளின்  இடையே சொருகும் அவர்கள் கணவன்மார்கள் கூட , அமைதியாக கைகளை கட்டியபடி அறை வாசலில் நின்று அமரேசனிடம் தங்கள் விசாரிப்புகளை செய்து கொண்டிழுந்தனர் . தண்ணீருக்குள்ளும் ஓசையெழுப்பும்     இந்த டமாரங்களை கூட இப்படி அமிழ்த்த முடியுமா …அறையினுள்ளிருந்தபடியே பக்கவாட்டில் தெரிந்த அவன் முகத் தோற்றத்தை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் .சட்டென திரும்பி விட்ட அவன் பார்வையாலேயே என்ன என்க , அவசரமாக தலையசைத்து விழிகளை இடம் மாற்றிக்கொண்டாள் .அச்சோ …பார்த்துவிட்டானா …

தன் மாமியாருக்கு உடம்பு சரியில்லாத்தால் தன்னால் அதிக அளவு தோழிக்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த கௌரி , அமரேசனை கண்டதும் நிம்மதியடைந்தாள் .” உரிய ஆள் வந்தாயிற்று .இனி எனக்கு கவலையில்லையடி .நான் என் வீட்டையும் , நம் ஆபிஸையும் கவனித்துக் கொள்கிறேன் .நீ நிதானமாக ஆபிஸ் வந்தால் போதும் ” திருப்தியாக போனாள் .

.மறுபுறம் விசாலாட்சி லேசாக தாங்க , சாமிநாதனின் முழு பாரத்தையும் தன் மேல் சாய்த்துக் கொண்டு அவரை படியேறவைத்தவன் .வாசலில் யோசனையோடு நின்றபடியிருந்தவளை கண்டதும் புருவங்களை உயர்த்தினான் .” என்ன கதவை திறக்கவும் நல்ல நேரம் பார்க்கவேண்டுமா …? “

வாய்க்குள் முணுமுணுத்தபடி கதவை   திறந்து அவர்களுக்கு ஒதுங்கி வழிவிட்டாள் .நக்கலா பண்ற …இரு உன்னை வீட்டை விட்டு விரட்டியடிக்கிறேன் ..சத்தமாக இல்லை..   தனக்குள்தான்  பேசிக்கொண்டாள் .இப்போது அவளுக்கிருக்கும் மனநிலையில்  அவளது வழமை போல்   கத்திப் பேசித்தான் மனபாரத்தை இறக்கியிருக்க வேண்டும் .ஆனால் அப்படி பேசி மீண்டும் மீண்டும் அவனிடம் மாட்டிக் கொள்ள அவள் தயாராக இல்லை .




அன்று அவனை முதன் முதலில் சந்தித்த அன்று…. அவன் அமரேசன் என்றதும் ,இந த பெயரை இப்போதுதான் எங்கேயோ கேள்விப்பட்டோமே என்ற எண்ணத்தை தாண்டி   முதலில்  சட்டென குறும்பு தலைதூக்க அட என் இந்திர மகராசா என அவனை விளிக்கும் எண்ணம் வந்த்து அவளுக்கு .அந்த நினைவில் பளபளத்துவிட்ட அவள் விழிகளை பார்த்தபடி ” அமரேசன் என்றால் அமரத்துவம் வாய்ந்தவன் என்று அர்த்தம் .இந்திரன் என்றும் சொல்லிக்கொள்ளலாம் …” என்ற அவன் பதிலில் வேதிகாவிற்கு திக்கென்றது .அந்த இந்திர மகாராசாவையும் .   வாய் திறந்து சொல்லி தொலைந்தேனோ …சந்தேகத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள் .

” ரொம்ப யோசிக்காதே , உன் அப்பாவை கூப்பிடு …” அடப்பார்றா அதிகாரத்தை .

” ஹலோ …முதலில் நீங்க யாருன்னு சொல்லுங்க …? எங்கள் வீட்டிற்குள்ளேயே நுழைந்து கொண்டு என்ன அதிகாரம் உங்களுக்கு …? ” சொல்லிவிட்டு வீட்டிற்கு உரிமையாளி என்ற சொந்த்த்தை காட்டும் வகையில் சேரில் பின்னால் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டாள் . ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவன் முகத்தில் புன்னகை போல் ஏதோ ஒன்று தோன்றியது .இதழ்கள் லேசாக பிளந்தாற் போலிருந்த்தே , விழிகள் கொஞ்சம் பளபளத்ததே .அதனால் அது புன்னகையாகத்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள் .

” ம் …சரித்தான் …நல்லாத்தான் இருக்கு …” அவன் பார்வை தன. உடல் முழுவதும் வலம் வருவதை உணர்ந்தவள் சட்டென கூசி நேராக அமர்ந்தாள் .” யோவ் வெளியில் போய்யா …” வாசலை காட்டினாள் .அவளை பார்த்தபடியே மெல்ல பின்னால் நகர்ந்தவன் , வெளியேறப் போகிறானென அவள் நினைத்துக் கொண்டிருக்கும்போது  ,வாசல்படியருகே வந்த்தும் அவள் மேலிருந்த பார்வையை அகற்றாமல் கைகளை மட்டும் வெளியே செலுத்தி , காலிங்பெல் ஸ்விட்சை அழுத்தினான் .

” அட அமரன் வாங்க ..வாங்க .எப்போ வந்தீங்க …?ஏன் நின்னுட்டே இருக்கீங்க ..? உட்காருங்க …” ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் சாமிநாதன் .அப்பாவின் அலட்டல் வரவேற்பில் வேதிகாவினுள் ஒரு பயப்பந்து உருள ஆரம்பித்தது .இவன் ….கொஞ்சநேரம் முன்பு அப்பா …இவன் பெயரை போல் …இல்லையில்லை இவன் பெயரையேத்தானே …இல்லை இவனையேத்தானே சொல்லிக்கொண்டிருந்தார் .அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது .

” .என் போர் நாட் செவன் டிரைவர் திடீரென உடம்பு சரியில்லையென லீவ் போட்டுவிட்டார் . அவசர லோட் ஒன்று இருக்கிறது .  உங்கள் டிரைவரை அனுப்ப முடியுமா எனக் கேட்கலாமென . ..இந்தப்பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.நேரிலேயே உங்களிடம் கேட்டுவிடுவோமென நினைத்தேன் …” பேசியபடி திரும்பி பேன் சுவிட்சை போட்டான் .” திடீரென ரொம்ப புழுக்கம் …” என்றான் இவளை பார்த்தபடி .ஙேதிகாவின் நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது .

” எனக்கும் இன்று ரூட் இருக்கிறதே அமரன் .என் டிரைவரோட தம்பி ஒருத்தன் லைசென்சு வாங்கிட்டு வேலையில்லாமல்தான் இருக்கிறான்னு சொல்லியிருக்கான் .அவனை வேண்டுமானால் கேட்கிறேன் .என் போன் …வேதா அப்பா போனை எடுத்துட்டு வாம்மா ….” நல்லவேளை உள்ளே ஓடிவடலாமென அவசரமாக திரும்பினாள் .




” உங்க பொண்ணுதானே சார் …? ” நிறுத்தினான் .

” அட …அறிமுகப்படுத்த மறந்துட்டேனே .இப்போதான் உங்களை பத்தி சொல்லிட்டிருந்தேன் .வேதா உங்களை பார்த்ததில்லைன்னு சொல்லிட்டிருந்தா ள் .நீங்களே வந்துட்டீங்க .வேதா இவர்தாம்மா அமரேசன் .இவள் என் மகள் வேதிகா .இந்த ஙெள்ளிக்கிழமை உங்கள் இரண்டு பேரையும் கோவில்ல சந்திக்க வைக்கலாம்னு இருந்தேன் .என் மகமாயி அதுவரை எதற்குன்னு இன்றே ஏற்பாடு பண்ணிட்டா…” இயல்பாக இருந்த்து அந்த அறிமுகப்படலம் ்

” இனி அந்த சம்பிரதாயம் கூட அவசியமில்லை சார் . இதோ இப்போதே பெண்ணை பார்த்துவிட்டேனே ….” அவன் விழிகள் இனிப்பு பண்டமென அவளை மொய்த்து மெள்ளமாய்    வெல்லமாய்  தின்றன.

உள்ளே வந்துவிட்ட வேதிகவிற்கு தலையிலடித்து கொள்ளலாமென இருந்த்து . இப்படி ஒரு பெண் பார்க்கும் படலமா …காலை வேளையில் குளிக்காமல் அள்ளி முடித்த கொண்டையும் , அழுக்கு நைட்டியும் , மாடியேறி இறங்கிய வியர்வையுமாகவா  ஒருவன் பெண் பார்ப்பான் ?  எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு பெண் பார்க்கும் படலம் நடந்திருக்காது .ம்ஹூம் இந்த திருமணம் சரி வராது .உறுதியாக நினைத்தாள் . அப்போதும் …இதோ இப்போதும் .

கதவை விரிய திறந்துவிட்டு பேனை போட்டுவிட்டு திரும்பியவள் நாக்கை கடித்தாள் .அன்று காலை குளித்துவிட்டு அம்மா , அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கிளம்பிய போது , பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாமென  குளியலறையிலிருந்து வரும்போது  அவள் அலட்சியமாக போட்டு விட்டு வந்த அவளது முன்தின அழுக்கு உடைகள் அவளது உள்ளாடைகளோடு   அப்படியே சோபாவின் மீது பரத்திக் கிடந்தன .அவளென்ன ஜோசியமா பார்த்து வைத்திருந்தாள் ்திரும்ப வரும்போது இப்படி இவனும் ஒட்டிக்கொண்டு பின்னோடு வருவானென்று ….?

இப்போது. உடனடியாக  இவர்கள் மூவரையும் தள்ளிக்கொண்டு போய் எப்படி அந்த உடைகளை அப்புறப்படுத்துவது …கொஞ்சம் கூச்ச உணர்வோடு அவள் தடுமாறி நின்றபோது , அமரேந்தர் இயர்பாக அவள் அழுக்கு உடைகளை கைகளில் அள்ளிக்கொண்டு சாமிநாதனை பத்திரமாக சோபாவில் அமர்த்தினான் .பிறகு அந்த உடைகளை பின்புறம் எடுத்து போய் அழுக்கு கூடைக்குள் போட்டான் .

” விழித்துக் கொண்டு நிற்கும் நேரத்தில் போய் காபி போடலாமில்ல ….? ” சாமிநாதனின் கால்களை தூக்கி , விசாலாட்சி முன்னால் இழுத்து போட்ட டீபாய் மேல் வைத்தபடி கேட்டான் .அதன் பிறகே அது உறைக்க அவசரமாக அடுப்படியினுள் நுழைந்தாள் வேதிகா .பால் பாக்கெட்டை கட் செய்து பாலை அடுப்பில் ஏற்றிவிட்டு டிகாசனை இறக்கினாள் .

எவ்வளவு சுலபமாக சொந்த வீடுபோல்    வீட்டினுள் புழங்குகிறான் …? இன்று மட்டுமல்ல முன்பும் அப்படித்தான் .அவர்கள் திருமணம் நிச்சயமான பின்பும்தான் .அன்றைய தினமே பெண் பார்க்கும் தினமாக அறிவிக்கப்பட்ட பின் நேரடியாக நிச்சயதார்த்த்திற்கே போய்விட்டார் சாமிநாதன் .அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்தை பூ வைப்பதற்காக சாமிநாதன் ஏற்பாடு செய்ய , எதற்கு வெட்டி செலவென தடுத்தான் அமரேசன் .

” இதோ உங்கள் வீடு இருக்கிறதே .இந்த ஹாலில் பங்சனை வைத்துக் கொள்வோம் .பந்தியை மொட்டைமாடியில் வைத்துக்கொள்ளலாம் .சாப்பாடு ஹோட்டலில் சொல்லிவிடலாம் …” கட்டுக்கோப்பான அவனது திட்டமிடலில் வேதிகாவிற்கு பற்றிக்கொண்டு வந்த்து .




அவள் ஏறகெனவே இந்த திருமணம் ஙேண்டாமென சாமிநாதனிடம் போராடி அலுத்திருந்தாள் .அவள் மறுக்க மறுக்க சாமிநாதன் மிகுந்த முனைப்போடு திருமண வேலைகளில் இறங்கினார் .அதனை கொஞ்சம் கழித்தே உணர்ந்த வேதிகா மேலே பேசாமல் மௌனமானாள் .ஆனால் மனதிற்குள்ளாக எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவதென விதம் விதமான திட்டங்களை எழுதி அழித்துக் கொண்டுதானிருந்தாள் .

கௌரியிடம் கேட்ட போது அவள் இவளை வேற்றுகிரகவாசி போல் பார்த்தாள் . ” உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான் .மூன்று வருடம் முன்பே எனக்கு திருமணமாகி இப்போது இரண்டு வயதில் ஒரு பிள்ளையும் இருக்கிறான் தெரியுமில்லையா …? ” என்றாள் .

அது உன் தலையெழுத்து அதற்காக நானும் இப்போதே இந்தகுடும்ப  நச்சரிப்பில் மாட்டிக் கொள்ளவேண்டுமா …?உள்ளூர இப்படி நினைத்தபடி வெளியே உதடுகளை இழுத்து இளித்துக் கொண்டு அவளை கவனிப்பாள் போல் விழிகளை விரித்து வைத்துக் கொண்டாள் .

” காலேஜ் முடிந்த்தும் பேசன் படிக்கவென.உன் அம்மா , அப்பாவை விட்டு விட்டு    இரண்டு வருடம் ஹைதராபாத் ஓடிப்போனாய் .போதும் இனியும் எங்கோயோ போய் வேலை என உட்கார்ந்து கொண்டு உன் அப்பா , அம்மாவை தவிக்க வைக்காதே .அவர்களுக்கு நீ ஒரே மகள் என்பதனை மறக்காதே ” அதட்டினாள் .

அதற்கு மேல் கௌரியிடம் பேச முடியாமல் போக , மீறி பேசினால் அவள் அமரேசன் புகழ் பாட ஆரம்பிப்பாளென தெளிவானதால் ,இப்போதே அந்த முஸ்தீபுகளில் அவள் இறங்கியிருந்தாள் .ஏறகெனவே காதில் விழுந்து கொண்டிருந்த அமரன் புராணங்களோடு கௌரியுடையுதும் சேர விரும்பாது காதுகளோடு , வாயையும் இறுக்கிக் கொண்டாள் .

ஆனாலும் வேறு யார் மூலமாக இந்த திருமணத்தை நிறுத்தலாமென அவள் அலசி ஆராய்ந து ஒவ்வொருவராக யோசித்து , இறுதியாக வந்து நின்ற இடம் மணமகன் அமரேசனேதான் .அவன் திருமணம் அவன்தான் நிறுத்த வேண்டும் என எண்ணியபடிதான் அவன் முன்னால் போய் நின்றாள் .

” உன் அப்பாவிற்கு ஹார்லிக்ஸ் கலக்கு …” பின்னால் குரல் கேட்க , இங்கேயும் வந்தானா ….பல்லை கடித்தபடி திரும்பாமல் ஹார்லிக்ஸை கலந்தாள் .

” எனக்கு  காபிக்கு  சீனி அரை ஸ்பூன்தான் .நினைவிருக்கிறதுதானே …? ” கேட்டபடி அவள் கையிலிருந்த ஹார்லிக்ஸை தான் வாங்கி போய் சாமிநாதனிடம் கொடுத்தான் .

உதட்டைக் கடித்து கோபத்தை அடக்கியபடி அந்த அரை ஸ்பூனும் போடாமல் காபி கலந்து போய் அவனுக்கு நீட்டினாள் .அவனுக்கும் சேர்த்து தனக்கு இரண்டு ஸ்பூன் போட்டுக் கொண்டாள் .சுளிக்க போகும் அவன் முகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்க , அவன் சிறு மாறுதலுமின்றி காபியை பருகினான் .எதையாவது மூஞ்சியில் காட்டுறானா பார் …முசுடு …




” போய் கதவை திற ….” திடுமென அவன் சொல்லவும்தான். காலிங்பெல் சத்தம் உணர்ந்து ,அவனது சீனியையும் தனக்கே சேர்த்து போட்டுக் கொண்டதால் தித்தித்த காபியினால் முகம் சுளித்தபடியிருந்தவள் வேகமாக எழுந்தாள் .இவன் அதிகாரம் தாங்க முடியவில்லையே , சீக்கிரம் இவனை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் .மனதிற்குள் சொன்னபடி கதவை திறந்தவள் ” நல்லாயிருக்கியா தங்கம் ….? ” என்றபடி ஙெளியே நின்றிருந்த திலகவதியை கண்டதும் சோர்ந்தாள் .

அமரேசன் வெளியே போகும் எண்ணத்தில் இல்லையென உணர்ந்தாள் …

 

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!