Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 5 –

5

கல்லுரசி மஞ்சள் இழைக்கையிலேன் 
மரங்கொத்தியாகி மல்லிகை தின்கிறாய்.?

 

                               ” அஞ்சு நாளா ஆசுபத்திரியில் இருந்திருப்பீங்க . மாவெல்லாம் இருக்காதுன்னு தெரியும் .அதுதான் நானே வரும்போதே ஆட்டி கொண்டு வந்துட்டேன் .நைட் ஆளுக்கு இரண்டு தோசை ஊற்றிக்கலாம் .நாளைக்கு காலையில் பூரிக்கு கொண்டைகடலை ஊற வைத்துட்டேன் . ஐந்து நாட்களாக உனக்கு அலைச்சல் .போய் சித்த உட்காரும்மா.பால்     பாக்கெட் இன்னும் இரண்டு வாங்கனும் , காபித்தூள் , எண்ணெய் வாங்கனும் . அமரா சொல்றேன் எழுதிக்கோ …,”சொனபடியே போன திலகவதியை ஙெறித்தாள் வேதிகா . அரைமணியில் அந்த வீட்டையே தனது உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருந்தாள் அவள் .




உன் வீட்டில் போய் உன் அதிகாரத்தை காட்டு .இது என் வீடு …இங்கிருந்து ஙெளியே போ …படபடக்க துடித்த வேதிகாவின்நாக்கை திலகவதியோடு சுமுகமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியின் இயல்பு தடுத்தது .

” ரொம்ப கஷ்டப்பட்டிட்டாரு அக்கா .அஞ்சு நாளா ஆஸ்பத்திரியில் பொட்டு தூக்கமில்லை ….” தனது பாட்டை விசாலாட்சி விவரித்துக் கொண்டிருக்க , கன்னத்தில் கை வைத்து    உச்சுக் கொட்டி பாவனை காட்டிக்கொண்டிருந்தாள் திலகவதி .அவளுக்கு பக்கவாத்தியமாக அருகிலேயே மங்கையர்க்கரசி . எந்த வருடம் உங்கள் கூட பிறந்தார்கள் இந்த புதிய அக்கா …மனக்கேள்வியை வெளிக் கேட்க முடியாமல் வாய் பொத்தினாள் வேதிகா .அவள் உள்ளம் கொதித்து கொண்டிருந்த்து .

சாமிநாதன் உள்ளே கட்டிலில் கண்ணயர்ந்திருக்க , அமரேசன் சாமான்கள் வாங்க வெளியே போயிருக்க , இங்கே இந்த பெண்கள் நடுவீட்டில் உட்கார்ந்து ஆஸ்பத்திரி கதை பேசிக் கொண்டிருந்தார்கள் .டிவி சீரியல் ஒன்று நடுவீட்டில் ஓடிக்கொண்டிருப்பதை போன்ற மனநிலையடைந்த வேதிகா அங்கிருக்க பிடிக்காமல் மாடியேறினாள்.மாடியிலிருந்த அந்த ஒற்றை அறையை தாண்டி , அந்த அறையைத்தான் அவள் தனது அறையாக உபயோகித்து வந்தாள் .அதனை அடுத்திருந்த       மொட்டை மாடிக்குள் நுழைந்தாள் .அவள் ஆசையுடன் வளர்த்து வரும் மாடித்தோட்டம் ஆர்வத்துடன் தங்கள் எஜமானியை வரவேற்றது .வேகமாக  தலையசைத்து தென்றலை அனுப்பிய சுகத்தில். அந்த செடிகளின் வரவேற்பை உணர்ந்தாள் வேதிகா .

இது ஒரு நுட்பமான உணர்வு .ஆசையாக தோட்டம் போடுபவர்களை தவிர பிறருக்கு கிடைக்காத இன்பக் கிளர்ச்சி இது .தாங்கள் பக்குவமாக பேணி வளர்த்த செடிகளுடன்  அன்னை போல் , தந்தை போல் , உற்ற தோழி போல்  ஓர் உறவு பந்த்ததை   அந்த செடிகளை வளர்ப்பவர்களால் பெறமுடியும் .அது வேதிகாவிற்கு அவள் விதையிட்டு , உரமிட்டு பார்த்து பார்த்து வளர்த்த இந்த செடிகளிடமிருந்து  பூரணமாக கிடைத்தது .வாய் திறந்து தன் எண்ணவோட்டங்களை , தயரங்களை அவளால் இங்கே தனிமையில் இந்த தாவரங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்த்து .

கத்தரி , வெண்டை செடிகளிடையே தளர்ந்து அமர்ந்தாள் அதற்காகவே காத்திருந்த்து போல் வெண்டை செடி தன் இலை நீட்டி அவள் கன்னம் வருடியது  மெல்ல அந்த இலைகளை வருடியவள் .மறந்தும் மல்லிகை கொடி பக்கம் திரும்பவில்லை .அந்த மல்லிகை கொடி அவள் மிக ஆசையாகதன் பள்ளி பருவத்தில் தோழி ஒருத்தியிடமிருந்து வாங்கி வந்து  இங்கே பதியமிட்டு வளர்த்தது . அதில் முதல் பூ பூத்த போது தனது பள்ளி நண்பர்களுக்கெல்லாம் சாக்லேட் வாங்கி தந்தாள் .அவளது வாழ்வின் முக்கிய பக்கங்களில் ஒன்றாக இருந்து வந்த்து அது .இன்பங்களை மட்டுமே அந்த கொடி தனக்கு தருவதாக அவள் நினைத்திருந்த நினைப்புகளுக்கு ஒருநாள் பங்கம் வந்த்து .




அன்றிலிருந்து அவள் அந்த மல்லிகைக்கு நீர் விடுவதோடு சரி .அருகில் அமர்வதோ , அதனுடன் பேசுவதோ கிடையாது .

திருமணம் ஙேண்டாமென்ற உறுதி கொண்டபின் அதனை அமரேசனிடமே நேரிலேயே சொல்ல துணிந்தாள் .ஆனால் அவனிடம் எப்போது எப்படி பேச …? அவனது சொல்படி அவர்கள் வீட்டிலேயே பூ வைத்து இருவருக்கும் நிச்சயம் ஆன பிறகு அவன் அடிக்கடி …இல்லை கிட்டத்தட்ட தினசரி அவர்கள. வீட்டிற்கு வந்துகொண்டுதானிருந்தான் அவள் தந்தையிடம் .தொழில் விபரங்கள் பேசுவதோடு , அவர்கள் திருமண விபரங்களையும் சேர்த்து பேசிக்கொண்டிருந்தான் .

தன் திருமணத்தை ஒரு மனிதன் தானே பேசிக்கொள்வானா ..?தன் திருமண வேலைகளை இப்படி மணமகள் வீட்டாரோடு தானே சேர்ந்து பார்ப்பானா …? இ  தைப்பற்றி அவள் அசூசையாக சாமிநாதனிடம் கேட்ட போது அவர் தந்தையில்லாத பிள்ளைகள் வேறு என்ன செய்வார்கள் …என திருப்பி இவளிடமே கேட்டார் .அமரேசன் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன் .அவனது பதினான்கு வயதிலிருந்து அவன் வீட்டு முடிவுகளை அவனேதான் எடுத்து வருகிறான் .அது போல் தன் திருமண வேலைகளையும் அவனே பார்க்கிறான் .இதிலென்ன இருக்கிறது என்றுவிட்டார் .

” இதுதான் சாக்கென்று உன் அப்பா உங்கள் திருமண வேலைகள் எல்லாவற்றையும் அவர் தலையிலேயே கட்டிவிட்டார் வேதா …ஹா …ஹா …” தான் சொன்னதை நகைச்சுவையென கணித்துக் கொண டு தானே சிரித்துக்கொண்டாள் விசாலாட்சி .வேதிகாவிற்குத்தான் அழுகை வந்த்து .இப்படி திருமணத்திற்கு முன்பே பெண் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆணை எப்படி மனதார மணப்பது …?

தான் நினைத்தபடி திருமணம் நின்றுவிட்டால் பிறகு அப்பாவின் ஆதரவு தனக்கு இருக்காது என தெரிந்திருந்த்தால் ஏதோ ஓரளவு வருமானம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென கௌரியிடம் சாதுர்யமாக பேசி , அவள் பொழுது போக கற்று வைத்திருந்த தையலுடன் , தனது தேர்ந்த படிப்பு தையலும்  சேர்ந்து ஒரு அருமையான   தொழில் தொடங்கலாம் என ஆசை காட்டி சமாளித்து வைத்திருந்தாள் .




 

இரண்டு வருமானமென்பது கௌரியின் நடுத்தர குடும்பத்திற்கு கவர்ச்சிகரமானதாக பட அவளும் சம்மதித்திருந்தாள் .இருவருமாக சேர்ந்து பக்கத்து ஊரிலிருந்த பழைய தையல் மிஷின்கள் இரண்டை விலை பேசிவிட்டு வந்திருந்தனர் .இவற்றை வைத்து கடை போல் ஆரம்பிக்க கொஞ்சம் நல்ல இடத்தில் ஒரு வாடகை இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் .மனதிற்குள் கணக்கிட்டபடி வீட்டினுள் வந்தவள் ” வேதா வந்தாச்சு .காபி கொடுங்க ….” அடுப்படியிலிருந்து வந்த குரலுக்கு திகைத்து உள்ளே எட்டிப் பார்த்தாள் .

அவர்கள் வீட்டு அடுப்படியினுள் கிடந்த கேஸ் சிலிண்டர் மேல் சாதாரணமாக அமர்ந்தபடி , கையில் காபி தம்ளருடன் விசாலாட்சியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அமரேசன் .வேதிகா நொந்து போய் அவனை பார்க்க , அவனோ நிதானமாக காபியை குடித்தபடி நேர் பார்வையில் அவள. முக உணர்வுகளை கூறு போட்டுக் கொண்டிருந்தான் .

” வாம்மா வேதா .காபி தரவா …? ” விசாலாட்சியின் கேள்விக்கு தலையாட்டக் கூட எரிச்சலுற்று மொட்டை மாடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள் .சை என்ன மனுசன் இவன் …? இப்படியா கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் வருங்கால மாமியார் வீட்டில் வந்து உட்கார்ந்து கொள்வான் .அதுவும் அந்த வீட்டு பிள்ளை போல் இப்படி அடுப்படி சிலிண்டர் வரை …அமரேசனிடர் மாப்பள்ளை பந்தாவை வேதிகா ஒருநாளும் பார்த்ததில்லை .அவன் பிறந்த்திலிருந்து வாழ்ந்த வீடு போல் அங்கே அவன் இயல்பாக வலம் வந்து கொண்டிருந்தான் .

அவளது அப்பா , அம்மாவிடமும்  அப்படித்தான் அந்த வீட்டு பிள்ளை போலவே பேசி வந்தான் .வேதிகாவிடமும் அவன் அது போலவே பழகியிருக்க கூடும், அவள் கொஞ்சம் இனமுகம் காட்டியிருந்தால் .அவள்தான் அவனை கண்ட நாள் முதல் தீச்சுடர் இரண்டை கண்களில் எரியவிட்டபடி அவனை தள்ளியே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாளே .மற்றவர்களிடம் இயல்பாக இருக்கும் அமரேசனின் முகம் வேதிகாவை கண்டதும் ஜாக்கிரதைத்தனத்துடன் மாறிவிடும் .இயல்பற்ற இறுக்க முகமொன்றுடனேயே அவளை பார்த்துக் கொண்டிருப்பான் .  பெஞ்ச் மேல் ஏறி நிற்க சொல்லும இந்த ஆசிரியர் பார்வையில்   மேலும் எரிச்சலுற்று அவன் பக்கமே திரும்ப மாட்டாள் வேதிகா .

உன்னை விட உன் குடும்பத்திற்கு நான் நெருக்கமானவனாகி விட்டேன் பார் என பறை சாற்றுவது போலிருக்கும் அவன் பார்வையை சந்திக்க விரும்பாது அவன் முகத்தையே பார்ப்பதில்லை வேதிகா .வெளிப்படையாகவே முகம் திருப்பி தனது பிடித்தமின்மையை உணர்த்தியபடியே இருந்தாள் .

கீழே இப்போது அமரேசனின் குரல் சாமிநாதனின் குரலுடன் சேர்ந்து முன் அறையில் கேட்டது .அப்பா வந்துவிட்டார் போலும் .இனி மாமன் , மருமகனென இருவரும் கொஞ்ச நேரம் உருகித் தொலைவார்கள் . அருகிருந்து கேட்டால் ஆசிட்டை எடுத்து காதிற்குள் விட்டுக் கொள்ளலாமென வேதிகாவிற்கு தோன்றும் .இன்று நல்லவேளை தள்ளியிருக்கிறேன் .நகர்ந்து அந்த மல்லிகை கொடியின் அடியில் போய் சுவரில் சாய்ந்தமரந்து கால்களை கட்டிக் கொண்டாள் .




காம்பவுண்ட் கேட் திறந்து மூடும் சத்தம் கேட்க இருவருமாக வெளியே போகிறார்கள் போல , கண்களை மூடியபடி தனக்குள் நினைத்துக் கொண்டிருந்த வேதிகா திடுமென அருகாமையில் கேட்ட காலடி சத்தத்தில் திகைத்து கண் திறந்தாள் .கீழே அமர்ந்திருந்தவளின் விழிகளில் தென்பட்ட அந்த அகன்ற , பரந்த பாதங்கள் தந்தையற்ற அந்நிய ஆடவனை அறிமுகப் படுத்த , அவசரமாக உயர்ந்த பார்வையில் திக்கென பட்டான் அமரேசன் .தனது வழக்கமான மரத்த பார்வையுடன்  அவளை அளந்தபடி நின்றான் .

” என்ன ….சொல்லு …? “

” நீ …நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் …? ” இவனுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் தனியாக ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது அங்கே திடுமென வந்து நிற்பான் …?  அதுவும் அவளது அறை வழியாக அவளது அனுமதியின்றி நுழைந்து கொண்டு …

” இந்த வழியாக …” தான் வந்த வழியை காட்டினான் அமரேசன் ்அந்த வழி வெளியிலிருந்து மொட்டை மாடிக்கு வந்த ஏணிப்படிகள் .எதறகும் இருக்கடடுமென சாமிநாதன் மொட்டை மாடிக்கு வெளியிலிருந்தும் ஒரு ஏணிப்படி அமைத்திருந்தார் .வேதிகா தனது தோட்ட பராமரிப்பிற்கான தண்ணீரை அந்த வழியாகத்தான் கீழிருந்து கொண்டு வருவாள் .
அவன் காட்டிய அந்த வழியில் சிறிது சமாதானமானவள் …” என்ன …? ” என்றாள் .

” என்னிடம் என்ன பேச வேண்டும் …? ” அவன் கணிப்பில் சிறு இதம் தோன்ற , அவனுடன் பேச வேண்டிய விசயமும் நினைவு வர …

” இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடுங்கள் …” கிடைத்த சந்தர்ப்பத்தை விடக் கூடாதென்ற அவசரத்துடன் சொன்னாள் .

” என்ன …? ” புருவம் சுருக்கினான் .

” எனக்கு இந்த திருமணம் வேண்டாம் . நிறுத்திவிடுங்கள் “

” ஏன் …? “




” ஏன்னா …எனக்கு உங்களை பிடிக்கலை …” தயக்கமின்றி சொன்னாள் .

” தெளிவான காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் …” என்றபோது அவன் குரலில் கோபம் தெரிந்த்து .

” கா …காரணமெல்லாம் தெரியலை .ஆனால் உங்களை பிடிக்கலை .அதனால் இந்த கல்யாணத்தை…” என்றபோது அவன் அவள் இரு தோள்களையும் அழுந்த பற்றியிருந்தான் .

” ஏன் பிடிக்கவில்லை …உன் பின்னாலேயே ஏதேதோ பொய் சொல்லி அலைந்து காதலென்று பிதற்றாமல் போனேனே அதனாலா ….? முறையாக உன் அப்பா மூலம் நியாயமாக பெண் கேட டு மணமுடிக்க நினைத்தேனே அதனாலா ….? திருமணத்திற்கு முன்னால் உன்னோடு பேச்சில் கூட கண்ணியமாக நடந்து கொண்டேனே ,அதனாலா ….? “

ஒவ்வொரு கேள்விக்கும் அவன் அவளை உலுக்க தடுமாறினாள் வேதிகா .” இ…இல்லை .எ…என்ன இ…இது …? .விடுங்க …” திணறினாள் .

” நீ இந்தக் கால மாடர்ன் பெண்ணில்லையா .உங்களுக்கெல்லாம் கல்யாணத்திற்கு முன்பே காதலைன்ற பெயரில் கூத்தடிப்பது தானே பிடிக்கும் .அதனால் …” என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் இதழ்.களின் மேல் தன் இதழ்களை வைத்து அழுத்தினான் .அவள் முயன்று தள்ள …தள்ள …அவன் பிடி இறுகி இதழ்கள் புண்ணானது .  மனதை போல் உதட்டையும் மரத்து போக செய்துவிட்டு  இறுதியில் அவளை விடுவித்தான் .




” வீணாக கல்யாணத்தை நிறுத்த முயலாதே …” எச்சரித்துவிட்டு கீழே இறங்கி போய்விட்டான் .மிதமிஞ்சிய அதிர்ச்சியில் அழுகை கூட வராமல் அமர்ந்திருந்தாள் வேதிகா .

அன்றைய துயர நினைவு இப்போது போல் இதழ்வரை எரிந்த்து .இதழ் மடித்து கடித்து துயரை அடக்கியவளின்காதுகளில் .வாசலில்     பைக் சத்தம் கேட்க , மேலிருந்து எட்டிப் பார்த்தாள் .அங்கே பைக்கிலிருந்து இறங்கிய அமரேசனின் பின்னாலிருந்து அவன் தோள்களை பற்றியபடி கொஞ்சல் போல் முகத்தை வைத்துக்  கொண்டு பேசி சிரித்தபடி இறங்கி வீட்டினுள் வந்து கொண்டிருந்தாள் மௌனிகா . 

இவள் வேறா …இவளுக்கென்றால் எந்த சட்ட திட்டமும் கிடையாதா …. சுணங்கியது அவள் மனம் .துயரம் போய் பொங்கிய கோபத்தை அடக்க இப்போது பற்களை கடித்த வேதிகா தலையை உள்ளிழுத்து அவர்கள் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டாள.

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!